”வரவர மாமியார் கழுதை போல் ஆனாளாம்”
இந்த பழமொழியில் வரும் கழுதை என்ற சொல் உண்மையில் கயிதை என்பதாகும்.
சென்னை தமிழில் கழுதையை கயிதை என்று சொல்வதால் யாரோ, ’வரவர மாமியார் கயிதை போல ஆனாளாம்” என்ற சுத்தமான தமிழ் பழமொழியை கொச்சைத் தமிழ் என்று நினைத்து ”வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்’ என்று மாற்றியிருக்க வேண்டும்!
கயிதை என்பது ஊமத்தங்காயைக் குறிக்கும். ஊமத்தையானது செடியில் பூவாக மலரும் பொழுது கொள்ளை அழகாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். சிறிது நாட்களில் அது காயாக மாறும்பொழுது அதைச் சுற்றிலும் பயமுறுத்தும் முட்கள் முளைத்து பிறகு கொடிய விஷம் கொண்ட காயாக மாறும். அதுபோலவே திருமணம் ஆன புதிதில் மாமியார் கல்கண்டாக பேசுவார் பிறகு முள்ளாக குத்துவார் என்பதுதான் இந்த பழமொழியின் பொருளாகும்.
இருந்தாலும் மருமகனை கவனிக்கும் அளவிற்கு மருமகளை மாமியார் கவனிப்பதில்லை என்பதால் இந்தப் பழமொழி மருமகள்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்தப் படத்திற்கும் இந்த பழமொழிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லைதான். இருந்தாலும் மாமியார் பற்றி சொல்லவருவதால் இந்த பழமொழி என் நினைவுக்கு வந்தது.
தகவல் பெரியாண்டவன், ஈரோடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக