26 ஜூன், 2017

2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ??

நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்...!

1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?

'Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  IPC Section ஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?

ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.  எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .

அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..

ஆனாலும் எப்பவும் சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும்...!!

அர்ப்பணம்:
எப்போதும் நிகழ்காலத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காமல், எதிர்காலத்தை அறிவியல்பூர்வமாய் கணிக்க முயற்சிப்பவர்க்கு .
ஒரு பெரிய கார்பரேட் கம்பெனி முன்பு இருந்த ஒரு பிரண்டிங் பிரஸில்,

 அவரது தந்தைக்கு பின்னும் அதே பிரண்டிங் பிரஸை சற்று விரிவாக முறையில் நவீன மிஷின்களையும் புகுத்தி அந்த பெரியவர் தொழில் கொண்டிருந்தார்.

அந்த வட்டாரத்தில் இவரது பிரஸ் மிகவும் பிரபலம்....

ஒரு நாள் எதிரே இருந்த அந்த கம்பெனி மேனேஜர் பிரிண்டிங் பிரஸ்ஸூக்கு  வந்து விசிட்டிங் கார்டு மல்டி கலரில் அடிக்கனும், ரேட் என்ன என கேட்டுக் கொண்டே....

"நீங்க ரொம்ப நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....

தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க

இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரி யிருக்கலாம் இல்ல" என்றார்....

பெரியவர் புன்னகைத்து விட்டு சொன்னார்...

"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரி யிருக்கேன்"

"எப்படி?"

"இருபது வருஷத்துக்கு முன் நான் என் தந்தையுடன் இந்த தொழிலில் நுழைந்த போது,

நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...

அப்போ என் வருமானம் மாசம் வெறும் ஆயிரம் ரூபா... ஆனால்
உங்கள் வருமானம் மாசம் அப்பவே பத்தாயிரம்...

நீங்க வளர்ந்து இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...

மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....

இப்போ எனக்கு சொந்தமா இந்த பிரஸ் இருக்கு...

இந்த வட்டாரத்தில் எனக்கு நல்ல பேர்   இருக்கு...

ஏன்  எனக்கு சொந்த வீடு கூட கிடையாது.

உங்களுக்கு வீடு கார் என செல்வாக்காக தான் இருக்கீங்க.

ஆனாலும் உங்களை உங்கள் பக்கத்து  வீட்டுக்காரனுக்கு கூட தெரியாது.

ஏன் உங்கள் உறவினர்கள் யாராவது ஊரிலிருந்து வரவங்க கூட என் பிரஸ் அடையாளத்தை சொல்லிதான் ஆட்டோவிலோ, காரிலோ வராங்க.

இந்த ஏரியாவிலே என்னையும், என் பிரஸையும் எல்லாருக்கும் ஓரளவு நல்லாவே  தெரியும்.

நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதை விட அதிகமாகவே சில சமயம் சம்பாதிக்கிறேன்.

நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை அப்படியே நான் தர முடியும்...

அவர்களும் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...

நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...

உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....

உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...

நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....

உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது,

என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்களே யோசித்து கணக்குப் போட்டுக்கோங்க..

ஒரு வேளை என் மகனிடம் உங்கள் மகன் வேலைக்கு வந்தாலும் வரலாம்" ஆச்சர்யபட இல்லை என்றார்....

மேனேஜர் விசிட்டுங் கார்டுக்கு  பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடியே விட்டார்...

நீதி:

"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

" இது எல்லாம் படிக்க நன்றாக தான் இருக்கு, என எண்ணுகிறீர் களா,

உண்மை அப்படியில்லை "

என்னுடைய சுமார் 30 வருட அனுபவத்தில் ஐந்தாறு மாநிலங்களுக்கு மேல் பயணப்பட்டு பிரிண்டிங் லைனில் உள்ள அவரவர்களுக்கு தேவைப்பட்ட  எல்லா மிஷின்களை வாங்கி கொடுத்து அல்லது விற்றுக் கொடுத்து அல்லது மாற்றியும் இதே தொழிலை செய்து முழுமையாக செய்து கொண்டு வருகிறேன்.

ஆனால் நான் அடிப்படையில் இண்டோ ஈரோப்பா கம்பெனி லெட்டர் பிரஸ் மிஷின் மெக்கானிக் எனக்கு சரியா பேசவே வராது.

