24 ஜூலை, 2017

பரிகாரம் தொடர்பான குட்டி கதை.
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார்.
நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.
அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது.
மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி,
வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.
அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து
“ஐயோ… அம்மா”
என்ற குரல் கேட்டது.
ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே…
யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.
அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.
“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே”என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும்.
உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.
கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.
“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.
மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்து விடுங்கள்.
நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை.
அறியாமல் நடந்த தவறு இது.
போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணி விட்டேன்….”
தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான்.
அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.
அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.
தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.
பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.
“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன்.
நான் தண்டிக்கப் படவேண்டியவன்.
பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன்.
நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான்.
இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.
அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள்.
அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்..”
என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.
உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.
அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது?
மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது…
செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்….
“ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?
நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர் கள் சரி தானே?
நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?
“ஐய்யய்யோ
அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக்கிறதே
எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.
விறகுவெட்டி தொடர்ந்தான்…
“நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை.
அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை.
நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது.
தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன்.
அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மை யாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார்.
அது ஒன்றே எனக்கு போதும்.
மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை.
ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும்.
நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.
அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.
மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது…
எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.
ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந் தன்மையா?
இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும்.
இந்த கதை கூறும் நீதி.
அந்த மன்னன் தான் நாம்.
நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.
அந்த விறகுவெட்டி தான் இறைவன்.
இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.
பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்தால் போச்சு என்று ஆணவத்தால் பணத்தாலோ, ஆடம்பர யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலும் சரி, அர்ச்சகரையோ, அல்லது அந்த ஆலயத்தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்,
ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க கூட வைக்க முடியாது.
ஆனால்,
இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று,
ஆண்டவா,
மனதுக்குள் வேறு எந்த சிந்தனையு மின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து,
அறியாமல் நடந்த தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இது போல் நிகழாவண்ணம் நான் பார்த்துக் கொள்கிறேன்.
இந்த ஒரு முறை மன்னித்து விடு !
என உளமுருகி மன்றாடி கேளுங்கள்.
ஆண்டவன் முன் நீங்கள் கண்
மூடி மனம் வருந்தி வேண்டும் போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான்.
கருணை புரிவான். நீங்கள் இதை உணர்வு பூர்வமாக பெற்று விடுவீர்கள்.
இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.
ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை.
ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம்,
அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம்
என்பது இங்கே மிகவும் முக்கியம்.
நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.
நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி…
எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி
செய்த பாவத்திற்கு மனம் திருந்தி கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு பரிகாரம் என்பது கிடையாது.
" ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம்.
தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற,
சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி,
ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ, அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார்.
வந்தவர்களுக்கோ வாழ்த்தி அனுப்புவார் என எண்ணி வந்தோம், இவரோ பாகற்காயை தருகிறார். ஏதோ காரணம் இருக்கும் என எண்ணி வாங்கிக் கொண்டு சென்றனர்.
புண்ணிய நீராடி சில நாட்கள் கழித்து சாதுவிடம் வந்து தாங்கள் கொடுத்த பாகற்காயை எல்லா புண்ணிய நதிகளில் நனைத்து எடுத்து வந்துள்ளோம்,
எங்களை போன்றே இந்த பாகற்காயும் மிகவும் புண்ணியம் படைத்தது என கூறினர்
சாதுவோ தனது சீடரை அழைத்து இந்த காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வா என கூற,
அந்த பாகற்காய் துண்டுகளில் ஒன்றை சாது எடுத்துக் கொள்ள மீதியை மற்றவர்களிடம் நீட்ட அவர்களும் எடுத்து வாயில் போட்ட வேகத்தில் ஒரே கசப்பு என தரையில் துப்பினர்.

அப்போது சாது, புண்ணிய நதிகளில் நீராடிய பாகற்காயின் தன்மை எப்படி
மாறவில்லையோ
அது போன்றது தான் உங்கள் புனித நீராடலும் "
மனம் வருந்தாமல், சிறு நெருடல், உறுத்தல் கூட இல்லாமல் செய்யும் எந்த பரிகாரமும் பாகற்காயை போன்றே தன்மை
மாறாது.
அடுத்த முறை என்ன பரிகாரம் செய்தாலும், நாம் செய்த குற்றத்திற்கு பாவத்திற்கு பிராயச்சித்த மாகத் தான் இதை செய்கிறோம் என்று உணர்ந்து கடந்த கால முன்ஜென்ம தவறுக்கு வருந்தி கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில் தான் ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும்.
மேற்கூறிய மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள்…
உடனடி பலன் நிச்சயம்

20 ஜூலை, 2017

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதையொன்றில் 1990களில் இந்திய  தொலைத்தொடர்புத் துறை பொறியாளர் ஒருவர் ஊர் ஊராக சென்று தரைவழி கேபிள்களை பதிப்பதற்கான பணியை  மேற்கொண்டு வந்தபோது அப்பொறியாளருக்கு பெரும் சவாலாக இருந்தது என்னவென்றால் போகும் இடமெல்லாம் கேபிள் போடுவதற்கு  மண்ணை தோண்டி தருவதற்காக ஒரு வேலையாள் நிரந்தரமாக வேண்டுமென்பதே.. அதனால் அப்பொறியாளர் ஒரு முடிவுக்கு வந்தார். வேலைக்கு ஆள்தேவை என்று விளம்பர போர்டு வைப்பது. இதுபற்றி அவர் தனது நண்பனிடம் தெரிவித்தவுடன் அவர் நண்பன், கவலைபடாதே அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாராம். அதை நம்பி அப்பொறியாளரும் இரவு தூங்குவதற்கு சென்றுவிட்டாராம். மறுநாள் பொறியாளர்  கடைத்தெருவிற்கு சென்றபோது அனைவரும் அவரை பார்த்து கிசுகிசுத்தவாறே சிரித்துள்ளனர். இதை கவனித்த பொறியாளர் பிறகு தனது நண்பன் வைத்த விளம்பர போர்டை பார்த்துதான் மக்களின் சிரிப்பிற்கான காரணத்தை தெரிந்துகொண்டாராம்... அப்படி என்னதான் அந்த விளம்பர போர்டில் இருந்தது என்கிறீர்களா...???

"கூடவே இருந்து குழிதோண்ட ஆள்தேவை - இப்படிக்கு தொலைத்தொடர்பு அதிகாரி" 😂😂😂😂

19 ஜூலை, 2017

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான்.  இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.  அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார். குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.

முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு  விற்பனை செய்ய முடிந்தது".  இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான்.  முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.  சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார்.

"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"

இளைஞன் சொன்னான், "933005  பவுண்டுகள்".

அதிர்ச்சியடைந்த  முதலாளி, "அப்படி என்ன விற்றாய்"

வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."

"ஆனால்,  அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி.

"உண்மைதான்.  இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்க படகு இருக்கிறதா என்று கேட்டேன்.  அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஒரு இருபது அடி நீள படகை விற்றேன்.  இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4  x  4  ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன்  காரையும் விற்றேன்.  நடுவே ஓய்வில் அவருக்கு தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"

"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.

"இல்லை, அவர், தனக்கு தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார்.  நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன்."

முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"

"அங்கு  எல் ஐ சி யில் ஏஜென்ட் ஆக இருந்தேன், ஏன் ?"

"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்த கடையை பார்த்துக்கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்"
😀😀😀😂😂😂
😊😊😊😊😊😊படித்ததில் பிடித்தது 😊😊😊😊😊😊
தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார்.

அடர்த்தியான புருவம், பெரிய மீசை, அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி  போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது  அடையாளம்...

வீதியில் அவரைக்  கண்டு விட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...

ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும்  ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால்  மட்டந்தட்டிவிடுவார்.

இதில் சிலர் அழுது விடுவது  கூட உண்டு...

ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.
ஊர் எல்லை வரை வந்து விட்டார்...

அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்தார்...

நாவிதரின் உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து, நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது...

இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது...

இன்று  இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆக வேண்டுமென்று முடிவெடுத்து அவரை நெருங்கினார்...

"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...

அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

வேலையை ஆரம்பித்தார்...

'நாவிதர் கோபப்படுவார்' என்று  எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...

"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது...
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி  நாவிதன்னு சொல்றாங்க...?"

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
           
"நல்ல சந்தேகங்க சாமி...
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை  பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு  சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.

"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம்...

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.

அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..."  என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல்...

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

"நம்முடைய அறிவும்...
புத்தியும்...
திறமையும்...
அதிகாரமும்...
அந்தஸ்தும்...
பொருளும்...
மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."

இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...

*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*

அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே ...

*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*


படித்ததில் பிடித்தது 

6 ஜூலை, 2017

ஒரு சுவையான பதிவு.

உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?

1. ஞாயிறு — சூரியன்
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,
சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,
மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

2. திங்கள் — சந்திரன்
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,மோர்.
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பாம்.இட்லி.
தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

3. செவ்வாய் — செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,தர்பூசணி ஜூஸ்,
தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.மிளகாய் துவயல்.

4. புதன் — புதன்
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,
பாவக்காய் தொக்கு, முருங்கைக் காய் சூப்,
பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,
வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

5. வியாழன் — குரு
சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,
கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,
தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,
சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,
கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,
மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

6. வெள்ளி — சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,
தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,
முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,
இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,
கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,
நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.

7. சனி — சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,
எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,
மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,
புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,
நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,
பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும்அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமேஅந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.....Thanks to Lalitha Raamachandhiran
பகிா்வு..எம்.விஜயன்
எழுதியவர்க்கு என் வாழ்த்துகள் ...

வெத்திலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புலுக்கையள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம், விருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெத்திலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம் சூதில்லாம சுழன்ற எங்க வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

கவி வளநாடன்

4 ஜூலை, 2017

*கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*
*ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்*
"நான் வணிகவுலகில்
வெற்றியின் உச்சத்தைத்
தொட்டிருக்கிறேன்.
பிறரின் பார்வையில்
என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான்.
எப்படியிருந்தாலும்
என்னுடைய பணிச்சுமைகளை
எல்லாம் தாண்டி
நானும் என் வாழ்க்கையில்
ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச்  சந்தித்திருக்கிறேன்; உணர்ந்திருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன்.
பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
என் வாழ்க்கையின்
இறுதிக்கட்டத்தில்தான்
அறிந்துகொண்டேன்.
இதோ !  இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு
என் முழுவாழ்க்கையையும்
திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு  எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.
இந்த இருளில்
என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும்
மருத்துவ இயந்திரங்களின்
மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.
கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும்
மிக - மிகஅருகில் உணர்கிறேன்.
வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத - மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும்  சம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.
அவை
உறவாகவோ,
நட்பாகவோ,
கலையாகவோ,
அறமாகவோ,
நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.
அவைதான் வாழ்வில்
மிகமிக இன்றியமையாதன என்பதை - காலங்கடந்து
இப்போது நான் உணர்கிறேன்.
அதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக்  கொண்டு
ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது,
என் வாழ்க்கையை போல.
கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும்  இருக்கும் அன்பை உணரச்செய்யும்
ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்,
பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும்
அனைத்து மகிழ்ச்சியும்
வெறும்  மாயைகளே!

நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.

நான் மகிழ்ந்திருந்த
என் நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன் இருக்கின்றன.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.
வாழ்க்கைக்கு
எந்த எல்லைகளுமில்லை.

எங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ
அங்குச் செல்லுங்கள்.

தொட நினைக்கும் உயரத்தை - உச்சத்தைத்  தொட முயலுங்கள்.

நீங்கள் வெற்றியடைவது
உங்கள் எண்ணத்திலும்
கைகளிலும்தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து
நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால்
மீண்டும் வாங்கிவிடலாம்.

ஆனால் நீங்கள் தொலைத்து,
அதைப் பணத்தால்
வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால்
அது உங்கள் வாழ்க்கைதான்.

வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை ,
இப்போதாவது வாழ்க்கையை
வாழத் தொடங்குங்கள்.

நாம் நடித்துக்கொண்டிருக்கும்
வாழ்க்கை எனும் நாடகத்தின்
திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களின்
குடும்பத்தினருக்கு,
பெற்றோர்க்கு,
மனைவிக்கு,
மக்களுக்கு,
உறவினர்க்கு,
நண்பர்களுக்கு,
இயலாதவர்களுக்கு
அன்பை வாரிவாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் எப்பொழுதும்  மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்"

மரணப்படுக்கையில் ஸ்டீவ்..
Apple Inc.,
Founder
U.S.A.

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...