30 ஆகஸ்ட், 2018

நல்ல நட்பை இழந்து விடாதீர்கள்!

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் ,
"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா...???"
என்று கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 3). "அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.*

 👉 *"யாருக்கும் பயனில்லாத,*

👉 *நல்ல விஷயமுமில்லாத,*

👉 *நேரடியாக நீங்கள் பார்க்காத,*

*என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

*நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.*

👉 *பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,
வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!* 

நானும் என்றும் இழக்க மட்டேன்..... 
கண்ணதாசனின் இல்லற தர்மம்

திரு. கண்ணதாசன் அவர்களின் 'நெஞ்சுக்கு நிம்மதி' புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..?

தகராறு இல்லாத
குடும்பம் இல்லை...
வீட்டுக்கு வீடு வாசப் படி...
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கவலை...
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால், அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை.

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலை யென்றால்,
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு,
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு.

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு.
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு.

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு.
பிரச்சினை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.
ஆக, அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும், நாம் மட்டும்தான் கஷ்டப்படுவது போலவும் பிரமை வேண்டாம்.

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிரச்சினையோடு வரக் கூடாது.
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வரவேற்க கூடாது.

கணவர் எதையும் அடித்துச் சொல்லக் கூடாது
மனைவி எதையும் இடித்துப் பேசக் கூடாது

"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் " என்று மனைவி சொன்னால்,
"எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால்தான் பிரச்சினை.
தன் தவறை ஒத்துக்கொண்டு
"சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது.

"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்,
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான். நீங்க உங்க அம்மா வீட்டுக்குப் போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால்தான் பூகம்பம் ஆரம்பம்.
"இன்னிக்கு உடம்புக்கு முடில. நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...

மனைவி புது புடவை உடுத்தினால் "இந்த புடவை நன்றாக இருக்கு. அழகா இருக்கே" என்று சொல்லனும்.
கணவன் வெளியிலிருந்து வரும்போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது. எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்.

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கனும்,
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கனும்.

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி.
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாகக் கூறினால் மனைவிக்கு நிம்மதி.

BedRoom இல் Board Room இல் பேசுவதுபோல் பேசக் கூடாது. கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது.

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள் சரி செய்யப்பட்டு சேர்ந்துவிட வேண்டும்.

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம், வார்த்தைகளில் ஜாக்கிரதை.

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.

முள்ளால் குத்தின காயம் ஆறிடும்.
சொல்லால் குத்தினால் ஆறவே ஆறாது.

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்.

இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்.
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்.

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் " என்றும்,
"கணவன் தானே பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது, உடல் வலிக்காது, ஊர் சிரிக்காது.

வாழ்க இல்லறம்.

11 ஜூலை, 2018

*அறிவியல் அறிவோம்*

*தும்மல்... Sneeze*

காற்றுத்தவிர வேறு எந்த வெளிப் பொருளும் மூக்கில் நுழைந்தால் நமது மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சை செயல் தான் தும்மல்.

நமது மூக்கில் மென்மையான சவ்வுப்படலம் உள்ளது. அது நிறமற்ற திரவத்தை சுரக்கிறது. அளவிற்கு அதிகமான தூசியோ, துகளோ நம் மூக்கில் நுழையும் போது இந்த மெல்லிய சவ்வுப்படலம் தூண்டப்பட்டு அதிக அளவில் நீரை சுரக்கிறது. இதன் தூண்டுதலால் நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்றுத்தசைகள் ஒன்று சேர்ந்து மூச்சுப் பாதையில் உள்ள கிருமிகள் நிறைந்த காற்றை அழுத்தமாகவும், வேகமாகவும் மூக்கு வழியே வெளியே தள்ளுவதே தும்மலின் நோக்கமாக அமைகிறது.

*தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. என கணக்கிடப்பட்டுள்ளது.*

அதைத் தான் நாம் தடுக்க முயல்கிறோம்...இதன் விளைவுகளை பார்ப்போம்.

*எச்சரிக்கை!* *தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்!*

‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மி விட்டால் போதும், அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.

ஆனால் சபை நாகரீகம் கருதி பலர் தும்மலை அடக்க முயற்சிக்கிறோம், அதன் ஆபத்து புரியாமல். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது சவ்வு கிழிந்து விடும் அபாயம் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் இது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. தும்மலை நாம் அடக்கும்போது நமது நுரையீரல்களுக்குள் அடைபட்டுப் போகும் காற்று வெளியேற வேறு வழியைத் தேடும். அப்போது காது துவாரம் வழியாக வெளியே செல்ல அதீத அழுத்தத்துடன் காற்று முந்தும், அப்படி அழுத்தம் நிறைந்த இந்தக் காற்று ஒன்று Ear drum எனப்படும் நமது காது சவ்வைக் கிழிக்கவோ அல்லது அப்படியே மேலேறி மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கவோ அதிக வாய்ப்பு உள்ளது.

34-வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இப்படி தும்மலை அடக்க முயற்சித்து தனது மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் மூடி உள்ளார். உடனே அவரது தொண்டையில் ஏதோ வீக்கம் ஏற்பட்டுள்ளது

அதைத் தொடர்ந்து இருமலும், வாந்தி வருவதைப் போன்ற உணர்வும் இவருக்கு ஏற்பட்டுள்ளது, உடனே மருத்துவரின் உதவியை இவர் நாடியுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் இவருடைய தொண்டையின் பிற்பகுதியில் முறிவு ஒன்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் தன்னுடைய குரலை இழந்து, உணவுப் பொருட்களை கூட இவரால் விழுங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் டோமோகிராஃபி ஸ்கேன் மூலம் இவர் தும்மலை அடக்கிய போது காற்று குமிழ்கள் இவரது தொண்டை மட்டும் இல்லாமல் விலா எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உடனே இவரை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்து தொடர்ந்து 7 நாட்களுக்கு குழாய் மூலமாக உணவை ஊட்டி அந்த வீக்கம் குறைந்த பிறகு இனி தும்மல் வந்தால் அதை அடக்காதீர்கள் என அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது போன்ற எந்த ஆபத்திலும் நீங்கள் சிக்காமல் இருக்க இனியாவது தும்மல் என்பது ஒரு இயற்கையான விஷயம்தான், தும்முவதால் யாருடைய கௌரவத்திற்கும் குறைவு ஏற்படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது மட்டுமல்ல நாம் ஒரு தடவை தும்மும்போது பல்லாயிரக் கணக்கில் நோய்க் கிருமிகள் வெளியேறுகிறது.

இயற்கையை இயற்கையாகவே அனுமதிப்போம்....தும்மலில் இருந்து வெளியேறும் கிருமிகள் காற்றின் வேகத்தில் கலப்பதை தடுக்கலாம். அது நமது உடலை பாதிக்காத வகையில் இருக்கட்டும்.

3 ஜூலை, 2018

சிவன் மற்றும் பார்வதிக்கு மொத்தம் எத்தனை குழந்தைகள் தெரியுமா?

மும்மூர்த்திகளில் முக்கியமானவர் சிவ பெருமான். அவரின் மனைவி பார்வதி இவர்கள் இருவருக்கும் பிள்ளையார், முருகன், ஐயப்பன் என மூன்று பிள்ளைகள் உள்ளது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு உண்மையிலேயே மொத்தம் 8 குழந்தைகள் என சிவ புராணத்திலும், லிங்க புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவ பெருமான் மற்றும் பார்வதியின் எட்டு குழந்தைகளை இப்போது பார்க்கலாம்.


பார்வதி ஒருமுறை சிவனின் கண்களை கட்டினார். அப்பொழுது ஏற்பட்ட வியர்வையால் ஒரு குழந்தை உருவானது. பின்னர் ஹிரான்யக்ஷா என்னும் மன்னன் சிவ பெருமானிடம் குழந்தை வரம் கேட்ட போது அந்த குழந்தையை கொடுத்து விட்டார். பிறக்கும் போதே அந்த குழந்தை கண் பார்வை இல்லாமல் பிறந்த்து குறிப்பிடத்தக்கது. அதன் பெயர் அந்தகா ஆகும்.
சிவபெருமானின் குழந்தைகள்:-

  • சிவ பெருமானின் விந்து நாக தேவதை மீது பட்டதால் ஒரு குழந்தை பிறந்ததாகவும் அதன் பெயர் மானசா என்றும் புராணங்களில் கூறப்படுகிறது.
  • சிவ பெருமான் தியானத்தில் இருக்கும் போது அவரது மார்பிலிருந்து வெளிவந்த சக்தி வாய்ந்த கதிர்வீச்சால் உருவானவர் தான் குஜா என கூறப்படுகிறது.
  • அடுத்ததாக ஜோதி இவர் சிவ பெருமானின் ஒளிவட்டத்தில் இருந்து பிறந்ததாக ஒரு சில கதைகள் கூறினாலும், பார்வதி தேவியின் நெற்றி பொட்டில் வந்த தீப்பொறியில் இருந்து உருவானதாகவும் கூறப்படுகிறது.
  • ஐயப்பனை பற்றி எல்லோருக்குமே தெரியும். சிவ பெருமான் மற்றும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கு மகனாக பிறந்தவர் தான் இவர்.
  • அசோக சுந்தரி, இவர் பிள்ளையாரை போன்றே பார்வதி தேவியால் உருவானவர்.
  • சிவனுக்கும் பார்வதிக்கும் மூத்த மகனாக பிறந்தவர் தான் முருகப்பெருமான்.
  • கடைசியாக முதன்மை கடவுளான விநாயகர். இவரும் சிவன் மற்றும் பார்வதி இருவருக்கும் பிறந்த குழந்தை தான்.

2 ஜூலை, 2018

Correct meaning of "OK" is the name of a German engineer Otto Krovens who worked for Ford car company in America.

As chief inspector he wrote his initial as OK upon each car he passed.
Hence it continued till date as All correct

Do we know actual full form of some words?

💛 News paper 💛
North East West South past and present events report.

💛 Chess  💛
  Camel, Horse, Elephant, Soldiers.

💛 Cold 💛
  Chronic Obstructive Lung Disease.

💛 Joke
 Joy of Kids Entertainment.

💛 Aim  💛
  Ambition in Mind.

💛 Date
 Day and Time Evolution.

💛 Eat 💛
 Energy and Taste.

💛 Tea 💛
Taste and Energy Admitted.

💛 Pen 💛
 Power Enriched in Nib.

💛 Smile 💛
Sweet Memories in Lips Expression.

💛 SIM 💛
Subscriber Identity Module

💛 etc. 💛
 End of Thinking Capacity.

💛 Or 💛
Orl Korec (Greek Word)

💛 Bye 💛
Be with you Everytime.

26 ஜூன், 2018

பெண்ணே...  பெண்ணே...

பள்ளியறையில் மட்டுமல்ல‌
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.
மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.
அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.
நீ வழங்கும் சம தானம்.
இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.
உப்பு கறிக்கு கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்க தவறாதே.
சின்னச் சின்ன சண்டைகள்
தினம்தோறும் போட்டுக்கொள்
சினம்கூடி பெரும்சண்டை
வந்திடாமல் பார்த்துக்கொள்.
அடிக்கடி உறவு வைத்தால்
அலுத்துமே போய்விடும்
அவ்வப்போது உறவுகொண்டால்
ஆனந்தம் பெருகிடும்.
அவள் கர்ப்பம் சுமக்கையில்
நீ அவளை சுமந்திடு.
அவள் வேலையில் அரைவாசி
உன் கையில் எடுத்திடு.
சிலநாளில் காலைவரை
அவள் அழகாய் தூங்கட்டும்
அவள் படுக்கை அறை சென்று
உன்கை தேநீர் வழங்கட்டும்
உறவது முடிந்த பின்னே
உன்பாட்டில் தூங்காதே
உன்னவள் உன் மார்பில்தூங்க‌
ஓரிடம் கொடுக்க தவறாதே.
தமதித்து வீடு வந்தால்
தகுந்த காரணம் சொல்.
தப்பு உன்னில் இருந்தாலே
மன்னிப்பு கேட்டுக்கொள்.
வேலைக்குச் செல்லும்போதும்
வேலைவிட்டு வந்தபோதும்
புன்னகை சேர்ந்தமுத்தத்தை
பூவையவளுக்கு போட்டுவிடு.
சிறப்பான நிகழ்ச்சி எதற்கும்
தேவி அவளை கூட்டிச்செல்
எடுப்பான பெண்ணைக் கண்டால்
எட்டி நீயும் நின்றுகொள்.
நோயிலே அவள் வீழ்ந்தால்
பாயாகி விடு.
நோவொன்று அவள் கண்டால்
தாயாகி விடு.
உன்னாலே அவள்
வடிக்கின்ற கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராய் இருக்கட்டும்.
ஆத்திரம் கூடினால்
அழுது தொலைத்துவிடு.
அவளை அடிக்கும் பழக்கமதை
அறவே வெறுத்துவிடு.
வேளை வரும் போதெல்லாம்
வெளியே அழைத்துச்செல்.
வேதனை அவள் கொள்ளாமல்
விருப்பங்களினை ஏந்திக்கொள்.
அவளொரு குற்றம் செய்தால்
அணைத்து புரியவை.
அன்னையாக நீ மாறி
அவளை திருந்தவை.
அவளின் நட்புகளை
அவள் தொடர அனுமதி.
அவளுக்கும் மனசிருப்பதை
உன் மனம்புரிந்தால் பெறுமதி.
தலை நரைக்கும் காலத்திலும்
சேர்ந்தே உறங்கிவிடு.
சாகப்போகும் நேரத்திலும்
அவள்கை பிடித்துவிடு .......👆🏻👆🏻👆🏻👆🏻

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...