3 டிசம்பர், 2017

உங்கள் கையில் பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் இருந்தால் பத்திரப்படுத்துங்கள்
By DIN  |   Published on : 30th November 2017 03:39 PM  |   அ+அ அ-   | 



புது தில்லி:  நாணயங்களின் வருகையால் நாம் மறந்தே போன அந்த சிறிய நீல நிற ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்று நூறாவது பிறந்த நாள்.

எந்த விழா, கொண்டாட்டம் என்றாலும் மொய்க்காசுகளில் ரூ.101, 1001 என் முன்னிலையில் இருந்த அந்த ஒரு ரூபாய் நோட்டின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் எந்த திட்டமும் இல்லை.

ஆர்பிஐ ஆளுநருக்கு பதிலாக நிதித் துறை அமைச்சக செயலரின் கையெழுத்துடன் வெளியாகும் ஒரே ஒரு ரூபாய் நோட்டு இந்த ஒரு ரூபாய் தாள்தான்.

மொய்க்காசுகளில் ஆயிரத்து ஒன்றாக இருந்தாலும் பத்தாயிரத்து ஒன்றாக இருந்தாலும் முதல் இடத்தைப் பிடிப்பது இந்த ஒரு ரூபாய் நோட்டுக்கள்தான்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, அந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மறக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால் நூறு ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் 1 ரூபாய் நோட்டை பலரும் மறந்தே போய்விட்டோம்.

இந்த ஒரு ரூபாய் நோட்டு முதல் முறையாக இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்டு நவம்பர் 30ம் தேதி 1917ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது.  அதில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த நோட்டு 1970ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது.

இதே ரூபாய் நோட்டுகள் துபாய், பஹ்ரைன், மஸ்கட், ஓமன் நாடுகளிலும் செல்லுபடியானது. இந்த ரூபாய் நோட்டுகள் நன்றாக இருப்பதாகக் கூறி போர்த்துகீசியமும், பிரெஞ்சும் தங்களுக்கும் இதேப்போன்ற ரூபாய் நோட்டுகளை அச்சடித்துக் கொண்டன.

இந்திய அரசு முதல் முறையாக 1861ம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இந்த ஒரு ரூபாய் நோட்டு கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 28 முறை புதிதாக வடிவமைக்கப்பட்டது.

இந்த ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி 1994ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், பொதுமக்களின் தேவை அதிகரித்ததால் 2015ம் ஆண்டு மீண்டும் அச்சடிக்கப்பட்டது.

அதே சமயம், பழைய ஒரு ரூபாய் நோட்டு வழக்கொழிந்து போனாலும், பல பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் ஏலத்துக்கு விடப்பட்டு பல லட்சம் ரூபாயை திரட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, அதிகபட்சமாக 1985ம் ஆண்டு நிதித்துறை செயலர் எஸ். வெங்கிடரமணன் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் நோட்டு கடந்த ஜனவரி 21ம் தேதி ஏலத்துக்கு விடப்பட்டது. அது ரூ.2.75 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

1944ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா வெளியிட்ட சுமார் 100 ஒரு ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டு ரூ.1.3 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

தற்போதும் கூட, 1917ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த ஒரு ரூபாய் நோட்டுகள், ரூபாய் நோட்டு சேமிப்பாளர்களிடமும், விற்பனையாளர்களிடமும் இருக்கின்றன. இதன் மதிப்பும் அதிகம். எனவே, உங்கள் கையில் பழைய ஒரு ரூபாய் நோட்டு இருந்தால் அதனை குப்பை என்று நினைக்க வேண்டாம். அதன் மதிப்பு எவ்வளவு என்பதை காலம் நிர்ணயிக்கலாம். எனவே பத்திரப்படுத்துங்கள். 
திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா பிறந்தது மைசூர். மைசூர் மகாராஜாவின் குடும்பத்தில் மணமகளாகச் சென்ற சந்தியாவுக்கு ; ஜெயக்குமார், ஜெயலலிதா என இரு பிள்ளைகள் பிறந்தபின் கணவரை இழந்து வறுமைக்கு ஆளானார். சென்னையில் தங்கியிருந்து திரைப்படங்களில் நடித்துவந்த தங்கை வித்யாவதியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். வித்யாவதி வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர்களின் கண்களில் சந்தியா தென்பட, மளமளவென படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் பிஸியானதால் பிள்ளைகளை தனது தாயின் பாதுகாப்பில் பெங்களூருவில் படிக்கவைத்தார். நேரம் கிடைக்கும்போது பிள்ளைகளை சென்று சந்திப்பார். 8 வயதில் ஜெயலலிதாவின் முதல் சினிமா பிரவேசம் 'ஸ்ரீசைல மகாத்மியம்' என்ற படத்தில் நிகழ்ந்தது. வளர்ந்தபின் 'நன்னகர்த்தவ்யா' என்ற கன்னடப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் அவரது முதற்படமாக 'வெண்ணிற ஆடை' வெளியானது. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ஜெயலலிதாவுக்கு நல்ல புகழைக் கொடுத்தது. பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடுத்தர வயதைக்கடந்த நடிகைகள் அப்போது நடித்துவந்ததால், இளமையான கல்லூரிப்பெண் போன்ற தோற்றம் கொண்ட ஜெயலலிதாவுக்கு தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னடத்தில் அவரைக் கதாநாயகியாக அறிமுகம் செய்த பி.ஆர் பந்துலு, எம்.ஜி.ஆரை வைத்து தான் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு கதாநாயகி ஆக்கினார். ஒரே இரவில் ஜெயலலிதாவின் சினிமா கிராப் உயரத்துக்கு வந்தது. சில வருடங்களில், ஜெயலலிதா தென்னகத்தின் புகழ்மிக்க நடிகைகளில் ஒருவரானார். பத்து வருடங்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துமுடித்தார். அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நடிகர்கள் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டினர். ஒருமுறை தனக்குப் பிடித்த நடிகரான திலீப்குமாரின் படம் ஒன்றில் அட்வான்ஸ் பெற்றபின்னும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி நடிக்க மறுத்தார். அந்தளவுக்கு புகழடைந்திருந்தார்.

தமிழில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. எம்.ஜி.ஆருடன் அதிகப்படங்களில் நடித்த கதாநாயகி ஜெயலலிதாதான். மொத்தம் 28 படங்களில் அவர்கள் இணைந்து நடித்தனர். ஆனால், 'பட்டிக்காட்டுப் பொன்னையா' திரைப்படத்துடன் அவர்களது உறவில் கீறல் விழுந்தது. தனது கனவுப்படமான 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில், ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு தராமல், அன்றைக்குப் புதுமுகங்களை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். இளமைப் பொலிவுள்ள கதாநாயகன் என்ற தனது இமேஜை தக்கவைத்துக்கொள்ள எம்.ஜி.ஆர் இப்படி செய்ததாக சொல்லப்பட்டது. அதற்கு முன்னரே அவர்களுக்குள் பிரச்னை இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் அடிபட்டன. எப்படியோ, பிரச்னை தொடங்கிய 1971 ஆம் ஆண்டு 3 படங்கள், 1972-ல் 2 படங்கள், 1973-ல் 'பட்டிக்காட்டுப் பொன்னையா' என்ற ஒரேயொரு படம் என எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா என்ற வணிக சினிமாவின் வெற்றி இணை நிரந்தரமாகப் பிரிந்தது. தனது வாழ்வில் முக்கிய ஆளுமை செலுத்திய இருவரில், ஒருவர் என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டவர் ஜெயலலிதா. 1971 நவம்பரில் தாயை இழந்த ஜெயலலிதா, 1973 ஆம் ஆண்டுடன் எம்.ஜி.ஆரிடமிருந்தும் பிரிய நேர்ந்தது. இதன்பிறகு ஜெயலலிதா வாழ்வில், பெரும் சூன்யமான நாட்கள். வாழ்க்கையில் பிடிப்பின்றி காலம் கழித்தார். அரிதாகவே படங்களில் தலைகாட்டினார்.

