14 டிசம்பர், 2017

பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள்,  ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார். கடையிலிருந்த ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார்.

பிச்சைக்காரன் பயந்து போனான்.

எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்டார் கடைக்காரர்.

நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான்  பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தான்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான் கிட்ட பிச்சை கேட்டப்போது அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ' ன்னு குடுத்தாராம்..

அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா? எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்டார்.

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்... அந்தப் பிச்சை
ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும் பரவால்ல அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! எனப் பரிதாபமாகக் கேட்டான்.

கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

ராசியான ஓடு சாமி! மகான்
கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு!

கடைக்காரர் ஓட்டைச்
சுரண்டிக்கொண்டே இருந்தார்.

சுரண்டச் சுரண்ட அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து மெள்ள மெள்ள மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது அந்த ஓடு. 

தங்கம்...!

பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!

அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு, இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க,  கடைசியில அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா? எனச் சொல்கிறார்.

இதேபோலத்தான்... நாமும் நமக்குள் இருக்கும் ஆழ்மனத்தின்,  தன்னம்பிக்கையின், மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது  முடிவுசெய்து கொள்ளுங்கள்...
நம் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!
ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.

அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .

 ”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,

 “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,

’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.

காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.

உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன்,

கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.

சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.

சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும்  அவனை குழப்பிவிடுகிறது.

இதுதான் உலகமா?
இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.

முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

      "வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை"....

13 டிசம்பர், 2017

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.

அப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.

சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை.
இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்" என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது.
சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது!

குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்.
நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

*இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

*"தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய்*, *முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,*
*"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.*
*இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே"* *என்று உரக்க கூறியது.*

*இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது*.

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம்,
அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.

*"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்"*.

*நன்றி : இறையன்பு , இ.ஆ.ப.*

12 டிசம்பர், 2017

ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
ஒருநாள் திடீரென்று

"இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?''
என்று சந்தேகம் வந்தது.

பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா?

இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.
உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,

"இறைவா,
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்.
"உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.

மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை,

எப்படியும் உணவு கிடைத்துவிடும்''
என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.

ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.

மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.

""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது.
"என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

"குழந்தாய் சற்று திரும்பிப் பார்.
உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது

''கழுகு பின்னால் சென்று பார்த்தது.
அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.

கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
"இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'

இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய்,
உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.
நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.

திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.

"கடுகளவேனும் முயற்சி வேண்டும்.
ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.

அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..
தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்

ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .

முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை....
உழைப்பவரை என்றும் வறுமை அன்டுவதில்லை...
🌿🌿🌿🌿🌿🌿🌷
*முயற்சி திருவினையாக்கும்*...
🌷🌷🌷🌷🌷🌷
எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........

 தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

 *தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள்  எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

 தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
✌ *ஆகவே தோற்று போ,*
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..

10 டிசம்பர், 2017

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

 அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.

சம்பவம்-2    👇👇👇👇👇👇👇👇

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

 அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3  👇👇👇👇👇👇

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

 ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

 "ஐந்து ரூபாய்"

ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா"

அதெல்லாம் முடியாது.

 மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"

முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"

இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம் 4 👇👇👇👇👇👇👇

 மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...

 திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

 இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

 கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.

 அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.
யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்....

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை. பக்த்தில் கடைகளும் ஏதும் இல்லை..

தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்டுக்களையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது கால் தடுக்கிக் கீழே விழ கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் பக்கத்தில் இருந்த ஒரு குட்டையில் விழுந்தன..

என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான். அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்..

அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த குட்டையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம் " இந்தக் குட்டையில் விழுந்த போல்ட்டுக்களை எடுத்து தாருங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்..

அதற்கு வழிப்போக்கன் "இதுதான் உங்கள் பிரச்னையா? அந்தக் குட்டையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை..

ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது. மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார் செய்து கொள்ளுங்கள். வண்டியை ஓட்டிச் சென்று அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்..

விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும் இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே! இவரைப்போய் குறைத்து மதிப்பிட்டு விட்டோமே என்று தலை குனிந்தார் விஞ்ஞானி..

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு. உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு. நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம். யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்...

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...