ஓர் ஆசிரியர் என்பவர்
எப்படி இருக்க வேண்டும்?
பொதுவாக
மாதா,பிதா, குரு, தெய்வம் என்பார்கள். பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியரே
நம்முடைய வாழ்வின் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றனர். ஆனால், தற்போதுள்ள பரபரப்பான சூழ்நிலையில் ஆசிரியர்கள் குழந்தைகளின் வாழ்வை
ஒழுங்குபடுத்துவதில் முதல் இடத்தை பெறுகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.
விஞ்ஞான மயமான இந்த உலகில் நாம்
ஓடிக்கொண்டிருக்கிறோம். பிறந்த குழந்தையை வீட்டில் பணிப்பெண்ணிடம்
ஒப்படைத்துவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு செல்கின்றனர். இரண்டு வயது ஆனதுமே, ப்ளே
ஸ்கூலில் சேர்த்துவிடுகிறார்கள். அந்தக் குழந்தையின் வாழ்க்கை பள்ளியில்
ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி எனச் சென்று கொண்டிருக்கையில்,
அவர்களின் மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது.
பள்ளிப்படிப்பு வரை
மாணவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்களோ அதுவே அவர்களது வாழ்க்கையில்
பிரதிபலிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பெற்றோர்களின் அன்பு, அரவணைப்பு,
ஆதரவு எவ்வளவு முக்கியம். ஆக, இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு
குழந்தை எந்த மாதிரி வளர்கிறது என்பது அந்த ஆசிரியரைப் பொருத்தும் அமைகிறது.
ஒரு குழந்தைக்கு ஒழுக்கம், பண்பு, ஆற்றல்,
ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும்
கற்று தருவது ஆசிரியரே. வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து,
மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும்,
சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்.
ஒரு ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்?
►
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர்தான்
ஆசிரியர். மாணவர்களின் நிலைக்கு இறங்கி வர அவர்கள் தயாராக இருக்க
வேண்டும்.
► மாணவர்களின் முழுக்கவனமும் தன்னிடம்
இருக்குமாறு பாடம் கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்குப் புரியும் விதத்தில்
பாடம் கற்பிக்க வேண்டும்.
► எப்போதும் முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் வலம் வரவேண்டும். அதுவே மாணவர்களுக்கு ஓர் உற்சாகத்தை அளிக்கும்.
► பாட நூல்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து
பொதுவான விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
► முக்கியமான
விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்தகொள்ள கூடியவராய் இருத்தல்
வேண்டும்.
► தனக்கு நேரம் செலவிடுவதைவிட மாணவர்களுக்கு அதிக நேரம் செலவழிப்பவராக இருக்க வேண்டும்.
► மாணவர்களுக்குக் கல்வியின் மீது உள்ள
ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அவர்களது தனிப்பட்ட திறமையை வெளிக்கொண்டு வந்து,
அவர்களது சாதனைக்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
► எதில் விருப்பம் உள்ளதோ, அதை கண்டறிந்து
செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். மாணவன் படிக்கவில்லை என்றால்,
அவர்களுக்குப் புரியும் படியாக நீங்கள் எவ்வாறு சொல்லி கொடுக்கலாம் என
யோசிக்கலாம்.
► ஒரு விளக்கத்தைக் கொடுக்கும்போது, செய்முறை அடிப்படையில் மாணவர்களுக்கு உணர்த்தினால் படிப்பின்மீது ஆர்வம் வரும்.
► ஓர் ஆசிரியர், மாணவரின் சுக, துக்கங்களைக் கேட்டு ஆறுதலுடன் இருப்பதும் அவசியம்.
► ஆசிரியர்
அனைத்து நற்பழக்கங்களிலும் மாணவர்களுக்கு ஒரு முன்உதாரணமாக இருந்தால், அவர்களுக்கு நீங்கள் சொல்லவே
தேவையில்லை. உங்கள் வழியைத் தானாக அவர்கள் பின்பற்றுவார்கள்.
► ஆக மொத்தத்தில் ஆசிரியர் என்பவர்
அனைவருக்கும் ஒரு படி மேலாக இருக்க வேண்டும். ஆசிரியரின் பணி மகத்தானது
என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக