17 அக்டோபர், 2017

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:

மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.''

மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்:

மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.''

மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.

அவனது தந்தை கூறினார்:

மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...''

அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:

மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...''

கடைசியாக மனைவி கேட்டாள்:

நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.''

மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?

விடை: என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.

நீதி: உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும் முடிவொடுக்கும் திறமையையும் இயல்பாகவே வெளிப்படும் என்பதே உலகம் கண்ட உண்மை.. இதற்கு நமது மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் சாட்சி..
🙏🏻🌹☝
​🅾🈯 *புகுந்த வீட்டில் திருமணப் பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்...​⛔*

திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணை முதன் முதலாக குத்துவிளக்கை ஏற்ற வேண்டும் என்று சொல்வது ஏன் தெரியுமா?

திருமணப் பெண் புகுந்த வீட்டில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்?

குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிக்கிறது.

மேலும் குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்கள் ஐந்து கடவுள்களையும் குறிக்கிறது. அதாவது குத்துவிளக்கின்,

தாமரைப் போன்ற பீடம் - பிரம்மாவையும்,

நடுத்தண்டு பகுதி - விஷ்ணுவையும்,

நெய் எறியும் அகல் - சிவனையும்,

தீபம் - திருமகளையும்,

சுடர் - கலைமகளையும் குறிக்கிறது.

எனவே திருமணம் முடிந்து முதன் முதலில் புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் ஐந்து நற்குணங்களையும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிப்பதாக குத்துவிளக்கை ஏற்ற சொல்கிறார்கள் என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது.

பின் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, குத்துவிளக்கில் உள்ள ஐந்து கடவுள்களையும் வணங்கி, குத்துவிளக்கில் இருந்து வரும் ஒளியால் வீடு முழுவதும் எப்படி பிரகாசம் அடைகிறதோ, அதேபோல் புகுந்த வீட்டில் வாழ வந்த பெண்ணின் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும்.

16 அக்டோபர், 2017

இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும். மீதிப்பேர் சாப்பிடலாம்.

மிகவும் பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.
பெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்...

நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்...

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!

குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.

உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்க்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்.

அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்!

பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதானங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!

நன்றி

14 அக்டோபர், 2017

காட்சியளித்த கடவுளிடம் மனிதர்கள் கேட்ட வரம்... மிஸ் பண்ணாமல் படிங்க!


கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :
“எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான் உலகில் சிறந்தோங்கி, பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் :
“உலப்புகழ் பெற்ற நடிகர் போல், மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:
“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்துவிட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்:
“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும், மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..! “ *மனநிம்மதி, மன நிறைவு*… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”



கடவுள் அந்த ஒன்பது பேரிடமும்: “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.. சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!
இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!
அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!
நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!
பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம் 'பத்தாவது' மனிதனா..? இல்லை 'பத்தாது' என்கிற மனிதனா..? முடிவு எடுங்கள்.. எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.

13 அக்டோபர், 2017

யார் முட்டாள்?

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.  அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள். அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை  என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில்  பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில  வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி  என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார்க்க வேண்டும் ...     

இனியாவது விழிப்போம்.
 நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.
கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,

*அன்பார்ந்த பெற்றோர்களே!*

*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*

*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*

*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*

*பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..*
*ஒரு கலைஞன் இருப்பான்*

*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*

*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.*

*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*

*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..*

*எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று*

*தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*

*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.*

*நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*

*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*

*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*

*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*

*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*

*உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.*

படித்ததில் ரொம்ப ரொம்ப பிடித்தது

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...