6 டிசம்பர், 2017

🌷 ஒரு குட்டிக் கதை🌷

தையற்காரர் ஒருவர் ,தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார்.

 அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்.
அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார்.

பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார்.

துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம் , “அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது ...மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்...?” என்று கேட்டான்.

“ நீ சொல்வது உண்மைதான்” என்றார் தையற்காரர் . “கத்திரிகோல் அழகாகவும் ...
 மதிப்புள்ளதாகவும் இருந்தாலும் , அதன் செயல் வெட்டுவது.அதாவது பிரிப்பது!
ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது.

*ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல*.
நல்லதையே செய்வோம் நல்லவர்களாக வாழ்வோம்.
பிச்சைகாரன்:   சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

உனக்கு நிச்சயம் உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.

வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

என்னது பிஸ்னஸ் பார்ட்னரா...?

ஆமாம்… எனக்கு சொந்தமாக பல நூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தர வேண்டும். அவ்வளவு தான்!

முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம்  தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.

எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம் புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தார் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தார்.இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவருக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அது கூட அவரது தேவைக்காக அல்ல. அவர் தேவைகள் அற்றவர்.நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறார். அவர்மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ, ஆலயத்துக்கு செல்வதோ,இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

5 டிசம்பர், 2017

தமிழன்டா...

🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.

🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.

🌏400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.

🌏200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.

🌏உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.

🌏சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....

🌏சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...

🌏1,00,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்கலாம்...
சாட்சி
குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம்.

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விஷயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நாம் தேடும் போது நமக்கு கிடைத்த ஒரு அரிய விஷயத்தை உங்களுடன் பகிர்கிறோம்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.
இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

4 டிசம்பர், 2017

வாழுகின்ற வார்த்தைகள்...
வீழுகின்ற வார்த்தைகள்.


மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு,

"நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் " என்கிறார்..

"எவ்வளவு காலம் டாக்டர், நான் சாகும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?" என்று கேட்கிறார் அந்த பெண்மணி

டாக்டர் கூறுகிறார், "நீங்கள் வாழும் வரை" என்று..

*சாகும் வரை, வாழும் வரை* என்ற இருவாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால் *சாகும் வரை* என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் *எதிர்மறை எண்ணம்* எழுகிறது. ஆனால் *வாழும் வரை* என்ற சொற்களில் ஆறுதல் தரும் *நேர்மறை எண்ணம்* ஏற்படுகிறது.

சொற்களில் என்ன இருக்கிறது, அது புரிந்து கொள்வதில் தானே இருக்கிறது, என்று வாதாடலாம். ஆனால்....

சில வார்த்தைகள் ரணப்படுத்தும்...
சில வார்த்தைகள் குணப்படுத்தும்...

அடுத்தவரை "ஊக்குவிக்கும்" வார்த்தைகளாக பேசலாம்.

அடுத்தவரை "சோர்ந்துபோகச் செய்யும்" வார்த்தைகளை தவிர்க்கலாம்.

*Every word has its power choose them carefully.*

உடலுக்கு *#Insulin* எவ்வளவு முக்கியமோ,
மனதுக்கு *#இன்சொலும்* அவ்வளவு முக்கியம்.

பிடித்த ஒரு பதிவு ...

3 டிசம்பர், 2017

உங்கள் கையில் பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் இருந்தால் பத்திரப்படுத்துங்கள்
By DIN  |   Published on : 30th November 2017 03:39 PM  |   அ+அ அ-   | 



புது தில்லி:  நாணயங்களின் வருகையால் நாம் மறந்தே போன அந்த சிறிய நீல நிற ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்று நூறாவது பிறந்த நாள்.

எந்த விழா, கொண்டாட்டம் என்றாலும் மொய்க்காசுகளில் ரூ.101, 1001 என் முன்னிலையில் இருந்த அந்த ஒரு ரூபாய் நோட்டின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் எந்த திட்டமும் இல்லை.

ஆர்பிஐ ஆளுநருக்கு பதிலாக நிதித் துறை அமைச்சக செயலரின் கையெழுத்துடன் வெளியாகும் ஒரே ஒரு ரூபாய் நோட்டு இந்த ஒரு ரூபாய் தாள்தான்.

மொய்க்காசுகளில் ஆயிரத்து ஒன்றாக இருந்தாலும் பத்தாயிரத்து ஒன்றாக இருந்தாலும் முதல் இடத்தைப் பிடிப்பது இந்த ஒரு ரூபாய் நோட்டுக்கள்தான்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, அந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மறக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால் நூறு ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் 1 ரூபாய் நோட்டை பலரும் மறந்தே போய்விட்டோம்.

இந்த ஒரு ரூபாய் நோட்டு முதல் முறையாக இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்டு நவம்பர் 30ம் தேதி 1917ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது.  அதில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த நோட்டு 1970ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது.

இதே ரூபாய் நோட்டுகள் துபாய், பஹ்ரைன், மஸ்கட், ஓமன் நாடுகளிலும் செல்லுபடியானது. இந்த ரூபாய் நோட்டுகள் நன்றாக இருப்பதாகக் கூறி போர்த்துகீசியமும், பிரெஞ்சும் தங்களுக்கும் இதேப்போன்ற ரூபாய் நோட்டுகளை அச்சடித்துக் கொண்டன.

இந்திய அரசு முதல் முறையாக 1861ம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இந்த ஒரு ரூபாய் நோட்டு கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 28 முறை புதிதாக வடிவமைக்கப்பட்டது.

இந்த ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி 1994ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், பொதுமக்களின் தேவை அதிகரித்ததால் 2015ம் ஆண்டு மீண்டும் அச்சடிக்கப்பட்டது.

அதே சமயம், பழைய ஒரு ரூபாய் நோட்டு வழக்கொழிந்து போனாலும், பல பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் ஏலத்துக்கு விடப்பட்டு பல லட்சம் ரூபாயை திரட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, அதிகபட்சமாக 1985ம் ஆண்டு நிதித்துறை செயலர் எஸ். வெங்கிடரமணன் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் நோட்டு கடந்த ஜனவரி 21ம் தேதி ஏலத்துக்கு விடப்பட்டது. அது ரூ.2.75 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

1944ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா வெளியிட்ட சுமார் 100 ஒரு ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டு ரூ.1.3 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

தற்போதும் கூட, 1917ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த ஒரு ரூபாய் நோட்டுகள், ரூபாய் நோட்டு சேமிப்பாளர்களிடமும், விற்பனையாளர்களிடமும் இருக்கின்றன. இதன் மதிப்பும் அதிகம். எனவே, உங்கள் கையில் பழைய ஒரு ரூபாய் நோட்டு இருந்தால் அதனை குப்பை என்று நினைக்க வேண்டாம். அதன் மதிப்பு எவ்வளவு என்பதை காலம் நிர்ணயிக்கலாம். எனவே பத்திரப்படுத்துங்கள். 
திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா பிறந்தது மைசூர். மைசூர் மகாராஜாவின் குடும்பத்தில் மணமகளாகச் சென்ற சந்தியாவுக்கு ; ஜெயக்குமார், ஜெயலலிதா என இரு பிள்ளைகள் பிறந்தபின் கணவரை இழந்து வறுமைக்கு ஆளானார். சென்னையில் தங்கியிருந்து திரைப்படங்களில் நடித்துவந்த தங்கை வித்யாவதியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். வித்யாவதி வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர்களின் கண்களில் சந்தியா தென்பட, மளமளவென படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் பிஸியானதால் பிள்ளைகளை தனது தாயின் பாதுகாப்பில் பெங்களூருவில் படிக்கவைத்தார். நேரம் கிடைக்கும்போது பிள்ளைகளை சென்று சந்திப்பார். 8 வயதில் ஜெயலலிதாவின் முதல் சினிமா பிரவேசம் 'ஸ்ரீசைல மகாத்மியம்' என்ற படத்தில் நிகழ்ந்தது. வளர்ந்தபின் 'நன்னகர்த்தவ்யா' என்ற கன்னடப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் அவரது முதற்படமாக 'வெண்ணிற ஆடை' வெளியானது. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ஜெயலலிதாவுக்கு நல்ல புகழைக் கொடுத்தது. பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடுத்தர வயதைக்கடந்த நடிகைகள் அப்போது நடித்துவந்ததால், இளமையான கல்லூரிப்பெண் போன்ற தோற்றம் கொண்ட ஜெயலலிதாவுக்கு தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னடத்தில் அவரைக் கதாநாயகியாக அறிமுகம் செய்த பி.ஆர் பந்துலு, எம்.ஜி.ஆரை வைத்து தான் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு கதாநாயகி ஆக்கினார். ஒரே இரவில் ஜெயலலிதாவின் சினிமா கிராப் உயரத்துக்கு வந்தது. சில வருடங்களில், ஜெயலலிதா தென்னகத்தின் புகழ்மிக்க நடிகைகளில் ஒருவரானார். பத்து வருடங்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துமுடித்தார். அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நடிகர்கள் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டினர். ஒருமுறை தனக்குப் பிடித்த நடிகரான திலீப்குமாரின் படம் ஒன்றில் அட்வான்ஸ் பெற்றபின்னும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி நடிக்க மறுத்தார். அந்தளவுக்கு புகழடைந்திருந்தார்.

தமிழில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. எம்.ஜி.ஆருடன் அதிகப்படங்களில் நடித்த கதாநாயகி ஜெயலலிதாதான். மொத்தம் 28 படங்களில் அவர்கள் இணைந்து நடித்தனர். ஆனால், 'பட்டிக்காட்டுப் பொன்னையா' திரைப்படத்துடன் அவர்களது உறவில் கீறல் விழுந்தது. தனது கனவுப்படமான 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில், ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு தராமல், அன்றைக்குப் புதுமுகங்களை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். இளமைப் பொலிவுள்ள கதாநாயகன் என்ற தனது இமேஜை தக்கவைத்துக்கொள்ள எம்.ஜி.ஆர் இப்படி செய்ததாக சொல்லப்பட்டது. அதற்கு முன்னரே அவர்களுக்குள் பிரச்னை இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் அடிபட்டன. எப்படியோ, பிரச்னை தொடங்கிய 1971 ஆம் ஆண்டு 3 படங்கள், 1972-ல் 2 படங்கள், 1973-ல் 'பட்டிக்காட்டுப் பொன்னையா' என்ற ஒரேயொரு படம் என எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா என்ற வணிக சினிமாவின் வெற்றி இணை நிரந்தரமாகப் பிரிந்தது. தனது வாழ்வில் முக்கிய ஆளுமை செலுத்திய இருவரில், ஒருவர் என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டவர் ஜெயலலிதா. 1971 நவம்பரில் தாயை இழந்த ஜெயலலிதா, 1973 ஆம் ஆண்டுடன் எம்.ஜி.ஆரிடமிருந்தும் பிரிய நேர்ந்தது. இதன்பிறகு ஜெயலலிதா வாழ்வில், பெரும் சூன்யமான நாட்கள். வாழ்க்கையில் பிடிப்பின்றி காலம் கழித்தார். அரிதாகவே படங்களில் தலைகாட்டினார்.

இந்த காலகட்டத்தில்தான் சோபன்பாபு என்ற பெயர் தமிழ்த்திரையுலகில் ஜெயலலிதாவை நன்கறிந்த வட்டாரத்தில் பேசப்பட்டது.

அன்றைய தெலுங்குத் திரையுலகில் பெண் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தவர் சோபன்பாபு. என்.டி.ஆர் நாகேஸ்வரராவ் போன்ற உச்சநட்சத்திரங்களுக்கு அடுத்த வரிசை நடிகரான அவருக்கு முந்தைய இரு நடிகர்களைவிட பெண் ரசிகர்கள் அதிகம். தனது துறுதுறு நடிப்பு நளினமான நடன அசைவுகளால் பெண் ரசிகர்களை கிறங்கடித்த கதாநாயகனாக வளர்ந்துவந்தார். அவருடன் ஜெயலலிதா தன் ஆரம்பகாலங்களில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்தார். பெரிய அளவில் அவர்களுக்குள் ஈர்ப்பு இருந்ததாக அக்காலத்தில் பேச்சு இருந்ததில்லை. ஜெயலலிதா அப்போது தமிழில் பெரும் பிரபல்யமாக இருந்ததால் அவர் திரையுலக வாழ்க்கை மட்டுமே பேசப்பட்டது. எம்.ஜி.ஆரின் சினிமா ஜோடி என்றளவில் மட்டுமே பேசப்பட்டார்.

ஆனால் பிற்காலத்தில் சினிமாவில் இருந்து துறவறம் மேற்கொண்டிருந்த காலத்தில்தான் ஜெயலலிதா சோபன்பாபு நட்பு குறித்து பேசப்பட்டது.

எம்.ஜி.ஆருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபின் ஜெயலலிதாவின் சினிமா கிராப் அப்படியொன்றும் ஏற்றமாக இல்லை. இளம் வயதைக்கடந்த நிலையில், வயதுக்கேற்ற படங்களை அவர் தேர்வு செய்யவேண்டிய சூழல்உருவானது. கதாநாயகி என்பதுபோய் கதைக்கு நாயகியாய் குணச்சித்திர பாத்திரங்கள் அவரைத் தேடி வந்தன. இந்தக் கோபத்தில் அப்போது வெளியான சில பத்திரிகைகளில் பெயரைக் குறிப்பிடாமல், எம்.ஜி.ஆரைத் தாக்கிப் பேட்டியளித்தார் ஜெயலலிதா. பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர் போன் செய்து பேசவேண்டிய தர்மசங்கடம் வந்தது.

 1974 ஆம் ஆண்டு நூறாவது படமான 'திருமாங்கல்யம்' வெளிவந்தது. அடுத்த ஆண்டில் 3 படங்கள் என ஜெயலலிதாவின் திரைப்பட எண்ணிக்கை தேய ஆரம்பித்தது. 1975 ஆம் ஆண்டு திரையுலகிலிருந்து விலகப்போவதாக பத்திரிகை பேட்டி ஒன்றில் அறிவித்தார் ஜெயலலிதா. இந்தக் காலகட்டத்தில்தான் தெலுங்கில் பிரபல கதாநாயகனான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா நட்புடன் இருப்பதாகப் பேசப்பட்டது. எம்.ஜி.ஆரை வெறுப்பேற்றும் விதமாக தன் தெலுங்கு சகாவான சோபன்பாபுவுடன் ஜெயலலிதா வேண்டுமென்றே அப்படி ஒரு நட்பை வலிந்து ஏற்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. 1975 ஆம் ஆண்டு பிற்பகுதியில் திரையுலகிலிருந்து முற்றாக ஒதுங்கியிருந்த ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டன் இல்லம், ஹைதராபாத் தோட்டம் இவற்றோடு இருந்து கொண்டார். பத்திரிகைகள் அரிதாகவே அவரைப்பற்றிய செய்திகளை வெளியிட்டன. அதுவும் அவரது புகழுக்கு எதிரானவை.

அதாவது அதுவரை கிசுகிசுவாக பத்திரிகைகளிலும், செவிவழியாக திரைவட்டாரத்திடம் பகிரப்பட்ட தகவல்கள் புகைப்பட சாட்சியாக வெளியானது. ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் எடுக்கப்பட்ட அந்த படங்களில் சோபன்பாபுவும் ஜெயலலிதாவும் மிக நேருக்கமாக கணவன் மனைவிபோல இணைந்து போஸ் அளித்து எடுக்கப்பட்டவை. தனது பிரத்யேக புகைப்படக்காரர் மூலம் ஜெயலலிதா எடுத்ததாக சொல்லப்பட்ட படங்களில் ஜெயலலிதா சோபன்பாபுவுக்கு உணவு பரிமாறுவது, வீட்டுச் சுவரில் மாட்டியுள்ள படங்களைக்காட்டி மகிழ்தல், ஜெயலலிதாவின் அலுவலக அறையில் சோபன்பாபு அமர்ந்து விருந்தினரிடம் பேச அருகில் சேரின் மற்றொரு முனையில் அமர்ந்து அதை ரசிப்பது, தனது பர்சனல் அறையில் ஜெயலலிதா வீணை வாசிக்க, அதை ரசித்துப்பார்க்கும் சோபன்பாபு, ஜெயலலிதா மாடியிலிருந்து காரில் கிளம்பிச்செல்லும் சோபன்பாபுவுக்கு ஒருமனைவியைப்போல் கையசைத்து அனுப்பிவைப்பது என ஒரு குடும்பத்தலைவியாக ஜெயலலிதாவை அடையாளம்காட்டும் படங்கள் அவை.

இதில் ஒரு படம் ஜெயலலிதா மிகவும் மகிழ்ந்து காட்டிய படம். மகிழ்ச்சிக்கு காரணம் அந்த புகைப்படத்தின் பின்னணி...சுவாரஸ்யமானது.

ஜெயலலிதா சென்னை வந்தசமயம், மார்டன் யுவதியான அவரது சித்தி வித்யாவதி, அவரது தலைமுடியை சலுானுக்கு அழைத்துச்சென்று பாப் கட்டிங் போல கட் செய்து அழைத்துவந்தார். தன் முடியை கண்ணாடியில் பார்த்து விடிய விடிய அழுதுகொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரை சமாதானப்படுத்த புவனா சத்யம் என்ற புகைப்படக்காரரை அழைத்துவந்து புகைப்படம் எடுத்தார் வித்யாவதி. தன்னை அழவைத்த அந்த புகைப்படத்தை ஜெயலலிதா அடுத்த 2 மாதங்களில் தன் படுக்கை அறையில் அழகு பார்த்தார் பெருமிதமாக. ஆம் இந்த புகைப்படத்தை புவனா சத்யம் சந்தியா குடும்பத்திற்கு தெரியாமல் அந்த ஆண்டு புதுடெல்லியில் நடந்த அகில இந்திய புகைப்படக் கண்காட்சிக்கு அதை அனுப்பிவைத்திருந்தார். ஆச்சர்யமாக அந்த படத்திற்குதான் முதல்பரிசான தங்கப்பரிசு கிடைத்திருந்தது. முதன்முறையாக தன் அழகு பற்றி ஜெயலலிதா பெருமைப்பட்ட தருணம் அதுதான். அந்த புகைப்படத்தை சோபன்பாபுவிடம் காட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்தார் ஜெயலலிதா.

1979 ஆம் ஆண்டு 'ஸ்டார் அண்ட் ஸ்டைல்' என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில், கிசுகிசு போல ஜெயலலிதா - சோபன் பாபு நட்பு குறித்த ஒரு செய்தி வெளியானது. கிசுகிசுவை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயலலிதா அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதமும் எழுதினார். அதுதான் ஜெயலலிதா!

2 டிசம்பர், 2017

” யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும் …ஒரு குறிப்பு …”

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப் பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.


மேலும் அறிக :

திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து

மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து
உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து

சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.அடுத்து

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து

திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து

பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களை யாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள்.

சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக் கொள்ளுங்கள். 

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...