கவிதை : தியாகம்
தியாகம்
ஒருவித யாகம்
இதை
எல்லாரும்
செய்யலாம்
இதற்கு
வரம்பு
கிடையாது
உடல்
பொருள்
ஆவி
இவை
மூன்றும்தான்
உயிர்களை ஆள்கின்றன
இவை
மூன்றுமே
தியாகத்திற்கு
உரியன
உடல்
என்னும்
கூண்டைவிட்டு
உயிரெனும் பறவை
பறந்துவிட்டால்
வெற்றுடம்பால்
என்ன
செய்ய
முடியும்?
உடல்
தானம்
என்னும்
உன்னத
தானம்
செய்யலாம்
தானமும்
தியாகமும்
ஓர்
உயிர்
ஈருடல்
ஒருவர்
தம்மிடம் உள்ள
எந்தப்
பொருளாக இருந்தாலும்
இல்லாதவர்களுக்குக்
கொடுக்கலாம்
கொடுப்பதுதான்
தியாகத்தின்
உச்சக்
கட்டம்
அதைத்
தொட்டுவிட்டால்
நிச்சயம் சொர்க்கம் கிட்டும்
இதைத்தான்
பொருள்
இல்லாதவருக்கு
இவ்வுலகம் இல்லை
அருள்
இல்லாதவருக்கு
எவ்வுலகமும் இல்லை
என
அய்யன்
வள்ளுவர் மொழிந்துள்ளார்
இவ்வுடலில்
இறுதியாக
இருப்பது ஆவி
அதான்
உயிர்
உயிரை
வைத்துதான்
எல்லாச் செயலும்
சுவர்
வைத்துதானே
சித்திரம் வரையனும்
உயிரை
யாருக்கும்
தானமாக,
தியாகமாக
வழங்கிட முடியாது
ஏனெனில்
நம்மைப் படைத்த
படைப்பாளி
அதை
எல்லாருக்கும்
கொடுத்துதான் அனுப்பியிருக்கான்
கண்ணே...
உனக்காக
என்
உயிரையும் கொடுப்பேன்
என
பிணாத்தும் காதலனிடம்
உசாராக
இருங்க
இல்லே
உங்க
உயிரைப் பிடுங்கிடுவான்
இவ்வுலகில்
தியாகத்திற்கு
நிகர்
எதுவும் இல்லை
தியாகம் செய்தவரை
அந்த
ஆண்டவனுக்கு
ஒப்பாக
ஒப்பிடலாம்,
தப்பே
இல்லே
தானமாக
தியாகமாகப்
பொருளைக் கொடுப்பது வேறு
தன்
உடலையே
கொடுப்பதென்றால்
அதுதான் உயர்வு
தன்
உடலையே
தானமாக
அதிலுள்ள பொருள்
யாவும்
தாராளமாகத் தியாகம் செய்த அவர்
செததாலும் உயிரோடுதான் இருக்காருங்க
அவர்
உடல்
பலரிடமும்
பரிமாற்றம் செய்யப்பட்டு அவர்
உலகில் இன்னும்
உலவிக் கொண்டுதான் இருக்காருங்க
உலவிக் கொண்டுதான் இருக்காருங்க
விட்டுக் கொடுப்பதும்
ஒருவகையில்
தியாகம்தான்
பரிச்சயமில்லாதவருக்கு
விட்டுக் கொடுக்கும்போது
தியாகம் பேசப்படும்
நன்கு
தெரிந்தவருக்கு,
பழக்கப்பட்டவருக்கு
விட்டுக் கொடுப்பது
தியாகம் இல்லை
அதற்கு
பெயர்
வேறு
இவ்வுலகில்
ஒருவருக்கு ஒருவர்
விட்டுக் கொடுத்து
தியாகம் செய்வதால்தான்
ஒவ்வொருவரும்
சாதிக்கிறார்கள்,
சாதனை
படைக்கிறார்
மகனையோ,
மகளையோ
கண்ட
சந்தோஷத்தில்
தன்னையே தியாகம் செய்கிறாளே
தாய்,
அவளுக்கு நிகர்
இவ்வுலகில் ஏதுங்க?
கணவன்
மனைவிக்குள்
பிணக்கு வரக்கூடாது என்பதற்காக
படித்த
மனைவியாக இருந்தாலும்
பட்டுபாத்திரம் தேய்த்து
வீட்டோடு இருந்து
பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு
அவளது
ஆசபாசத்தையும்
அடக்குகிறாளே
அவளுக்கு நிகர்
யாருங்க?
