17 அக்டோபர், 2017

​🅾🈯 *புகுந்த வீட்டில் திருமணப் பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்...​⛔*

திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணை முதன் முதலாக குத்துவிளக்கை ஏற்ற வேண்டும் என்று சொல்வது ஏன் தெரியுமா?

திருமணப் பெண் புகுந்த வீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்?

குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிக்கிறது.

மேலும் குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்கள் ஐந்து கடவுள்களையும் குறிக்கிறது. அதாவது குத்துவிளக்கின்,

தாமரைப் போன்ற பீடம் - பிரம்மாவையும்,

நடுத்தண்டு பகுதி - விஷ்ணுவையும்,

நெய் எறியும் அகல் - சிவனையும்,

தீபம் - திருமகளையும்,

சுடர் - கலைமகளையும் குறிக்கிறது.

எனவே திருமணம் முடிந்து முதன் முதலில் புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் ஐந்து நற்குணங்களையும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிப்பதாக குத்துவிளக்கை ஏற்ற சொல்கிறார்கள் என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது.

பின் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, குத்துவிளக்கில் உள்ள ஐந்து கடவுள்களையும் வணங்கி, குத்துவிளக்கில் இருந்து வரும் ஒளியால் வீடு முழுவதும் எப்படி பிரகாசம் அடைகிறதோ, அதேபோல் புகுந்த வீட்டில் வாழ வந்த பெண்ணின் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக