18 மே, 2017

✍✍�  திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:

திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது.
அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு.
 இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.

🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...

*🖌அடுக்குத்தொடர்:
 ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

*🖌இரட்டைக்கிளவி:
 ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

*🖌சினைப்பெயர்:
 பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

*🖌பொருட்பெயர்:
  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

*🖌இடப்பெயர்:
 வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

*🖌காலப்பெயர்:
 வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

*🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
 அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

*🖌தொழில் பெயர்:
  ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

*🖌இறந்த காலப் பெயரெச்சம்:
 வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

*🖌எதிர்காலப் பெயரெச்சம்:
 ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

*🖌இடவாகுபெயர்:
  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

*🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
 துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

*🖌குறிப்புப் பெயரெச்சம்:
 அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!

*🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

*🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
 முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

*🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
  நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

*🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
  ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

*🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
  நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

*🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
  உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

*🖌பெயர்ப் பயனிலை:
  காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....

(Forward mesej) ஆசிரியர்களுக்குப் பயன்படும்)

15 மே, 2017

மெமரிகார்ட் பற்றிய சில
தகவல்கள் ? ? ?

>>>>>MUST SHARE <<<<<<

☆★☆ இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்ய வேண்டும் ☆★☆

மெமரிகார்ட் என்றால்
Dataக்களை பதிந்து வைக்க
பயன்படும் ஒரு நினைவக
அட்டை என்றும் அது 4,8,16,32GB
என்ற அளவுகளில்
கிடைக்கிறது......!

இது மட்டும்தான்
நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன்
ஒரே அளவுள்ள மெமரிகார்ட்
(4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில்
விற்கப்பட வேண்டும் என
யாராவது சிந்தித்தீர்களா?

(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத
வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது )
என்று ஒரு போதும்
இருந்துவிடாதீர்கள்......!

ஏனென்றால்
நாம் டிஜிட்டல் உலகத்தில்
இருந்து கொண்டிக்கிறோம்
அதைப்பற்றிய அரிவை நாம்
பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க
வேண்டிய விஷயம்
என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய
தயாரிப்பு நிறுவனத்தின்
பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற
எதாவது ஒரு எண்
குறிப்பிட்டு அதில்
ஒரு வட்டமிட்டு காட்டப்
பட்டிருக்கும் இதுதான் இந்த
விலை பட்டியலுக்கு காரணம்
ஆனால் இதனை அதிகம் நபர்கள்
தெரிந்து வைத்திருப்பதில்
லை.......!

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள
எண் அந்த memory cardனுடைய
class என்று குறிப்பிடப்படுக
ிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்
data transfer speedஐ குறிக்கும்
code ஆகும் 4என்ற எண்
எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால்
அது நொடிக்கு 4MB வேகத்தில்
fileஐ transfer செய்யும்
தன்மையை பெற்றிருக்கும்
class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற
வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கி
றது......!

இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும்
பல வியாபாரிகளுக்கே
தெரியாது.......!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

14 மே, 2017

*அம்மா நீ அற்புதம்!
உன்காலடியில் சொர்க்கம் இருப்பதாக அண்ணலார் கூறியதில் என்ன  சந்தேகம்?
*✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*

*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்*.

*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.*
*அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.*

*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*
*✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.*

*✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.*

*✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!*

*✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.*

*✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'*

*✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்*

*✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்*

*✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!*

*✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக்* *கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித்* *தந்த அந்த (தொட்டில்)* *வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.*
 *நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு*

*✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?*

*✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.*

*✏ ஆயிரம் கைகள் என்* *கண்ணீரைத் துடைத்துப்*
*போனாலும், ஆறாத* *துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.*

*✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.*

*✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!*

*✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!*

*✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை*
*என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை*.

*✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.*

*✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை*.

*✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!*

*✏ 'அம்மா...!*' *அன்று நம்* *தொப்புள்கொடியை* *அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின்* *தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு* *விழா ரிப்பன்!*    

படித்துவிட்டு பகிருங்கள்!

13 மே, 2017

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.


===================


அப்பா கட்டிய

வீடாயிருந்தாலும்

அது நமக்கு

அம்மா வீடுதான் !


===================


அடுப்படியே

அம்மாவின்

அலுவலகம் !

அன்பு மட்டுமே

எதிர்பார்க்கும் சம்பளம் !


===================


காய்ச்சல் வந்தால்

மருந்து தேவையில்லை !

அடிக்கடி வந்து

தொட்டுப்பார்க்கும்

அம்மாவின் கையே

போதுமானது !


===================


இவ்வளவு

வயதாகியும்

புதுச்சட்டைக்கு

மஞ்சள்வைத்து

வருபவனைக்

கேலி செய்யும்

நண்பர்களே ..........

அது,

அவன் வைத்த

மஞ்சள் அல்ல !

அவன்,

அம்மா வைத்த

மஞ்சள் !

===================


டைப்பாய்டு வந்து

படுத்த அம்மாவுக்கு

'சமைக்க முடியவில்லையே'

என்கிற கவலை !


===================


'அம்மா தாயே'

என்று

முதன் முதலில்

பிச்சை கேட்டவன்

உளவியல் மேதைகளுக்கெல்லாம்

ஆசான் !


===================


எந்தப் பொய்

சொல்லியும்

அம்மாக்களை

ஏமாற்றிவிடமுடியும்

'சாப்பிட்டு விட்டேன் '

என்கிற

அந்த ஒரு பொய்யைத்தவிர !

===================


அத்தி பூத்தாற்போல

அப்பனும்

மகனும்

பேசிச்சிரித்தால்

விழாத தூசிக்கு

கண்களை தேய்த்துக்கொண்டே

நகர்ந்து விடு்கிறார்கள்

அம்மாக்கள் !


===================


வெளியூர் செல்லும்

பிள்ளைகளின்

பயணப்பைக்குள்

பிரியங்களைத்

திணித்து வைப்பவர்கள்

இந்த அம்மாக்கள் !


===================


பீஸ் கட்ட

பணமென்றால்

பிள்ளைகள்

அம்மாவைத்தான்

நாடுகின்றன ........

காரணம்,

எப்படியும்

வாங்கிக் கொடுத்துவிடுவாள் !

அல்லது

எடுத்துக் கொடுத்துவிட்டு

திட்டு வாங்கிக்கொள்வாள் !


===================


வீட்டுக்குள்

அப்பாவும்

இருந்தாலும்

அம்மா என்றுதான்

கதவு தட்டுகிறோம் !


===================


அம்மாக்களைப்

பற்றி

எழுதப்பட்ட

எல்லா

கவிதைகளிலும்

குறைந்தபட்சம்

இரண்டு சொட்டுக்கண்ணீர்

ஈரம் உலராமல் !


===================


அகில உலக

அம்மாக்களின்

தேசிய முழக்கம்

இதுதான் ..........

" எம்புள்ள

பசி தாங்காது! "


#பிடித்திருந்தால்_பகிர்ந்து_கொள்ளுங்கள்..

Love you amma...

12 மே, 2017

⚘⚘மகாபாரதம் உணர்த்தும்.   உண்மைகள்....
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
சாந்தனுவாய்....
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்..
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
பாண்டுவாய்....
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
சகுனியாய்...
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
குந்தியாய்...
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்....⚘⚘⚘⚘⚘⚘⚘

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்...
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
துரியோதனனாய்...
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
கூடா நட்பு
கேடாய் முடியும்
கர்ணனாய்...
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
பாஞ்சாலியாய்..
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய்.....
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
பலம் மட்டுமே
பலன் தராது
பீமனாய்....
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
அர்ஜூனனாய்....
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகாதேவனாய்..
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
அபிமன்யூ
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்....
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
"விருது"நகர் ....

விருதுநகர் மாவட்டம் தன பெயரை போலவே விருதுபெறும் வகையில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது வேறு எந்த மாவட்டத்திற்கும் இத்தகைய சிறப்பு இருக்காது என எண்ணுகிறேன் .

1.ரமண மகரிஷி அவதரித்த இடம் (திருச்சுழி)

2.மூன்று தமிழக முதல்வர்களை தந்த மாவட்டம் . திருவாளர்கள் 1..குமாரசாமி ராஜ 2.காமராஜர்
3.ஓ.பன்னீர்செல்வம் (பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்)

3..சாத்தூர் சேவு

4. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா.

5.சிவகாசி பட்டாசு ,காலண்டர்,டைரி,பாட புத்தகங்கள்.

6.இந்தியாவின் வணிக தலைநகரமாக எண்ணைவித்துக்கள் ,தானியங்கள்,டின் தொழில்களில் முற்றொருமை பெற்று விளங்குகிறது.

6.தமிழக அரசின் சின்னமான ஆண்டாள் கோயில் கோபுரம்

7.சித்தர்கள் இன்றும் வாழ்வதாக நம்பப்படும் மகாலிங்க மலை.

8.நைட்டீஸ் ,பெண்களின் உள்ளாடைகள்,தயாரிப்பில் முன்னணயில் உள்ள தளவாய்புரம்.

9.ஆசியாவிலேயே பேண்டஜ் துணிகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சத்திரப்பட்டி.

10. இன்றும் கைத்தறி நெசவுத்தொழில் சிறந்து விளங்கும் அருப்புகோட்டை .

11.இந்தியாவையே தன் நடிப்பால் கலக்கிய ஸ்ரீதேவி என்ற அழகு மயில் பிறந்த ஊர் மீனம்பட்டி.

12. வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தியாகி சங்கரதாஸ் பிறந்த ஊர்.

13.தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்ட தியாகி சங்கரலிங்கனார் பிறந்த ஊர் .

14. இருக்கன்குடி ,திருவண்ணாமலை , ஆண்டாள் கோயில் ,விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் ,திருச்சுழி திருமேனிநாதர் திருகோயில் ,திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கள் நின்ற நாராயண பெருமாள்.

15.ராஜபாளையம் நாய்

16.ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ள ராஜபாளையம்.

17.பிரசித்திபெற்ற ராம்கோ ,ஆலங்குளம் அரசு சிமென்ட் தொழிற்சாலைகள் .
18. உலக அளவில் முன்னணயில் உள்ள தீப்பெட்டி தொழில் .

19.வீடு தோறும் கைப்பிடி அரிசி கொடுத்து KVS கல்வி நிலையங்கள் உருவாகிய ஊர்.

20.தமிழகத்திலேயே முதன் முறையாக மழை நீர் வடிகால்கள் அமைத்து ஊர் மத்தியில் அமைந்துள்ள தெப்பத்தில் நீர் தேக்கியது விருதுநகரில் தான்.

21.விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட பெரியதாக, சாம்பல் நிறத்தில் இந்த அணில் இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பறக்கும் அணில், சிங்கவால் குரங்கு, யானை, மான் மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

22.வறுமையின் காரணமாக உயிர் நீத்த நல்லதங்காள் பிறந்த ஊர் மல்லி அருகே அர்ஜுனா புரம்.

23. விருதுநகர் எண்ணை புரோட்டா .....

விருதுநகர் டைம்ஸ் வாசகர்களின் தகவல்கள் ......

24.சபரிமலை பக்தர்கள் மற்றும் இதர கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் கழுத்தில் அணியும் துளசி மணி மாலை ,ஸ்படிக மாலை புனைந்து இந்திய முழுவதும் அனுப்பும் துலுக்கப்பட்டி .

25.வெள்ளையனுக்கு எதிராக தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்திய மருது சகோதரர்கள் பிறந்த முக்குளம் .

26.ஈமெயில் கண்டுபிடித்த கண்டுபிடித்த திரு.சிவா அய்யாதுரை .

27.பல ஆண்டுகளாக அரசு [பொது தேர்வுகளில் முதல் இடம் பிடித்த மாவட்டம் நமது விருதுநகர்

11 மே, 2017

🍎🍎🍎👌வெற்றிச் சிந்தனைகள்.💐

📖 குட்டி கதை 📖

ஒருவன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள  குப்பை தொட்டியில் ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பை தொட்டியில் தனக்கு தேவையான  பாட்டில்களை நிரப்பி எடுத்து சென்றார். மீண்டும் ஒருவர் தனக்கு தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு சென்றது.கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கி கொண்டது.

இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த அந்த நபர் கூறிய வார்த்தைகள் ,
ஒரு சிறிய குப்பை தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து , விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்று தன் மனதை திடப்படுத்திக்கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது , இனி வரும் காலங்கள் பொற்காலமே , மிக பெரிய வெற்றியே என  தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்க சென்றார்.


🎯 " இந்த பரந்த உலகில் நாம் அனைவரும் ஜெயிக்க மட்டுமே பிறந்தவர்கள் " 🎯

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...