7 மே, 2017

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp

உலக சிரிப்பு தினம்



😃 ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது முதன் முதலில் 1998ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி டாக்டர் மதன் கட்டாரியா என்பவரால் தொடங்கப்பட்டது.

😃 அவர் இதை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாக அறிமுகப்படுத்தினார். உடம்பிற்கும், மனதிற்கும் சிரிப்பு நல்லது என்பதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ரவீந்திரநாத் தாகூர்



🎼 இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் (சுயடிiனெசயயெவா வுயபழசந) 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

🎼 இவர் 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும் மற்றொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது.

🎼 ஆங்கிலேய அரசு 1915-ல் இவருக்கு சர் பட்டம் வழங்கியதை அமிர்தசரசில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து திருப்பி கொடுத்துவிட்டார்.

🎼 1909-ல் இவர் எழுதிய கீதாஞ்சலி கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. குருதேவ் என்று அழைக்கப்பட்ட இவர் 80-வது வயதில் (1941) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
📻 1895ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.
💐 1948ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ஐரோப்பிய அமைப்பு (ஊழரnஉடை ழக நுரசழிந) உருவாக்கப்பட்டது.
✍ 1952ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி ஒருங்கிணைந்த மின்சுற்று (iவெநபசயவநன உசைஉரவை) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.







இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக