2 ஜூலை, 2018

Correct meaning of "OK" is the name of a German engineer Otto Krovens who worked for Ford car company in America.

As chief inspector he wrote his initial as OK upon each car he passed.
Hence it continued till date as All correct

Do we know actual full form of some words?

💛 News paper 💛
North East West South past and present events report.

💛 Chess  💛
  Camel, Horse, Elephant, Soldiers.

💛 Cold 💛
  Chronic Obstructive Lung Disease.

💛 Joke
 Joy of Kids Entertainment.

💛 Aim  💛
  Ambition in Mind.

💛 Date
 Day and Time Evolution.

💛 Eat 💛
 Energy and Taste.

💛 Tea 💛
Taste and Energy Admitted.

💛 Pen 💛
 Power Enriched in Nib.

💛 Smile 💛
Sweet Memories in Lips Expression.

💛 SIM 💛
Subscriber Identity Module

💛 etc. 💛
 End of Thinking Capacity.

💛 Or 💛
Orl Korec (Greek Word)

💛 Bye 💛
Be with you Everytime.

26 ஜூன், 2018

பெண்ணே...  பெண்ணே...

பள்ளியறையில் மட்டுமல்ல‌
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.
மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.
அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.
நீ வழங்கும் சம தானம்.
இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.
உப்பு கறிக்கு கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்க தவறாதே.
சின்னச் சின்ன சண்டைகள்
தினம்தோறும் போட்டுக்கொள்
சினம்கூடி பெரும்சண்டை
வந்திடாமல் பார்த்துக்கொள்.
அடிக்கடி உறவு வைத்தால்
அலுத்துமே போய்விடும்
அவ்வப்போது உறவுகொண்டால்
ஆனந்தம் பெருகிடும்.
அவள் கர்ப்பம் சுமக்கையில்
நீ அவளை சுமந்திடு.
அவள் வேலையில் அரைவாசி
உன் கையில் எடுத்திடு.
சிலநாளில் காலைவரை
அவள் அழகாய் தூங்கட்டும்
அவள் படுக்கை அறை சென்று
உன்கை தேநீர் வழங்கட்டும்
உறவது முடிந்த பின்னே
உன்பாட்டில் தூங்காதே
உன்னவள் உன் மார்பில்தூங்க‌
ஓரிடம் கொடுக்க தவறாதே.
தமதித்து வீடு வந்தால்
தகுந்த காரணம் சொல்.
தப்பு உன்னில் இருந்தாலே
மன்னிப்பு கேட்டுக்கொள்.
வேலைக்குச் செல்லும்போதும்
வேலைவிட்டு வந்தபோதும்
புன்னகை சேர்ந்தமுத்தத்தை
பூவையவளுக்கு போட்டுவிடு.
சிறப்பான நிகழ்ச்சி எதற்கும்
தேவி அவளை கூட்டிச்செல்
எடுப்பான பெண்ணைக் கண்டால்
எட்டி நீயும் நின்றுகொள்.
நோயிலே அவள் வீழ்ந்தால்
பாயாகி விடு.
நோவொன்று அவள் கண்டால்
தாயாகி விடு.
உன்னாலே அவள்
வடிக்கின்ற கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராய் இருக்கட்டும்.
ஆத்திரம் கூடினால்
அழுது தொலைத்துவிடு.
அவளை அடிக்கும் பழக்கமதை
அறவே வெறுத்துவிடு.
வேளை வரும் போதெல்லாம்
வெளியே அழைத்துச்செல்.
வேதனை அவள் கொள்ளாமல்
விருப்பங்களினை ஏந்திக்கொள்.
அவளொரு குற்றம் செய்தால்
அணைத்து புரியவை.
அன்னையாக நீ மாறி
அவளை திருந்தவை.
அவளின் நட்புகளை
அவள் தொடர அனுமதி.
அவளுக்கும் மனசிருப்பதை
உன் மனம்புரிந்தால் பெறுமதி.
தலை நரைக்கும் காலத்திலும்
சேர்ந்தே உறங்கிவிடு.
சாகப்போகும் நேரத்திலும்
அவள்கை பிடித்துவிடு .......👆🏻👆🏻👆🏻👆🏻

31 மே, 2018

*கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்*


ஒரு மாதமாய்  மௌனம் காத்த பள்ளிப்பூங்கா நாளை முதல் பேசப்போகிறது

கரும்பலகைகள் முகம்கழுவி தயாராய் இருக்கும் வண்ணப்பொட்டு இட்டுக்கொள்ள

வகுப்பறைகள் உங்களை சுவாசிக்க காத்திருக்கும்
விளையாட்டு மைதானமோ பசுமை போர்த்தி துள்ளி குதிக்கும்..

கல்வி அரும்புகளே
கட்டிக்கரும்புகளே
உங்கள் புன்னகைக்கூடம் நாளை முதல் இந்த பள்ளிக்கூடம்

ஒருபடி முன்னேற்றம் கண்ட உங்களுக்கு வெற்றிப்பூங்கொத்து..
தவறிய உள்ளங்களுக்கு தாங்கி தைரியம் சொல்லும் நம் பள்ளி உண்மையில் செம கெத்து

யாவும் உண்டு இங்கு
கல்வியோடு ஒழுக்கம் அறி
எதிர்கால வாழ்வுக்கு அது ஒன்றே சரி
அனைவரிடமும் அன்பு காட்டு
உலகம் உய்ய அதுவே உயர்நெறி

ஆசான்களே
புதுமைகளின் விளைநிலங்களே
ஓய்வறியா சூரியன்களே
அறிவால் அகிலமாள கற்பிக்கிற கற்பக தருக்களே

சிலையைத் துடைத்து பொலிவாக்குவதல்ல உமது பணி
உடைந்த கல்லையும் கலையாக்குவதே கல்விப்பணி

நேரம் தாண்டி உழைப்பதை உலகம் பெரிதனப்  பேசாது
நேரம் தவறி பள்ளி வந்தால் விமர்சிக்கும் வாய்கள் கூசாது

காலம் அறிவோம்
கடமை உணர்வோம்
மாணவர்களின் கதாநாயகர்கள் நீங்கள்
உங்களிலிருந்தே
உயர் எண்ணச் சிறகுகளை மாணவர்கள் ஏந்தி பறப்பர்..

உங்கள் உள்ளங்களின் ஏழைகளின் வலியை ஏற்றி அவர்களுக்கு எதிர்காலத்திற்கான நல்வழிதனைக் காட்டுங்கள்..

இவ்வாண்டு
பயணம் புதிது பாடதிட்டமும் புதிது
பழமைகளை புறந்தள்ளி புதுமைகளை படைக்க காத்திருக்கும் உங்களுக்கும் என் நெஞ்சம்நிறை வாழ்த்துகள்..

இயந்திர உலகில் இதயங்களோடு பேசுகிற நீங்களே பாக்கியவான்கள்
புதிய உலகம் பிறக்கட்டும் உங்களில் இருந்து..

இனிய கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்
ஆசிரியர் வேதபிரகாசம்

23 மே, 2018

⚡Good Information👇🏼👇🏼👇🏼
இதை குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியமானது மற்றும் சிலர் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.

💥ஒரு ஜப்பானிய  மருத்துவக் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
 
1. மைக்கிரேன் (ஒற்றைத் தலைவலி)

2 .உயர் இரத்த அழுத்தம் (High blood pressure)

3 .குறைந்த இரத்த அழுத்தம்(Low blood pressure

4. மூட்டு வலி

5 .திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 .கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம்

10. கொலு வலி

11 .ஆஸ்துமா

12 .ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான
 நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி

* சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 டம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.

*🌟குறிப்பு:*
* தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.

சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: -

💫30 நாட்களில் நீரிழிவு நோய்

💫30 நாட்களில் இரத்த அழுத்தம்

💫10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்

💫9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்

💫6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு

💫10 நாட்களில் ஏராளமான பசி

💫10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்

💫மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்

💫15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்

💫30 நாட்களில் இதய நோய்கள்

💫3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்

💫4 மாதங்களில் கொழுப்பு

💫கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில்

💫4 மாதங்களில் ஆஸ்துமா

* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!
குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர், 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்.

* இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.

* குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.

* தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*

நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும். *


-டாக்டர் டி. மென்சா-அசரே

18 மே, 2018

*ஒரு எளிமையான கதை ...மனதை கவர்ந்தது*.

அடர்ந்த காடு ஒன்று இருந்தது.

அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன.

 அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.

அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அவருக்கு வயதாகிவிட்து.

 அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் .

அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது.

 கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

 எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.

நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

 இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர்.

 இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது .

 இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி.

தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை.

 எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.
🌸
மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .

 " இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

 இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி .

இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
 தலைவனாக முடி சூட்டப்படுவான்.

 இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும், நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும்.

 நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள்.

நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் .

தீர்ந்த பிறகு காட்டில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் தீ வைத்துக் கொளுத்துங்கள் .

 அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் .

 உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்  தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.

மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் .
🌸
 பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும்.

 அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும்.

அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் .

இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும்.

ஆனால் சோள அடையோ, சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.

🌸
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள்.

போட்டி ஆரம்பமாகிவிட்டது .

 இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள்.

 இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.

🌸
நாட்கள் ஓடின.

மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

 ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது.

 உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.

அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான்.

 இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,

 "தலைவா, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன்.

 அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.
💪
தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது .

 இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார்.

 இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன.

 தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது .

 தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார்.
🌸
படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .

இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது.

 அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ?

 என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது.

 ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு.
🌸
 இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.

🌸
கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.

அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான்.
*முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான்*.

தலைவரை வணங்கி வரவேற்றான்.

 " உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான்.

 உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான்.

 தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

 " உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே .

நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய்.

நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
🌸
 "கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே" என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான்.

 அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது.
🌿🌿🌿🌿
அவன் சொன்னான்,
 "தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன்.

இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது.

நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன்.

 இந்த நான்கு மாதம் மட்டுமல்ல .

இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.
🌸
தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

 "நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன். நீயோ *உன் அறிவாலும், உழைப்பாலும்* என்னைத் திணறடித்து விட்டாய்.

காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி" என்றார்.
🌸
 *செல்லமே, கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள்.*

*அது பொருளாக இருந்தாலும், வாழ்க்கையானாலும், நேரமானாலும்...*.. 

👍🙏

*நன்றி ---- கதையை படைத்தவருக்கு  ... !!*
🙏👍

17 மே, 2018

.
பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?
.
நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.
அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.
.
சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.
 .
எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

16 மே, 2018

தொலைந்த மொபைலை
ஒரே நிமிடத்தில்
நாமே கண்டுபிடிக்கலாம்....
அனைத்தையும் லாக் கூட செய்யலாம்...

செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த  இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம்.

 அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி  கவலை  கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....

அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும்.

 தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.

 ஆச்சரியமாக இருக்கிறதா.
 இது உண்மை.

இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

find my device

find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும்.

முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find  என டைப் செய்யுங்கள்..

பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை  log in  செய்ய வேண்டும்.

உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.

அப்போது  ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது  map மூலமாக தெரியவரும்.

play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.

lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.

erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த  அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.

அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த  இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

 By
Heta Vasanth

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...