9 ஜூன், 2017

கம்பர் - மயிலாடுதுறை

பிறப்பு: கிபி 1180 இறப்பு: கிபி 1250

பிறப்பிடம்: மயிலாடுதுறை அருகில் உள்ள திருவழுந்தூர்

“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு

கம்பர் அவர்கள், கிபி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

நாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநெல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.

கம்பரின் கவிப்புலமை

மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.

இலக்கிய வாழ்க்கை

கம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.

கம்பராமாயணம்

கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:

சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது, “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.

இராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது, “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.

போரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் முழுவதும் துளைகளை ஏற்படுத்தியது. இதைக் கம்பர், “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.

*    இவர் இளம் வயதிலிருந்தே தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் கொண்டு, அவ்விருமொழிகளை கற்றுத் தேர்ந்தார்.

*    சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மை கொண்டவராக இருந்தார்.

*    சிறு வயதிலிருந்தே கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.

* மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவரது கவித்திறனை கண்டு வியந்து கவிஞர் களின் பேரரசர் என்றும் கவிச்சக்கரவர்த்தி என்றும் பட்டம் சூட்டினார்.

*  அரசர்கள் மட்டுமின்றி கம்பரின் கவிதை பாடும் திறன், கற்பனை ஆற்றல், தமிழ் புலமை போன்றவை அவரது சமகாலத்துப் புலவர் களான ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவர்களை போன்ற சக புலவர்களிடம் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

* கம்பராமாயணம், சிலையெழுபது, சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது மற்றும் மும்மணிக்கோவை போன்றவை இவர் படைத்த படைப்புகளாகும்.

*  இதில் கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பதை அக்காவியத்தில் படித்து அறியலாம்.

* இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்.

* கவிபேரரசர், கவிச்சக்ரவர்த்தி, கல்வியில் பெரியவர் கம்பர் என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இறப்பு

கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

இதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில், கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்.

8 ஜூன், 2017

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு "இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும்".
இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர்.
வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.
மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.
அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது, ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.
மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு. அவனிடம் கேட்டே விட்டனர்.
நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று, அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம்  "50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும். அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்" என்றான்.
இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார். "50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே" என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். இடி இடித்தது... மழை பெய்ய ஆரம்பித்தது... நம்பிக்கை ஜெயித்து விட்டது.
"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்". வெற்றி நிச்சயம்!

5 ஜூன், 2017

✍அழகான வரிகள்....

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..

சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..

மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..

4 ஜூன், 2017

வளைகாப்பு" சடங்கும் அதன் முக்கியத்துவமும்

”வளைகாப்பு” என்ற சடங்கு முக்கியமாக முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். அனேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது.

நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயங்களும் பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் இச் சடங்காகும்.

கருவுற்றிருக்கும் இளம் பெண்கள் பிரசவ காலம் நெருங்க நெருங்க பிரசவ நிகழ்வின் பயத்தினால் உளத் தென்பை இழந்து விடுகின்றார்கள். அதனால் அவர்களை அனுபவம் மிக்க தாயார், சகோதரிகள், மாமி, மச்சாள்மார், உற்றார் உறவினர் தங்கள் அனுபவங்களை அவர்களுக்கு கூறி தேற்றுகின்றனர். இருந்தும் ஒரு மனப்பயம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றது. அதனால் இறை நம்பிக்கை கொண்டவர்கள் சமயசடங்குகள் செய்வதன் மூலம் அவர்களை மேலும் தேற்றி மகிழ்விக்கின்றனர்.

ஒரு குழந்தையின் குணாதிசயம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த மூன்றாவது trimester இல் தாய் வாழும் சூழல், தாயின் மன நிலை, தாயின் உடல் நலம் போன்றவை முக்கிய பங்காற்றுகிறது. தாயாவவள் பயந்த சுபாவத்துடன் கர்ப்பகாலத்தில் இருந்தால் பிள்ளையும் பயந்தங்கொள்ளியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை. அதனால்தான் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களை மகிழ்வோடு வாழ வைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள்.

பொதுவாக கர்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து 7 முதல் 9 மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு சிசு தாயின் கர்ப்பப்பையினுள் உள்ள நீரில் (குளத்தில்) கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை, வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் சிசுவுக்கு (குழந்தை) நன்றாக கேட்க துவங்குகிறது.

அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன் நல்வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகாப்பு என்றும் கூறலாம்.

தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைகிறது. மேலும் அது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

நமது நவீனத்துவ ஆராய்ச்சிகளின்படி, கருவில் இருக்கும் சிசு, 20 வாரங்களுக்கு பின்பு ஒலியை கேட்கும் திறனை பெற்றுவிடுகின்றன என உறுதிப்படுத்துகின்றன

சில குடும்பங்களில் இவ் சடங்கை வேதியரை அழைத்து சிறப்பு யாகம் ஒன்றை செய்து "பும்சுவன சீமந்தம்" என்றும் நடத்துகின்றார்கள்.

பொதுவாகா சடங்கு (ritual) என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பாகும். இச் சடங்க்குகள் குறியீட்டுத் தன்மைகளைக் கொண்டதான இச் செயல்பாடுகள், மனிதரின் அல்லது சமூகத்தின் பயன் கருதிச் நிகழ்த்தப் பெறுகின்றன.

இந்து மத ஆகமங்களிலும், புராணங்களிலும் மனிதர் செய்ய வேண்டியதாக 41 வகை சடங்குகள் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் பல சடங்குகள் அவர்களது குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் அவர்களின் பெற்றோரால் செய்யப்பெற்று விடுகின்றன.

தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வரவழைத்து அங்கு வைத்தே வளைகாப்பு நடக்கும். அப்போது பெண்ணின் தாய் மகளுக்கு, லட்சுமியை பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம்பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார்.

முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். "வகிடு" என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.

யாப்பாணத் தமிழர்கள் பின்பற்றும் வளைகாப்பு சடங்கு முறை.
7 அல்லது 9 வது மாதத்தில் நல்ல ஒரு முகூர்த்த நாளில் கருவுற்ற பெண்ணை தோயவாத்து, புதுமணப் பெண்போல் அலங்கரித்து; உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் புடைசூழ நிறைகுடம், பழங்கள், பூக்கள், சந்தனக் குழம்பு, குங்குமம், கண்ணாடி வளையல்கள், அறுகரிசி, பன்னீர், பல வகை இனிப்புப் பண்டங்கள் பரப்பி வைக்கப்பட்ட மேடைக்கு கணவன் கர்பிணி மனைவியை அழைத்து வந்து சிம்மாசனம்போல் அலங்க்கரிக்கப் பெற்ற கதிரையில் அமரச்செய்வார்.

அதன் பின்னர் கருவுற்ற பெண்ணின் தாய் மாமன் தேங்காய் உடைக்க; கணவர் மலர்மாலை அணிவித்து கௌரவிப்பார். அதனைத் தொடர்ந்து நெற்றியில் குங்கு பொட்டு வைத்து, சந்தணக் குழம்பை இரு கன்னங்களிலும், கைகளிலும் பூசுவார். அத்துடன் வளையல்களை இரு கைகளிலும் அணிவிப்பார். அதனைத் தொடர்ந்து பன்னீர் தெளித்து அறுகரிசி இட்டு மனைவியையும் குழந்தையையும் வாழ்த்தி ஆசீர்வதிப்பார்,

அதற்கு அடுத்ததாக கருவுற்ற பெண்ணின் தாயார் அங்கு வைக்கபெற்றிருக்கும் இனிப்புப் பண்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து மகளுக்கு ஊட்டி, காப்புகள் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி போட்டு ஆசீர்வதிப்பார். அதுபோல் அங்கு வருகை தந்திருக்கும், பெரியோர்களும், உறவினர்களும் சந்தனம் பூசி, வளையல்கள் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி போட்டு வாழ்த்துக்கள் கூறி ஆசீர்வதிப்பார்கள்.

இறுதியாக "திருஷ்டி" கழிவதற்காக ஆரார்த்தி எடுப்பார்கள். வருகை தந்து, ஆசீர்வதித்து சிறப்பித்தோருக்கு தெட்சணையாக, தத்தமது வசதிக்கேற்ப, மஞ்சள், குங்குமம், புடைவைகளை வழங்கி மகிழ்விப்பார்கள். வேறு சிலர் மஞ்சள் குங்குமத்துடன் பழங்களும் சிறிய தொகைப் பணமும் தெட்சனையாக வழங்கி மகிழ்விப்பார்கள். இதன் போது வருகை தந்தவர்களும் கர்பிணி பெண்ணுக்கு அல்லது பிறக்கப்போகும் குழந்தைக்கு பாவிக்கக் கூடிய பொருட்களை பரிசில்களாக வழங்க்கியும் மகிழ்விப்பர்.

வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும் தாயையும் வாழ்த்துவதால் அந்த பெண்ணுக்குள் இருக்கும் பிரசவ பயம் நீங்கி அல்லது குறைந்து மிகவும் சந்தோசமும், மனத்தைரியமும் ஏற்படுவதுடன் எல்லோரினதும் ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும், இறையருளும் கருவாக இருக்கும் சிசுவுக்கும், தாயாருக்கும் கிடைக்கப் பெறுவதனால் நல்வாழாவு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

3 ஜூன், 2017

TNPSC Tamil வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/YhTxwB

Pசiவெழரவ எடுத்து படிக்கும் வகையில் இன்றைய (03.06.17) நடப்பு நிகழ்வுகளுக்கான தகவல்களை Pனுகு வடிவில் பெற

இங்கு கிளிக் செய்யவும்





இலக்கியம் - முத்தொள்ளாயிரம் மற்றும் தமிழ் விடு தூது

1. தொண்ணு}ற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் -------- ம் ஒன்று - தூது

2. இளங்கனி என்பதனை பிரித்தெழுதுக - இளமை   கனி

3. நாளிகேரம் என்பதன் பொருள் - தென்னை

4. போலிப்புலவர்களைத் தலையில் குட்டுபவர் -------- - அதிவீரராம பாண்டியன்

5. நால்வகைப் பாக்களும் வயலுக்கு -------- அமைந்துள்ளன - வரப்பாக

6. போலிப்புலவர்களின் தலையை வெட்டுபவர் ------- - ஒட்டக்கூத்தர்

7. முத்தொள்ளாயிரத்தின் பாடல்கள் மூவேந்தர்களின் --------- முதலிய செய்திகளை விளக்குகின்றன - ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை

8. மார்போலையில் எழுதும் எழுத்தாணி --------- - தந்தம்

9. சோழ மன்னரின் அடையாளச் சின்னம் -------- - புலி

10. பாண்டிய மன்னரின் அடையாளச் சின்னம் ------- - மீன்

11. விசும்பு என்பதன் பொருள் - வானம்

12. துலை என்பதன் பொருள் - துலாக்கோல் (தராசு)

13. மருப்பு என்பதன் பொருள் - தந்தம்

14. மார்போலை என்பதனை பிரித்தெழுதுக - மார்பு   ஓலை

15. வில்லெழுதி என்பதனை பிரித்தெழுதுக - வில்   எழுதி


TNPSC Tamil. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/YhTxwB
TNPSC Tamil வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/YhTxwB

குரூப் 2ஏ தேர்வுக்கான பொதுத் தமிழ் (தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - 450க்கும் மேற்பட்ட வினா விடைகள்) தொடர்பான தகவல்களையும், வினா விடைகளையும் Pனுகு வடிவில் பெற

இங்கு கிளிக் செய்யவும்




பொது அறிவு - புவியியல் - சூhpயக் குடும்பம்
1. பனிப்பந்துகள் என்பது என்ன? - உறைந்த வாயுக்கள்

2. ஹேலி வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்? - எட்மண்ட் ஹேலி

3. ஹேலி நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்? - 76

4. ஹேலி நட்சத்திரம் கடைசியாகத் தென்பட்டது எந்த ஆண்டு? - 1986

5. விண்வெளியில் எந்த கோள்களுக்கிடையில் பாறைத் துண்டுகள் வலம் வருகின்றன? - செவ்வாய் மற்றும் வியாழன்

6. சு ரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பு மி அமைந்தால் .................. - பௌர்ணமி

7. புவிக்கும் சு ரியனுக்கும் இடையில் நிலவு அமைந்தால் ............... - அமாவாசை

8. சு ரிய உதயத்திற்குச் சற்று முன்பும் மாலையில் மறைந்த பின்பும் புலப்படும் கோள் எது? - புதன் மற்றும் வெள்ளி

9. செவ்வாய் கோள் சு ரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? - 22.79 கோடி கி.மீ

10. துணைக்கோள்கள் அல்லாத கோள் எது? - புதன் மற்றும் வெள்ளி

11. இரவு வானில் சந்திரன் ஒளிர்வது போலத் தோன்றினாலும் ................. ஒளியைத்தான் சந்திரன் பிரதிபலிக்கிறது. - சு ரியன்

12. பனி, தூசு முதலிய பொருள்கள் நிறைந்த பனிப்பாறை எது? - வால் நட்சத்திரம் (ஊழஅநவ)

13. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பள்ளம் (ஊசயவநச) எதனால் உருவானது? - வீழ்கற்கள்

14. சு ரியனின் வெப்பத்திற்குக் காரணம் என்ன? - ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாக மாற்றப்படுகிறது.

15. சு ரியனின் வெப்பம் பு மியை வந்தடையும் முறை எது? - கதிர்வீச்சு முறை (சுயனயைவழைn)


TNPSC Tamil. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/YhTxwB
TNPSC Tamil வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/YhTxwB

குரூப் 2ஏ தேர்வுக்கான பொதுத்தமிழ் (தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்கள்) தொடர்பான தகவல்களையும், வினா விடைகளையும் Pனுகு வடிவில் பெற

இங்கு கிளிக் செய்யவும்



இலக்கணம் - ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

1. கூளி, கூலி என்ற சொற்களின் சரியான பொருள் - பு தம், சம்பளம்

2. எள், எல் என்ற சொற்களின் சரியான பொருள் - பயிர்வகை, சு ரியன்

3. விள், வில் என்ற சொற்களின் சரியான பொருள் - விடுதல், கருவி

4. கோள், கோல் என்ற சொற்களின் சரியான பொருள் - கிரகம், கொம்பு

5. கொள்ளி, கொல்லி என்ற சொற்களின் சரியான பொருள் - நெருப்பு, ஒருமலை

6. அரவு, அறவு என்ற சொற்களின் சரியான பொருள் - பாம்பு, விலக்கம்

7. கருப்பு, கறுப்பு என்ற சொற்களின் சரியான பொருள் - பஞ்சம், நிறம்

8. பெரு, பெறு என்ற சொற்களின் சரியான பொருள் - பருமன், பெறுதல்

9. மருகி, மறுகி என்ற சொற்களின் சரியான பொருள் - மருமகள், தாங்கி

10. செரு, செறு என்ற சொற்களின் சரியான பொருள் - போர், வயல்

11. இரும்பு, இறும்பு என்ற சொற்களின் சரியான பொருள் - உலோகம், புதர்

12. கனம், கணம் என்ற சொற்களின் சரியான பொருள் - பாரம், நொடி

13. கனை, கணை என்ற சொற்களின் சரியான பொருள் - அம்பு, பேழை

14. சுனை, சுணை என்ற சொற்களின் சரியான பொருள் - நிரூற்று, முட்கள்

15. மன், மண் என்ற சொற்களின் சரியான பொருள் - நிலையான, தரை


TNPSC Tamil. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/YhTxwB

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...