27 மே, 2017

*      அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் -  திருக்குறள்

*    அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்

*    அந்தகக் கவிராயர் எழுதிய உலா –திருவாரூர் உலா

*    அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து

*    அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் -  ஆலாபனை - 1999

*   அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் –அரு.இராமநாதன்

*    அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் –ஆ.சிங்காரவேலு முதலியார்

*    அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் -   மறைமலையடிகள்

*  அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி

*  அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்

*  அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி

*   அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி

*   அரக்கு மாளிகை  நாவலாசிரியர் – லட்சுமி

*  அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம்,எட்டி ,ஏனாதி,காவிதி,

*  அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை

*    அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்

*   அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன்– நின்ற சீர் நெடுமாறன்

*    அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்

*   அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்

*   அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் –திருப்புகழ்

*    அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக