31 ஜூலை, 2019

*ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?*
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
 *இதுவே தமிழின் சிறப்பு*
#தமிழ்எங்கள்உயிருக்குமேல்
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

*உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்*

நன்றி

திரு. ஜெயசீலன்
yellowline

4 மார்ச், 2019








சிவராத்திரி அன்று இரவு 

இந்தக் கதையைப் படியுங்கள்


‘அந்தக்  காலத்துல ராமபிரான் வனவாசம் செஞ்ச தண்ட காரண்யம் காட்டுக்குப் பக்கத்துல கிருஷ்ணா நதிக் கரையில் கமாலபுரம்னு ஓர் ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்த பொய்கைக்குக் கலசரஸ்னு பேரு. 

அந்தக்  குளத்தோட கரையிலே நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டாங்க. அவங்கள்ல ஒருத்தர்தான் வித்வஜிஹ்மர். அவரைப் பார்க்க கௌஸ்திமதி ரிஷின்னு ஒருத்தர் வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார். 

‘இந்தச் சின்ன வயசுல நீங்க துறவியா இருக்கறது கொஞ்சம் கூட சரியில்ல. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா! முன்னோர்களோட சாபமும் வந்து சேரும். அதனால்தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்’னு வித்வஜிஹ்மர்கிட்ட கேட்டார். 

‘சம்சாரங்கர பந்தத்துல அகப்பட்டு என்னோட வாழ்வை வீணாக்க நான் விரும்பலை. வீணாக ஏன் கவலைகளையும் துன்பங்களையும் நாமே வரவழைத்து அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தைன்னு கஷ்டப்படறத விரும்பாமல் தானே நானே என்னோட அப்பாவான மரீச முனிவரைவிட்டு விலகி வந்து தவம் செய்யறேன். ஆனாலும் என்னோட கர்மா விடமாட்டேங்குதே’ என்றார் வித்வஜிஹ்மர். 

‘நமக்குத் தந்தை என்கிற அந்தஸ்தை ஒரு மகனால்தான் தர முடியும்! நம்மைப் படைத்து காத்துக் கொண்டிருக்கிற மும்மூர்த்திகளும் திருமணம் செஞ்சிருக்காங்க; சுப்ரமணியனும் விநாயகனும் ஐயப்பனும் கூட மணம்புரிந்து மனைவியோடு வீற்றிருக்கிறார்கள். 

உங்க பாட்டனார் பரத்வாஜ முனிவர் மணம் செய்யாமல் இருந்தால் நீங்கள் உருவாகியிருக்க முடியுமா? அதோட என் மகள் வசுமதியும் சாதாரண பெண் கிடையாது. கௌதம முனிவரின் பேரன் நான். சதாநந்த முனிவரின் பேத்தி வசுமதி. பதிவிரதைகளான பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா அவங்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி. 

அதனால் நீங்கள் என் மகளை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏத்துக்குங்க!’ அப்படின் னார். அதுக்கு ‘மார்க் கண்டேயர், துர்வாசர், சனத்குமாரர்கள், கண்வ மகரிஷி, நாரதர், சுகர் ஆகி யோர் திரு மணம் செய்யாமல் வாழ வில்லையா? அவங்க ஏன் கல் யாணம் செய்யாம வாழ்ந்தாங்க? அதுக்கான சிரியான காரணத்தை நீங்கள் எனக்குச் சொன் னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்’னு சொன்னார் வித்வஜிஹ்மர். 
கௌஸ்திமதி முனிவர் தன்னோட தவ வலிமையப் பயன்படுத்தி வைகுண்டத்துக்குப் போய் அந்த நாராயணைப் பார்த்து ஜிஹ்மரின் கேள்விகளைக் கேட்டார். 

அதற்கு நாராயணன் ‘நாரதனும் ஒருசமயம் என்னோட மாயையினால் பல குழந்தைகளைப் பெற்றிருக்கிறான். தமயந்தின்னு ஒருத்தியோட கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கான். ஸ்ரீமதியோட சுயம்வரத்தில் ஆசையில்லாமலா கலந்து கொண்டான். 

அதே போல சனத்குமாரர்கள் வம்சத்தை விருத்தி செய்யாத காரணத்தால் பிரம்மனோட சாபத்தை பெற்றிருக்காங்க. காத்யாயனர் காத்யாயினியையும், கணவர் சகுந்தலையையும் வளர்த்தாங்க. பெண் குழந்தைகளை வளர்ப்பதுகஷ்டம்னு அவங்க ஒருநாளும் நினைக்கலையே! மார்க்கண்டேயரும் பூமாதேவியை வளர்த்து எனக்காகக் கொடுத்தார். 

துர்வாசரும் குந்திக்குக் குழந்தை பாக்கியத்துக்கான ஐந்து மந்திரங்களைத் தந்தாரே! அவர் என்ன பாவம் என்று நினைத்தாரா? மகாலட்சுமியோட கலைகள் பதினாறையும் பெண் வடிவமாக்கி இந்த முனிவர்களுக்குத் தரலாம்னு பிரம்மா நினைச்சார்.

லட்சுமி இதை விரும்பாத காரணத்துனால நான்தான் அதைத் தடுத்துவிட்டேன். அதனால் பிரம்மா அவர்களுக்கு, ஞானத்தைப் போதித்து முனிவர்களாக்கி விட்டார்’னு போய் ஜிஹ்மர்கிட்ட சொல் அவர் வசுமதியைக் கல் யாணம் செய்யச் சம்மதம் சொல் வார்னு சொல்லி அனுப்பினார். 

பூலோகத்துக்குத் திரும்பிய கௌஸ்திமதி, அப்படியே சொல்லி ஜிஹ்மர்கிட்ட அனுமதி வாங்கினார். வசுமதி திரும ணம் சிறப்பாக நடந்தது.

கௌஸ்திமதி ரிஷி, மகளை விட்டுப்பிரியும்போது பல்வேறு புத்திமதிகளைக் கூறினார். சீடர் களிடம் அன்னையாய் நடக்க வேண்டும். முனி பத்தினிகளிடம் தோழியாய்ப் பழக வேண் டும் என்று நிறைய புத்திமதிகளைக் கூறி னார். வித்வஜிஹ்மரும் வசுமதியும் நன் றாக வாழ்ந்தார்கள். அந்த வசுமதி சிவராத்திரி விரதம் இருந்து சிவனை நேருக்கு நேராப் பாத்திருக்கிறாள்.

சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

27 பிப்ரவரி, 2019

தமிழுக்கும் அமுதென்று பேர்

Thamizhukkum Amudhendru per Lyrics

 
Song : தமிழுக்கும் அமுதென்று பேர்
Movie : பஞ்சவர்ணக்கிளி
Singers : பி. சுசிலா
Music : எம்.எஸ். விஸ்வநாதன்
Lyricist : பாவேந்தர் பாரதிதாசன்

 
தமிழுக்கும் அமுதென்று பேர்;
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்;... உயிருக்கு நேர் (தமிழுக்கும்)

தமிழுக்கு நிலவென்று பேர்;
இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்;
தமிழுக்கு மணமென்று பேர்;
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்;
 
தமிழுக்கு மதுவென்று பேர்; (2)
இன்பத் தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்;
பயிருக்கு வேர்;

தமிழுக்கும் அமுதென்று பேர்;
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்;...உயிருக்கு நேர்;

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆ... ஆஆஆஆ... ஆஆஆஆஆ...
 
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க
புலவர்க்கு வேல்... புலவர்க்கு வேல்
 
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்...
 
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன் ...,
சுடர் தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்;

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்,
வயிரத்தின் வாள்
 
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
 
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்;
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்;...உயிருக்கு நேர்;

தமிழுக்கும் அமுதென்று பேர்.


Thamizhukkum Amudhendru per Tamil Song Lyrics in English
Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner….. Uyirukku Ner (Thamizhukkum)

Thamizhukkum Nilavendru Per
Inba Thamizh Engal Samoogathin Vilaivukku Neer
Thamizhukku Manamendru Per
Inba Thamizh Engal Vaazhvukku Nirumiththa Oor
Thamizhukku Madhuvendru Per (2)
Inba Thamizh Engal Urimai Chempayirukku Ver
Payirukku Ver

Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner….. Uyirukku Ner

Thamizh Engal Ilamaikku Paal
Aaa……Aaa……Aaaaa……..
Thamizh Engal Ilamaikku Paal
Inba Thamizh Nalla Pugazmikka
Pulavarkku Vel…… Pulavarkku Vel
Thamizh Engal Uyarvukku Vaan
Inba Thamizh Engal Asadhikku
Chudar Thandha Then
Thamizh Engal Uyarvukku Vaan
Inba Thamizh Engal Asadhikku
Chudar Thandha Then
Chudar Thandha Then

Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner….. Uyirukku Ner 

Thamizh Engal Arivukku Thol
Inba Thamizh Engal Kavidhaikku Vayirathin Vaal
Vayirathin Vaal
Thamizh Engal Piravikku Thaai
Inba Thamizh Engal Valamikka Ulamuttra Thee
Thamizh Engal Piravikku Thaai
Inba Thamizh Engal Valamikka Ulamuttra Thee

Thamizhukkum Amudhendru Per
Andha Thamizh Inba Thamizh Engal
Uyirukku Ner….. Uyirukku Ner 

Thamizhukkum Amudhendru Per

17 ஜனவரி, 2019

வர வேண்டாம் 
என் மகனே!

தைப் பொங்கல் திருநாளென்றும்
தமிழினத்தின் பெருநாளென்றும்
பொங்கலோப் பொங்கலென்று
பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்,

ஆடு மாடு கோழியெல்லாம்
ஆனந்தக் கூத்தாடுமென்றும்
பறவைகளின் பெருங்கூச்சல்
பரவசத்தைக் கொடுக்குமென்றும்,

விதம் விதமாய்க் கற்பனையை
வீணாகச் சுமந்து கொண்டு
பிறந்த ஊரைப் பார்க்க நீ
புறப்படாதே என் மகனே!

அப்படியெல்லாம் இங்கே
அற்புதங்கள் நடப்பதில்லை
பற்பல ஆண்டுகளாய்ப்
பால்பானைப் பொங்கவில்லை!

உன்னை நான் கருத்தரித்தேன்
உயிர்ச் செண்டாய்ப் பெற்றெடுத்தேன்
ஓராயிரங் கதை சொல்லி
உரமூட்டி வளர்த்தெடுத்தேன்!

படி படி என்றுன்னைப்
படுத்திப் படிக்க வைத்தேன்–என்
உழைப்பையெல்லாம் உடையாக்கி
உடுத்தியுன்னை உலவ வைத்தேன்!
நீ வாழ்ந்தால் போதுமென்று
நான் வாழத் தவறிவிட்டேன்–உன்
அப்பனுக்கும் கூடுதலாய்
அரை அடி உயர வைத்தேன்!

பட்டணத்தில் வாழ்வதுதான்
பெருமையென மனந்திரிந்து
பாவி நான்தான் உன்னைப்
பேருந்தில் ஏற்றிவிட்டேன்!

உன்னோடு படித்தவர்கள்
ஊரிலே யாருமில்லை
அப்பன் அழியும் ஊரில்
அவன் பிள்ளை இருப்பதில்லை!

கெட்டுப் பட்டணம் போய்ச்
சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர்?
பட்டணம் போய்ச் சேர்ந்த பின்னர்
கெட்டவர்கள் எத்தனைப் பேர்?

வயல் வேலை செய்து இங்கே
வாழவே முடியாதென்று
அயல் வேலை செய்வதற்கு
அவனவன் பறந்து விட்டான்!

வெறிச்சோடிப் போய் விட்ட
வேளாண்மைக் கிராமத்தில்
பால் பொங்கல் பொங்குமெனப்
பகற்கனவு காணாதே!

ஒப்புக்குத் தான் இது
ஊர் போலத் தெரிகிறது
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
உயிர்க் குமுறல் கேட்கிறது!

வேளாண்குடி மக்களது
வாழ்வறமும் வீரியமும்
பாலைவனம் போலாகிப்
பாழ்பட்டுப் போனதனால்,
ஊருக்குள் ஆங்காங்கே
உயிரொன்று பிரிகிறது!

என்றைக்கோ மூட்டிய
இடுகாட்டுப் பெருநெருப்பு
இன்றைக்கும் கூட
அணையாமல் எரிகிறது!

நெடுநாள் உறவாக
நிலைத்திருந்த விளை நிலங்கள்
வேளாண்மை கசந்து
விற்றுவிட்ட காரணத்தால்
கம்பிவேலிக் காரனுக்குக்
கைமாறிப் போனதடா!

நான்கு தலைமுறையாய்
நமதாக இருந்த நிலம்
பத்திரக் காகிதத்தில்
பெயர் மாறி போனதனால்
பதறிய உன் அப்பன்
பைத்தியமாகிச் செத்தான்!

விரால் மீன் ஏரியென்றும்
வெளிச்சக் கெண்டைக் குளமென்றும்,

குரவை மீன் குட்டையென்றும்
குள்ளக் கெண்டைக் கால்வாயென்றும்,

அயிரை மீன் தாங்கல் என்றும்
ஆரா மீன் சதுப்பு என்றும்,
உளுவையும், நெத்திலியும்
ஊர்ந்து வரும் ஒடையென்றும்,

வாளையும், விலாங்கு மீனும்
வளருகின்ற கண்மாயென்றும்,

அறுபத்தொரு பெயர்களிலே
அமைந்திருந்த நீர் நிலைகள்
அத்தனையும் இன்றைக்கு
அழிந்தொழிந்து போனதனால்,

பாடையிலே வருவதுபோல்
கூடையிலே வருகின்ற
குளிர்ந்துறைந்த கடல்மீனைக்
குழம்பு வைத்துத் திண்கின்றோம்!

ஓடையிலே ஓடிவரும்
உயிர்மீனைப் பறிகொடுத்துக்
கூடை மீன் தேடி நாங்கள்
குறுகிப் போனோமடா!

நீர் நிலைகள் நிரம்பி
நெகிழ்ச்சி தரும் காட்சியாகி
கடை மடையான் வயல்களுக்கும்
கால்வாய் நீர் பாய்கையிலே
எத்தனையோ சுகம் கண்டோம்
எவ்வளவோ விளைய வைத்தோம்!

ஒரேயொரு கால்வாயில்
ஊர்வலம் வரும் நீரில்
ஆங்காங்கே நெற்பயிர்கள்
அன்னையின் பால் குடிக்கும்!

பாம்புக்குத் தவளைகளைப்
பரிசளிக்கும் கால்வாய் நீர்,
எங்களுக்கான மீனை
எங்கெங்கோ ஒளித்து வைக்கும்!

வாய்க்காலின் வரப்புகளில்
வளருகின்ற மரங்களெல்லாம்
கூடுதலாய்ப் பூப்பூத்துக்
கொத்துக் கொத்தாய்ப் பழங்கொடுக்கும்!

வழிநெடுக எம் பெண்கள்
வளை சிணுங்கக் குளிப்பார்கள்,
குளித்து முடித்த பின்னர்
கூந்தலைத் துவட்டிக் கொண்டே
கூடுதலாய்க் குளிர்வதாகக்
கண்சிமிட்டிச் சிரிப்பார்கள்!

மாடுகளும் ஆடுகளும்
மண்டியிட்டு நீர் குடிக்க,
முந்தானை கொண்டே பெண்கள்
மீன் பிடித்துச் சேகரிக்க,

மேட்டு நிலத்துக்காரன்
கொண்டம் கட்டி நீர் தேக்க–அவன்
கால்வாயின் இருபுறமும்‘
காய்கறிகள் விளைந்திருக்க,

வாத்துகளின் கூட்டம்
வரும்நீரை வழிமறித்துப்
பெருங் கூச்சலிட்டுப்
படபடத்து நீர்த் தெளிக்க,

ஒரேயொரு கால்வாயில்
ஒரு நூறு பயன் கண்டு
ஈரமும் நீருமாக,
எங்களது நிலம் மணக்க,
உயிர்கள் அனைத்துக்கும்
உரியது நீர் என்றும்
எல்லோரும் எல்லாமும்
ஏற்பதுதான் வாழ்வென்றும்,

சிந்தித்த நாங்கள் இன்று
சீர்குலைந்து நீர் மறந்து
சொட்டு நீர்ப் பாசனத்தில்
செடி கொடியை வளர்க்கின்றோம்!
ஆற்று நீர்ப் பாசனம்
அருகி மறைந்து வர,
ஏரி நீர்ப் பாசனம்
இனி இல்லை என்றாக,
கண்மாய்ப் பாசனமோ
காணாமற் போய் மறைய,
எந்தப் பாசனத்தால்
எம் பயிரின் உயிர்காப்போம்?
எந்த நீரைக் கொண்டு
எம் உயிரைத் தக்கவைப்போம்?
சொட்டுச் சொட்டாய் வடிகின்ற
சொட்டு நீர்ப் பாசனமும்,
குடம் குடமாய் இரைக்கின்ற
கிணற்று நீர்ப் பாசனமும்,
பயிர் செய்ய ஏதுவான
பாசன முறை என்றால்,

பொதுவான ஏரி நீரைப்
பகிர்ந்து பயிர்செய்த
ஏரிப் பாசனத்தார்
எங்கேதான் போவார்கள்?

