4 மே, 2017

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp

மீனாட்சி திருக்கல்யாணம்


➦ மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோவில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோவிலை மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்றும் அழைக்கின்றனர்.

➥ மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோத்ஸவம் மிக முக்கியமான விழாவாகும். மீனாட்சி பட்டாபிஷேகமும், மீனாட்சி திருக்கல்யாணமும் இவ்விழாவில் நடக்கின்றன. மேலும் இந்த விழா திருமாலிஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர் கோவிலையும் சம்பந்தப்படுத்துகிறது. இதனால் இவ்விழா நடக்கும் மாதத்தில் மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விழாக்கோலம் பூணுவது இயற்கை.

சித்திரைத் திருவிழா :

➥ சித்திரையில் வளர்பிறை 5ம் நாளில் ஆரம்பிக்கும். மேற்சொன்ன நிகழ்ச்சிகள் 8, 9 மற்றும் 10ஆம் நாட்களில் நடக்கின்றன. எட்டாவது நாள் அன்னை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடந்து வெள்ளி அரியணை ஏறுவார். 9ஆம் நாள் மீனாட்சி வெற்றிப் பயணம் (திக்விஜயம்) முடிந்து 10ஆம் நாள் சித்ரா பவுர்ணமி அன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கும்.

➦ பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. மே 7ஆம் தேதி திருக்கல்யாணமும், 8ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. தினசரியும் காலை மாலையும் மீனாட்சி, சொக்கநாதர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவை கண்டு மகிழ பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கப்படுவதாக கோவில் தெரிவித்துள்ளது.

சிம்மவாகனத்தில் உலா :

➥ மாலை சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் விருட்ஷப வாகனத்திலும் மாசி வீதிகளில் உலாவந்தனர். வெள்ளிக்கிழமை முதல் தினசரி அம்மன், சுவாமி, பிரியாவிடை பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மீனாட்சி பட்டாபிஷேகம் :

➦ மே.5ஆம் தேதி இரவு 6.55 மணி முதல் 7.19 மணி வரை மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மே 6ல் திக்கு விஜயம் நடைபெறும். அது முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்குகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம் :

➥ மே.7ல் காலை 8.55 மணி முதல் 8.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 8ஆம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியாவிடையின் தேரோட்டம் நடைபெறுகிறது. 4 மாசி வீதிகளிலும் தேர் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா :

➦ மே 9ம் தேதி கோவில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவுபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அம்மன், சுவாமி பல்வேறு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இதற்காக சிம்மம், யாளி, யானை உள்ளிட்ட வாகனங்களை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.






இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக