மணல் - வாழ்கை அணுகுமுறை தத்துவம்.
தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய
வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர் கையில்
ஒரு சிறியப் பெட்டி.
பேராசிரியர் அந்தப் பெட்டியைத் திறந்தார்.
ஒரு மாணவனை அழைத்தார்.
இது என்ன? தெரிகிறதா?
‘மணல்.’
உன்னால இதைக் கையில அள்ளமுடியுமா?
ஓ, முடியுமே! அவன் கை நிறைய மணலை
அள்ளிக் காண்பித்தான். மீண்டும் அதைப்
பெட்டியிலேயே போட்டான்.
இப்போ நீ இந்த மணலைக் கையில எடுத்து
அழுத்திப் பிடிச்சுக்கோ. ஒரு சின்னத் துளிகூடக்
கீழே சிந்தக்கூடாது என்றார் பேராசிரியர்.
அந்த மாணவன் முகத்தில் லேசான பதற்றம்.
கைப்பிடி மணலை அள்ளி எடுத்து அழுத்தினான்.
அது அவனது விரல்களுக்கு நடுவே வழிந்து
சிதறியது...எல்லோரும் சிரித்தார்கள்.
கவலைப்படாதே. மறுபடி முயற்சி பண்ணு!
என்றார் பேராசிரியர்.
இந்தமுறை இன்னும் நல்லா அழுத்திப் பாரு
என்று ஊக்குவித்தார். மாணவன் மீண்டும்
மணலை அள்ளினான். அதை அழுத்திப் பிடிக்க முயன்றான், அது இன்னும் வேகமாகச் சிதறியது.
இப்போது பேராசிரியர் இன்னொரு
மாணவனை அழைத்தார்.
நீ இந்த மணலைக் கீழே சிந்தாம கையில
வெச்சிருக்கணும்ன்னா என்ன செய்வே?
அழுத்தாம லேசாப் பிடிச்சுக்குவேன் சார்
என்றான் அவன். ஏனென்றால் நான் அழுத்த அழுத்த மணல் இன்னும் வேகமா வெளியே போகும்.
‘எக்ஸாக்ட்லி’ என்று புன்னகை செய்தார் பேராசிரியர்.
ஜென் வாழ்க்கையோட ஒரு முக்கியமான கோட்பாடு இது.
நாம் ஒரு நெகட்டிவ் விஷயத்தை நினைத்து மேலும் மேலும் கவலைப்படுகிறபோது நம்மையும் அறியாமல் அதற்கு கூடுதல் ஆற்றலைக் கொடுத்து விடுகிறோம்.
அது நிஜமாவே நடந்துவிடுவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி விடுகிறோம்.
அதற்குப் பதிலாக மணலை அழுத்தாமல்
பிடிக்கப் பழகினால், எதையும் ரிலாக்ஸாக
அணுகத் தெரிந்துக் கொண்டால் எந்தக்
கவலையும் பெரிய சுமையாகத் தோன்றாது.
எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் சுலபமாக
சந்தித்து சரி பண்ணி விடலாம்.