மகன்
படிக்கவேண்டும்
நல்ல
வேலை
வெட்டிக்குப் போகனும்
கைநிறைய காசு
சம்பாதிக்கனும்
தான்
பட்ட
கடனையெல்லாம்
தன்
கடமையாக நிறைவேற்றனும்
என
எத்தனை
தகப்பன்மார்கள்
எதை
எதையோ
தியாகம் செய்கிறார்களே
அவர்கள் அல்லவா
உண்மையான மானுடர்
குடிகாரன் தகப்பனின்
குடிவெறிச் செயலையும்
தாங்கிக் கொண்டு
வேலாவேலைக்கு அவனுக்கு
வடிச்சுக் கொட்டி,
மகனின்
பசியறிந்து
மார்போடு அணைத்தபடி
அடிவயிற்றில் ஈரத்துணி கட்டிகொண்டு
வறுமையையும் துஞ்சமென மதிக்கும்
தாய்மார்கள் தமிழ்நாட்டில் எத்தனையோ
பேர்
உண்டு
அவர்களது
தியாகத்திற்கு எந்த
உலகமும் ஈடாகாதுங்க
ஆண்டவன் படைத்திட்ட இவ்வுயிர்
விண்ணைத் தாண்டி போகுவதற்குள்
தியாகம் என்பதை
ஒருமுறையேனும்
சுவைத்திடனும் அதன்பின்
செத்திடலாம் தப்பே
இல்லை
எல்லோரது நாட்டிலும்
நாட்டு
எல்லைப்புறத்தில்
கோடானகோடி மக்களுக்காகக்
காவு
காக்கும் எத்தனையோ
படைகள்
உண்டு,
அவர்களது தியாகத்திற்கு
ஈடு
ஏதுங்க?
அவர்களும் மனிதர்கள் தானே?
அவர்களும் மனிதர்கள் தானே?
அவர்களுக்கும் ஆசபாசம் இருக்குமிலே...
எங்கோ
கடைகோடியில் உள்ளவருக்காக
தம்
கடமையை
உயிருக்கு ஈடாய்
வைத்து
காவு
காக்கும் காவலர்களுக்கும்
ராணுவத்தினருக்கும் தியாகக் குணம்
இயல்பாய் எப்படி
வந்ததுங்க?
தியாகம் ஒன்றும்
தின்றுபோட்ட விதை
அல்ல
திடீரென விரிச்சம் கொள்ள
தியாகம் ஒன்றும்
திகட்டும் பொருளல்ல
மறுமுறை திகட்ட
யோகா
செய்வது
உடலுக்கு நல்லது
யாகம்
செய்வது
ஊருக்கு நல்லது
தியாகம் செய்வதால்
உலகத்திற்கே நல்லது
நண்பர்களே...
நீங்கள் எந்தெந்தத் திசையில்
அலைந்து திரிந்தாலும்
அவுக
அவுக
ஒவ்வொரு
தியாகம் செய்து,
தியாகம் செய்வதற்காகத்தான்
ஆங்காங்கே திரிகிறீர்கள்
என்பது
உண்மை
தானே?
மாணவர்களே...
மண்ணின் கண்மணிகளே...
தியாகம் என்ற
ஒன்றை
தெரிந்து கொள்ளுங்கள்
தெரியாதென்றால்
அக்கம் பக்கம் கேட்டு
தெளிவு பெறுங்கள்
நீங்கள்தான்
இம்மண்ணில் மங்கா
மாணிக்கம்
நீங்கள் செயல்
படுத்துங்க
தியாகத்தை...
தியாகம் ஒன்றும்
அழியக்கூடிய பொருளல்ல
அழுகிப் போக
இன்று
நீங்கள் செய்தால்
நாளை
அவர்கள் செய்வார்கள்
மறுநாள் நாடே
செய்யும்
நாடே
செய்யும்போது
உலகம்
என்ன
சும்மாவா இருக்கும்?
உலகத்
தமிழர்களே
உங்களுக்கு மட்டுமல்ல
எந்த
நாட்டவருக்கும்
நன்றி
சொல்ல
நான்
கடமைபட்டுள்ளேன்
ஏனெனில் நாமெல்லாம்
தியாகம் செய்றோமுலே...