7 மே, 2017

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் அப்படீனா என்ன?



★ நம் முன்னோர்கள் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்டதில் மேல்நோக்கு நாளும், கீழ்நோக்கு நாளும் ஒன்றாகும். புவியின் நிலநடுக்கோட்டிலிருந்து சூரியனின் நிலையையும், பூமியைச் சுற்றி வரும் சந்திரனின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என வகைப்படுத்தினார்கள். இதை எளிதாக தெரிந்துகொள்ள 27 நட்சத்திரங்களை மூன்று பிரிவாக பிரித்தார்கள்.

★ பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், விசாகம், மூலம், முப்பூரம் (பூரம், பூரட்டாதி, பூராடம்) ஆகிய 9 நட்சத்திரங்கள் கீழ்நோக்கு நாள்.

★ ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி - ஆகிய 9 நட்சத்திரங்கள் மேல்நோக்கு நாள்.

★ அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி - ஆகிய 9 நட்சத்திரங்கள் சமநோக்கு நாள்.

செய்ய வேண்டிய செயல்கள் :

கீழ்நோக்கு நாள் :

✜ கீழ்நோக்கு நாட்களில் அஸ்திவாரம், கிணறு தோண்டுதல் போன்றவற்றையும், சமநோக்கு நாட்களில் தானியங்களை காய வைத்தல் போன்ற பணிகளையும் நிகழ்த்திட இவற்றில் எந்தவித தடங்களும் ஏற்படாது.

✜ வீடு, கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை சுபகாரியங்கள், தொழில் தொடங்குதல், மரங்கள் நடுதல்.

சமநோக்கு நாள் :

✜ மேல்நோக்கு நாட்களில் பூமிக்கு மேல் செய்யப்படும் கூரை போடுதல் போன்ற காரியங்களை செய்யலாம். கால்நடைகள் வாங்கவும், உழவு பணிகள் ஆரம்பிக்கவும் உகந்த நாள்.








இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக