20 ஜூலை, 2017

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதையொன்றில் 1990களில் இந்திய  தொலைத்தொடர்புத் துறை பொறியாளர் ஒருவர் ஊர் ஊராக சென்று தரைவழி கேபிள்களை பதிப்பதற்கான பணியை  மேற்கொண்டு வந்தபோது அப்பொறியாளருக்கு பெரும் சவாலாக இருந்தது என்னவென்றால் போகும் இடமெல்லாம் கேபிள் போடுவதற்கு  மண்ணை தோண்டி தருவதற்காக ஒரு வேலையாள் நிரந்தரமாக வேண்டுமென்பதே.. அதனால் அப்பொறியாளர் ஒரு முடிவுக்கு வந்தார். வேலைக்கு ஆள்தேவை என்று விளம்பர போர்டு வைப்பது. இதுபற்றி அவர் தனது நண்பனிடம் தெரிவித்தவுடன் அவர் நண்பன், கவலைபடாதே அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாராம். அதை நம்பி அப்பொறியாளரும் இரவு தூங்குவதற்கு சென்றுவிட்டாராம். மறுநாள் பொறியாளர்  கடைத்தெருவிற்கு சென்றபோது அனைவரும் அவரை பார்த்து கிசுகிசுத்தவாறே சிரித்துள்ளனர். இதை கவனித்த பொறியாளர் பிறகு தனது நண்பன் வைத்த விளம்பர போர்டை பார்த்துதான் மக்களின் சிரிப்பிற்கான காரணத்தை தெரிந்துகொண்டாராம்... அப்படி என்னதான் அந்த விளம்பர போர்டில் இருந்தது என்கிறீர்களா...???

"கூடவே இருந்து குழிதோண்ட ஆள்தேவை - இப்படிக்கு தொலைத்தொடர்பு அதிகாரி" 😂😂😂😂

19 ஜூலை, 2017

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான்.  இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.  அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.

முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு  விற்பனை செய்ய முடிந்தது".  இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான்.  முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.  சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார்.

"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"

இளைஞன் சொன்னான், "933005  பவுண்டுகள்".

அதிர்ச்சியடைந்த  முதலாளி, "அப்படி என்ன விற்றாய்"

வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."

"ஆனால்,  அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி.

"உண்மைதான்.  இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்க படகு இருக்கிறதா என்று கேட்டேன்.  அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஒரு இருபது அடி நீள படகை விற்றேன்.  இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4  x  4  ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன்  காரையும் விற்றேன்.  நடுவே ஓய்வில் அவருக்கு தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"

"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.

"இல்லை, அவர், தனக்கு தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார்.  நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன்."

முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"

"அங்கு  எல் ஐ சி யில் ஏஜென்ட் ஆக இருந்தேன், ஏன் ?"

"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்த கடையை பார்த்துக்கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்"
😀😀😀😂😂😂
😊😊😊😊😊😊படித்ததில் பிடித்தது 😊😊😊😊😊😊
தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார்.

அடர்த்தியான புருவம், பெரிய மீசை, அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி  போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது  அடையாளம்...

வீதியில் அவரைக்  கண்டு விட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...

ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும்  ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால்  மட்டந்தட்டிவிடுவார்.

இதில் சிலர் அழுது விடுவது  கூட உண்டு...

ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.
ஊர் எல்லை வரை வந்து விட்டார்...

அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்தார்...

நாவிதரின் உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து, நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது...

இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது...

இன்று  இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆக வேண்டுமென்று முடிவெடுத்து அவரை நெருங்கினார்...

"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...

அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

வேலையை ஆரம்பித்தார்...

'நாவிதர் கோபப்படுவார்' என்று  எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...

"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது...
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி  நாவிதன்னு சொல்றாங்க...?"

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
           
"நல்ல சந்தேகங்க சாமி...
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை  பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு  சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.

"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம்...

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.

அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..."  என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல்...

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

"நம்முடைய அறிவும்...
புத்தியும்...
திறமையும்...
அதிகாரமும்...
அந்தஸ்தும்...
பொருளும்...
மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."

இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...

*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*

அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே ...

*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*


படித்ததில் பிடித்தது 

6 ஜூலை, 2017

ஒரு சுவையான பதிவு.

உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?

1. ஞாயிறு — சூரியன்
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,
சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,
மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

2. திங்கள் — சந்திரன்
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,மோர்.
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பாம்.இட்லி.
தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

3. செவ்வாய் — செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,தர்பூசணி ஜூஸ்,
தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.மிளகாய் துவயல்.

4. புதன் — புதன்
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,
பாவக்காய் தொக்கு, முருங்கைக் காய் சூப்,
பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,
வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

5. வியாழன் — குரு
சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,
கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,
தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,
சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,
கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,
மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

6. வெள்ளி — சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,
தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,
முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,
இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,
கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,
நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.

7. சனி — சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,
எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,
மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,
புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,
நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,
பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும்அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமேஅந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.....Thanks to Lalitha Raamachandhiran
பகிா்வு..எம்.விஜயன்
எழுதியவர்க்கு என் வாழ்த்துகள் ...

வெத்திலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புலுக்கையள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம், விருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெத்திலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம் சூதில்லாம சுழன்ற எங்க வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

கவி வளநாடன்

4 ஜூலை, 2017

*கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*
*ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்*
"நான் வணிகவுலகில்
வெற்றியின் உச்சத்தைத்
தொட்டிருக்கிறேன்.
பிறரின் பார்வையில்
என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான்.
எப்படியிருந்தாலும்
என்னுடைய பணிச்சுமைகளை
எல்லாம் தாண்டி
நானும் என் வாழ்க்கையில்
ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச்  சந்தித்திருக்கிறேன்; உணர்ந்திருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன்.
பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
என் வாழ்க்கையின்
இறுதிக்கட்டத்தில்தான்
அறிந்துகொண்டேன்.
இதோ !  இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு
என் முழுவாழ்க்கையையும்
திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு  எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.
இந்த இருளில்
என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும்
மருத்துவ இயந்திரங்களின்
மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.
கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும்
மிக - மிகஅருகில் உணர்கிறேன்.
வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத - மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும்  சம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.
அவை
உறவாகவோ,
நட்பாகவோ,
கலையாகவோ,
அறமாகவோ,
நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.
அவைதான் வாழ்வில்
மிகமிக இன்றியமையாதன என்பதை - காலங்கடந்து
இப்போது நான் உணர்கிறேன்.
அதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக்  கொண்டு
ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது,
என் வாழ்க்கையை போல.
கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும்  இருக்கும் அன்பை உணரச்செய்யும்
ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்,
பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும்
அனைத்து மகிழ்ச்சியும்
வெறும்  மாயைகளே!

நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.

நான் மகிழ்ந்திருந்த
என் நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன் இருக்கின்றன.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.
வாழ்க்கைக்கு
எந்த எல்லைகளுமில்லை.

எங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ
அங்குச் செல்லுங்கள்.

தொட நினைக்கும் உயரத்தை - உச்சத்தைத்  தொட முயலுங்கள்.

நீங்கள் வெற்றியடைவது
உங்கள் எண்ணத்திலும்
கைகளிலும்தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து
நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால்
மீண்டும் வாங்கிவிடலாம்.

ஆனால் நீங்கள் தொலைத்து,
அதைப் பணத்தால்
வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால்
அது உங்கள் வாழ்க்கைதான்.

வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை ,
இப்போதாவது வாழ்க்கையை
வாழத் தொடங்குங்கள்.

நாம் நடித்துக்கொண்டிருக்கும்
வாழ்க்கை எனும் நாடகத்தின்
திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களின்
குடும்பத்தினருக்கு,
பெற்றோர்க்கு,
மனைவிக்கு,
மக்களுக்கு,
உறவினர்க்கு,
நண்பர்களுக்கு,
இயலாதவர்களுக்கு
அன்பை வாரிவாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் எப்பொழுதும்  மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்"

மரணப்படுக்கையில் ஸ்டீவ்..
Apple Inc.,
Founder
U.S.A.

3 ஜூலை, 2017

பால.ரமேஷ்.



தினம் ஒரு தகவல்.


*7க்கு இவ்வளவு பெருமையா ?*
கொஞ்சம் படிச்சு பாருங்கள்
பூரித்து போய் விட்டேன்..
*எண் ஏழின் சிறப்புக்கள்:-*
👉 *எண் ஏழு (Number 7) பெருமை*
*இன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது.*
*உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி*
*ஏழு* என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.
*ஏழு* என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.
*ஏழு* என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.
காலத்தைக் கணிக்கும் முறையில் எண் *ஏழு* பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
*ஏழு* என்பது தமிழ் எண்களில் *'௭'* என்று குறிக்கபடுகிறது.
*எண் ஏழின் சிறப்புக்கள்:-*
~~~~~~~~~~~~~~~~~~
1). புதிய உலக அதிசயங்கள் மொத்தம் *ஏழு*
இது அறிவிக்கப்பட்ட தேதி *07/07/2007*
2). *எழு* குன்றுகளின் நகரம் ரோம்
3). வாரத்திற்குமொத்தம் *ஏழு* நாட்கள்
4). மொத்தம் *ஏழு* பிறவி
5). *ஏழு* சொர்க்கம்(குரான்)
6). *ஏழு* கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7). வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8). *ஏழு* வானங்கள். (Qur'an)
9). *ஏழு* முனிவர்கள் (Rishi)
10). *ஏழு* ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11). *ஏழு* கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12). ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை *ஏழு*
13). ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் *ஏழு.* அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் *ஏழுபகுதிகளாக வரும்.*
14). கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை *ஏழு*
(Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15). திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள்,
133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டு தொகையும் *ஏழு.*
16). மேலுலகம் *ஏழு*
17). கீழுலகம் *ஏழு*
""நுண்ணறிவாய் உலகாய் உலகு *ஏழுக்கும்*
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே""
*திருமூலர் பாடல்*
18). திருக்குறளில் "கோடி' என்ற சொல் *ஏழு* இடங்களில் இடம்பெற்றுள்ளது
19). மொத்தம் *ஏழு* தாதுக்கள்
20). *ஏழு* செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21). *ஏழானது* மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22). *ஏழு* புண்ணிய நதிகள்
23). இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை *ஏழு*
24). அகப்பொருள் திணைகள் *ஏழு*
25). புறப்பொருள் திணைகள் *ஏழு*
26). சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை *ஏழு*
27). கடை *ஏழு* வள்ளல்கள்
28). சப்த நாடி *(சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)*
29). "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் *ஏழுதான்*
30). *ஏழு* அதிர்ஷ்ட தெய்வங்கள்
31). *ஏழு மலையான்* - திருப்பதி, ஆந்திரா
32). மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை *ஏழு*
33). உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் *ஏழு.*
34). பெண்களின் பல்வேறு பருவங்கள் *ஏழு*
*பேதை,*
*பெதும்பை,*
*மங்கை,*
*மடந்தை,*
*அரிவை,*
*தெரிவை,*
*பேரிளம் பெண்.

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...