22 அக்டோபர், 2018

'நம்' பாரதத்தில் புரிந்துகொள்ள நிறைய உண்டு! 

மகாபாரதத்தில்,
கர்ணன் கிருஷ்ணரைப்
பார்த்துக் கேட்டான்...

"என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில்  விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசு ராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி  நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு  தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது  அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக  நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்
இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது

துரியோதனனின் அன்பு  மூலமாகவே  எனக்கு எல்லாம்  கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக

 "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்
என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.
நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்

நீங்கள் ஆசிரியர்களால்  மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை  நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை  திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு  நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து  யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?
கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்.

கர்ணா ஒன்றை  நினைவில் கொள், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.

ஆனால், மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும்.

எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம்,
எத்தனை முறை நாம் அவமானப்படுத்தப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமல்ல, அந்த நேரத்தில் நாம்  எப்படி மீண்டு எழுந்தோம்  என்பதே முக்கியம்.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நாம் தவறான பாதையில் போவதற்காக அல்ல.

எப்போதும் நினைவில் கொள்  வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம்,  அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே! 

12 அக்டோபர், 2018

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும்  ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.
ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கு அடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியுமா?

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்தப் பெருமைக்கு உரியவர்,
திருவள்ளுவர் மனைவி வாசுகி தான். அந்த அம்மையார் தமது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லையாம்.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

திருவள்ளுவர் சாப்பிடும்போது பக்கத்தில்
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும் ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவார். அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லையாம்.

ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படிக் கேட்பது என அமைதியாய் இருப்பாராம். அதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தாம் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப் பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி, அதைக் கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.

ஆனால், நீ பரிமாறும்போது ஒருநாள்கூட சோற்றுப் பருக்கை சிந்தவே இல்லை.
அதனால் அதன் பயன்பாடு உனக்குத் தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாகச் சொன்னாராம்.

ஒருநாள் வள்ளுவரின் இல்லத்துக்குத் துறவி ஒருவர் வந்தார். அன்று அவர்கள் இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர், வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது விசிறு என்றாராம். பழைய சோறு எப்படிச் சுடும்? அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார்.

இப்படிக் கணவருடன் எதற்கும் வாதம் செய்யாமல் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.

அந்தக் கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.
வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டுவிட்டு வந்தார். குடத்துடன் அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கிவிட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பதுதான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.

ஆக, தமது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்
"அடியிற்கினியாளே... அன்புடையாளே...
படிசொல் தவறாத
பாவமாய் - அடிவருடி...
பின்தூங்கி
முன்னெழும்பும் பேதாய் -
இனிதா(அ)ய் என் தூங்கும் என் கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே!
என் சொல்படி நடக்கத்
தவறாத பெண்ணே!
என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே!
என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ!
என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குக் கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தச் சம்பவத்தை மனதிற்குள்
அசைபோடுவார்களா..!!

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாகச் சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ, அவர்கள்தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும் அறிவாளியாக இருந்தால், அதுவே கோவில்.

10 அக்டோபர், 2018

 தமிழ் உருவான விதம்
 சிறு விளக்கம்
  
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,
ஒ, ஓ, ஒள (உயிர்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகளை உயிர்
எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்
சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள்
மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ்
என்று எப்படி பொருள் வந்தது என்பதைக்
காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும்
வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்
மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்
இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் அ(படர்க்கை),
இ(தன்னிலை), உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில்
ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல
உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

நன்றி : CV Raman

8 அக்டோபர், 2018

மேல் அங்கி

காட்டினை ஒட்டிய ஒரு கிராமத்தில் ஒரு குடியானவன் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய வேலை தினமும் காட்டிற்குள் சென்று முறிந்த மரங்களின் கிளைகளை வெட்டி அதனை விறகாக வெட்டி ஊருக்குள் வருவார். சந்தையில் அதனை விற்றுவிட்டு வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கனிகள் ஆகிய மளிகைப் பொருட்களை வாங்கி வருவான். கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்தது. ஒரு நாள் காட்டிற்குள் போகவில்லை என்றாலும் உணவிற்கு சிரமம் தான்.

அது பெரிய காடு. கொஞ்சம் உள்ளே சென்றால் மட்டுமே காட்டு விலங்குகள் இருக்கும். குடியானவனுக்கு அதன் எல்லைகள் தெரியும். மேலும் சத்தம் மற்றும் வாசனையை வைத்தே மிருகம் ஏதேனும் வருகின்றதா என கண்டுபிடித்துவிடுவார். விலங்குகளை சீண்டவில்லை என்றால் அதுவும் சீண்டாது. இப்படியாக தினம் தினம் காட்டிற்குள் சென்று விறகு வெட்டி வாழ்கை நடத்தி வந்தார்.

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. தொடர்ச்சியாக மழை. குடியானவன் வீட்டினை விட்டு வெளியே போகமுடியவில்லை. சேமித்து வைத்த உணவுப்பொருட்களால் கொஞ்சம் காலம் தள்ளினார்கள். சுத்தமாக எல்லாம் தீர்ந்துவிட்டது. காட்டிற்குள் சென்று ஏதாவது எடுத்து வருவது என முடிவுடன் கிளம்பினார். அவர் கிளம்பும்போது தன் இரண்டு மகள்களும் அவருக்கு ஒரு கதகதப்பான மேல் அங்கியினை கொடுத்தார்கள். தாங்கள் இருவரும் தங்கள் கைகளால் அதனை நெய்தனர் என்றனர். குளிருக்கும் இதமாக இருந்தது. தூறல் நின்று இருந்ததால் வேகமாக காட்டிற்குள் சென்றார்.

ஆனால் காட்டில் மரங்கள் முறிந்து இருந்தாலும் அவை நன்றாக நனைந்து இருந்தன. அவற்றினை விறகாக்க முடியாது. விலங்குகள் இருக்கும் எல்லையையும் கடந்து சென்றார். எதுவும் கிடைக்கவில்லை. பசிக்கு எடுத்து வந்த உணவினை ஒரு மர பொந்திற்குள் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார். அந்த மர பொந்திற்குள் யாரும் இல்லை என நினைத்தார் ஆனால் உள்ளே ஒரு கரடி இருந்தது. பயப்படாமல் அதற்கு பாதி உணவினை கொடுத்தார். “என்ன குடியானவரே விறகு எதுவும் கிடைக்கவில்லை?” என்று எல்லாம் தெரிந்தது போல கரடி கேட்டது. தன் கதையினை கூறினார். “சரி நான் உங்களுக்கு ஒரு உதவி செய்கின்றேன் பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று கேட்டது. “என்னிடம் கொடுக்க இருப்பது என் மகள்கள் கொடுத்து அனுப்பிய இந்த மேல் அங்கி மட்டுமே” என்று அதையும் கொடுத்தார். கரடி ஒரு மரத்தில் ஏறி விசேஷமான ஒரு தேனடையை கொண்டு வந்து கொடுத்தது. அது மற்ற தேனைவிட கூடுதல் சுவையாக இருக்கும். சந்தையில் நல்ல விலை போகும். மகிழ்வாக குடியானவன் வீடு நோக்கி நடந்தான். வீட்டில் நடந்ததை கூறி, காலையில் தேனடையில் இருந்து தேனைப் பிழிந்து விற்க வேண்டும் என சொல்லியபடி உறங்கினான். மகள்களுக்கு தேன் கிடைத்தது மகிழ்ச்சி தான் என்றாலும் தன் தந்தைக்கு கொடுத்த மேல் அங்கி பறிபோனது பற்றி கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

காலையில் குடியானவனின் மனைவி கதவை திறந்ததும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. வாசலில் அவருடைய மேலங்கியும் ஒரு கடிதமும் இருந்தது. “ஐயா, நான் உங்களுக்கு தேனடையை கொடுத்த கரடி. உங்கள் மேலங்கியுடன் வீட்டிற்கு சென்று நடந்ததை மகனிடம் கூறினேன். அவன் என்னை கண்டபடி திட்டிவிட்டான். அவருடைய மகள்கள் எவ்வளவு ஆசையாக ஆடையை தயாரித்து இருப்பார்கள், அதைப்போய் வாங்கி வந்துவிட்டாயென. மேலும் உதவி செய்தால் பிரதி பலன் எதிர் பார்க்க கூடாது என்று சொல்லிவிட்டான், அதனால் உங்கள் மேலங்கியை இங்கேயே வைத்துவிடுகின்றேன். நன்றி” என்று இருந்தது.

உண்மையில் அந்த தேன் மற்ற தேன்களை விட 10 மடங்கு சுவையானதாகவும் நிறைய மருத்துவ குணம் வாய்ந்ததாகவும் இருந்தது. ஒரே தேனடையில் கணிசமான தொகை கிடைத்தது. அதனையே முதலாக கொண்டு சின்னதாக வியாபாரம் துவங்கினார் குடியானவன். அதன் பின்னர் காட்டிற்கு போகவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அடுத்த மழைக்காலமும் வந்தது ஆனால் இந்த சமயம் வீட்டில் போதுமான வசதி இருந்தது.

