சபர்மதி ஆசிரமத்தில், உணவு உண்பதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் மணி ஒலிப்பது வழக்கம். குறிப்பாக இரண்டுமுறை மணி அடிக்கப்படும். அதற்குள் உணவுக்கூடத்துக்கு வந்துவிடவேண்டும். தாமதமாக வருபவர்கள், உணவுக்கூடத்தின் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் காத்திருக்க வேண்டும்.
ஒருநாள், காந்திஜி இரண்டாவதுமுறை மணியடித்து சிறிதுநேரம் கழித்த பிறகே வந்து சேர்ந்தார். எனவே அவர், கதவருகே காத்திருந்தார். அதைக் கவனித்த சேவகர் ஒருவர் ஓடிவந்து, “பாபுஜி... தயவுசெய்து உள்ளே வாருங்கள்” என்றார். ஆனால், காந்திஜி அதை ஏற்க மறுத்துவிட்டார்.
“ஆசிரமத்தின் விதிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரையும்போல நானும் அவற்றை
ப் பின்பற்றவேண்டும். இன்று எனக்காக விதிமுறைகளைத் தளர்த்தினால், நாளை மற்றவர்களுக்காகவும் அப்படித் தளர்த்த வேண்டியிருக்கும்” என்று கூறி, பொறுமையாகக் காத்திருந்தார் காந்தியடிகள்.

(நன்றி, தினத்தந்தி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக