4 டிசம்பர், 2017

வாழுகின்ற வார்த்தைகள்...
வீழுகின்ற வார்த்தைகள்.


மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு,

"நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் " என்கிறார்..

"எவ்வளவு காலம் டாக்டர், நான் சாகும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?" என்று கேட்கிறார் அந்த பெண்மணி

டாக்டர் கூறுகிறார், "நீங்கள் வாழும் வரை" என்று..

*சாகும் வரை, வாழும் வரை* என்ற இருவாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால் *சாகும் வரை* என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் *எதிர்மறை எண்ணம்* எழுகிறது. ஆனால் *வாழும் வரை* என்ற சொற்களில் ஆறுதல் தரும் *நேர்மறை எண்ணம்* ஏற்படுகிறது.

சொற்களில் என்ன இருக்கிறது, அது புரிந்து கொள்வதில் தானே இருக்கிறது, என்று வாதாடலாம். ஆனால்....

சில வார்த்தைகள் ரணப்படுத்தும்...
சில வார்த்தைகள் குணப்படுத்தும்...

அடுத்தவரை "ஊக்குவிக்கும்" வார்த்தைகளாக பேசலாம்.

அடுத்தவரை "சோர்ந்துபோகச் செய்யும்" வார்த்தைகளை தவிர்க்கலாம்.

*Every word has its power choose them carefully.*

உடலுக்கு *#Insulin* எவ்வளவு முக்கியமோ,
மனதுக்கு *#இன்சொலும்* அவ்வளவு முக்கியம்.

பிடித்த ஒரு பதிவு ...

3 டிசம்பர், 2017

உங்கள் கையில் பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் இருந்தால் பத்திரப்படுத்துங்கள்
By DIN  |   Published on : 30th November 2017 03:39 PM  |   அ+அ அ-   | 



புது தில்லி:  நாணயங்களின் வருகையால் நாம் மறந்தே போன அந்த சிறிய நீல நிற ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்று நூறாவது பிறந்த நாள்.

எந்த விழா, கொண்டாட்டம் என்றாலும் மொய்க்காசுகளில் ரூ.101, 1001 என் முன்னிலையில் இருந்த அந்த ஒரு ரூபாய் நோட்டின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் எந்த திட்டமும் இல்லை.

ஆர்பிஐ ஆளுநருக்கு பதிலாக நிதித் துறை அமைச்சக செயலரின் கையெழுத்துடன் வெளியாகும் ஒரே ஒரு ரூபாய் நோட்டு இந்த ஒரு ரூபாய் தாள்தான்.

மொய்க்காசுகளில் ஆயிரத்து ஒன்றாக இருந்தாலும் பத்தாயிரத்து ஒன்றாக இருந்தாலும் முதல் இடத்தைப் பிடிப்பது இந்த ஒரு ரூபாய் நோட்டுக்கள்தான்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, அந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மறக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால் நூறு ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் 1 ரூபாய் நோட்டை பலரும் மறந்தே போய்விட்டோம்.

இந்த ஒரு ரூபாய் நோட்டு முதல் முறையாக இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்டு நவம்பர் 30ம் தேதி 1917ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது.  அதில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த நோட்டு 1970ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது.

இதே ரூபாய் நோட்டுகள் துபாய், பஹ்ரைன், மஸ்கட், ஓமன் நாடுகளிலும் செல்லுபடியானது. இந்த ரூபாய் நோட்டுகள் நன்றாக இருப்பதாகக் கூறி போர்த்துகீசியமும், பிரெஞ்சும் தங்களுக்கும் இதேப்போன்ற ரூபாய் நோட்டுகளை அச்சடித்துக் கொண்டன.

இந்திய அரசு முதல் முறையாக 1861ம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இந்த ஒரு ரூபாய் நோட்டு கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 28 முறை புதிதாக வடிவமைக்கப்பட்டது.

இந்த ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி 1994ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், பொதுமக்களின் தேவை அதிகரித்ததால் 2015ம் ஆண்டு மீண்டும் அச்சடிக்கப்பட்டது.

அதே சமயம், பழைய ஒரு ரூபாய் நோட்டு வழக்கொழிந்து போனாலும், பல பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் ஏலத்துக்கு விடப்பட்டு பல லட்சம் ரூபாயை திரட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, அதிகபட்சமாக 1985ம் ஆண்டு நிதித்துறை செயலர் எஸ். வெங்கிடரமணன் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் நோட்டு கடந்த ஜனவரி 21ம் தேதி ஏலத்துக்கு விடப்பட்டது. அது ரூ.2.75 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

1944ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா வெளியிட்ட சுமார் 100 ஒரு ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டு ரூ.1.3 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

தற்போதும் கூட, 1917ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த ஒரு ரூபாய் நோட்டுகள், ரூபாய் நோட்டு சேமிப்பாளர்களிடமும், விற்பனையாளர்களிடமும் இருக்கின்றன. இதன் மதிப்பும் அதிகம். எனவே, உங்கள் கையில் பழைய ஒரு ரூபாய் நோட்டு இருந்தால் அதனை குப்பை என்று நினைக்க வேண்டாம். அதன் மதிப்பு எவ்வளவு என்பதை காலம் நிர்ணயிக்கலாம். எனவே பத்திரப்படுத்துங்கள். 
திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா பிறந்தது மைசூர். மைசூர் மகாராஜாவின் குடும்பத்தில் மணமகளாகச் சென்ற சந்தியாவுக்கு ; ஜெயக்குமார், ஜெயலலிதா என இரு பிள்ளைகள் பிறந்தபின் கணவரை இழந்து வறுமைக்கு ஆளானார். சென்னையில் தங்கியிருந்து திரைப்படங்களில் நடித்துவந்த தங்கை வித்யாவதியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். வித்யாவதி வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர்களின் கண்களில் சந்தியா தென்பட, மளமளவென படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் பிஸியானதால் பிள்ளைகளை தனது தாயின் பாதுகாப்பில் பெங்களூருவில் படிக்கவைத்தார். நேரம் கிடைக்கும்போது பிள்ளைகளை சென்று சந்திப்பார். 8 வயதில் ஜெயலலிதாவின் முதல் சினிமா பிரவேசம் 'ஸ்ரீசைல மகாத்மியம்' என்ற படத்தில் நிகழ்ந்தது. வளர்ந்தபின் 'நன்னகர்த்தவ்யா' என்ற கன்னடப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் அவரது முதற்படமாக 'வெண்ணிற ஆடை' வெளியானது. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ஜெயலலிதாவுக்கு நல்ல புகழைக் கொடுத்தது. பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடுத்தர வயதைக்கடந்த நடிகைகள் அப்போது நடித்துவந்ததால், இளமையான கல்லூரிப்பெண் போன்ற தோற்றம் கொண்ட ஜெயலலிதாவுக்கு தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னடத்தில் அவரைக் கதாநாயகியாக அறிமுகம் செய்த பி.ஆர் பந்துலு, எம்.ஜி.ஆரை வைத்து தான் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு கதாநாயகி ஆக்கினார். ஒரே இரவில் ஜெயலலிதாவின் சினிமா கிராப் உயரத்துக்கு வந்தது. சில வருடங்களில், ஜெயலலிதா தென்னகத்தின் புகழ்மிக்க நடிகைகளில் ஒருவரானார். பத்து வருடங்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துமுடித்தார். அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நடிகர்கள் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டினர். ஒருமுறை தனக்குப் பிடித்த நடிகரான திலீப்குமாரின் படம் ஒன்றில் அட்வான்ஸ் பெற்றபின்னும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி நடிக்க மறுத்தார். அந்தளவுக்கு புகழடைந்திருந்தார்.

தமிழில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. எம்.ஜி.ஆருடன் அதிகப்படங்களில் நடித்த கதாநாயகி ஜெயலலிதாதான். மொத்தம் 28 படங்களில் அவர்கள் இணைந்து நடித்தனர். ஆனால், 'பட்டிக்காட்டுப் பொன்னையா' திரைப்படத்துடன் அவர்களது உறவில் கீறல் விழுந்தது. தனது கனவுப்படமான 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில், ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு தராமல், அன்றைக்குப் புதுமுகங்களை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். இளமைப் பொலிவுள்ள கதாநாயகன் என்ற தனது இமேஜை தக்கவைத்துக்கொள்ள எம்.ஜி.ஆர் இப்படி செய்ததாக சொல்லப்பட்டது. அதற்கு முன்னரே அவர்களுக்குள் பிரச்னை இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் அடிபட்டன. எப்படியோ, பிரச்னை தொடங்கிய 1971 ஆம் ஆண்டு 3 படங்கள், 1972-ல் 2 படங்கள், 1973-ல் 'பட்டிக்காட்டுப் பொன்னையா' என்ற ஒரேயொரு படம் என எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா என்ற வணிக சினிமாவின் வெற்றி இணை நிரந்தரமாகப் பிரிந்தது. தனது வாழ்வில் முக்கிய ஆளுமை செலுத்திய இருவரில், ஒருவர் என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டவர் ஜெயலலிதா. 1971 நவம்பரில் தாயை இழந்த ஜெயலலிதா, 1973 ஆம் ஆண்டுடன் எம்.ஜி.ஆரிடமிருந்தும் பிரிய நேர்ந்தது. இதன்பிறகு ஜெயலலிதா வாழ்வில், பெரும் சூன்யமான நாட்கள். வாழ்க்கையில் பிடிப்பின்றி காலம் கழித்தார். அரிதாகவே படங்களில் தலைகாட்டினார்.

இந்த காலகட்டத்தில்தான் சோபன்பாபு என்ற பெயர் தமிழ்த்திரையுலகில் ஜெயலலிதாவை நன்கறிந்த வட்டாரத்தில் பேசப்பட்டது.

அன்றைய தெலுங்குத் திரையுலகில் பெண் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தவர் சோபன்பாபு. என்.டி.ஆர் நாகேஸ்வரராவ் போன்ற உச்சநட்சத்திரங்களுக்கு அடுத்த வரிசை நடிகரான அவருக்கு முந்தைய இரு நடிகர்களைவிட பெண் ரசிகர்கள் அதிகம். தனது துறுதுறு நடிப்பு நளினமான நடன அசைவுகளால் பெண் ரசிகர்களை கிறங்கடித்த கதாநாயகனாக வளர்ந்துவந்தார். அவருடன் ஜெயலலிதா தன் ஆரம்பகாலங்களில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்தார். பெரிய அளவில் அவர்களுக்குள் ஈர்ப்பு இருந்ததாக அக்காலத்தில் பேச்சு இருந்ததில்லை. ஜெயலலிதா அப்போது தமிழில் பெரும் பிரபல்யமாக இருந்ததால் அவர் திரையுலக வாழ்க்கை மட்டுமே பேசப்பட்டது. எம்.ஜி.ஆரின் சினிமா ஜோடி என்றளவில் மட்டுமே பேசப்பட்டார்.

ஆனால் பிற்காலத்தில் சினிமாவில் இருந்து துறவறம் மேற்கொண்டிருந்த காலத்தில்தான் ஜெயலலிதா சோபன்பாபு நட்பு குறித்து பேசப்பட்டது.

எம்.ஜி.ஆருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபின் ஜெயலலிதாவின் சினிமா கிராப் அப்படியொன்றும் ஏற்றமாக இல்லை. இளம் வயதைக்கடந்த நிலையில், வயதுக்கேற்ற படங்களை அவர் தேர்வு செய்யவேண்டிய சூழல்உருவானது. கதாநாயகி என்பதுபோய் கதைக்கு நாயகியாய் குணச்சித்திர பாத்திரங்கள் அவரைத் தேடி வந்தன. இந்தக் கோபத்தில் அப்போது வெளியான சில பத்திரிகைகளில் பெயரைக் குறிப்பிடாமல், எம்.ஜி.ஆரைத் தாக்கிப் பேட்டியளித்தார் ஜெயலலிதா. பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர் போன் செய்து பேசவேண்டிய தர்மசங்கடம் வந்தது.

 1974 ஆம் ஆண்டு நூறாவது படமான 'திருமாங்கல்யம்' வெளிவந்தது. அடுத்த ஆண்டில் 3 படங்கள் என ஜெயலலிதாவின் திரைப்பட எண்ணிக்கை தேய ஆரம்பித்தது. 1975 ஆம் ஆண்டு திரையுலகிலிருந்து விலகப்போவதாக பத்திரிகை பேட்டி ஒன்றில் அறிவித்தார் ஜெயலலிதா. இந்தக் காலகட்டத்தில்தான் தெலுங்கில் பிரபல கதாநாயகனான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா நட்புடன் இருப்பதாகப் பேசப்பட்டது. எம்.ஜி.ஆரை வெறுப்பேற்றும் விதமாக தன் தெலுங்கு சகாவான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா வேண்டுமென்றே அப்படி ஒரு நட்பை வலிந்து ஏற்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. 1975 ஆம் ஆண்டு பிற்பகுதியில் திரையுலகிலிருந்து முற்றாக ஒதுங்கியிருந்த ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டன் இல்லம், ஹைதராபாத் தோட்டம் இவற்றோடு இருந்து கொண்டார். பத்திரிகைகள் அரிதாகவே அவரைப்பற்றிய செய்திகளை வெளியிட்டன. அதுவும் அவரது புகழுக்கு எதிரானவை.

அதாவது அதுவரை கிசுகிசுவாக பத்திரிகைகளிலும், செவிவழியாக திரைவட்டாரத்திடம் பகிரப்பட்ட தகவல்கள் புகைப்பட சாட்சியாக வெளியானது. ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் எடுக்கப்பட்ட அந்த படங்களில் சோபன்பாபுவும் ஜெயலலிதாவும் மிக நேருக்கமாக கணவன் மனைவிபோல இணைந்து போஸ் அளித்து எடுக்கப்பட்டவை. தனது பிரத்யேக புகைப்படக்காரர் மூலம் ஜெயலலிதா எடுத்ததாக சொல்லப்பட்ட படங்களில் ஜெயலலிதா சோபன்பாபுவுக்கு உணவு பரிமாறுவது, வீட்டுச் சுவரில் மாட்டியுள்ள படங்களைக்காட்டி மகிழ்தல், ஜெயலலிதாவின் அலுவலக அறையில் சோபன்பாபு அமர்ந்து விருந்தினரிடம் பேச அருகில் சேரின் மற்றொரு முனையில் அமர்ந்து அதை ரசிப்பது, தனது பர்சனல் அறையில் ஜெயலலிதா வீணை வாசிக்க, அதை ரசித்துப்பார்க்கும் சோபன்பாபு, ஜெயலலிதா மாடியிலிருந்து காரில் கிளம்பிச்செல்லும் சோபன்பாபுவுக்கு ஒருமனைவியைப்போல் கையசைத்து அனுப்பிவைப்பது என ஒரு குடும்பத்தலைவியாக ஜெயலலிதாவை அடையாளம்காட்டும் படங்கள் அவை.

இதில் ஒரு படம் ஜெயலலிதா மிகவும் மகிழ்ந்து காட்டிய படம். மகிழ்ச்சிக்கு காரணம் அந்த புகைப்படத்தின் பின்னணி...சுவாரஸ்யமானது.

ஜெயலலிதா சென்னை வந்தசமயம், மார்டன் யுவதியான அவரது சித்தி வித்யாவதி, அவரது தலைமுடியை சலுானுக்கு அழைத்துச்சென்று பாப் கட்டிங் போல கட் செய்து அழைத்துவந்தார். தன் முடியை கண்ணாடியில் பார்த்து விடிய விடிய அழுதுகொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரை சமாதானப்படுத்த புவனா சத்யம் என்ற புகைப்படக்காரரை அழைத்துவந்து புகைப்படம் எடுத்தார் வித்யாவதி. தன்னை அழவைத்த அந்த புகைப்படத்தை ஜெயலலிதா அடுத்த 2 மாதங்களில் தன் படுக்கை அறையில் அழகு பார்த்தார் பெருமிதமாக. ஆம் இந்த புகைப்படத்தை புவனா சத்யம் சந்தியா குடும்பத்திற்கு தெரியாமல் அந்த ஆண்டு புதுடெல்லியில் நடந்த அகில இந்திய புகைப்படக் கண்காட்சிக்கு அதை அனுப்பிவைத்திருந்தார். ஆச்சர்யமாக அந்த படத்திற்குதான் முதல்பரிசான தங்கப்பரிசு கிடைத்திருந்தது. முதன்முறையாக தன் அழகு பற்றி ஜெயலலிதா பெருமைப்பட்ட தருணம் அதுதான். அந்த புகைப்படத்தை சோபன்பாபுவிடம் காட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்தார் ஜெயலலிதா.

1979 ஆம் ஆண்டு 'ஸ்டார் அண்ட் ஸ்டைல்' என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில், கிசுகிசு போல ஜெயலலிதா - சோபன் பாபு நட்பு குறித்த ஒரு செய்தி வெளியானது. கிசுகிசுவை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயலலிதா அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதமும் எழுதினார். அதுதான் ஜெயலலிதா!

2 டிசம்பர், 2017

” யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும் …ஒரு குறிப்பு …”

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப் பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.


மேலும் அறிக :

திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து

மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து
உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து

சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.அடுத்து

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து

திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து

பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களை யாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள்.

சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக் கொள்ளுங்கள். 

27 நவம்பர், 2017

இந்த 26 வார்த்தைகள் எவ்வளவு அழகு.....!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்......!

படித்ததில் பிடித்தது*

26 நவம்பர், 2017

3.3 சீர் இலக்கணம்
    எழுத்து, அசை ஆகியவற்றை அடுத்து, செய்யுள் உறுப்புகளுள்
மூன்றாவதாக இருப்பது சீர். இது அசைகள் சேர்ந்து அமையும்
உறுப்பாகும். தனித்தனிச் சொல்போன்று செய்யுளில் காணப்படும்
உறுப்புத்தான் சீர் என்பது.

கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
    இத்திருக்குறளில் முதலடியில் நான்கு சீர்களும், அடுத்த
அடியில் மூன்று சீர்களும் உள்ளன. பொதுவாக எல்லாச்
செய்யுள்களிலும் சீர்கள் ஒவ்வொன்றும் இடம் விட்டுத் தனித் தனிச்
சொற்கள் போல அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சீரில் அசை
இரண்டோ அல்லது மூன்றோ பொதுவாக இடம் பெற்றிருக்கும்.
ஓர் அசை மட்டுமே அமைந்த சீர்களும் உண்டு. நான்கு
அசைகளையுடைய சீர்களும் உண்டு. இருப்பினும் இத்தகைய நான்கு
சீர்கள் அருகியே (எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும்)
செய்யுள்களில் காணப்படும்.

3.3.1 சீர் வகைகள்
    சீர்கள் நான்கு வகைப்படும். அவை :
1.
ஓரசைச் சீர்கள்
2.
ஈரசைச் சீர்கள்
3.
மூவசைச் சீர்கள்
4.
நாலசைச் சீர்கள் என்பனவாகும்.
    ஓரசைச்சீர் என்பது தனியாக ஒரு நேரசையோ அல்லது
நிரையசையோ சீராக அமைவதாகும்.

    ‘வா’ என்பது ஒரு நெடில். இதுவே, ‘வாடியது’ என்னும்
சொல்லில் ‘வா’ என ஓர் அசையாக உள்ளது. இதுவே வெண்பாவின்
(கடைசி) ஈற்றுச்சீராக வரும்போது,

    ‘எங்குமே தங்காமல் வா’
என அமையும். இந்த அடியில் ‘வா’ என்பது ஒரு சீராக
உள்ளது. ஆகவே, ஒரே எழுத்தே ஓர் இடத்தில் எழுத்தாகவும், ஓர்
இடத்தில் அசையாகவும், ஓர் இடத்தில் சீராகவும் வரும்.
இடத்திற்கேற்ப இது எவ்வாறு உள்ளது என அறிய வேண்டும்.

    நேர், நிரை என்னும் அசைகள் தனித்தனியே ஒரு சீராக வரும்
எனப் பார்த்தோம்.

    இவ்விரு அசைகளையும் கொண்டு வெவ்வேறு அமைப்பிலான
ஈரசைச் சீர்களை உருவாக்கலாம்.

நேர் நேர் நிரை நேர்
நிரை நிரை
நேர் நிரை 
எனும் இவை நான்கும் ஈரசைச் சீர் களாகும். இவற்றை
அடுத்து மூவசைச் சீர்கள் பற்றிக் காண்போம்.

    இந்த நான்கையும் அடிப்படையாகக் கொண்டு இவற்றின்
இறுதியில் நேர் என்பதையோ அல்லது நிரை என்பதையோ
சேர்த்தால் மூவசைச் சீர்கள் எட்டுக் கிடைக்கும். அவையாவன :

1.
நேர் நேர்+ நேர்
2.
நிரை நேர்+ நேர்
3.
நிரை நிரை+ நேர்
4.
நேர் நிரை+ நேர்
5.
நேர் நேர்+ நிரை
6.
நிரை நேர்+ நிரை
7.
நிரை நிரை+ நிரை
8.
நேர் நிரை+ நிரை
    இவ்வாறு மூவசைச்சீர்கள் எட்டுக் கிடைக்கும். இவற்றுள்
நேரசையை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு, நிரையசையை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு ஆகும்.

    மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியிலும் நேர் என்னும்
அசையைச் சேர்த்தால் எட்டு நாலசைச்சீர் கிடைக்கும். இது போல்
நிரை என்னும் அசையை இறுதியில் சேர்த்தால் எட்டு நாலசைச்சீர்
கிடைக்கும். இவையே பொதுச்சீர் எனப்படு்ம். இவற்றைப் பற்றி
மேல்வகுப்பில் விளக்கமாகப் படிக்கலாம்.

    இவ்வாறு, ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்
எனச் சீர்கள் நான்கு வகைப்படும். மேலும், இவை ஓரசைச்சீர் 2,
ஈரசைச்சீர் 4, மூவசைச்சீர் 8, நாலசைச்சீர் 16 என ஆகி, சீர்கள்
முப்பது என உள்ளன என்பது நினைவிற்குரியது.

3.3.2 சீர் வாய்பாடுகள
    ஓரசை, ஈரசை மட்டும் உள்ள சீர்களை வேண்டுமானால்
எளிதில் நினைவிற் கொள்ளலாம். பிற சீர்களில் உள்ள அசைகளை
அவ்வளவு எளிதில் நினைவில் வைத்துக் கொள்வது இயலாது.
எனவே, யாப்பு இலக்கண ஆசிரியர்கள் அவற்றையும் நினைவில்
கொள்ள எளிய ஒரு முறையைக் கண்டறிந்தனர். அதற்கு ‘வாய்பாடு’
என்று பெயர். பல்லாயிரக் கணக்கான சொற்களில் ஒரு சீர் என்ன
அமைப்பில் உள்ளது என்பதை ‘வாய்பாடு’ என்பதன் வழி எளிதில்
சுட்டலாம். ஈரசைச்சீர்களுக்கான வாய்பாடுகளை முதலில் காண்போம்.

    ‘மாமா’, ‘நீ யார்’ என்பவற்றில் நேர் நேர் எனும் அசைகள் உள்ளன. இதனைத் ‘தேமா’ என்னும் வாய்பாடாகச் சுட்டியுள்ளனர்.
இதுபோல் பிற சீர் வகைகளுக்கான வாய்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.

சீர்கள்
வாய்பாடு
சரியா, புதிதாபுளிமா (நிரை, நேர்)
எதுமுறை, திருமணம்கருவிளம் (நிரை, நிரை)
யாரிவன், கார்முகில்கூவிளம் (நேர், நிரை)
    மூவசைச் சீர்களுக்கான வாய்பாடுகள் காய், கனி என முடியக்
கூடியனவாய் உள்ளன. நேரசையில் முடிபவை ‘காய்’ என்னும்
சொல்லாலும், நிரையசையில் முடிபவை ‘கனி’ என்னும் சொல்லாலும்
முடிகின்றன.

சான்றுகள் :
சீர்கள்
வாய்பாடு
கோபாலா, நீவாடாதேமாங்காய் (நேர், நேர், நேர்)
விடையாகும், புரியாதாபுளிமாங்காய் (நிரை, நேர், நேர்)
அது சரிதான், அவள்
சிரித்தாள்
கருவிளங்காய் (நிரை, நிரை, நேர்)
ஏன் அழுதாய்,
நானறிவேன்
கூவிளங்காய் (நேர், நிரை, நேர்)
முன்மாதிரி, உன்
வீடெது?
தேமாங்கனி (நேர், நேர், நிரை)
அதுதான் சரி, சரியா
இது
புளிமாங்கனி (நிரை, நேர், நிரை)
மழைவரும் நேரம்,
அவளிடம்கொடு
கருவிளங்கனி (நிரை, நிரை, நிரை)
நீ வரும் இடம், உன்
விடை சரி
கூவிளங்கனி (நேர், நிரை, நிரை)
அசைச்சீர்களின் வாய்பாடுகள்
    ஓரசைச் சீர்களுக்கு நாள் (நேர்), மலர் (நிரை) எனும்
சொற்களை     வாய்பாடுகளாகச் சுட்டி     உள்ளனர். இவை,
குற்றியலுகரத்தில் முடிந்தால் காசுபிறப்புஎனும் வாய்பாடுகளைப்
பெறும்.

பொதுச்சீர்களின் வாய்பாடுகள்
    நாலசைச் சீர்களுக்கான வாய்பாடுகள் இருவகையான, ஒரே
முறையிலான     வாய்பாடுகளை     அடுத்தடுத்துச்     சேர்த்து
உருவாக்கப்படுகின்றன. ஈரசைச் சீர்களுக்கான வாய்பாடுகள் தேமா,
புளிமா, கருவிளம், கூவிளம் என்பதை முன்பே நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இவை,

    நேர் நேர், நிரை நேர், நிரை நிரை, நேர் நிரை என்பவற்றுக்கு
உரியவை. இவற்றுக்குப் பொருத்தமான இன்னொரு வகை
வாய்பாடுகளான

    தண் பூ, நறும் பூ, நறுநிழல், தண்ணிழல்

என்பவற்றை முன் பார்த்த தேமா, புளிமா முதலியவற்றோடு
சேர்த்தால் 16 நாலசைச்சீர்கள் வரும். இவை பற்றி நீங்கள்
மேல்வகுப்பில் விரிவாகப் படிக்கலாம்.

  • பாக்களுக்குரிய சீர்கள்
  • நேர் நேர்
    நிரை நேர்
    - (தே மா)
    - (புளி மா)
    மாச் சீர்கள் 2
    நிரை நிரை
    நேர் நிரை
    - (கரு விளம்)
    - (கூ விளம்)
    விளச் சீர்கள் 2
        என்னும் நான்கு சீர்களும் ஆசிரியப்பாவுக்கு உரியன.
    ஆசிரியப்பாவை இயற்பா என்றும் கூறுவர். எனவே, இச்சீர்களை
    இயற்சீர் என்றும் கூறலாம்.

        மூவசைச்சீரில் நேரசையை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு,
    அவையாவன :
    நேர் நேர் நேர்(தே மாங் காய்)
    காய்ச் சீர்கள் 4
    நிரை நேர் நேர்(புளி மாங் காய்)
    நிரை நிரை நேர்(கரு விளங் காய்)
    நேர் நிரை நேர்(கூ விளங் காய்)
        இவை நான்கும் வெண்பாவுக்கு உரிய சீர்கள். எனவே,
    காய்ச்சீர்கள் நான்கும் வெண்பாவுக்கு உரியன என எளிதில்
    நினைவில் வைத்துக் கொள்ளலாம். வெண்பா உரிச்சீர்களாகிய
    இவற்றைப் போலவே நான்கு வஞ்சி உரிச்சீர்கள் உள்ளன.

    நேர் நேர் நிரை(தே மாங் கனி)
    கனிச் சீர்கள் 4
    நிரை நேர் நிரை(புளி மாங் கனி)
    நிரை நிரை நிரை(கரு விளங் கனி)
    நேர் நிரை நிரை(கூ விளங் கனி)
        நிரையை இறுதியில் கொண்ட மூவசைச்சீர்கள் நான்கு.
    இவற்றுக்குக் கனிச்சீர்கள் என்று பெயர். இவை நான்கும்
    வஞ்சிப்பாவுக்கு உரியன. எனவே இவற்றைவஞ்சி உரிச்சீர்
    என்றும் கூறலாம்.

        இவ்வாறு யாப்பு இலக்கணத்தில் மூன்று பாக்களுக்கு உரிய
    சீர்கள் குறிக்கப் பெற்றுள்ளன. கலிப்பாவுக்கு உரிய சீர் என்று
    எவையும் இல்லை. அப் பாவில் எல்லாச் சீர்களும் கலந்து வரும்.
    2.2 யாப்பு இலக்கண அறிமுகம்
    இலக்கியங்களை இயற்றும் போது இரண்டு வகையான ஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றது உரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது. இலக்கியம் இயற்றப்பட்ட செய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.
    செய்யுள்களில் பல வகைகள் உள்ளன. செய்யுளின் முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான செய்யுள்கள் உருவாகியுள்ளன. பழைய காலத்தில் இருந்த முக்கியமான செய்யுள் வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவை ஆகும். இவற்றுடன் கலித்துறையும் பழைய காலத்தில் சிறப்பாக விளங்கியது. பக்தி இலக்கியமும் காப்பியங்களும் தோன்றிய காலத்தில் விருத்தம் என்ற செய்யுள் வகை பரவியது. பிற்காலத்தில் சிந்து, கும்மி முதலிய இசைப்பாடல் யாப்புகளிலும் செய்யுள்கள் இயற்றப்பட்டன. யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின் உறுப்புகள் பற்றியும் கூறப்படும். அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.
    அசை
    எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன. அசை நேர் அசை, நிரை அசை என்று இரண்டு வகைப்படும். ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை எனப்படும்.
    -குறில் எழுத்து
    கல்-குறில் + மெய் எழுத்து
    கா-நெடில் எழுத்து
    கால்-நெடில் + மெய் எழுத்து
    குறில், நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும் இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும் நிரை அசை ஆகும். இவற்றுக்குப் பின் மெய் எழுத்து வந்தாலும் நிரை அசை ஆகும்.
    கிளி-இரண்டு குறில் எழுத்துகள்
    மயில்-இரண்டு குறில் + மெய் எழுத்து
    புறா-குறில் நெடில் எழுத்துகள்
    இறால்-குறில் நெடில் +  மெய் எழுத்து
    மெய் எழுத்தைத் தவிர்த்துப் பார்த்தால் நிரை அசையில் இரண்டு எழுத்துகள் இருக்கும்.
    சீர்:
    அசைகள் இணைந்து வருவது சீர் ஆகும். ஒரே அசை சீராக இருப்பதும் உண்டு. இரண்டு, மூன்று, நான்கு அசைகள் சேர்ந்து சீராக அமைவதும் உண்டு. சீர்கள் பின்வருமாறு அமையும்:
    ஓர் அசைச் சீர்
    ஓர் அசை மட்டுமே வருவது ஓர் அசைச் சீர் ஆகும்.
    க, கல், கா, கால்-நேர் அசை
    கடு, கடல், பலா, வரால்-நிரை அசை
    ஈர் அசைச் சீர்
    இரண்டு அசைகள் சேர்ந்து வருவதுஈரசைச் சீர்ஆகும்.
    நேர் நேர் நிரை
    நேர் நேர் நிரை
    நிரை நிரை
    இவ்வாறு ஈர் அசைச் சீர்கள் நான்கு ஆகும்.
    மூவசைச் சீர்
    மூன்று அசைகள் சேர்ந்து வருவது மூவசைச் சீர் ஆகும்.
    நேர் நேர் நேர்
    நிரை நேர் நேர்
    நேர் நிரை நேர்
    நிரை நிரை நேர்
    நேர் நேர் நிரை
    நிரை நேர் நிரை
    நேர் நிரை நிரை
    நிரை நிரை நிரை
    நேர் அசையில் முடியும் மூவசைச் சீர்கள்நான்கும், நிரை அசையில் முடியும் மூவசைச் சீர்கள் நான்கும் ஆக மூவசைச் சீர்கள் எட்டு ஆகும்.
    நாலசைச் சீர்
    நான்கு அசைகள் சேர்ந்து வருவது நாலசைச் சீர்எனப்படும்.
    நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நிரை நிரை நிரை நிரை
    நேர் அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும், நிரை அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும் ஆக நாலசைச் சீர்கள் பதினாறு ஆகும்.
    சீர்களைப் பற்றிக் கூறும்போது அவற்றை எளிமையாக நினைவில் வைக்கும் பொருட்டு அவற்றுக்கு வாய்பாடு கூறப்பட்டுள்ளது. சீர் வாய்பாடுகள் பின்வருமாறு அமையும்: ஓரசைச் சீர்களில் நேர் அசைவரும் சீர் நாள் என்றும், நிரை அசை வரும் சீர் மலர் என்றும் கூறப்படும்.
    ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.
    நேர் நேர்-தேமா
    நிரை நேர்-புளிமா
    நேர் நிரை-கூவிளம்
    நிரை நிரை-கருவிளம்
    நேர் ஈற்றுச் சீர்களை மாச்சீர் என்றும் நிரை ஈற்றுச் சீர்களை விளச்சீர் என்றும் கூறுவர். மூவசைச் சீர்களில் நேர் ஈற்றுச் சீர்களுக்கு மேற்கண்ட வாய்பாடுகளுடன் இறுதியில் காய்என்பதும் நிரை ஈற்றுச் சீர்களுக்கு இறுதியில் கனி என்பதும் வாய்பாடாக வரும்.
    நேர் நேர் நேர்தேமாங்காய்
    நிரை நேர் நேர்புளிமாங்காய்
    நேர் நிரை நேர்கூவிளங்காய்
    நிரை நிரை நேர்கருவிளங்காய்
    நேர் நேர் நிரைதேமாங்கனி
    நிரை நேர் நிரைபுளிமாங்கனி
    நேர் நிரை நிரைகூவிளங்கனி
    நிரை நிரை நிரைகருவிளங்கனி
    நாலசைச் சீர்களுக்கு வாய்பாடு கூறும்போது இறுதியில் நேர் வந்தால் தண் பூநறும் பூ என்றும் இறுதியில் நிரைவந்தால் தண்ணிழல்நறு நிழல் என்றும் வாய்பாடு கூறுவர்.
    நேர் நேர் நேர் நேர்தேமாந் தண்பூ
    நிரை நேர் நிரை நேர்புளிமா நறும்பூ
    நேர் நிரை நேர் நிரைகூவிளந் தண்ணிழல்
    நிரை நிரை நிரை நிரைகருவிள நறுநிழல்
    சீர்களை எளிதில் நினைவில் வைத்திருக்க உதவியாக இருக்கும் என்பதால் வாய்பாடு கூறப்படுகிறது.
    தளை
    இரண்டு சீர்கள் இணையும் விதம் தளை என்று கூறப்படுகிறது. தளை என்பதற்குக் கட்டு என்பது பொருள். சீர்கள் எவ்வாறு இணைந்து தளையாக வருகிறது என்பது கீழே காட்டப்படுகிறது.
    கற்கசடறக்கற்பவைகற்றபின்
    நேர்நேர்நிரைநிரைநேர்நிரைநேர்நிரை
    தேமாகருவிளம்கூவிளம்கூவிளம்
    இந்த அடியில் நான்கு சீர்கள் உள்ளன. நான்கு சீர்களுமேஈரசைச் சீர்கள் ஆகும். கற்கஎன்ற சீர் நேர் அசையில் முடிகிறது. இதற்குப் பின் வரும் கசடறக் என்ற சீரில் முதல் அசை நிரை அசையாக உள்ளது. நேர் அசைக்குப் பின் நிரை அசை வந்துள்ளது. இதற்குப் பின் வரும் கற்பவை என்ற சீரில் முதல் அசை நேர் அசையாக உள்ளது. கற்றபின் என்ற சீரிலும் முதல்அசை நேர் அசையாக உள்ளது. இந்த அடியில் நேர் அசைக்குப்பின் நிரை அசையும், நிரை அசைக்குப் பின் நேர் அசையும் வந்து தளை கொண்டுள்ளன. முரண்பட்ட இந்தத்தளைக்கு இயற்சீர் வெண்டளை என்று பெயர் ஆகும். இந்தத்தளை வெண்பாவில் மிகுதியும் வரும். இதேபோல வெவ்வேறு அமைப்புகளில் ஏழுவகைத் தளைகள் உள்ளன.
    அடி
    செய்யுளின் அடுத்த உறுப்பு அடிஎன்பதாகும். அடிஎன்பது செய்யுளில் இடம்பெறும் ஒரு வரியைக் குறிக்கும். பல அடிகள் சேர்ந்து ஒரு செய்யுளாக வரும். அடிகளே செய்யுளை வகைப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. அடியில் வரும்சீரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிகள் பல வகைப்படும்.
    இரண்டு சீர் அடி-குறள் அடி
    மூன்று சீர் அடி-சிந்து அடி
    நான்கு சீர் அடி-அளவு அடி
    ஐந்து சீர் அடி-நெடில் அடி
    ஆறு சீர் அடி-கழிநெடில் அடி
    ஆறு சீர்களுக்கு மேலும் ஓர் அடியில் வருவது உண்டு. அவையும் கழிநெடில் அடி என்றே கூறப்படும்.
    தொடை
    தொடுக்கப்படுவது தொடை எனப்படும். இரண்டு அடிகள் தொடர்ந்து வரும்போது அவற்றில் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து முதலியவை ஒத்து வரும்படி இருப்பது தொடை என்று கூறப்படும். முதல் எழுத்து ஒத்து வருவது மோனை எனப்படும். இரண்டாம் எழுத்து ஒத்து வருவது எதுகை எனப்படும்.
    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை (திருக்குறள் -411)
    இந்தச் செய்யுளில் முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் முதல் எழுத்து செ என்றே வந்துள்ளது. இதுவே மோனைத் தொடை எனப்படும்.
    கற்க கசடறக் கற்பவை
    கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்-391)
    இந்தச் செய்யுளில் இரண்டு அடிகளிலும் இரண்டாம் எழுத்தாக ற் என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இதுவே எதுகை எனப்படும். இவைபோலவே வேறுபல தொடைகளும் உள்ளன.
    பா
    பா என்பது செய்யுளின் வகை ஆகும். பாக்கள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். ஒவ்வொரு பாவிலும் வரும் சீர், தளை, அடி ஆகியவை கூறப்பட்டுள்ளன. நான்கு பாக்களுக்கும் தனித்தனி ஓசை உண்டு. ஓசையை அடிப்படையாகக் கொண்டே பாக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாவிலும் பல வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, வெண்பாவின் வகைகள் பின்வருமாறு.
    குறள் வெண்பா-இரண்டு அடிகள் கொண்டது.
    சிந்தியல் வெண்பா-மூன்று அடிகள் கொண்டது.
    இன்னிசை வெண்பா-நான்கு அடிகள் கொண்டது. (தனிச்சொல் வராது)
    நேரிசை வெண்பா-நான்கு அடிகள் கொண்டது. (தனிச்சொல் வரும்)
    பஃறொடை வெண்பா-ஐந்து அடிகளும் அதற்கு மேலும் வருவது.
    ஒவ்வொரு பாவிற்கும் தனி ஓசை உண்டு. வெண்பாவின் ஓசை செப்பல் ஓசை எப்படும். இவ்வாறே மற்ற பாக்களுக்கும் ஓசைகளும் வகைகளும் உள்ளன.
    பாவினம்
    பாவினம் என்பது பாக்களை ஒட்டி வருவதாகும். பாக்களின் ஓசையை ஒட்டி வருவதால் இவற்றைப் பாவினம் என்று கூறுகின்றனர். தாழிசை, துறை, விருத்தம்ஆகிய மூன்றும் பாவினம் என்று கூறப்படும். இந்தப் பாவினங்கள் நான்கு பாக்களுக்கும் உள்ளன. ஆசிரியப் பாவிற்குரிய பாவினங்கள் பின்வருமாறு.
    ஆசிரியத் துறை
    ஆசிரியத் தாழிசை
    ஆசிரிய விருத்தம்
    இந்தப் பாவினங்களுக்குத் தனியே இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இதைப் போலவே மற்ற பாக்களுக்கும் பாவினங்கள் உள்ளன.
    2.2.1 பாட்டியல் இலக்கணம்
    இலக்கியங்கள் பலவகைப்படும். அவை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு முதலியனவாகும். இவை பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும். இத்தகைய இலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறுவது பாட்டியல் இலக்கணம் எனப்படும். பாட்டியல் நூல்கள் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுவதுடன் பொருத்த இலக்கணமும் கூறுகின்றன. செய்யுளில் அமைய வேண்டிய பொருத்தங்கள் பத்து என்று பாட்டியல்கள் கூறுகின்றன. ஒருநூலின் தொடக்கம் நன்றாக இருந்தால்தான் நூல் நன்றாக அமையும் என்பது அக்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒட்டியே பொருத்தங்கள் அமைகின்றன.
    பொருத்தங்கள்
    1 மங்கலம் 2 எழுத்து 3 சொல் 4 தானம் 5 பால் 6 உண்டி 7 வருணம் 8 கதி 9 நாள் 10 கணம்
    எடுத்துக்காட்டாக செய்யுளின் முதல் சொல் மங்கலமாக இருக்க வேண்டும் என்பது மங்கலப் பொருத்தம் ஆகும். பாட்டியல் நூல்கள் இதை வற்புறுத்திக் கூறுகின்றன. மங்கலச் சொற்கள் இவை என்ற ஒரு பட்டியலும் பாட்டியல் நூல்களில் தரப்பட்டுள்ளன. சீர், உலகம், மணி, பொன், பூ, திங்கள், கடல், மலை முதலியன மங்கலச் சொற்கள் ஆகும். இவற்றை முதல் சொல்லாகக் கொண்டே நூல் இயற்ற வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

    கேடு வெட்கக்கேடு

    த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...