மனிதப் புனிதர் : காமராசர்
பெருந்தலைவர் காமராசர் இரவு நீண்ட நேரம் விழித்து, கடமை தவறாது பணியாற்றியவர். இடம் பொருள் பாராது எங்கும் படுத்த உடனே அவர் தூங்கி விடுவார். எங்காவது நெடுங்தூரப் பயணம் என்றால், காரின் பின் சீட்டில் அப்படியே சுருண்டு படுத்துவிடுவது அவரது வழக்கம்.
ஒருமுறை வெளியூர் சுற்றுப் பயணம் முடித்து அவர் திரும்பிக்கொண்டிருந்த சமயம், காரின் பின்இருக்கையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். கார் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அப்படியே நிற்பதும், ஏராளமான கார்கள் கடந்து செல்லும் சப்தமும் அவரை விழிப்படைய செய்தது.
காமராசர் எழுந்து வெளியே பார்த்தார். சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தில் (அப்போது மர்மலான் பாலம்) ஏற்பட்ட டிராபிக் ஜாமில் வண்டி நின்றிருந்தது. வண்டியின் முன்னால் போய் பார்த்தார். நடு பாலத்தில் ஒரு லாரி பிரேக் டவுன் ஆகியிருந்தது. ஒரே ஒரு டிராபிக் போலிஸ்காரர் போக்குவரத்தைச் சரிபடுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.

தாம் ஒரு முதலமைச்சர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு, உடனே காரைவிட்டு இறங்கி, அந்தப் போலிஸ்காரருக்கு உதவியாக இருந்து, போக்குவரத்தைச் சரிப்படுத்திவிட்ட பிறகே காரில் ஏறினார்.
அதுமட்டுமல்ல, சைதாப்பேட்டை போலிஸ் ஸ்டேஷன் போய், ''இதுபோன்ற இடங்களில் கூடுதலாக இன்னொருவரைப் போட்டால் என்னண்ணேன்'' என்று பொறுப்போடு கண்டித்து விட்டும் வந்தார்.
(நன்றி : விடுதலை)
பெருந்தலைவர் காமராசரைப் பற்றி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். படிக்காத மேதையானாலும் அவரொரு அறிவுக் களஞ்சியம். இதுபோன்ற நல்ல பழக்க வழக்கங்கள் அவருள் பொதிந்திருந்தன. பதவி, பட்டம் என எதையுமே அவர் துச்சமென மதித்தவர். மனிதம் மட்டுமே அவருள் ஆழ்ந்திருந்தது, அவரை அதுதான் ஆட்சிப் பீடத்தில் ஏற்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக