7 செப்டம்பர், 2013

தமிழினிது....!

வட்டாரப் பேச்சு!

திருநெல்வேலி பக்கம் "பைய" என்ற
வார்த்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள்,
கேட்டு இருக்கறீர்களா ? அந்தச்
சொல்லுக்கு "மெதுவாக" என்று பொருள் .

மிதிவண்டி ஓட்டிக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிட்டால்
அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் குரல் வரும் ,

"ஏல பைய போயிட்டு வா என்னா..."

அன்று காமத்துபால் படித்துக் கொண்டிருந்தேன்.
அதில் காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

அப்போது காதலி காதலனைப் பார்த்து மெதுவாகச்
சிரிக்கிறாள். இந்தச் சூழ்நிலையை வள்ளுவர்
சொல்கிறார் :

"அசையியற்கு உண்டாண்டோர் எர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்."

இரண்டாவது அடியில் தலைவி மெதுவாகச்
சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார்
வள்ளுவர்.

அட, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்னே திருவள்ளுவர்
பயன்படுத்திய வார்த்தையை இன்னும் நாம்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமே!

தமிழ் பிறந்த இடம் பொதிகை தானோ...!

திருநெல்வேலி மக்கள் வார்த்தைகளில் இன்னும்
ஆதித் தமிழ் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

பெருமைப்படுகிறே ன் தங்கத்தமிழ் கற்றதர்க்கு!

- நன்றி, முத்து மாரியப்பன், மம்சாபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக