ஐந்து வயது வரை எல்லாக் குழந்தைகளும் சில நேரங்களில் திக்கித்தான் பேசும். அதன் பிறகு 90% குழந்தைகள் நன்றாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள். மீதி உள்ள பெரும்பாலானவர்கள், எட்டு வயதிற்குள் நன்றாகவே பேச ஆரம்பித்து விடுவார்கள். மீதமுள்ள 1% குழந்தைகள் மட்டுமே எட்டு வயதிற்கு பிறகும் திக்கியே பேசுவார்கள். மூளையில் கட்டி இல்லாமலும் மற்றும் தலையில் அடி படாமலும் இருந்து திக்கிப் பேசினால் கவலைப் படாதீர்கள். மூளையில் கட்டி இருந்து திக்கினாலோ அல்லது தலையில் அடிபட்டு திக்கிப் பேசினாலோ உடனடியாக நரம்பியல் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
திக்குவாய் பிரச்சனை மன ரீதியான மற்றும் பயத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் மட்டும் அல்ல. எதோ ஒரு சிறு நரம்பு பாதிப்பால் திக்கிப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்களால் மெதுவாகப் பேச இயலாது.
அவர்களுக்கு வயது ஆக ஆக தாழ்வு மனப்பான்மை, பயம் மற்றும் குற்ற உணர்வு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு மன ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
பேச்சுப் பயிற்சி மற்றும் திக்குவாய் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் அவர்களால் இந்த குறையில் இருந்து விடுபடலாம். ஆனால் அதற்கு குறைந்த பட்சம் 2 முதல் 3 வருடங்கள் ஆகும்.
என்னுடைய அனுபவத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், பள்ளியில் படிக்கும் வரை மாணவர்கள் /மாணவிகள் விளையாட்டு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதினாலும் போதிய அனுபவம் இல்லாததாலும் அவர்களுக்கு பேச்சுப் பயிற்சியோ மற்றும் மனமாற்ற ஆலோசனைகளோ கூற முடியாது.
பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரி செல்லும் போதுதான் அவர்களாகவே அவர்களது பேச்சுக் குறையை போக்க ஆர்வம் காட்டுவார்கள். அப்போது அவர்களுக்கு பேச்சுப் பயிற்சியும் மனநல ஆலோசனையும் சொல்லிக் கொடுத்தால் ஒரு வருடத்தில் திக்காமல் நன்றாக பேசுவார்கள்.
பெற்றார்கள் அவர்களது குழந்தை பேசும்போது படும் கஷ்டத்தைப் பார்த்து 15 வருடங்கள் காத்திருக்க மாட்டார்கள். மேலும் சிறிய வயதிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் நன்றாக பேசி இருப்பார்களோ என்ற ஆதங்கம் எழுவது இயற்கை. அவர்கள் மன திருப்திக்காக காது, மூக்கு மற்றும் தொண்டை (ENT) மருத்துவ நிபுணர் மற்றும் பேச்சுப் பயிற்சியாளரின் (Speech Therapist) உதவிகளை நாடலாம். முன்னேற்றம் தெரிந்தால் தொடர்ந்து காண்பிக்கலாம். இல்லையென்றால் வீணாக செலவு செய்ய வேண்டாம். பிள்ளைக்கு ஒரு 15 வயது வரும் வரை காத்திருக்க வேண்டி வரும்.
உங்கள் குழந்தை 15 வயது வரும் வரை அவர்கள் திக்கிப் பேசுவதனால் மன ரீதியாக பாதிப்பு ஏற்படாதவாறு பெற்றோர்கள்தான் பார்த்து கொள்ள வேண்டும்.
அவர்கள் தனது குழந்தையிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழ் காணும் அறிவுரைகள் தரப் பட்டுள்ளன.
1. குழந்தையின் பேச்சுத் திறன் பற்றி நீங்கள் ரொம்பக் கவலைப் படுவதைக் அவர்களிடம் காட்டிக் கொள்ளாதீர்கள்.
2. ஆரோக்கிய விசயத்தில் கவனமாக இருங்கள். சத்தான உணவு, தேவையான தூக்கம் என அவர்களது உடல் ஆரோக்கியத்தைப் பராமரியுங்கள்.
3. குழந்தை பேசுகையில் கவனமுடன் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறான் என்பதுதான் உங்களுக்கு முக்கியமே தவிர, எப்படிச் சொல்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
4. மூச்சுப் பயிற்சி, உடல் மொழியில் சில மாற்றங்கள் போன்ற சின்னச் சின்ன நுணுக்கங்களைத் தொடர்ந்து செய்ய வையுங்கள்.
5. அன்னியர் முன்னால் பேசிக்காட்ட சொல்லாதீர்கள். அதே நேரம் அவர்களாகப் பேச ஆசைப்பட்டால், அதை ஊக்குவியுங்கள்.
6. குழந்தை எப்படி இருக்கிறார்களோ அப்படியே, அவர்களது குறைநிறைகளோடு அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
7. குழந்தையின் மீது கொண்ட பரிவால் அவர்களது இயல்பான பொறுப்புகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கத் தேவையில்லை. ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது அவர்களது கடமை என்பதை உணர்த்துங்கள்.
8. குழந்தையின் திக்கல் திடீரென அதிகரித்தால் வீட்டிலோ பள்ளியிலோ அவர்களுக்கு உணர்ச்சி பூர்வமான அழுத்தம் அதிகரிக்கிற்தா என்பதைப் பாருங்கள்.
9. நன்றாகப் பேசும் போது பாராட்டுங்கள். ஆனால் அந்தப் பாராட்டு அவர்கள் பேசும் விஷயங்களுக்காக இருக்க வேண்டுமே தவிர, திக்காமல் பேசுவதற்காகத் தனிப்படப் பாராட்ட வேண்டாம்.
10. ஆரோக்கியமான பொழுது போக்குகளையும், ரசனைகளையும் வளர்த்துக் கொள்ள உதவுங்கள்.
11. ஒரு போதும் வேகமாகப் பேச வேண்டிய கட்டாயத்தை உருவாக்காதீர்கள்.
12. நிதானமான, சீரான வேகத்தோடு கூடிய பேச்சையே ஊக்குவியுங்கள்.
13. ”பேசறதுக்கு முன்னாடியே யோசிச்சுக்கோ”, “மெதுவா/வேகமா பேசு”, “பொறுமையா, முழுசா பேசு” போன்ற தேவையற்ற ஆலோசனைகளைத் தவிருங்கள்.
14. கடினமான வார்த்தைகளுக்குப் பதில் எளிமையான வார்த்தைகளை மாற்றி உபயோகிக்கச் சொல்லாதீர்கள். இதன் மூலம், அச்சொற்களை எதிர்காலத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் பதட்டத்தையும், பயத்தையுமே அதிகரிக்கும்.
15. நீங்களாக வார்த்தைகளை எடுத்துக் கொடுக்காதீர்கள். குழந்தையே தன் வார்த்தைகளைத் தானே கண்டடையட்டும்.
16. பள்ளியிலும், வீட்டிலும் பேசுவதை ஊக்குவியுங்கள்.
17. அன்பு, புரிந்து கொள்ளும் பரிவு, பொறுமை – இந்த மூன்றுமே தாரக மந்திரங்கள். இவற்றோடு உங்கள் குழந்தையை அனுகினால் நிச்சயம் அவனாலும் தெளிவாகப் பேச முடியும்.
நன்றி : https://www.panchumittai.com/2018/12/28/post_103/