ஓர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரைத் தேடி சில பேர் சென்றார்கள்.
“என்ன சுவாமி? எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு அந்த ஞானி “நான் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து ” என்றார்.
கொண்டிருக்கிறேன்
“உங்கள் கொள்கை என்ன?” என்று ஞானியிடம் கேட்டனர்.
“தியானம் செய்வது, பசி எடுத்தால் சாப்பிடுவது. தூக்கம் வந்தால் தூங்குவது. இதுதான் என் கொள்கை” என்றார் ஞானி.
இதைக் கேட்டவுடன் அந்த நபர்களுக்கு ஆச்சரியம். “என்ன சுவாமி இப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் செயலில் எந்தத் தனித்தன்மையும் இருப்பதாகத் தெரியவில்லையே?” என்று கேட்டனர்.
“ஆமாம்” என்றார் அந்த ஞானி.
“என்னங்க இது? பசித்தால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது என்பது எல்லோரும் செய்வது தானே?” என்று அந்த நபர்கள் கேட்டனர்.
இதைக் கேட்டதும் ஞானி சிரித்தார்.
“நீங்கள்
சாப்பிடும்போது, உங்கள் மனது சாப்பாட்டில் இருக்காது. நடந்ததையும், நடக்கப் போவதையும் நினைத்துக்கொண்டு சாப்பிடுவீர்கள். உங்கள் மனம் அலைபாயும். நான் அப்படி இல்லை. தியானம் செய்யும்போது எனது மனம் தியானத்தில்தான் இருக்கும். சாப்பிடும்போது எனது சிந்தனை சாப்பாட்டில்தான் இருக்கும். அதேபோல் தூங்கவேண்டும் என்றால் தூங்குவேன். எதைச் செய்கிறேனோ நான் அதுவாகி விடுவேன். அதுதான் என் இயல்பு. இதுதான் எனக்கும், மற்றவர்களுக்கும் இருக்கிற வேறுபாடு” என்று கூறினார் ஞானி.
இதிலிருக்கும் நீதி என்னவென்றால், செய்யும் தொழிலில் நாம் ஒன்றிப்போய்விடும்போது
அந்தத் தொழில் முழுமை பெறுகிறது. அந்தத் தொழிலில் உள்ள சுமை, சுமையற்றதாகி அதுவே இனிமையானதாகி விடுகிறது.
(2013 ஆகஸ்ட் 23 அன்று காவலர்களுக்கு விருது வழங்கும் விழாவில்
முதல்வர் ஜெயலலிதா சொன்ன கதை) நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக