தமிழர்களின் சொத்து: பனை மரத்தின் பயன்பாட்டு ரகசியங்கள்!
நம் மாநிலத்தின் சின்னமான பனை மரம், எண்ணற்ற மருத்துவக் குணங்களையும் பயன்களையும் கொண்டுள்ளன. இம்மரங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் காவலனாகவும் தலை நிமிர்ந்து நின்றன.
ஆனால், இன்றைய தமிழகத்தில் இந்த பனைகளின் எண்ணிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளன; குறைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இன்றைய தமிழகத்தில் இந்த பனைகளின் எண்ணிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளன; குறைக்கப்பட்டுள்ளன.
பனை ஓலை கூரை:
ஒரு காலத்தில் பனை ஓலையைக்கொண்டு கூரைகள் அமைக்கப்பட்டன. வெயில் காலத்தில் வெப்பத்தைத் தன்னுள்ளே தக்கவைத்து இதமான சூழலையே வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. வீடுகளுக்குப் பலகை செய்வதற்கும் பயன்பட்ட இந்த மரங்கள், தற்போது மிகவும் குறைந்த அளவிலே உள்ளன.
மட்டையில் இருந்து நார் எடுத்து கயிறு திரிக்கின்றனர். இந்த கயிற்றினைக்கொண்டு கட்டில் போன்றவை செய்யவும் பயன்படுத்தினர். ஆனால் தற்பொழுது செய்வதற்கு யாரும் இல்லை.
பதநீர்:
பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பதநீர், அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய குளிர்ச்சியான பானமாகும். உடலுக்குத் தேம்பும் ஆரோக்கியமும் தந்த பதநீர், தற்போது கிடைப்பதில் அரிதிலும் அரிதாக உள்ளது. கால்சியம், தையாமின், வைட்டமின் சி, நிகோனிக் அமிலம், புரதம் ஆகிய சத்துக்கள் இந்த பதநீரில் உள்ளன.
மருந்துவக் குணங்கள்:
சிறுநீர் பெருக்கு, வாய்வு நோய்கள், பல் வலி, நாள்பட்ட காய்ச்சல், உடல் வீக்கம், நெஞ்சு எரிச்சல், பித்தக் கோளாறுகள், கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஆகிய நோய்களைக் குணப்படுத்த பனைப் பூந்தண்டு சாம்பலை மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கும் மருந்துவக் குணம் வாய்ந்ததாகவே பார்க்கப்பட்டது. தோல் வியாதிக்கு நுங்கின் சாறு மருத்தாகப் பயன்டுபடுத்தப்பட்டது. பனம் பழத்தில் இருந்து ஜாம் மற்றும் பழக்கூழ் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.

பனங்கிழங்கு:
பனங்கிழங்கும் சாப்பிடக்குடிய ஒன்று. பனம் பழத்தை மண்ணில் புதைத்து சில நாட்களுக்குப்பின் கிழங்கு வந்த உடன் எடுத்து வேகவைத்து சாப்பிடலாம். பழந்தமிழரின் ஆதி உணவாக பனங்கிழங்கு இருந்துள்ளது.