இரண்டு மகள்களும் அந்த கரடியுடன் நடந்த சம்பவத்தினை மறக்கவே இல்லை. கரடியின் உயரம், உருவம், எங்கே சந்தித்தீர்கள் என வருடம் முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கேட்டதோடு மட்டும் அல்லாமல் அந்த உருவத்திற்கு ஒரு மேலங்கியினை தயார் செய்தார்கள். தாங்கள் இருவரும் காட்டிற்குள் சென்று அந்த மரபொந்தின் அருகே காத்திருந்தார்கள். அந்த கரடியும் வந்தது. ஆனால் அதற்கு வயதாகிவிட்டு இருந்தது. தாங்கள் அந்த குடியானவனின் மகள்கள் என அறிமுகம் செய்துகொண்டார்கள். “வீட்டிற்கு வாருங்கள் குழந்தைகளே” என்று கரடி அழைத்தது. இந்த அன்பு பரிசினை ஏற்றுக்கொண்டால் போதும் நாங்களே உங்களுக்கு ஆடை செய்தோம் என அந்த அங்கியினை கொடுத்தார்கள். கரடிக்கு கச்சிதமாக பொருந்தியது. உள்ளுக்குள் மகன் திட்டுவானோ என்றும் இருந்தது. ஒரு துண்டு காகிதத்தில் “அண்ணா, தங்கைகளின் அன்பு பரிசினை ஏற்றுக்கொள்ளுங்கள்” என கரடியின் மகனுக்கு கடிதம் கொடுத்தார்கள்.

வீடு நோக்கி புறப்படவும் கரடியின் மகன் அங்கே வரவும் சரியாக இருந்தது. விஷயம் எல்லாம் கேட்டறிந்த கரடி மகன் மகிழ்ந்தது “சகோதரிகளே, காட்டிற்குள் இப்படி தனியாக வருவது ஆபத்தானது. உங்கள் அப்பாவிற்கு ஆபத்து எங்கே இருக்கு என தெரியும், நீங்கள் குழந்தைகள். சரி வாருங்கள் எல்லை வரை உங்களை கொண்டு சேர்க்கின்றேன்” என அவர்களுடன் நடந்தது.

காட்டின் எல்லை வரை கதைகள் பேசி வந்தார்கள். கரடியின் பள்ளிக்கதைகளை சொல்லி சிரித்து சிரித்து மகள்களுக்கு வயிறே வெடிப்பது போல இருந்தது. எல்லை வந்தது “அதோ அந்த மரத்தின் மேல் ஏறி நீங்கள் ஊருக்குள் செல்வதை பார்க்கின்றேன்” என கையசைத்து விடை கொடுத்தது.

காட்டில் நடந்த சம்பவத்தினை தன் நண்பர்களுக்குச் சொல்லி சொல்லி மகிழ்ந்தார்கள்.

- விழியன்
ஏழு எண்ணிற்கு 
இவ்வளவு பெருமையா ?

கொஞ்சம் படிச்சு பாருங்கள்
பூரித்து போய் விட்டேன்.

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.

ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.

ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.

காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு.

பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.

ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு.
இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007.

2. ஏழு குன்றுகளின் நகரம் ரோம்.

3. வாரத்திற்கு மொத்தம் ஏழு நாட்கள்.

4. மானிடருக்கு மொத்தம் ஏழு பிறவி.

5. ஏழு சொர்க்கம் (குரான்).

6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR).

8. ஏழு வானங்கள். (Qur'an)

9. ஏழு முனிவர்கள். (Rishi)

10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி).

11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica).

12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை ஏழு.

13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு.

அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் கால்பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.

14. கண்ணுக்குப் புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு.
(Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)

15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள்,
133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத் தொகையும் ஏழு.

16. மேலுலகம் ஏழு.

17. கீழுலகம் ஏழு.

நுண்ணறிவாய், உலகாய் உலகு ஏழுக்கும்.
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப்
பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே.
- திருமூலர் பாடல்

18. திருக்குறளில் 'கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

19. மொத்தம் ஏழு தாதுக்கள்.

20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா.

21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.

22. ஏழு புண்ணிய நதிகள்.

23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு.

24. அகப்பொருள் திணைகள் ஏழு.

25. புறப்பொருள் திணைகள் ஏழு.

26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு.

27. கடை ஏழு வள்ளல்கள்.

28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு).

29. திருவள்ளுவர் - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்.

30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள்.

31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா.

32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு.

33. உடலைக் கட்டுப்படுத்தும் சக்கரங்கள் ஏழு.

34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு.
பேதை, பொதும்பை,
மங்கை, மடந்தை,
அரிவை, தெரிவை,
பேரிளம் பெண். 

5 அக்டோபர், 2018

*பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா* தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டபோது,

_தன்னுடைய மருத்துவருக்கு போன்செய்து, நெஞ்சுவலி அதிகமாக இருக்கு, எனவே தன்வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார்.._

_அதற்கு மருத்துவர் தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர்,_ எனவே தன்னால் வரமுடியாது, *ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியது தானே?* என்றார்.

