16 செப்டம்பர், 2013

நீதிக் கதைகள்

குருவியும் குரங்குகளும்
காட்டில் குளிர்காலம். அந்தக் காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த குரங்குகள் தாளமுடியாத குளிரால் தவித்துத் தத்தளிக்கும்போது, அவை இருந்த இடத்தில் ஒரு மின்மினிப் பூச்சி வந்து சேர்ந்தது. உடனே குரங்குகள் தாவிச் சென்று அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்தன. அதை ஓர் இடத்தில் விட்டு, அதன்மேல் இலைச் சருகுகளைக் குவித்தன. ஒரு குரங்கு மின்மினிப் பூச்சியை வாயால் ஊதி அதன் உதவியால் இலைச் சருகுகளைப் பற்றவைக்க முயன்றது. ஊதி ஊதி மூச்சுச் திணறியது.
ஒரு குரங்கால் முடியாதபோது, மற்றொரு குரங்கு மின்மினித் தீயை ஊதிக் கொழுந்துவிட்டு எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டது. இவ்விதமே குரங்குகள் எல்லாம் மின்மினித் தீயின் உதவியால் தீ மூட்டிக் குளிர்காயும் பணியில் ஈடுபட்டிருந்தன.
இதனைக் கண்ட ஒரு குருவி மின்மினிப் பூச்சியின் ஒளியை நெருப்பு என நினைத்து குரங்குகள் குளிர்காய முயல்வதை உணர்ந்தது. இம்மூடர்களுக்கு உண்மையை விளக்க எண்ணிய குருவி, தான் இருந்த மரத்திலிருந்து கீழே இறங்கி குரங்குகளை அணுகியது.
"நன்பர்களே நீங்கள் ஊதுவது தீப்பொறி அல்ல. மின்மினியின் ஒளி. இந்த ஒளி தீ இல்லாத ஒளி. இதைக்கொண்டு ஒரு பொழுதும் உங்களால் தீ மூட்டவே முடியாது. ஏன் வீண் வேலையில் ஈடுபட்டு வருகிறீர்கள்?" என்று எடுத்துக் கூறியது குருவி.
மூடக் குரங்குகள் குருவியின் பேச்சைக் கேட்கவே இல்லை. தீ மூட்டும் வேலையை முன்பைவிட முனைப்பாகச் செய்தன.
புத்தி புகட்ட வந்த குருவியோ இடைவிடாமல் "மின்மினி தீ பற்றாது, பாடுபட்டுப் பலன் இல்லை" என்று கூறிக்கொண்டே இருந்தது. இதனால் அந்த முரட்டுக் குரங்குகளுக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. அவை துள்ளிக் குதித்துப் பறவையைப் பிடித்து, " இனி அயலார் அலுவலில் தலையிடாதே!" என்று அதன் தலையைத் திருகி எறிந்தன.
மதி கெட்ட மந்திகளுக்குப் புத்தி புகட்ட முயன்றதன் பலனாக அப்பாவிக் குருவி தன் உயிரையே இழக்க நேர்ந்தது!

- விக்கிநூல்களில் இருந்து...

நீதிக் கதைகள்

அன்னமாக மாற முயன்ற அண்டங்காக்கை

அண்டங்காக்கை ஒன்று தாமரை நிறைந்த குளம் ஒன்றை அடைந்தது. அதில் அழகான அன்னப் பறவைகள் நீந்திச் சென்று கொண்டிருந்தன. அன்னங்களிடம் பால்போன்ற வெண்மையான சிறகுகளைக் கண்ட அண்டங்காக்கை, தனக்கும் அதுபோல வெள்ளைச் சிறகுகள் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்றும், தனக்கு மட்டும் கறுமையாகவும், சாம்பல் நிறமாகவும் ஏன் சிறகுகள் இருக்கவேண்டும் என்றும் சிந்திக்கத் தொடங்கியது

அடிக்கடி அன்னப் பறவைகள் பூச்சி புழுக்களைப் பிடிக்க நீருக்குள் மூழ்கி வெளிவந்து கொண்டிருந்தன. இதைக் கண்ட காக்கை, ' ஆகா! அன்னப் பறவையின் சிறகுகள் வெண்மையாக இருப்பதன் காரணம் இப்போது விளங்கிவிட்டது. அடிக்கடி அன்னப் பறவைகள் சீரில் குளித்துக் கொண்டேயிருப்பதால்தான் அவைகளின் சிறகுகள் தூசி, தும்பு படியாமல் வெண்மையாக இருக்கின்றன. நாம் அடிக்கடி குளிக்காமல் இருப்பதால் காற்றிலுள்ள தூசி படிந்து, நம் சிறகுகள் பழுப்பேறிவிட்டன போலும்' என்ற முடிவுக்கு வந்தது.


உடனே காக்கை குளக்கரைக்குச் சென்றது; குளிக்கத்தொடங்கியது; ஒருமுறை, பலமுறை எனக் குளித்தது; தன் சிறகுகள் வெளுத்துவிட்டனவா என்று ஒவ்வொரு முறையும் பார்த்தவண்ணம் இருந்தது. சிறகுகள் வெளுக்கவில்லை. ஆனால், காக்கை குளிப்பதை விடவில்லை. 'குளித்துக்கொண்டே இருந்தால் சிறகுகள் வெளுத்துவிடும்' என்று இடைவிடாது குளித்துக்கொண்டே இருந்தது. சிறகுகள் வெளுக்கவில்லை. ஆனால், காக்கை காய்ச்சல் கண்டு இறந்தது.

- விக்கிநூல்களில் இருந்து...

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...