19 டிசம்பர், 2017

பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண்
குழந்தை பிறந்தது.  ஊர் மக்களை ஓன்றுதிரட்டி தனது உப்பரிகைமேல்
நின்றுகொண்டு தங்க நாணயத்தைத் திரண்டு நின்றுகொண்டு  இருந்த
மக்கள்வீது அள்ளி வீசினான்.
அங்கு நின்றுகொண்டு இருந்த
கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்வரை வீசிகொண்டே  இருந்தான் அப்போது மக்கள்
எல்லாம் மகிழ்ச்சி பொங்க
மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.

'மன்னர் ஆண் குழந்தை பிறந்த
சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து, அதனைத் தெரிவித்து மகிழ்கிறார்' என்று  மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னபோது,

மன்னன் குறிக்கிட்டு சொன்னான்:
இல்லை இல்லை எனக்கு ஆண்
மகவு பிறந்ததற்காக நான் தங்க
காசு கொடுக்கவில்லை எனக்கு பாடம் நடத்தி,  என்னை புத்திசாலியாக
ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில்
இருக்கும்போது என் மகன் பிறந்துவிட்டான்.
அவர் என் மகனை மிகப்பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற
சந்தோசத்தில்தான் இந்தப்  பொற்காசுகளை அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி,  மீண்டும் அள்ளி தூவினான். 

அவன் சொன்னபடி பிற்காலத்தில் மிகப்பெரும் அறிவாளியாக
உருவெடுத்தவர்தான் மாவீரன் அலெக்சாண்டர்.

ஒரு சிறந்த ஆசிரியரால்தான்
தனிஒருவனை மிகச்சிறந்த தலைவராக
மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான்.

ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன்
நம்பிக்கைக்குப்  பங்கம் விளைவிக்காமல்  அவன் நம்பிக்கையைக் காப்பாற்றினான்.