18 பிப்ரவரி, 2013

லண்டன் பண்பலையில் ஒலிவந்த கவிதைகள்


கவிதை : சங்கமம்
 
உயிர்கள் இரண்டும்
சங்கமம்
உன்னத காதலின்
உயிர்ப்பு
உள்ளம் இரண்டும்
சங்கமித்தால்
நட்பாய் இதயம் விசாலமானது
நதிகளின்
சங்கமம்
கடல்
இணைப்பும்
பிணைப்பும்
சங்கமம்தான்
சங்கமத்தால்
பிரிவு கிடையாது
பிளவு கிடையாது
அழிவு கிடையாது
பெருக்கமாய்,
உருக்ககமாய்,
ஆக்கமாய் இருக்கும் சங்கமித்தால்
சங்கமம்
ஒன்றை ஒன்று
பிணைத்துக்கொள்ளும்
இணைத்துக்கொள்ளும்
உருண்டோடி வரும்
காவிரியும்
தெளிந்த நீரான கொள்ளிட ஆற்றில்
சங்கமிக்கும்
கல்லணையில்
இந்தியப் பெருங்கடலும்
பசிபிக் பெருங்கடலும்
அரபிக் கடலும்
அய்யனின் சிலை அருகே சங்கமம் ஆகும்
அங்கே அங்கயற்கன்னி
கண்ணித்தாயான
கண்ணியகுமரி
காவல் புரிகிறாள்
இவ்வுலகில்
சங்கமிக்கும் யாவும்
சத்தமில்லாம்
சாதிக்கின்றன
சாதி சாதி என
ஊதி ஊதி பெருத்ததெல்லாம்
உதவாம போனதுதான் மிச்சம்
ஆண் பூவிடமும்
பெண் பூவிடமும்
வண்டினங்கள்
சங்கமித்ததால்
காய் கனி சுவை
கணக்கில்லாது விளையுது
பாதி பாதியாய்
இருந்ததெல்லாம்
முழுதாய், விழுதாய்
பழுதாக
திருப்பதெல்லாம்
சங்கமித்ததால் தானே?
தாயும் தகப்பனும்
சங்கமித்ததால்
சேயான நாம்
வந்தோம்
மனமும் குணமும்
சங்கமித்தால்
உயர்வான உள்ளம்
பெற்றோம்
எண்ணமும்
திறனும்
சங்கமித்தால்
உறுதியான
வெற்றி பல
கண்டோம்
சொல்லும் செயலும்
ஒன்றாய்ச் சங்கமித்தால்
எதிலும் வெற்றியே
வாகை சூடினோம்
எதையும்
பிரித்து வைத்தால்
ஏதுங்க வாழ்வு?
இவ்வுலகில்
வந்ததெல்லாம்
ஒன்றுக் கொன்று
ஒத்துபோவதாக
இருப்பதால்தான்
இயற்கை இன்னும்
நம்மலை காக்குது
வானமும் பூமியும்
சங்கமிப்பதால்
வனமெல்லாம்
செழிக்குது
நிலவும் கதிரும்
சங்கமிப்பதால்
நாளொன்று
பிறக்கிறது
ஒருவருக்குள்
ஒருவர் சங்கமிப்பதுதான்
காதல், கல்யாணம்
வாழ்வு
எனக்குள் அவளும்
அவளுக்குள் நானும்
சங்கமித்தோம்
தமிழ் படைத்தோம்
நண்பர்களே
உங்களுக்கு நானும்
எனக்குள் நீங்களும்
என்றோ சங்கமித்தாயிற்று
இன்னும் ஏராளமானோர்
சங்கமிப்பதற்காக
சலசலப்பாய்
கலகலப்பாய் இருக்காக
அவர்களையும் நம்முள்
இணைப்போம்
சங்கமிப்போம்
சந்தோஷமாய்
உலகை அளப்போம்



கவிதை : தீபாவளி
தீபாவளி  திருத்தபடவேண்டிய  தலைப்புஆம்...தீபாவளி  அல்ல அது  தீப ஒளி
தீபங்களின்  ஆர்ப்பரிப்பு
அழகு ஒளிப்புதான்  தீபாவளி!
எத்தனை இன்னல்கள்
இடி மின்னலாய்
தொடர்ந்தே
வந்தாலும்
அத்தனையும்
ஓரங்கட்டிவிட்டு
ஒளிவிடும்
தீபாவளி
செல்வ செழிப்பில்
இருப்பவனையும்
மக்கள் செழிப்பாய்
இருப்பதும்
தீபாவளி
வெளிச்சம் காட்டும்
நாளைக்கு நாளைக்கு
என அடிமடியை
இறுக்கிக் கொண்டிருக்கும்
நடுத்தர வர்க்கமும்
நாடுபோற்ற
தீபாவளியில்
திக்கு முக்காடும்
தீபாவளி வந்தாலும்
சிலருக்கு
தலைவலி வந்திடும்
வெடி சத்தம்
நம் உணர்வுக்கு
அப்பார்பட்டது
காது சவ் அதிர
கலகலத்துப் போகச்
செய்யும் வெடிகளை
கண்டுபிடிப்பதும்
நாம் தான்
கண்டுபிடித்தவரை
கண்ணா பிண்ணா என
கரிச்சுக்கொட்டுவதும்
நாம் தான்
இருப்பவர்கள் வீடுகளில்
தீபாவளி ஜொலிக்கும்
இல்லாதவர்கள்
வீடுகளில் அந்த ஜொலிப்பில்
மிடுக்கும்
ஊரெங்கும் அப்பாவிகள்
அனாதைகள்
தப்பிப் பிறந்தவர்களாய்
பாவம் செய்தவர்களாய்
பரிதவிக்க இருக்கும்
நிலை மேலும் மேலும்
மென்னியைப் பிடிக்க
அவர்களுக்கெல்லாம்
தீபாவளிஏது?
பொங்கல் ஏது?
ஊர்களில்
நல்ல நாள்
பொல்ல நாள்தான்
பலருக்கு விடியும்
அன்றைக்குத்தான்
வெள்ளையும்
சொள்ளையுமாய்
திரிவார்கள்
இதில் தீபாவளியும்
விதிவிலக்கல்ல
பயந்து பதுங்கி
நண்டு சுண்டானும்
மத்தாப்பூ பார்த்தால்
கித்தாப்பாய் சிரிக்கும்
அந்த மழலை
சிரிப்பு முன்
மத்தாப்பூ சும்மா
புஸ்வானம்தான்
டாமல் டுமில்
தடார் புடார்
சத்தமெல்லாம்
கேட்கும் போது
தீபாவளி பக்கம் இருக்கிறது
என கையைப் பிசையச் சொல்கிறது நடுத்தர குடும்ப கணவர்களுக்கு
ஊக்கத் தொகை வரும்
உடுப்புகளைப் புதுபிக்கலாம்
இனிப்புகளைச் செய்து
பலருக்கும் பகிரலாம்
பட்டாசுகள் வாங்கியாந்து
பெண்டு பிள்ளைகளுடன்
குதூகலிக்கலாம் என  எங்கோ காவல் காக்கும் ராணுவத்தினரின் மனதைப் புரிந்துகொள்ளும் அவரவர் குடும்பத்தாருக்கும் இந்த தீபாவளியை உயர்த்திப் பிடிப்போம் அவர்கள் மனம்போல் குணம்போல் நாடு உயர ஜொலிக்கட்டும்
பொதுவாழ்க்கையில்
நுழைந்திட்ட பலருக்கும்
பண்டிகை நாள்களில்
மனம் பக்குவப்படுவது
என் ஆச்சரியத்திற்குள் அடங்காது
அவர்களும் மனிதர்கள்தான்
ஆசபாசம் கொண்டவர்கள்தான்
கடமை அவர்களது
கண்களைக் கட்டிவைத்திருக்கும் வாழ்க எம்மான் அவர்களை மனதார வாழ்த்துவோம்
உலகமெல்லாம்
தீபாவளி வெடிக்கிறது
நண்டு சுண்டுகளா
அக்கம் பக்கம் பார்த்து அன்னை தந்தை அரவணைத்து
எதையும் எட்டவைத்து
பத்த வையுங்க
மத்தவங்களோ அல்லது
நீங்களே உங்களையோ
பத்த வைத்துக் கொள்ளாதீர்கள்
வாழ்வின் சந்தோஷம்
இன்று ஒருநாளில் மட்டும் இல்லை
இன்னும் இருக்கு நிறைய...
ஏய்... ஏய்... பார்த்து பார்த்து
தூரமா ஒதுங்கி வாங்க
பையன் பட்டாசு வச்சுருக்கான்
கவனம் கொள்க
இன்று நாம்  கொளுத்தும்,
பற்ற வைக்கும்  மத்தாப்பூ
எங்கோ என்றோ
ஒருவரின் கடின உழைப்பு
என்பதை கவனம் கொள்க
அவர்களுக்கு வாழ்வு
கொடுப்பதற்காகவது
ஒரே ஒரு பட்டாசுவாவது
வெடிக்க மக்கா...
போடுங்க  நல்ல வெள்ள சொக்க
புத்தம் புதுசா புலரட்டும்
தீப ஒளி - அதுபோல்
வாழ்வும் சுடர்விடடும்


கவிதை : சுவாசம்
ப்ரணவம், மூச்சு
ஜீவன், சுவாசம்
உயிர், உணர்வு
எல்லாம் இதயம் வசம்
இதயம் இயங்க
சுத்தமான
சுவாசம் போதும்
நம்முள் தேவையான காற்றைத்தைத்தான் நம்மால் உள்வாங்கிக் கொள்ளமுடியும்
நாளைக்கும் சேர்த்து இன்றைக்கே இதயத்தை நிரப்புக்கொள்ள முடியாது
இதயத்தினுள் நுழையும்
காற்றானது மீண்டும் மீண்டும் புத்துணர்வு பெறுகிறது
உள்ளே வாங்கிக் கொள்ளும் காற்று உள்ளேயே இருப்பதில்லை அடுத்த கணமே வெளியே கசைந்துவிடும்
இப்படி உள்ளையும் வெளியும் மாறி மாறி சுவாசம் இதயத்தை இயக்குவதால்
லப் டப்... லப் டப்...
அன்பே நீ என் சுவாசம்
அழகாய் பொய்சொல்வர்
காதலர்கள்...
நீதானம்மா என் மூச்சு
மற்றதெல்லாம் வீண் பேச்சு
சமாளிப்பர் கணவன்மார்கள்...
அண்டசராசகம் முழுதும் காற்று நிரம்பியுள்ளது காற்றுக்கு அழிவே இல்லை அதனைச் சீண்டினால் அத்தனையும்
தும்சம் செய்துவிடும்
நாம் சுவாசிக்கும் காற்று நறுமணமாய் இருக்க இயற்கை பற்பல இன்னல்களைப் போக்கி எப்போதும் நமக்கு இன்பத்தை விளைவிக்க இவ்வாறு செய்கிறது
மனிதர்கள் வெளியேற்றும்
மங்கா நச்சுக்காற்றை
மரம், செடி, கொடிகள்
சுவாசிக்கின்றன - அவற்றுக்காக நம்மை நேசிக்கின்றன
மலரின் சுவாசம் நமக்கு
நறுமணத்தைத் தருகிறது
மரத்தின் சுவாசம்
இனிய தென்றலாய்
இதயம் வருடுது
என் சுவாசக் காற்றே...
என் சுவாசக் காற்றே...
நீயடி... என வீதி வீதியாய் யாரும் காற்றைச் சொந்தம் கொள்ளமுடியாது
காற்று பொதுவானது அதை யாரும் கயிறு கட்டிகொள்ள முடியாது
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெறுப்பு
என்னும் பஞ்சபூதங்கள் நம்மை ஆட்சிசெய்வதால் நாம் நலமோடு இருக்கிறோம்
இந்த ஐந்தையும் நாம் ஆட்சிசெய்தால்
நாம் நாதியற்றுக் கிடப்போம்
இவ்வுலகில்
அளவுக்கு மீறி
அந்நியாயமாய்
யாருக்கும் தெரியாமல்
எதை வேண்டுமானாலும்
எடுத்து வைத்துக்கொள்ளலாம்
சேர்த்து வைத்துக்கொள்ளலாம்
காற்றைத் தவிர, ஏனெனில்
காற்றை களவாட முடியாது
காற்றை உறவாட முடியாது
காற்றைச் சேமிக்க முடியாது
காற்றை புதுபிக்கலாம்
காற்றின் மாசுவை அகற்றி
அதனை 
துளிர்விக்கலாம்
மக்கள் வசிக்கும் பகுதிகள்
மக்கிதான் போகின்றன
மனிதன் காலடி பட்ட இடமெல்லாம்
கரிதான் போகிறது
சுகாதாரமற்ற சுவாசம்தான்
எங்கெங்கும் நிறைந்திருக்கிறது
அதற்கும் காரணம் மனிதர்களாகிய நாம்தான்
இயற்கையை மீறியச் செயல் என
எதுக்கூடாது என எவன் சொன்னாலும்
எவரும் எடுத்துக் கொள்வதில்லை
அவனவனுக்கு அதுஅது வயிற்றுப் பிரச்சனையாகி விட்டது
பொது இடத்தில் புகைக்காதீர்கள் எனச் சொன்னால்
என் வாய் பொது இடமா? என விதண்டாவாதம் செய்வர்
குப்பைக் கூளங்களைக் கொளுத்தி
ரத்த நாணங்களை
 கொதிப்படையச் செய்து
ரப்பர் பொருள்களை இளக்கி
இதயத்தை கருக்கி, சுருக்கி
சுவாசத்தை மாசுபடுத்தி
காற்று மண்டலமே
கலங்கும்படி செய்துவிடுவர்
மனிதா, புனிதா...
சுவாசம் நிறைவாக இருக்க
பூமியில் வாசம் செய்ய
பூமியை நேசி, அதை வாசி...
அதில் வாசம் கொள்
காற்றை கலங்கபடுத்தாது,
தூய்மைப்படுத்து, சுத்தப்படுத்து
அதுவொன்றும்
ஆகாச வேலையல்ல
ஆங்காங்கே மரங்களை நட்டுவோம்
நல்ல மனங்களை பிட்டுக் கொள்வோம்
நாம் போன பின்
நம்மைப் பறைச்சாற்றும்
நாம் நட்டிய மரங்கள்...
நல்ல காற்றைப் பரப்பும்
அடுத்தடுத்த
 சங்கதிகள் வாழ
பரந்த உள்ளம் காட்டும்
நண்பர்களே,
சுவாசமானவர்களே...
விசுவாசமானவர்களே...
என்னுள் ஆசுவாசமானவர்களே...
வாருங்கள் விதைப்போம்;
வேண்டாத தீயபழக்கத்தை
எட்டி
 உதைப்போம்
துளிர்கள் நம்மைத் தளிராக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...