“சொறிந்து தேய்க்காத எண்ணெய்யும்,
பரிந்துகூறாத விருந்தும் பயன்தராது” என்பது பழமொழி.
பரிந்துகூறாத விருந்தும் பயன்தராது” என்பது பழமொழி.
முற்காலத்தில் எல்லாம் சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டுமென்று சொல்வார்கள். எண்ணெய்ச்சத்து உடம்பிற்குவேண்டும். அப்பொழுதுதான் மேனி மினுமினுப்பாக இருக்கும். குறிப்பாக, தலைமுடி அதிகம் இருப்பவர்கள் முடிக்காம்பு வழியாகத் தலைக்கு எண்ணெய் சேர்ந்து குளிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பதால், கைகளால் நன்கு சொறிந்து, அழுத்தித் தேய்க்கச் சொல்வார்கள்.

எண்ணெய்ச்சத்து உடலில் இருந்தால்தான் தோலில் வறட்சி ஏற்படாது, சுருக்கம் ஏற்படாது, அரிப்பும் இருக்காது. அப்படிப்பட்ட எண்ணெய் நம் உடலுக்குள் செலுத்துவதற்கு ‘மசாஜ் செய்தல்’ என்று சொல்வார்கள். தலையில் எண்ணெயைத் தேய்க்கும்பொழுது அழுத்தித் தேய்க்கவேண்டும், சொறிந்து தேய்க்கவேண்டும். எண்ணெயை உடம்பில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் தலையில் தேய்ப்பதே முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் ‘சொறிந்து தேய்க்காத எண்ணெய் சுகத்தைக் கொடுக்காது’ என்றார்கள்.

இப்படி ‘மதியாதார் வீட்டிற்கு நாம் ஏன் வந்தோம்’ என்று மனதிற்குள் அசைபோட்டுப் பார்ப்போம். எனவேதான், ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்று அவ்வை அன்றே சொல்லி வைத்தார். இருந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு விருந்தை உண்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவோம்.
விருந்து வைக்க நினைப்பவர்கள் வீட்டிற்கு வந்தவர்களைப் பரிந்து உபசரிக்க வேண்டும். பக்கத்தில் நின்றுகொண்டு ‘இதைச் சாப்பிடுகிறீர்களா, அதைச் சாப்பிடுகிறீர்களா’ என்று பலகாரங்களை எடுத்து எடுத்து வைக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் மனம் திருப்திப்படும். ஏனோ, தானோ என்று நடந்துகொண்டால் இதயம் புண்படும். இந்தக் கருத்தையே பழமொழி வாயிலாக முன்னோர்கள் நமக்குப் பதித்துவைக்க விரும்பி, “சொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து அளிக்காத விருந்தும் பயனில்லை” என்று சொல்லி வைத்தார்கள்.
‘நாட்சென்ற கொடை நடை கூலியாகும்’ என்பது ஒரு பழமொழி.

நன்றி : தினத்தந்தி