

து வழக்கமான கிண்டலை அவிழ்த்தார்.
“சாமி... முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ... ராத்திரி தூங்கும்போது எப்படி ஒருபக்கமா படுப்பாரு...?”
கூடியிருந்த அனைவரும் சிரிக்க, வாரியாருடன் வந்தவர்களோ சங்கடத்தில் நெளிந்தார்கள்.
உடனே வாரியார் புன்னகையுடன், திருமண வேலைகளைப் பார்த்துக்கொண்டு பரபரப்பாய் இருந்த மணமக்களின் தந்தையாரை அருகே அழைத்து அவர்களிடம் கேட்டார்.
“நேத்து தூங்கினீங்களா...?”

அவர்கள் இருவரும், “இன்னைக்குக் கல்யாணத்தை வைச்சுக்கிட்டு எப்படி சாமி தூங்கறது...?” என்றார்கள்.
இப்போது எம்.ஆர்.ராதாவைப் பார்த்து வாரியார் சொன்னார், “ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்திவைக்க நினைச்ச இவர்களுக்கே தூக்கம் வரலையே... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படித் தூக்கம் வரும்? தூங்கறதுக்கு நேரம் ஏது?”
(நன்றி, தினத்தந்தி)