8 நவம்பர், 2017

🌈🌈🌈🌈🌈🌈🌷         பக்தர்களுக்கு பல்வேறு ஊர்களில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் 20 முருகன் பகவான்  திருத்தலங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
🌈🌈🌈🌈🌈🌈🌈
1.சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் சிங்காரவேலவனாக மயில் மீதமர்ந்த முருகனை தனித்தனியே யானைகள் மீது அமர்ந்த தேவியருடன் தரிசிக்கலாம்.

2.கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.

3.அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.

4.கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் தரிசனம் தரும் முருகனை, பார்வை இழந்த அடியவர் ஒருவர் வழிக்குத்துணை உன் மென்மலர்ப்பாதங்கள் என திடமாக நம்ப, அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத்தந்தவர் இந்த முருகன்.

5.பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி கோலத்தில், தம்பதி சமேதராகவும், முருகனை பல்லடம்- உடுமலைப்பேட்டை பாதையில் உள்ள தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம்.

6.நாகை, தில்லையாடிக்கருகில் உள்ள திருவிடைக்கழி தலத்தில் குரு சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப்பொருமான்.

7.சென்னை பாரிமுனையில் கந்த கோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக முருகன் தரிசனம் தருகிறார்.

8.கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் வழக்கத்துக்கு மாறாக இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது முருகன் அமர்ந்துள்ளார்.

9.திருவாரூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில் எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

10.தென்காசிக்கு 6 கி.மீ தொலைவில் உள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ பாலமுருகனை காணலாம்.

11.கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் பெயர்களில் முருகப்பெருமான் திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.....🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

12.பிரணவத்திற்குப்பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோலை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைப்பட்ட இரும்புச் சிறையும் உள்ளது.

13.கோவைக்கு அருகில் உள்ள அநுவாவியில் சஞ்சீவி மலையைத் தூக்கிச்சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனை தரிசிக்கலாம்.

14.தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாக செயல்படுவதை உணர்த்திய முருகனை வரதராஜப்பெருமாள் என்ற நெல்லை மாவட்டம் இலஞ்சியில் பெயரில் தரிசிக்கலாம்.

15.காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற திகடச் சக்கர எனும் முதல் அடி எடுத்து கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.

16.விராலிமலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்கிறார்.

17.குமரி மாவட்டம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோவிலில் வள்ளியுடன் முருகன் கருவறையில் வீற்றிருக்கிறார்.

18.பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை வைக்கச்சொல்லி உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம். அந்தப்பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம்.

19.தென்காசி, திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏரி தரிசிக்கலாம்.

20.மாமல்லபுரம்-கல்பாக்கம் பாதையில், திருப்போரூரில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக முருகனை தரிசிக்கலாம். சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில் முருகனுக்கு சமமாக போற்றப்படுகிறது.🌷🌷🌷🌷🌷🌺🌹

திருச்சிற்றம்பலம் முருகா சரணம்...
👌🏻 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 *நான் படிக்கும்போதே உடல் சிலிர்த்து விட்டேன்.*
*((((அது ஒரு சைக்காலஜி வகுப்பு))))*

ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.

அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...

இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்....

இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்...

வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்...

மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்... அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்... ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?" என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது...

அதற்கு அந்த பெண்...."இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார்.....

அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...தோழமைகளே...

*இது மனைவிக்கு மட்டும் இல்லை கணவர்களுக்கு தான்*

4 நவம்பர், 2017

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!

ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?

800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைபடுத்திய இந்து மனுதர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்.

அவை நாம் என்னவென்று பார்ப்போம்...

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது.

சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது

1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும்.  (இந்து மனு சட்டம் IX 178) பிராமணன் தப்புசெய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது.

சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளிவிட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.

1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை,

கல்வி இல்லை என்றால் அம்பேத்கார் இல்லை, அம்பேத்கார் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.

"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’
டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்... இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,
‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’
வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.
சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.

நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...

 ‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.

26 அக்டோபர், 2017

வைரமுத்துவின்
வைரவரிகள்

கருவழியா வந்ததெவும்
நிரந்தர மில்ல !
கட்டையில போகுறவரையில்
சுதந்திர மில்ல !
இங்கு சுதந்திரமில்ல !
ஏதும் நிரந்தரமில்ல !
தாயும் கொஞ்ச காலம்,
தகப்பனும் கொஞ்ச காலம்.
ஊரும் கொஞ்ச காலம் – அந்த
உறவும் கொஞ்ச காலம்.
தாயும்…
நெனச்சு நெனச்சு பார்த்தாக்கா
நீயும் கொஞ்ச காலம்
உன் நெனபும்
கொஞ்ச காலம்
சரித்துரத்து மன்னர்களும்
கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரனும் சூரியனும்
இன்னும் கொஞ்ச காலம்
இன்னும் கொஞ்ச காலம்
தாயும்…
எட்டாத மல மேல
கடவுள் இருக்குது
அத எட்டிவிட மனுசபய
இதயம் துடிக்குது
சொந்தம் பந்தம் கூடி வந்து
காலை இழுக்குது
அட சொத்து பத்து ஆச வந்து
கைய அமுக்குது
காம வேரு கடைசிவரைக்கும்
கழுத்த பிடிக்குது….
இது கடவுள் கிட்ட போற
வழி எங்க இருக்குது ?
கட்டயில போற வரையில்
சுதந்திரம் இல்ல
தெரு வழியா வந்த ஏதுவும்
நிரந்திரம் இல்ல
முப்பதுக்கு மேல உனக்கு
முடி உதிருது – அட
நாப்பதுக்கு மேல பார்வ
நடுக்கமாகுது
அம்பதுக்கு மேல பல்லு
ஆடி போகுது – அட
அறுபதுக்கு மேல ஆண்ம
அடங்கி போகுது
ஒடம்போட பொறந்ததெல்லாம்
உன்ன பிரியுது… – இதில
உன் கூட பிறந்ததுவா
இருக்க போகுது ?
கட்டயில போற வரையில்
சுதந்திரம் இல்ல
தெரு வழியா வந்த ஏதுவும்
நிரந்திரம் இல்ல
தாயும்…

23 அக்டோபர், 2017

ஒரு குட்டிக்கதை.

அனைவருக்கும் பொருந்தும்.
---------------------------------------------
ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது.
நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும். வாழ்க வளமுடன்
*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*

*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*

*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*

*குளியல் = குளிர்வித்தல்*

*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*

*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*

*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*

*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*

*வெந்நீரில் குளிக்க கூடாது.*

*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*

*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*

*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*

*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*

*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*

*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*

*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*

*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*

*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*

*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*

*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*

*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*

*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*

*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*

*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*

*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*

*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*

*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*

*குளித்தல் = குளிர்வித்தல்*

*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*

*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...