4 மே, 2018


வடக்குத் திசை குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?



பணமே வாழ்க்கையாகிவிடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், அதுதான் உண்மை. இந்தப் பணத்தைப் பெறத்தான் நாம் அல்லும் பகலும் அயராது பாடுபடுகின்றோம். ஆனாலும், எல்லோர் கைகளிலும் பணம் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. பணம் தாராளமாக நம் கைகளில் புழங்க வேண்டுமானால், என்ன வகையான வாஸ்து மற்றும் பூஜை முறைகளைக் கையாள வேண்டுமென வாஸ்து சாஸ்திர நிபுணர் யோகஶ்ரீ எம்.எஸ்.ஆர். மணிபாரதியைக் கேட்டோம். அதற்கு அவர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு இதோ...
குபேர

'நம்முடைய சொந்தப் பணத்தைக் கொண்டு நாம் செய்யும் செயல்களும், பரீட்சார்த்தமான முயற்சிகளும், பயங்கரமாக மோதிக்கொள்ளும்யானைகளின் சண்டையை மலையின் உச்சியில் இருந்து பாதுகாப்பானது' என்கிறார் திருவள்ளுவர்.
கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருங்க அமையப்பெற்றவர்தான் சாதனையாளராக உயர முடியும் என்பது நிச்சயம்.
திருமகளோ தனக்கு முன்பாகச் செல்வத்தைக் கொட்டி வைத்திருக்கின்றாள். ஆனால், அவளுடைய அருளால் அதை நாம் எப்படிப் பெறுவது என்பதில்தான் நமக்குக் குழப்பம். இங்கேதான் நமக்கு வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.
பணப்பெட்டி மற்றும் பீரோ வைக்கும் முறைகள்!
வடமேற்கில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன் கடன்காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.
தென்கிழக்கில் பணப்பெட்டி இருக்குமேயானால், விரயச் செலவுகளையும், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காத தன்மையையும் ஏற்படுத்தும். ஏமாற்றப்படுவார்கள்.
கிழக்கில் பீரோ இருக்குமாயின் பணம் பல வழிகளில் வந்தாலும், நோய்க்குச் செலவு செய்வதில் பெரும்பகுதியும், குழந்தைகளின் தவறான செயல்களினால் பெரும்தொகையுமாக வீண் செலவுகளை ஏற்படுத்தும். வீட்டில் கவலை குடிகொள்ளும்.
தெற்குப் பார்த்த வீட்டின் வடக்குச் சுவர் ஓரமாக, தெற்குப் பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கு வைத்திய செலவை அதிகப்படுத்தும்.
லட்சுமி
மேற்குப் பார்த்த வீட்டுக்குக் கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்குப் பார்த்து பீரோ இருக்குமேயானால், ஆண்கள் தேவையற்ற வீண்செலவுகளைச் செய்வார்கள். ஆண்களுக்கு நோய்க்கான செலவுகள் அதிகரிக்கும்.
கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், மகிழ்ச்சியான செலவுகளைத் தந்து, நிம்மதியையும் லாபத்தையும் தரும். கண்டிப்பாக செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மங்கள காரியங்கள் மனையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.
வீட்டின், தென்மேற்குச் சார்ந்த மூலை (நைருதி மூலை - குபேர மூலை என்று சொல்லப்படும்)யில் பீரோவை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப செலவுகளைச் செய்ய வைக்கும். குபேர மூலையில் பீரோவை வைக்கும் முன் குபேரனின் சிறப்புகளையும் பார்த்து விடுவோம்.
லட்சுமி
திருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.
* வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
திருவண்ணாமலையில் கிரிவலம்வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
* குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று.
* குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.

எஸ்.கதிரேசன்


கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...