எங்களது நீர் நிலையின்
இடுப்பொடித்துக் காயவிட்டு
இஸ்ரேலைப் பார் என்று
எங்களுக்குச் சொல்கிறார்கள்!

நீர் தேடிப் பறந்து வரும்
நெடுந்தூரப் பறவைகளும்,
நீந்தித் துள்ளியெழும்
நூறுவகை மீனினமும்,
ஏரி நீரில் அமிழ்ந்து
இறுமாந்து கிடந்தெழுந்து
எங்களுக்குப் பால் சுரக்கும்
எருமைக் கூட்டங்களும்
எங்கேயேடா போகும்?
இஸ்ரேல் பிரியர்களே!

நூறடி ஆழத்தில்
நீரை உறிஞ்சுகின்ற
மோட்டாருக்குக் கூட
மூச்சிரைக்கும் நிலை கண்டு
வெட்கித் தலைக் குனிந்து
வேண்டாமென விட்டுவிட்டோம்!

மெல்லிய தோல் அணிந்து
மின்னி மனங்கவரும்
எங்களூர்த் தக்காளியை
எங்கோ மறையவிட்டு
பெங்களூர்த் தக்காளிக்குப்
பழக்கப் பட்டுப் போனோமடா!

போன் செய்தால் வீட்டுக்குப்
புண்ணாக்கு வருமென்று
பெருமையாய்ப் பேசிப்
பணத்தைத் தொலைப்பவனே
கேழ்வரகுக் களியுனக்குக்
கசக்கிறதே ஏனப்பா?

ஓர் ஆண்டுக் கால
உழைப்பிலே உயிர்பெற்று
உலக்கை உலக்கையாக
உற்பத்தியாகுமெங்கள்
ஒரு டன் கரும்பு இங்கே
இரண்டாயிரத் தைந்நூறு!

மூன்று மணி நேரத்துக்கு
மூன்றாயிரங் கொடுத்து
புதுப்படம் ஒன்றை அங்கே
பார்த்தவர்கள் பல நூறு!

இருவேறு உலகத்து
இயற்கையிது என்றாலும்
அருவருப்பாய் இருக்குதடா– உங்கள்
ஆடம்பரக் கலாசாரம்!

ஒரு கரண்டி மாவெடுத்து
ஒரு தோசை சுட்டு வைத்து
எழுபது எண்பது என்று
ஈட்டுகின்ற திறமையற்று,

மூட்டை மூட்டையாய் நெல்லை
மோசடி விலைக்குப்போடும்
விவரமே தெரியாத
விவசாயிகளப்பா நாங்கள்!
அரிசி மூட்டைக்காரன் அங்கே
அவன் விலைக்கு அவன் விற்பான்–இங்கே
நெல் மூட்டைக் காரனுக்கோ
எவன் எவனோ விலை விதிப்பான்!

யார் யாரோ ஆண்டார்கள்
எங்களுக்கு விடியவில்லை,
எங்களை நிமிர வைக்க
எழுபதாண்டு போதவில்லை!

எங்களது மாண்புகள்
எல்லாவற்றையும் இழந்து
கிழிந்தும் இழிந்தும் இங்கே
கிடக்கிறோமடா நாங்கள்!

தைப் பொங்கல் திருநாளென்றும்
தமிழினத்தின் பெருநாளென்றும்
பொங்கலோப் பொங்கலென்று
பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்

ஆடு மாடு கோழியெல்லாம்
ஆனந்தக் கூத்தாடுமென்றும்
பறவைகளின் பெருங்கூச்சல்
பரவசத்தைக் கொடுக்குமென்றும்
விதம் விதமாய்க் கற்பனையை
வீணாகச் சுமந்து கொண்டு
பிறந்த ஊரைப் பார்க்க நீ
புறப்படாதே என் மகனே!
பெற்றவளையேனும் பார்க்கப்
புறப்பட்டு வருவாயெனில்
வா இங்கு வந்து சேர்!
வந்துவிட்டால் போகாதே!
உன்னோடு படித்தவரை
ஊருக்கு அழைத்துவந்து,
ஒன்றிக் கலந்துவிடு
உன்னுடைய ஊரோடு!
உருக்குலையும் எம் வாழ்வை
உயிர்ப்பிக்கப் போராடு!

*படித்ததில் வலித்தது*

27 டிசம்பர், 2018

ஐந்து வயது வரை எல்லாக் குழந்தைகளும் சில நேரங்களில் திக்கித்தான் பேசும். அதன் பிறகு 90% குழந்தைகள் ந‌ன்றாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள். மீதி உள்ள பெரும்பாலானவர்கள், எட்டு வயதிற்குள் நன்றாகவே பேச ஆரம்பித்து விடுவார்கள். மீதமுள்ள 1% குழந்தைகள் மட்டுமே எட்டு வயதிற்கு பிறகும் திக்கியே பேசுவார்கள். மூளையில் கட்டி இல்லாமலும் மற்றும் தலையில் அடி படாமலும் இருந்து திக்கிப் பேசினால் கவலைப் படாதீர்கள். மூளையில் கட்டி இருந்து திக்கினாலோ அல்லது தலையில் அடிபட்டு திக்கிப் பேசினாலோ உடனடியாக நரம்பியல் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

திக்குவாய் பிரச்சனை மன ரீதியான மற்றும் பயத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் மட்டும் அல்ல. எதோ ஒரு சிறு நரம்பு பாதிப்பால் திக்கிப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்களால் மெதுவாகப் பேச இயலாது.

அவர்களுக்கு வயது ஆக ஆக தாழ்வு மனப்பான்மை, பயம் மற்றும் குற்ற உணர்வு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு மன ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

பேச்சுப் பயிற்சி மற்றும் திக்குவாய் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் அவர்களால் இந்த குறையில் இருந்து விடுபடலாம். ஆனால் அதற்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 வருடங்கள் ஆகும்.

என்னுடைய அனுபவத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ப‌ள்ளியில் படிக்கும் வரை மாணவர்கள் /மாணவிகள் விளையாட்டு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதினாலும் போதிய அனுபவம் இல்லாததாலும் அவர்களுக்கு பேச்சுப் பயிற்சியோ மற்றும் மனமாற்ற ஆலோசனைகளோ கூற முடியாது.

பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரி செல்லும் போதுதான் அவர்களாகவே அவர்களது பேச்சுக் குறையை போக்க ஆர்வம் காட்டுவார்கள். அப்போது அவ‌ர்க‌ளுக்கு பேச்சுப் பயிற்சியும் மனநல ஆலோசனையும் சொல்லிக் கொடுத்தால் ஒரு வருடத்தில் திக்காமல் நன்றாக பேசுவார்கள்.

பெற்றார்கள் அவர்களது குழந்தை பேசும்போது படும் கஷ்டத்தைப் பார்த்து 15 வருடங்கள் காத்திருக்க மாட்டார்கள். மேலும் சிறிய வயதிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் நன்றாக பேசி இருப்பார்களோ என்ற ஆதங்கம் எழுவது இயற்கை. அவர்கள் மன திருப்திக்காக காது, மூக்கு மற்றும் தொண்டை (ENT) மருத்துவ நிபுணர் மற்றும் பேச்சுப் பயிற்சியாளரின் (Speech Therapist) உதவிகளை நாடலாம். முன்னேற்றம் தெரிந்தால் தொடர்ந்து காண்பிக்கலாம். இல்லையென்றால் வீணாக செலவு செய்ய வேண்டாம். பிள்ளைக்கு ஒரு 15 வயது வரும் வரை காத்திருக்க வேண்டி வரும்.

உங்கள் குழந்தை 15 வயது வரும் வரை அவர்கள் திக்கிப் பேசுவதனால் மன ரீதியாக பாதிப்பு ஏற்படாதவாறு பெற்றோர்கள்தான் பார்த்து கொள்ள வேண்டும்.

அவர்கள் தனது குழந்தையிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழ் காணும் அறிவுரைகள் தரப் பட்டுள்ளன.

1. குழந்தையின் பேச்சுத் திறன் பற்றி நீங்கள் ரொம்பக் கவலைப் படுவதைக் அவர்களிடம் காட்டிக் கொள்ளாதீர்கள்.

2.  ஆரோக்கிய விச‌யத்தில் கவனமாக‌ இருங்கள். சத்தான உணவு, தேவையான தூக்கம் என அவர்களது உடல் ஆரோக்கியத்தைப் பராமரியுங்கள்.

