26 ஜூன், 2017

நாடார் இனம் தனது வரலாற்றை இழப்ப்து யாரால்....?

 1. *நான் நாடாரின் ஒரே பிரதிநிதி* என்று சட்டடபையில் முழங்கிய நாடார் இனத்தின் முடிசூடா மன்னன் W.P.Aசௌந்தர பாண்டியனை சந்ததிகளிடம் காட்டாதது எந்த வம்சம்?

2. 1741ல் 108 ஆசான் மற்றும் மீனவர்களை படைதிரட்டி டச்சுப் படையை கடலிலேயே சிறை பிடித்த அனந்த பத்மநாபனையும் அவனது நினைவுச் சின்னங்களையும் வருங்கால சந்ததிகளுக்கு காட்ட மறந்தது யார்?

 3. உயிரை விட மானம் பெரிது என்று தோள் சீலை அணிந்து போராட்டம் வெடிக்கக் காரணமாய் இருந்து உயிர் நீத்த சகுந்தலா தேவி நாடாச்சியை நினைவு கூறாதது யார்?

 4. மாவீரன் வடலிவிளை செம்புலிங்க நாடாரை மறந்தது யார்?

5. சிவனின் நாமத்தை உச்சரித்ததற்காக தன் நெஞ்சை பிளக்க வந்தவனுக்கும் மார்பைக் காட்டி நின்ற ஏனாதி நாடானை மறந்தது யார்?

 6.மணிமுத்தாறு அணையை கட்டியது காமராஜர் ஆட்சிக்காலம் என்றாலும் அதற்காக தானே நிதி வசூலித்து தன் நாடார் சமூக மக்களுக்காக மணிமுத்தாறு அணையை கட்ட வைத்த கோசல்ராம் நாடாரை மறந்தது யார்?

 7.இன்று உலகமே பயன்படுத்தும் இமெயிலை கண்டுபிடித்த சிவ அய்யாத்துரை ஒரு நாடார் என்பதை மறந்தது எந்த சமூகம்?

8. கலியுகத்தில் மக்களின் மனதில் உள்ள பயம், அறியாமை, கோபம், காமம், வெகுளி போன்ற நோய்களை ஒழிக்க பாடுபட்ட அய்யா வைகுண்டரை வணங்காதது எந்த சமூகம்?

9.ஏரல் திரு. அருணாச்சல சுவாமி சேர்மனை பற்றி சந்ததிகளுக்கு வழிநடத்தாதது எந்த இனம்?

 10. தமிழுக்கா வாழ்ந்த நாம் தமிழர் இயக்கத்தை உருவாக்கிய சிவந்தி. பா. ஆதித்தனாரை பற்றி வரலாற்றில் அழுத்தமாக பதிய வைக்காதது எந்த இனம்?

11. சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் சூட்டியவர் அண்ணா என்று கூறும் நாம் ஏன் அதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த செம்மல் சங்கரலிங்கனாரை கூற மறந்தோம்?

12. குமரியை தமிழகத்தோடு இணைத்து நாடார் வம்சத்தையே காப்பாற்றியது குமரித்தந்தை மார்ஷல் நேசமணி! அவரை எத்தனை பேர் நம் தலைமுறைக்கு அளித்தோம்?

13. திருநெல்வேலியில் நாடார் சமூகத்திற்கு இரும்புக் கவசமாய் இருந்த செல்வின் நாடாரை திமுக நயவஞ்சமாக காரில் குண்டு வைத்து கொன்ற ~கதையை~ வரலாற்றை எத்தனை பேர் வருங்கால சந்ததிக்கு விட்டுச் சென்றிருக்கிறோம்?

14. ஒட்டு மொத்த நாடார் சமூகத்தின் காப்பரணாய் இன்று கையில் அரிவாள் ஏந்திய வெங்கடேஷ் பண்ணையாரை ஜெ. போலி என்கவுண்டரில் கொன்ற நயவஞ்சகத்தை எத்தனை பேர் மனதில் வைத்திருப்போம்?

 15. ஒடுக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்ட நாடார் சமூகம் பல்வேறு இன்னல்களைத் தாண்டி இமய புகலை அடைந்த கதையை எத்தனை பேர் நினைவு கூர்ந்திருப்போம்?

16. 90% நாடார் வாழும் சிவகாசி மண்ணில் விவசாயம் செழிக்காது; வறண்ட பூமி என்று எண்ணிய காலத்தில் இது கந்தக பூமி, வெடிமருந்தின் உலக புகலிடம் என்று முதல் பட்டாசு ஆலையை நிறுவிய அய்யா நாடாரை எத்தனை பேர் நினைவில் வைத்திருப்போம்?

17. நாடார் கோவில் நுழைவுப் போராட்ட வரலாற்றில் எழுதப்பட்ட சுப்ரமணி அய்யரின் தலைமையிலான போராட்டத்தால் மழுங்கடிக்கப்பட்ட குஞ்சுத நாடாரை எத்தனை பேருக்குத் தெரியும்?

18. முதல் சுதேசி தயாரிப்பு பெரிஸ் பிஸ்கட்; அதை பெரியசாமி நாடாரால் நிறுவப்பட்டது என்பதை யாரெல்லாம் அறிவர்?

19. உலகப் புகழ் பெற்ற HCL கம்பெனி சிவ நாடாரால் நிறுவப்பட்டது என்பதை மறந்தது யார்?

20. நாடார் சமூகத்திற்கே துரோகம் இழைத்த திராவிட கட்சிகளுக்கே ஓட்டுப் போட்டு முதல்வர் சீட்டில் அழகு பார்த்தவர்கள் யார்?

21. தலைசிறந்த வணிக வங்கியான  தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நாடாரின் சொத்து!

22. வாய்ப்பூட்டு சட்ட வீரர் வேலுச்சாமி நாடாரை நினைவு கூறாதது யார்?

23. மொழிப்போர் தியாகி  தாளமுத்து நாடாரை புறந்தள்ளியது யார்?

24. நாடார் என்று தனிப்பட்டு தன் சமூகத்திற்கு செய்யாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் உழைத்த காமராஜரை சாதி சங்க போஸ்டர்களில் அடித்து அவரை சாதித் தலைவராக ஆக்கியது யார்?

 25.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குலசேகரப பட்டினத்தில் லோன் துரையை சுட்டுக் கொன்று தூக்கு மேடையை முத்தமிட்ட காசிராஜன் நாடார் மற்றும் ராஜகோபால் நாடாரை நம் சந்ததிகளுக்கு காட்டினோமா?

26. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நாடாரை மறந்தது யார்?

  இந்த கேள்விகளை யோசித்துப் பார்! உன் நாடார் இனத்தை நீயே உலகிற்கு காட்டலாம் தலை சிறந்த இனமாக!

 *வெல்க நாடார் இனம்!*
குரு. மனோகரவேல் அண்ணாச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...