5 மே, 2017


மே 6இல் பிறந்த உலகத் தலைவர்கள்


மோதிலால் நேரு

நாட்டின் சுதந்திரத்துக்காகத் தமது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதரான மோதிலால் நேரு, 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார்.

மோதிலால் நேருவின் மகனான ஜவஹர்லால் நேரு தான், பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர். 

அதன்பின், 1888ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தம்மை இணைத்துகொண்டார் மோதிலால் நேரு. எனினும், 1905ஆம் ஆண்டில் ஏற்பட்ட வங்கப் பிரிவினையின் போதுதான் மோதிலால் நேரு முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். 

ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டுமுறை காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்தார்.

இந்திய மக்களின் எளிமையால் கவரப்பட்டு, தமது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால், தமது 69வது வயதில் (1931) மறைந்தார்.


பால் லாட்டர்பர்

MRI ஸ்கேனிங் கருவியின் தந்தை பால் கிறிஸ்டியன் லாட்டர்பர்,  1929ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் சிட்னி நகரில் பிறந்தார்.

1950களில் கட்டாய ராணுவச் சேவையில் இருந்தபோது, அணுக்கரு காந்தப்புலம் (என்எம்ஆர்) தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இது பல்வேறு திட, திரவப் பொருள்களின் மூலக்கூறு கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வுகளில் முக்கிய கருவியாகப் பயன்பட்டது.

இவர் பீட்டர் மான்ஸ்ஃபீல்ட் என்பவருடன் சேர்ந்து உருவாக்கிய MRI ஸ்கேனிங் கருவிக்கு 2003இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

  • ஆல்பர்ட் லாஸ்கர் விருது, ஹர்வே பரிசு
  • அறிவியலுக்கான தேசியப் பதக்கம்
  • தொழில்நுட்பத்துக்கான தேசியப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.
கதிர்வீச்சைப் பயன்படுத்தாமல், பக்கவிளைவுகள் ஏற்படுத்தாமல் மனித உள்ளுறுப்புகளைத் தௌிவாகக் காட்டக்கூடிய கருவியைச் சாத்தியமாக்கிக் காட்டி, மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் சாதனை செய்த பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் 78வது வயதில் (2007) மறைந்தார்.


சிக்மண்ட் பிராய்ட்

நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் 1856ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி, அன்றைய ஆஸ்திரியப் பேரரசின் ஃபிரெய்பர்க் நகரில் (தற்போது செக் குடியரசில் உள்ளது) பிறந்தார்.

இவர் செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக 1895இல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

சுயநினைவு இல்லாதது பற்றிய இவரது கோட்பாடுகள், மனம் தொடர்பான நுணுக்கங்கள், மனநோய்கள் குறித்த விளக்கங்கள் ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

உளவியல் என்பது உயிரோட்டமுள்ள உளவியல் என்ற பெயரில் முன்வைத்தார். மனிதனின் குண இயல்புகளை வகைப்படுத்தினார். 

மனிதனின் குணநலன்களுக்கு இடையே நடைபெறும் போராட்டமே மனித ஆளுமையை நிர்ணயிக்கிறது என்று கூறினார்.

மனம் என்ற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த சிக்மண்ட் பிராய்ட் 83வது வயதில் (1939) மறைந்தார்.


மே 6 அன்று நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

  • 1952ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இத்தாலியில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண் மரியா மாண்ட்டிசோரி மறைந்தார்.
  • 1967ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.
  • 1854ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.

                                                                                                                                நன்றி  நித்ரா தமிழ் நாட்காட்டி

அப்பப்பா... அப்பா....

தந்தையாவது மிகவும் இலகுவானது. ஆனால்
தந்தையாகவே இருப்பது மிகவும் கடினமானது.

அப்பா...

  • ஒரு மனிதன்,பின்னாளில் தனக்குச் சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும்,திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்ததுதான்.
  • ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.


  • கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. 
  • ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்குச் சமமாக இருப்பார். எப்போதும் மாணவர்களோடு இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.


  • தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சிலுவைகள் கனமானது. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.


  • ஒரு நல்ல தகப்பனுக்குத் தம் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் உள்ள தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது.
  • தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.


  • அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானதுதான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.


  • தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்திக் கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்குக் கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.


  • தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாகக் கிடைத்துவிட்டால் பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். 
  • வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச்சிறந்த ஆசானாக, ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

  • நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்குப் பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.


  • யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!


  • ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.


  • விழவும், எழவும், வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.


  • இரு கைகள் தட்டி எழும் ஓசைபோல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்தச் சமூகம் பெற முடியாது.


  • ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாகச் சுமக்கிறாள்.


  • தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்.


  • ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்குக் கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களைச் சந்தித்திருப்பார்கள்?


  • பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?


  • எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்? அதைக் கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?


  • எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்? எத்தனை பாரங்களை மனதில் சுமந்திருப்பார்கள்?


  • முடியுதிர்ந்த தலையில் வெய்யிலால்... வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்... நரம்பு தெரியும் கைகளில் ... நரை விழுந்த மீசைகளில் அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய்க் குடிகொண்டிருக்கும்.

  • தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?


  • ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாகத் தம் வியர்வை சிந்தியிருப்பார்?


  • மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தம்முடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?


  • பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும்போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு, போர்த்திவிட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள், பின்னர் பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிறபோது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?


  • இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக்கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படிப் புரியவைப்பது?


  • படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக்கொண்டு சதா வலியோடு வாழ்க்கையையும் சுமந்து செல்கிற இந்த அப்பாகளின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?


  • வீரம்,துணிச்சல், விடாமுயற்சி, நம்பிக்கை,உழைப்பு இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.


  • ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும், குழந்தைகளுக்குப் பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளைச் சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். 
  • பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.


  • “எதுக்கும் பயப்படாதே”, “எல்லாம் வெல்லலாம்”, “மனசை தளரவிடாதே” “நான் இருக்கிறேன்” இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பத்திரும்பச் சொல்லுகிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள். அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்குக் கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.


  • தன் இயலாமையைத் தாம் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளைச் சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்குத் தமது குரலொன்றே போதுமென்பது.


அப்பாக்கள்....

         ➡ பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

        ➡ பிள்ளைகளின் நெம்புகோல்கள்

       ➡ பிள்ளைகளின் அச்சாணிகள்

       ➡ பிள்ளைகளின் சூரியன்கள்

      ➡ பிள்ளைகளின் திசைகாட்டிகள்

      ➡ பிள்ளைகளின் ஆசிரியர்கள்

     ➡ பிள்ளைகளின் நம்பிக்கைகள்


  • தூய்மையான  அன்பு
  • போலியற்ற அக்கறை
  • நேர்மையான வழிகாட்டல் 
  • நியாயமான  சிந்தனை
  • நேசிக்கத்தக்க உபசரிப்பு
  • மாறுதலில்லா நம்பிக்கை
  • காயங்களற்ற வார்தை
  • கம்பீரமான  அறிவுரை
  • கலங்கமில்லா சிரிப்பு
  • உண்மையான அழுகை 
என அத்தனையும் உளமகிழ்ந்து செய்து வளர்த்தவர்...





என்றென்றும்
தோழனுக்குத் தோழனாய்

தோள் கொடுப்பவர்
அப்பா
எண்ண அலைகளே
வார்த்தையின் வலிமை



ஒருவர் வெகுநாட்களாகக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்றிருந்தார். அவர்  வாடிய உடலோடும், சோர்வுற்ற மனநிலையில் இருந்தார்.

ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். அந்த நபரைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" எனக் கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் குருவோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.

அந்தக் கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.

"வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" எனக் கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றிவிட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதேபோலதான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்றார்.

இதைக் கேட்ட அந்த நாத்திகன் வெட்கித் தலை குனிந்தான்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, *'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள் சொல்லி விட்டனர்.

நாம்    இன்று    என்ன   நிலையில்   இருக்கின்றோமோ  ...
அந்நிலையைக்  கொடுத்தது  நம்   எண்ணங்களே  ....
எண்ணங்கள்  அழகானால் எல்லாம் அழகாகும்.