3. குழந்தை பேசுகையில் கவனமுடன் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறான் என்பதுதான் உங்களுக்கு முக்கியமே தவிர, எப்படிச் சொல்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

4. மூச்சுப் பயிற்சி, உடல் மொழியில் சில மாற்றங்கள் போன்ற சின்னச் சின்ன நுணுக்கங்களைத் தொடர்ந்து செய்ய வையுங்கள்.

5. அன்னியர் முன்னால் பேசிக்காட்ட சொல்லாதீர்கள். அதே நேரம் அவர்களாகப் பேச ஆசைப்பட்டால், அதை ஊக்குவியுங்கள்.

6. குழந்தை எப்படி இருக்கிறார்களோ அப்படியே, அவர்களது குறைநிறைகளோடு அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

7. குழந்தையின் மீது கொண்ட பரிவால் அவர்கள‌து இயல்பான பொறுப்புகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கத் தேவையில்லை. ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது அவர்கள‌து கடமை என்பதை உணர்த்துங்கள்.

8.  குழந்தையின் திக்கல் திடீரென அதிகரித்தால் வீட்டிலோ பள்ளியிலோ அவர்களுக்கு உணர்ச்சி பூர்வமான அழுத்தம் அதிகரிக்கிற்தா என்பதைப் பாருங்கள்.

9.  நன்றாகப் பேசும் போது பாராட்டுங்கள். ஆனால் அந்தப் பாராட்டு அவர்கள் பேசும் விஷயங்களுக்காக இருக்க வேண்டுமே தவிர, திக்காமல் பேசுவதற்காகத் தனிப்படப் பாராட்ட வேண்டாம்.

10. ஆரோக்கியமான பொழுது போக்குகளையும், ரசனைகளையும் வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.

11.  ஒரு போதும் வேகமாகப் பேச வேண்டிய கட்டாயத்தை உருவாக்காதீர்கள்.

12.  நிதானமான, சீரான வேகத்தோடு கூடிய பேச்சையே ஊக்குவியுங்கள்.

13. ”பேசறதுக்கு முன்னாடியே யோசிச்சுக்கோ”, “மெதுவா/வேகமா பேசு”, “பொறுமையா, முழுசா பேசு” போன்ற தேவையற்ற ஆலோசனைகளைத் தவிருங்கள்.

14. கடினமான வார்த்தைகளுக்குப் பதில் எளிமையான வார்த்தைகளை மாற்றி உபயோகிக்கச் சொல்லாதீர்கள். இதன் மூலம், அச்சொற்களை எதிர்காலத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் பதட்டத்தையும், பயத்தையுமே அதிகரிக்கும்.

15. நீங்களாக வார்த்தைகளை எடுத்துக் கொடுக்காதீர்கள். குழந்தையே தன் வார்த்தைகளைத் தானே கண்டடையட்டும்.

16.  பள்ளியிலும், வீட்டிலும் பேசுவதை ஊக்குவியுங்கள்.

17. அன்பு, புரிந்து கொள்ளும் பரிவு, பொறுமை – இந்த மூன்றுமே தாரக மந்திரங்கள். இவற்றோடு உங்கள் குழந்தையை அனுகினால் நிச்சயம் அவனாலும் தெளிவாகப் பேச முடியும்.

நன்றி : https://www.panchumittai.com/2018/12/28/post_103/

19 டிசம்பர், 2018

"ஆண்டியை அரசனாக்குவதும்...
அரசனை ஆண்டி ஆக்குவதும் நம் குல தெய்வமே!"

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
- சற்று ஒரு பார்வை...

குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும்.

குல தெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.ஒரு ஊரில் நடக்கும் தொடர் சம்பவங்களே நம் குல தெய்வம் மகிழ்வோடு இருக்கிறாளா?இல்லையா? என்பதைக் காண்பித்து விடும்.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குல தெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே!...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 குரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமசோமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழி வழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y குரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும்.

இது வரை யாரும் பிறந்த வீட்டின் குல தெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல் போல் தழைத்து, அருகு போல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குல தெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி அல்லது குறைந்தது வருடம் ஒரு முறையாவது செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

அக்கோவிலுக்கு மனதார உதவுங்கள்.

குல தெய்வத்திற்கு
சரியான உணவு படைக்கப் படுகிறதா?
மகிழ்வூட்டும் மலர்கள் படைக்கப் படுகிறதா?
அபிஷேக பொருட்கள் தூய்மையாக உள்ளதா?
எத்தனை வகை அபிஷேகம் அளிக்கப் படுகிறது?
குல தெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் போற்றப் படுகிறதா?
தெய்வத்தை வழிபாடு செய்யும் மனமார்ந்த அர்ச்சகர் உள்ளாரா?
என்பதை கண்காணிப்பது ஒவ்வொரு பக்தனின் கடமை என்பது நினைவிருக்கட்டும்.
"நமக்கென்ன" என்று இருந்தீர்கள் என்றால் அதுவும் உங்களுக்கு தெய்வ குற்றமே!

நான் வெளியூரில் இருக்கிறேன் என்று தப்பவும் இயலாது.எங்க அம்மாவை பட்டினி போட்டு விட்டு நான் வெளி ஊரில் இருப்பதால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னால் நீங்களும் தப்ப இயலாது.

பெற்றவளுக்கு நேரம் தந்து காப்பதும் உங்கள் கடமை.

ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்...

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..."

எனவே, நம் முதல் குல தெய்வமான பெற்றோர்களை முதலில் போற்றி
நம்குல தெய்வத்தை காத்து போற்றுங்கள்
பதினெட்டாம் படியாரே சரணம்

29 நவம்பர், 2018

"உரை மருந்து" மறந்துட்டோமே!!!
.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன.
.
குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது.
.
கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.
.
மறந்துட்டோமே "உரை மருந்து"
.
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ இதை பற்றி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும், "ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை".
.
இந்த அறிய பொக்கிஷத்தை மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம்.
.
நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருத்துவ முறை பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.
.
அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறி இருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.
.
உரை மருந்து என்றால் என்ன?
.
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து குழந்தைகளுக்கு புகட்டுவது.
.
எவை எவை உரை மருந்தாகிறது?
.
1.வசம்பு
2.கடுக்காய்
3.மாசிக்காய்
4.சித்தரத்தை
5.ஜாதிக்காய்
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
.
எப்படி உபயோகப்படுத்துவது?
முதலில் மேற்கூறப்பட்டுள்ள மருத்துகளை ஒரு கப் தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க விடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன், தண்ணீரை வடிகட்டி விட்டு மருந்துகளை நிழலில் உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
.
பிறகு மருந்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
.
ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
.
உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு புகட்ட வேண்டும்.
.
எப்போது கொடுக்க வேண்டும்?
.
குழந்தையை குளிக்க வைத்தவுடன் இந்த மருந்தை கொடுப்பது வழக்கம்.
.
ஒரு நாள் விட்டு மறுநாள் கொடுக்கலாம்.
.
குழந்தையின் இரண்டு மாதம் முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம்.
.
உரை மருந்துக்கான மூலப் பொருட்களும் அவற்றை சுத்தப்படுத்தும் முறைகளும், அவற்றின் மருத்துவ பயன்களும்...
.
கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள்.
.
நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும்.
அல்லது (2கிலோ நெல் வாங்கி வந்து தனியாக அவிக்கவும்.)
அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
.
கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை.
அதில் வாயு, சளி என்றால் வெந்நீரிலும்,

சளி, மப்பு என்றால்
வெற்றிலைச் சாற்றிலும்,துளசிச் சாறு, தேன் கலந்தும்,

வயிறு மந்தம், வயிற்றுப்போக்குக்கு, தேன், ஓமகஷாயம்,

மப்பு, ஜூரம், வாந்திக்கு
 இஞ்சிச் சாறு,தேன் விட்டும், பிரச்சனைக்கேற்ப இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2  அல்லது 5 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் சேர்த்துக் கொடுக்கவும்.
.
#கடுக்காய்:
.
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
.
#சுக்கு:
.
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.
.
#சித்தரத்தை:
.
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜூரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்தரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.
.
#ஜாதிக்காய்:
.
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.
.
#மாசிக்காய்:
.
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
.
#வசம்பு :
.
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.
.
#கார_மருந்து என இதற்குப் பெயர்.
.
அதனால் உரைத்த மருந்தை #சிறுகச்_சிறுக_புகட்ட_வேண்டும். தேன் சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சிறு சிசுவிற்கு 10 – 15 உரைப்பு வரை தேவைப்படும்.

 மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம்.!
.
 #டாக்டர்_பாஸ்கர்_ஜெயராமன்
.

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...