ஷா, *"தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை", "காபி போட்டு குடிக்க முடியவில்லை". "தொடர்ந்து நிற்கவே முடியவில்லை"* என்றார்.

சரியென்று மருத்துவரும் *பெர்னார்ட்ஷா* வீட்டிற்கு வந்தார்.

மாடியில் தங்கியிருந்த *ஷா* வைப் பார்க்க படியேறிவந்தார்.

*ஷா* வைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார்.

அதைப்பார்த்து பதறிப்போன *ஷா* எழுந்து சூடாக காபி போட்டுவந்து டாக்டருக்கு கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார்.

டாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து *30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார்.*

*ஷா*, சிரித்துக் கொண்டே
டாக்டரைப் பார்த்து, *என்னப்பா டாக்டர் இது? எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உனக்கு நெஞ்சுவலி வந்து நான்தானே பணிவிடை செய்தேன். எனக்கே பில் எழுதி தருகிறாயே?* எனக்கேட்டார்.

அதற்கு டாக்டர் *உங்களுக்கு பார்த்த வைத்தியதிற்குத் தாங்க இந்த ஃபீஸ்* என்றார்.

மீண்டும் டாக்டர் சொன்னார்..
_போனில் என்னிடம் என்னவெல்லாம் பிரச்சினை சொன்னீர்கள்.._
*"எழுந்து நடக்க முடியவில்லை"* என்றீர்கள். இப்போ ஓடோடிவந்தீர்கள்.
*"உங்களுக்கே காபி போட்டுக்கொள்ள முடியவில்லை"* என்றீர்கள். இப்ப எனக்கும் காபி போட்டு தந்தீங்க.
*"தொடர்ந்து நிற்கவே முடியலைன்னு"* சொன்னீங்க. இப்போ அரைமணி நேரமா நிற்கிறீர்கள் என்று கூறிய டாக்டர் மேலும் தொடர்ந்தார்..

*அப்பொழுது, உங்கள் கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள்* அதனால் *அவை பெரிதாக தெரிந்தன.*

இப்போ *எனது கஷ்டத்தைப் பார்த்ததால் உங்களின் கஷ்டம் மறந்துவிட்டது* என்றார்.

*நம்முடைய கவலைகளையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அவை பூதாகரமாகத்தான் தெரியும்.*
*பிறரின் கவலைகளையும் நினைத்துப் பாருங்கள்..*
*அவற்றின் முன்பு நம்முடைய கவலைகள் புஸ்வானமாகிப் போகும்..*

*கவலைகள் மறப்போம்..*
*சிறகுகள் விரிப்போம்

1 அக்டோபர், 2018

Correct meaning of "OK" is the name of a German engineer Otto Krovens who worked for Ford car company in America.
As chief inspector he wrote his initial as OK upon each car he passed.
Hence it continued till date as All correct

💚  Do we know actual full form of some words???  💚

💛 _ 🔗News paper = _ 💛
  _North East West South past and present events report._

💛 _ 🔗Chess = _ 💛
  _Camel, Horse, Elephant, Soldiers._

💛 _ 🔗Cold = _ 💛
  _Chronic Obstructive Lung Disease._

💛 _ 🔗Joke = _ 💛
 _Joy of Kids Entertainment._

💛 _ 🔗Aim = _ 💛
  _Ambition in Mind._

💛 _ 🔗Date = _ 💛
 _Day and Time Evolution._

💛 _ 🔗Eat = _ 💛
 _Energy and Taste._

💛 _ 🔗Tea = _ 💛
_Taste and Energy Admitted._

💛 _🔗Pen = _ 💛
 _Power Enriched in Nib._

💛 _🔗Smile =_ 💛
_Sweet Memories in Lips Expression._

💛 _ 🔗SIM = _ 💛
_Subscriber Identity Module_

💛 _ 🔗etc. = _ 💛
 _End of Thinking Capacity_

💛 _ 🔗Or = 💛
_Orl Korec (Greek Word)_

💛 _ 🔗Bye = 💛
Be with you Everytime._

💚 share these meanings as majority of us don't know 💚     👌👌


*நல்ல நட்பை இழந்து விடாதீர்கள்... !!!*

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் ,
"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா...???"
என்று கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 3). "அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.*

 👉 *"யாருக்கும் பயனில்லாத,*

👉 *நல்ல விஷயமுமில்லாத,*

👉 *நேரடியாக நீங்கள் பார்க்காத,*

*என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

*நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.*

👉 *பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,
வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!*

நானும் என்றும் இழக்க மட்டேன்..... 

   மகாத்மா காந்தி











Mahatma_Gandhi
‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: அக்டோபர் 02, 1869
இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 
இறப்பு: ஜனவரி 30, 1948
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
காந்தியின் தண்டி யாத்திரை
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
இறப்பு
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியாமகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.





பிறப்பு: அக்டோப