இலந்தைப் பழம்
பள்ளியில் படிக்கும் காலங்களில், இருபத்து ஐந்து பைசாவிற்கு ஓர் ஒழக்கு (நாழி) என்ற கணக்கில் இலந்தம் பழம் வாங்கி, டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு,
ஒவ்வொன்றாகத் தின்போம், பெண்ணுங்க எல்லாம் தங்களுடைய ஜாமண்ரி பாக்சில் வைத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் ஒவ்வொன்றாகச் சுவைப்பார்கள். இலந்தைமீது உப்பைத் தூவி உண்பதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம். அது அந்தக் காலம்! அதெல்லாம் அப்போது அனைவரும் ரசித்து ரசித்து சாப்பிட்ட விசயம்! நாம் தவறவிட்ட விசயங்களில் இலந்தைக்கும் நிச்சயம் இடம் உண்டு!
நன்றி : முத்து மாரியப்பன், மம்சாபுரம்.