6 செப்டம்பர், 2018

நல்ல நட்பை 
இழந்து விடாதீர்கள்...!

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் ,
"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா...???"
என்று கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 3). "அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.*

 👉 *"யாருக்கும் பயனில்லாத,*

👉 *நல்ல விஷயமுமில்லாத,*

👉 *நேரடியாக நீங்கள் பார்க்காத,*

*என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

*நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.*

👉 *பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,
வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!*

நானும் என்றும் இழக்க மட்டேன்.....

👌
இறைவன் கணக்கு

ஒரு கோயில் மண்டபத்தின் வாசலில் இரண்டு
வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம். பெருத்த மழை.
அப்போது அங்கே இன்னொருவர் வந்து சேர்ந்தார்.

வந்தவர், நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?
என்றார் வந்தவர்.

இருவருள் முன்னவர் சொன்னார்,
என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன என்றார்.

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன என்றவர்,
ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள். இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் என்றார்.

(தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்போது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டுத் துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டுத் துண்டு ரொட்டிகளைச் சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றிருந்தது.

மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி விட்டுஎட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து,
நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்தவர்,
அந்த காசுகளைச் சமமாகப் பிரித்து, ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.
ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார். அதாவது 3:5.

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக்கொள்ள வில்லை, என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும்,
நான் பங்கிட சம்மதித்தேன்.

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.
அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது. என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமூகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்குச் சென்றது.

அரசருக்கு யார் சொல்வது சரி என்று புரியவில்லை.
நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்குள் சென்றார்.

மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது.

மன்னருக்கு கனவில் கடவுள் காட்சி அளித்து, தீர்ப்பும், விளக்கமும் தந்தார்.

கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது.

மன்னர் இருவரையும் அழைத்தார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்தவருக்கு ஒரு காசும்,
ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப் பெற்றவர், "மன்னா...!  இது அநியாயம்.
அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொண்டார்" என்றார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்துவிட்டது.

அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத் துண்டுகள்தான் கிடைத்தது.

ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் .

அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள். ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன். (1:7) என்றார்.

ஆம்! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகத்தான் இருக்கும்.

நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு.

எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு.

இது கடவுளின் கணக்கு.
இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை. தர்ம புண்ணிய கணக்கு.

நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்.
முழுமையாகத் தம்மை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்.