இப்ப எவ்வளவு பெரிய பூதாகரமான பேச்சாளரிடமும் பிசினஸ் பேசி முடிச்சிடுவேன்.

இப்பவும் மிஷின்களின் மாடல் சைஸ், பவர், வெயிட், போன்ற விஷயங்களில் ஓரளவுக்கு நல்ல அனுபவம்,

இது தற்புகழ்ச்சிக் காகவோ விளம்பர நோக்கத்திலோ சொல்லவில்லை.

 இருபது முப்பது ஆண்டுக்கு மேலாக இந்த தொழிலில் இருப்பவர் களுக்கு என்னை  நன்றாக தெரியும்.

 கடமை ஒரே தொழிலில் கவணம் செலுத்தி காத்திருத்தல் மிக மிக முக்கியம்.

" ஒரு காலத்தில் பூமிக்கடியில்  எண்ணை வளம் இருப்பதை தெரிந்து கொண்ட பலர் ஆளாலுக்கு அவர்கள் இஷ்டத்துக்கு கிணறு தோண்டி இருபது அடி, முப்பது அடி என தோண்டி பார்த்து ஒன்றுமில்லை என பலரும் பல இடங்களில் பல அளவுகளில் தோண்டிப் பார்த்து ஒன்றுமில்லை. என விரக்தியில் விட்டுவிட்டு வேறு வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.

ஆனால் அதே ஏரியாவில் அதே இடத்தில் ஒரே கிணற்றில் இருநூறடிக்கு மேல் காத்திருந்து நம்பிக்கை தளராமல் தோண்டிய சிலருக்கு தான் தென்பட்டது இன்றைய செளதி அரேபியாவிவின் எண்ணை வளம் "

இன்று இந்த நாடு உலகையே பொருளாதார ரீதியாக ஆண்டு கொண்டிருக் கிறது.

இன்றும் நன்றாக ஷிப்ட் போட்டு 24 நான்கு மணி நேரமும், நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் பிரிண்டிங் பிரஸ் களும் உள்ளன.

இரண்டு மூன்றாண்டாக நன்றாக இயங்காத பிரிண்டிங் பிரஸ்ஸூம் உள்ளது.

அதற்கு காரணம் ஒரே தொழிலை ஒரே மாதிரி ஆயிரம் பேர் செய்யறது தான்.

ஆயிரம் பேர், ஆயிரம் மாதிரி தானே செய்யனும்


வித்தியாசமாக ஏதாவது ஒரு இணை தொழிலை அந்த துறை சார்ந்த தாகவே, செய்து வாருங்கள்.

மாறி மாறி மாதம் முப்பது நாட்களும் பிசியாருப்பீர்கள்.

தவிர மண்ணில் விதைத்தவுடனே, மரத்தை அன்னாந்து பார்த்தா எப்படி,

முதலில் இலை பிறகு கிளை அப்புறம் தான் பூ இறுதியாக தான் பழம்.

எந்த தொழிலுக்கும் கால அளவு உண்டு.

அது உங்கள் திறமை அனுபவம் சமயோஜிதம் போன்றவையை பொறுத்தது.

எந்த கண்டு பிடிப்பாலரும் ஓரிரவில் அனைத்தையும்  கண்டு பிடிக்க வில்லை.

அதே போல் கண்டு பிடித்த பிறகு அவர்கள் அதன் பலனை அனுபவிக்கவும் இல்லை.

ஒரு பத்து அல்லது  பதினைந்து ஆண்டுகளாவது எந்த தொழிலிலும் நிலையாக உறுதியாக இருந்தால் தான்,

 தோல்வி உங்களை கண்டு பயந்து  ஓடியே போய்விடும்.


வெற்றி உங்கள் கைகளில் தவழ்ந்து தாண்டவமாடும்.

தொடர்ந்து தங்கள் ஒத்துழைப்பு மற்றும் நல்லாதரவை  நாடும்...


வி. ஜே. பாபு, சிதம்பரம்.

9488170040 & 9003728112.
*இறைவன் ஒருவனே!*

*ரம்ஜான் வாழ்த்துக்களுடன் சிந்தனைக்கு சில வரிகள்*
 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்த செய்தியை படிங்க உடம்பு சிலிர்க்கும்.

டாக்டர் அஹ்மத் ஒரு
புகழ்பெற்ற மருத்துவர்.
அவர் ஒரு தடவை ஒரு
முக்கியமான மருத்துவ
மாநாட்டிற்குப்
புறப்பட்டார். அது
இன்னொரு நகரத்தில்
நடக்கவிருந்தது.

மருத்துவ ஆய்விற்கான
விருது அந்த மாநாட்டில்
அவருக்கு வழங்கப்பட
விருந்தது.

அவர் மிக நீண்ட காலமாக
செய்த உழைப்பு,
ஆய்வு பயனாக
அந்த விருது அவருக்கு
வழங்கப்படவிருந்தது.

அதனால், அவர் மிகவும்
ஆர்வமாக அதைப் பெற
புறப்பட்டிருந்தார்.

விமானம் அவரையும்
சுமந்தவாறு
புறப்பட்டது. இரு மணி
நேரம் பறந்த விமானம்
திடீரென அருகில்
இருந்த விமான
நிலையத்தில்
தரையிறக்கப்ட்டது.
விமானத்தில் ஏற்பட்ட
கோளாறே
தரையிறக்கத்திற்கான
காரணம்.

அடுத்த 10 மணி
நேரத்திற்கு
விமானம் புறப்படும் வாய்ப்பே இல்லை
என்ற நிலை. டாக்டர்
அஹ்மத்தை பதற்றம்
பற்றிக்கொண்டது.
உரிய நேரத்தில்
மாநாட்டை
சென்றடைவோமா?
எனும் கவலையே அது.

ஒரு வாடகை காரை
எடுத்து கொண்டு,
ஊர் மக்களிடம்
விசாரித்துவிட்டு குறுக்கு
பாதையில் வேகமாக
பயணித்தார் டாக்டர்.

இப்போது மீண்டும் ஓர்
அதிர்ச்சி. கடுமையான மழை. பெரும் காற்று
கிட்டதட்ட ஒரு
புயலையொத்த நிலை.

டாக்டர் ஆர்வத்தினால்
அதனை
பொருட்படுத்தாமல்
பயணிக்க ஆரம்பித்தார்.
வர வர நிலைமை  மோசமாக மாறியது.

வாகனத்தை
செலுத்துவதே மிகப்பெரிய
போராட்டமாக
மாறியது. 2 மணி
நேர கடினப்
பயணத்திற்கும் பின்னர்,
தான் வழி தவறி
விட்டது அவருக்கு
உறுதியானது.

பாலைவனச்
சாலையில், பயங்கர
புயல்
காற்றுக்கிடையே
நீண்ட பயணமிது.
அயர்வு, களைப்பு,
தாகம், பசி என சோர்ந்து
போனார் டாக்டர்.

சிறிது தூரத்தில் ஒரு
வீடு தெரிந்தது. காரை
நிறுத்தி அதன் கதவை
தட்டினார்.
ஒரு வயதான பெண்
கதவைத் திறந்தார்.

பெண்ணிடம் தான்
சிறிது இங்கு தங்கிச்
செல்லலாமா? என்று
கேட்டார் டாக்டர்.

பெண் சிறிது
யோசித்து பின்னர்
நிலைமைகளை
புரிந்து கொண்டு சரி
என்றார்.

டாக்டர் வீட்டினுள்
நுழைந்தார்.

அந்த பெண் ஏதாவது
சாப்பிட்டீர்களா? என்றார்.
டாக்டர் இல்லை என்றார்.
தனது ரொட்டியை
டாக்டருக்கு
கொடுத்தார் அந்த பெண்.

அவருடன் பேசிய
போதுதான்
தெரிந்தது டாக்டர்
வழிதவறி வந்த விசயம்.
டாக்டர் அஹ்மதுக்கு இப்போது
பதற்றம் இரட்டிப்பானது.

மெழுகுவர்த்தியின்
மங்கலான
வெளிச்சத்தில் ஒரு
குழந்தை கட்டிலில்
படுத்திருப்பதை பார்த்தார். பார்த்த
மாத்திரத்திலேயே
அது நோயாளியான
குழந்தை என்பதை
டாக்டர் அறிந்து
கொண்டார்.

தொழுது
கொண்டடிருந்த பெண்,
தொழுகையை
முடித்ததும், அவரிடம்
மெல்ல பேச்சு
கொடுத்தார் அஹ்மத்.

அந்த பெண்ணின்
தொடரான தொழுகை,
பிரார்த்தனை,
இடையிடையே விசும்பி
அழுதது, என்பன
அஹ்மதின் மனதை
பிசைந்தன.

அப்பெண்ணிடம் கவலைப்
படாதீர்கள் அல்லாஹ்
உங்கள் பிரச்சனைகளை
இலேசாக்குவான்
என்றார்.

பெண்ணும் “ஆம். நான்
அல்லாஹ்வையே
முழுமையாக
நம்பியுள்ளேன்”
என்றார். “அந்த
தொட்டிலில் கிடக்கும்
குழந்தை எனது பேரன்.
இதன் பெற்றோர்
அண்மையில் ஒரு
விபத்தில் இறந்து
விட்டனர்.
இந்த குழந்தைக்கு
அரிய வகை
புற்றுநோய் உள்ளது.

நான் போகாத
மருத்துவமனை
இல்லை. பார்க்காத
வைத்தியர்களும்
இல்லை. எல்லோரும்
கையை விரித்து
விட்டனர். காப்பாற்ற
முடியாது என்றனர்.

என் பேரனின்
பிரச்சனைக்கு
வைத்தியம் செய்ய ஒரே
ஒரு மருத்துவரால்
தான் முடியுமாம்.
அவரது பெயர் டாக்டர்
அஹ்மதாம். ஆனால் அவர்
இருக்குமிடம், நான்
இருக்குமிடத்தில்
இருந்து வெகுவெகு
தூரம். அவரை நான்
காண்பதற்கும் வாய்ப்பே
இல்லை. அவர் அவ்வளவு
பெரிய மருத்தவர்.
ஆதலால் நான்
அல்லாஹ்விம் அல்லும்
பகலும் டாக்டர்
அஹ்மத்தை
சந்திப்பதற்கும், அவர் என்
பேரனிற்கு சிகிச்சை
அளிப்பதற்கும் ஒரு
வாய்ப்பை தருமாறு
மன்றாடிப்
பிரார்த்தனை
செய்கிறேன்” என்றார்
அந்த மூதாட்டி.

இதனைக் கேட்ட டாக்டர்
அஹ்மத் கண்களில்
தாரை தாரையாக
கண்ணீர் வழிந்தது.
சிலிர்த்துப் போனார்.
அவருக்கு
மயிர்க்கூச்சறிந்தது.

“அல்லாஹு அக்பர்” இந்த
வார்த்தைகளை அவர்
உதடுகளும், நாவும்
விடாமல்
முணுமுணுத்தன.
விமானத்தில் ஏற்பட்ட
கோளாறு, அதன்
தரையிறக்கம், பயங்கர
புயல், பாதை வழி
மாறியது,  தீராத
பசி, தாகம்,
இவையெல்லாம் ஏன்
ஏற்பட்டன என்பது
டாக்டர்க்கு புரிந்து
போனது.

அவர் அடிக்கடி குழம்பும்
"களா கத்ரின்" ஒரு
சின்ன முடிச்சு
அவிழ்வது டாக்டருக்கு
புரிந்து போனது.

எல்லாமே புரிந்து
போனது. “நீங்கள் டாக்டர்
அஹ்மதை சந்திப்பதற்கு
அல்லாஹ் வழி
ஏற்படுத்தி தரவில்லை.
மாறாக டாக்டர்
அஹ்மதையே உங்கள்
காலடியில் கொண்டு
வந்து நிறுத்தி
விட்டான்.

நேரடியாகவே. "ஆம்
நான் தான் அந்த டாக்டர்
அஹ்மத்” என்றார் நா
தளுதளுக்க. இதனை
கேட்ட அந்த முஸ்லிம்
மூதாட்டி
திடுக்கிட்டு போனாள்.

இப்போது அவர்
உதடுகளும், நாவும்
அதே வார்த்தையை
விடாமல்
முணுமுணுக்கின்றன
“அல்லாஹு அக்பர்” என.

அவள் முகத்தில்
ஆனந்தம். கண்களில்
துளி துளியாக
கண்ணீரானது சுருங்கிய
அவள் முகத் தோளில்
பீலி போல்
வழிந்தோடியது.

பட்டம், பதவி, மாநாடு, தேசிய விருது, விஞ்ஞானம்,
அறிவியில், பணம்,
அதிகாரம், டாக்டர் அஹ்மத்
எனும் புகழ் எல்லாமே
அந்த ஏழை முஸ்லிம்
தாயின் இடைவிடா
பிரார்த்தனையின் முன்
பூஜ்யம் என்பதை
இதயத்தின் ஒவ்வோரு
துடிப்பிலும்
உணர்ந்தார் டாக்டர்
அஹ்மத்.

சுபுஹானல்லாஹ்.

“(நபியே!) என்
அடியார்கள் என்னைப்
பற்றி உம்மிடம் கேட்டால்,
நிச்சயமாக நான்
சமீபமாகவே
இருக்கிறேன்.
பிரார்த்தனை
செய்பவரின்
பிரார்த்தனைக்கு
அருகில் இருப்பேன்.
யார்
பிரார்த்தித்தாலும்
விடையளிக்கின்றேன்.
அவர்கள் என்னிடமே
(பிரார்த்தித்து)
கேட்கட்டும். என்னையே
நம்பட்டும். அப்போழுது
அவர்கள் நேர்வழியை
அடைவார்கள் என்று
கூறுவீராக.”
*அல்-குரான் : 2:186*

*இறைவன் மீது 💐*
*நன்றியுடனும் 💐*
*அன்புடனும் 💐*
*வாழ்வோம் 💐*
*இறைவன் ஒருவனே 💐*
நாடார் இனம் தனது வரலாற்றை இழப்ப்து யாரால்....?

 1. *நான் நாடாரின் ஒரே பிரதிநிதி* என்று சட்டடபையில் முழங்கிய நாடார் இனத்தின் முடிசூடா மன்னன் W.P.Aசௌந்தர பாண்டியனை சந்ததிகளிடம் காட்டாதது எந்த வம்சம்?

2. 1741ல் 108 ஆசான் மற்றும் மீனவர்களை படைதிரட்டி டச்சுப் படையை கடலிலேயே சிறை பிடித்த அனந்த பத்மநாபனையும் அவனது நினைவுச் சின்னங்களையும் வருங்கால சந்ததிகளுக்கு காட்ட மறந்தது யார்?

 3. உயிரை விட மானம் பெரிது என்று தோள் சீலை அணிந்து போராட்டம் வெடிக்கக் காரணமாய் இருந்து உயிர் நீத்த சகுந்தலா தேவி நாடாச்சியை நினைவு கூறாதது யார்?

 4. மாவீரன் வடலிவிளை செம்புலிங்க நாடாரை மறந்தது யார்?

5. சிவனின் நாமத்தை உச்சரித்ததற்காக தன் நெஞ்சை பிளக்க வந்தவனுக்கும் மார்பைக் காட்டி நின்ற ஏனாதி நாடானை மறந்தது யார்?

 6.மணிமுத்தாறு அணையை கட்டியது காமராஜர் ஆட்சிக்காலம் என்றாலும் அதற்காக தானே நிதி வசூலித்து தன் நாடார் சமூக மக்களுக்காக மணிமுத்தாறு அணையை கட்ட வைத்த கோசல்ராம் நாடாரை மறந்தது யார்?

 7.இன்று உலகமே பயன்படுத்தும் இமெயிலை கண்டுபிடித்த சிவ அய்யாத்துரை ஒரு நாடார் என்பதை மறந்தது எந்த சமூகம்?

8. கலியுகத்தில் மக்களின் மனதில் உள்ள பயம், அறியாமை, கோபம், காமம், வெகுளி போன்ற நோய்களை ஒழிக்க பாடுபட்ட அய்யா வைகுண்டரை வணங்காதது எந்த சமூகம்?

9.ஏரல் திரு. அருணாச்சல சுவாமி சேர்மனை பற்றி சந்ததிகளுக்கு வழிநடத்தாதது எந்த இனம்?

 10. தமிழுக்கா வாழ்ந்த நாம் தமிழர் இயக்கத்தை உருவாக்கிய சிவந்தி. பா. ஆதித்தனாரை பற்றி வரலாற்றில் அழுத்தமாக பதிய வைக்காதது எந்த இனம்?

11. சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் சூட்டியவர் அண்ணா என்று கூறும் நாம் ஏன் அதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த செம்மல் சங்கரலிங்கனாரை கூற மறந்தோம்?

12. குமரியை தமிழகத்தோடு இணைத்து நாடார் வம்சத்தையே காப்பாற்றியது குமரித்தந்தை மார்ஷல் நேசமணி! அவரை எத்தனை பேர் நம் தலைமுறைக்கு அளித்தோம்?

13. திருநெல்வேலியில் நாடார் சமூகத்திற்கு இரும்புக் கவசமாய் இருந்த செல்வின் நாடாரை திமுக நயவஞ்சமாக காரில் குண்டு வைத்து கொன்ற ~கதையை~ வரலாற்றை எத்தனை பேர் வருங்கால சந்ததிக்கு விட்டுச் சென்றிருக்கிறோம்?

14. ஒட்டு மொத்த நாடார் சமூகத்தின் காப்பரணாய் இன்று கையில் அரிவாள் ஏந்திய வெங்கடேஷ் பண்ணையாரை ஜெ. போலி என்கவுண்டரில் கொன்ற நயவஞ்சகத்தை எத்தனை பேர் மனதில் வைத்திருப்போம்?

 15. ஒடுக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்ட நாடார் சமூகம் பல்வேறு இன்னல்களைத் தாண்டி இமய புகலை அடைந்த கதையை எத்தனை பேர் நினைவு கூர்ந்திருப்போம்?

16. 90% நாடார் வாழும் சிவகாசி மண்ணில் விவசாயம் செழிக்காது; வறண்ட பூமி என்று எண்ணிய காலத்தில் இது கந்தக பூமி, வெடிமருந்தின் உலக புகலிடம் என்று முதல் பட்டாசு ஆலையை நிறுவிய அய்யா நாடாரை எத்தனை பேர் நினைவில் வைத்திருப்போம்?

17. நாடார் கோவில் நுழைவுப் போராட்ட வரலாற்றில் எழுதப்பட்ட சுப்ரமணி அய்யரின் தலைமையிலான போராட்டத்தால் மழுங்கடிக்கப்பட்ட குஞ்சுத நாடாரை எத்தனை பேருக்குத் தெரியும்?

18. முதல் சுதேசி தயாரிப்பு பெரிஸ் பிஸ்கட்; அதை பெரியசாமி நாடாரால் நிறுவப்பட்டது என்பதை யாரெல்லாம் அறிவர்?

19. உலகப் புகழ் பெற்ற HCL கம்பெனி சிவ நாடாரால் நிறுவப்பட்டது என்பதை மறந்தது யார்?

20. நாடார் சமூகத்திற்கே துரோகம் இழைத்த திராவிட கட்சிகளுக்கே ஓட்டுப் போட்டு முதல்வர் சீட்டில் அழகு பார்த்தவர்கள் யார்?

21. தலைசிறந்த வணிக வங்கியான  தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நாடாரின் சொத்து!

22. வாய்ப்பூட்டு சட்ட வீரர் வேலுச்சாமி நாடாரை நினைவு கூறாதது யார்?

23. மொழிப்போர் தியாகி  தாளமுத்து நாடாரை புறந்தள்ளியது யார்?

24. நாடார் என்று தனிப்பட்டு தன் சமூகத்திற்கு செய்யாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் உழைத்த காமராஜரை சாதி சங்க போஸ்டர்களில் அடித்து அவரை சாதித் தலைவராக ஆக்கியது யார்?

 25.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குலசேகரப பட்டினத்தில் லோன் துரையை சுட்டுக் கொன்று தூக்கு மேடையை முத்தமிட்ட காசிராஜன் நாடார் மற்றும் ராஜகோபால் நாடாரை நம் சந்ததிகளுக்கு காட்டினோமா?

26. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நாடாரை மறந்தது யார்?

  இந்த கேள்விகளை யோசித்துப் பார்! உன் நாடார் இனத்தை நீயே உலகிற்கு காட்டலாம் தலை சிறந்த இனமாக!

 *வெல்க நாடார் இனம்!*
குரு. மனோகரவேல் அண்ணாச்சி