இந்த காலகட்டத்தில்தான் சோபன்பாபு என்ற பெயர் தமிழ்த்திரையுலகில் ஜெயலலிதாவை நன்கறிந்த வட்டாரத்தில் பேசப்பட்டது.

அன்றைய தெலுங்குத் திரையுலகில் பெண் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தவர் சோபன்பாபு. என்.டி.ஆர் நாகேஸ்வரராவ் போன்ற உச்சநட்சத்திரங்களுக்கு அடுத்த வரிசை நடிகரான அவருக்கு முந்தைய இரு நடிகர்களைவிட பெண் ரசிகர்கள் அதிகம். தனது துறுதுறு நடிப்பு நளினமான நடன அசைவுகளால் பெண் ரசிகர்களை கிறங்கடித்த கதாநாயகனாக வளர்ந்துவந்தார். அவருடன் ஜெயலலிதா தன் ஆரம்பகாலங்களில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்தார். பெரிய அளவில் அவர்களுக்குள் ஈர்ப்பு இருந்ததாக அக்காலத்தில் பேச்சு இருந்ததில்லை. ஜெயலலிதா அப்போது தமிழில் பெரும் பிரபல்யமாக இருந்ததால் அவர் திரையுலக வாழ்க்கை மட்டுமே பேசப்பட்டது. எம்.ஜி.ஆரின் சினிமா ஜோடி என்றளவில் மட்டுமே பேசப்பட்டார்.

ஆனால் பிற்காலத்தில் சினிமாவில் இருந்து துறவறம் மேற்கொண்டிருந்த காலத்தில்தான் ஜெயலலிதா சோபன்பாபு நட்பு குறித்து பேசப்பட்டது.

எம்.ஜி.ஆருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபின் ஜெயலலிதாவின் சினிமா கிராப் அப்படியொன்றும் ஏற்றமாக இல்லை. இளம் வயதைக்கடந்த நிலையில், வயதுக்கேற்ற படங்களை அவர் தேர்வு செய்யவேண்டிய சூழல்உருவானது. கதாநாயகி என்பதுபோய் கதைக்கு நாயகியாய் குணச்சித்திர பாத்திரங்கள் அவரைத் தேடி வந்தன. இந்தக் கோபத்தில் அப்போது வெளியான சில பத்திரிகைகளில் பெயரைக் குறிப்பிடாமல், எம்.ஜி.ஆரைத் தாக்கிப் பேட்டியளித்தார் ஜெயலலிதா. பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர் போன் செய்து பேசவேண்டிய தர்மசங்கடம் வந்தது.

 1974 ஆம் ஆண்டு நூறாவது படமான 'திருமாங்கல்யம்' வெளிவந்தது. அடுத்த ஆண்டில் 3 படங்கள் என ஜெயலலிதாவின் திரைப்பட எண்ணிக்கை தேய ஆரம்பித்தது. 1975 ஆம் ஆண்டு திரையுலகிலிருந்து விலகப்போவதாக பத்திரிகை பேட்டி ஒன்றில் அறிவித்தார் ஜெயலலிதா. இந்தக் காலகட்டத்தில்தான் தெலுங்கில் பிரபல கதாநாயகனான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா நட்புடன் இருப்பதாகப் பேசப்பட்டது. எம்.ஜி.ஆரை வெறுப்பேற்றும் விதமாக தன் தெலுங்கு சகாவான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா வேண்டுமென்றே அப்படி ஒரு நட்பை வலிந்து ஏற்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. 1975 ஆம் ஆண்டு பிற்பகுதியில் திரையுலகிலிருந்து முற்றாக ஒதுங்கியிருந்த ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டன் இல்லம், ஹைதராபாத் தோட்டம் இவற்றோடு இருந்து கொண்டார். பத்திரிகைகள் அரிதாகவே அவரைப்பற்றிய செய்திகளை வெளியிட்டன. அதுவும் அவரது புகழுக்கு எதிரானவை.

அதாவது அதுவரை கிசுகிசுவாக பத்திரிகைகளிலும், செவிவழியாக திரைவட்டாரத்திடம் பகிரப்பட்ட தகவல்கள் புகைப்பட சாட்சியாக வெளியானது. ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் எடுக்கப்பட்ட அந்த படங்களில் சோபன்பாபுவும் ஜெயலலிதாவும் மிக நேருக்கமாக கணவன் மனைவிபோல இணைந்து போஸ் அளித்து எடுக்கப்பட்டவை. தனது பிரத்யேக புகைப்படக்காரர் மூலம் ஜெயலலிதா எடுத்ததாக சொல்லப்பட்ட படங்களில் ஜெயலலிதா சோபன்பாபுவுக்கு உணவு பரிமாறுவது, வீட்டுச் சுவரில் மாட்டியுள்ள படங்களைக்காட்டி மகிழ்தல், ஜெயலலிதாவின் அலுவலக அறையில் சோபன்பாபு அமர்ந்து விருந்தினரிடம் பேச அருகில் சேரின் மற்றொரு முனையில் அமர்ந்து அதை ரசிப்பது, தனது பர்சனல் அறையில் ஜெயலலிதா வீணை வாசிக்க, அதை ரசித்துப்பார்க்கும் சோபன்பாபு, ஜெயலலிதா மாடியிலிருந்து காரில் கிளம்பிச்செல்லும் சோபன்பாபுவுக்கு ஒருமனைவியைப்போல் கையசைத்து அனுப்பிவைப்பது என ஒரு குடும்பத்தலைவியாக ஜெயலலிதாவை அடையாளம்காட்டும் படங்கள் அவை.

இதில் ஒரு படம் ஜெயலலிதா மிகவும் மகிழ்ந்து காட்டிய படம். மகிழ்ச்சிக்கு காரணம் அந்த புகைப்படத்தின் பின்னணி...சுவாரஸ்யமானது.

ஜெயலலிதா சென்னை வந்தசமயம், மார்டன் யுவதியான அவரது சித்தி வித்யாவதி, அவரது தலைமுடியை சலுானுக்கு அழைத்துச்சென்று பாப் கட்டிங் போல கட் செய்து அழைத்துவந்தார். தன் முடியை கண்ணாடியில் பார்த்து விடிய விடிய அழுதுகொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரை சமாதானப்படுத்த புவனா சத்யம் என்ற புகைப்படக்காரரை அழைத்துவந்து புகைப்படம் எடுத்தார் வித்யாவதி. தன்னை அழவைத்த அந்த புகைப்படத்தை ஜெயலலிதா அடுத்த 2 மாதங்களில் தன் படுக்கை அறையில் அழகு பார்த்தார் பெருமிதமாக. ஆம் இந்த புகைப்படத்தை புவனா சத்யம் சந்தியா குடும்பத்திற்கு தெரியாமல் அந்த ஆண்டு புதுடெல்லியில் நடந்த அகில இந்திய புகைப்படக் கண்காட்சிக்கு அதை அனுப்பிவைத்திருந்தார். ஆச்சர்யமாக அந்த படத்திற்குதான் முதல்பரிசான தங்கப்பரிசு கிடைத்திருந்தது. முதன்முறையாக தன் அழகு பற்றி ஜெயலலிதா பெருமைப்பட்ட தருணம் அதுதான். அந்த புகைப்படத்தை சோபன்பாபுவிடம் காட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்தார் ஜெயலலிதா.

1979 ஆம் ஆண்டு 'ஸ்டார் அண்ட் ஸ்டைல்' என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில், கிசுகிசு போல ஜெயலலிதா - சோபன் பாபு நட்பு குறித்த ஒரு செய்தி வெளியானது. கிசுகிசுவை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயலலிதா அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதமும் எழுதினார். அதுதான் ஜெயலலிதா!