கவிதை : நிலவொளி
யாரும் அற்று
தனித்துவிடப்பட்ட மனதிற்கு
வானம் நிறைந்திருக்கும்!
வான்வெளியும்
வான்வெளியும்
நிலவொளியும் தான் தேற்றும்!
தனியாகச் சென்றாலும்
துணையாய் வரும்
வேண்டாம் என்றதை
வெறுத்து ஒதுக்க முடியாது
தண்ணெ வீசும்
அதன் தண்ணொளியே காரணம்
வெறுத்து ஒதுக்க முடியாது
தண்ணெ வீசும்
அதன் தண்ணொளியே காரணம்
பகலெல்லாம் எழும்
சூட்டை, வெப்பத்தை
இரவில் வரும் நிலவொளி தானே
தணிக்குது?
நிலா - எப்போதும் எனக்கு
மழலையாகத் தெரியும்
பிறையாக இருந்தாலும்
மறைவாக இருந்தாலும்
அதன் செயல் யாவும்
எப்போதும் என்னுள்
இணைந்துக்கொள்ளும்
யாரிடமாவது வசமாய் திட்டு வாங்கி
கோபம் கொப்பளிக்க
அமைதியாய் இருக்கும்போது...
மேலும் என்னை யாரோ சீண்டுவதுபோல்
ஓர் உணர்வு எட்டிபார்த்தால்,
நிலா நின்று கொண்டிருக்கும்
கேலியாய் சிரிக்கும்
மென்னியைப் பிடிக்க கையை
எட்டிபோட்டால்
ஓசை எழுப்பாது ஒதுங்கி, பதுங்கிக்
கொள்ளும்
நான் தேட, அது ஒளிய
நான் ஓட, அது பின்தொடர
இப்படியான விளையாட்டில்
எனக்குள் இருந்த கோபம்
வடிந்துவிடும்
நிலா ஒரு அமானுசிய தட்டு
ஏழை எளியோருக்கெல்லாம் அட்சய தட்டு
ரோட்டோரம் வாழ்வோருக்கு ஆகாச
விளக்கு
அவர்கள் வாழ்வை வெளிச்சம் போடும் அதிசய பல்பு
அம்மா சோறு ஊட்டும்போது
பிரம்மிப்பாய் இருந்த நிலா
இன்னும் அதே வளர்ச்சியில்தான் இருக்குது
நான் வளர்ந்து விட்டேன்
பிரம்மிப்பாய் இருந்த நிலா
இன்னும் அதே வளர்ச்சியில்தான் இருக்குது
நான் வளர்ந்து விட்டேன்
நிலாச்சோறு, நிலாக் கூட்டம்
நண்பர்களோடு இருந்த நாள்களை
நாளெல்லாம் நினைவூட்டும் நிலா
நாளெல்லாம் நினைவூட்டும் நிலா
பூமியின் சுழலுக்கு ஏற்ப
சூரியனின் தகதகப்பிற்கு
ஈடுகொடுத்து
பூமி மடியில் மண்டிகிடக்கும்,
பூமியை அண்டிக்கிடக்கும்
அனைவரையும் குளிர்விப்பது
யாரும் செய்யக்கூடிய காரியமா?
யாரும் செய்துவிடும் காரியமா?
பூமி மடியில் மண்டிகிடக்கும்,
பூமியை அண்டிக்கிடக்கும்
அனைவரையும் குளிர்விப்பது
யாரும் செய்யக்கூடிய காரியமா?
யாரும் செய்துவிடும் காரியமா?
இப்படி என்பதற்குள்
நிலா அத்தனையும் செய்துவிட்டு
ஒன்றும் செய்யாததுபோல் மௌனம் காக்கும்
நிலா அத்தனையும் செய்துவிட்டு
ஒன்றும் செய்யாததுபோல் மௌனம் காக்கும்
ஒருவிதத்தில் நிலா ஒரு ஞானி...
அத்தனையும் தன்னுள் பொதித்துக்கொண்டு
மௌனமாய் இருப்பதால், நிலா ஞானிதான்
அத்தனையும் தன்னுள் பொதித்துக்கொண்டு
மௌனமாய் இருப்பதால், நிலா ஞானிதான்
வளர், பிறை என்பதெல்லாம்
நாள்கள் கழிக்க எண்ணப்படுகிற பொழுதுகள்
நாள்கள் கழிக்க எண்ணப்படுகிற பொழுதுகள்
நிலாவைப் பொருத்தவரை
அது வளரவும் இல்லை; தேயவும் இல்லை
அது அப்படியே இருக்கிறது
இன்னும் புத்தம் புதுசாய்
அது அப்படியே இருக்கிறது
இன்னும் புத்தம் புதுசாய்
நிலாக்குள் பாட்டி வடை சுடுகிறாளாம்…
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் ஊறனமாம்...
இன்னும் அந்த பாட்டிக்கு வயசு தீறல
அப்படியே இருக்கு வடையைச் சுட்டபடியே
அப்படியே இருக்கு வடையைச் சுட்டபடியே
ஆம்ஸ்ட்டாங்க் நிலவில் கால் பதித்தாராம்
அவருக்குப்பின் அனைவரும்
இப்போது அங்கே குடியேற திட்டமிட்டு
புறப்பட்டுகொள்ள தயார் நிலையில் இருக்கின்றனர்
இப்போது அங்கே குடியேற திட்டமிட்டு
புறப்பட்டுகொள்ள தயார் நிலையில் இருக்கின்றனர்
நிலவில் மனிதர் குடியேறிவிட்டால்
அதன் தண்ணொளி என்னவாகும்?
உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை
எல்லாம்
வெளிச்சம் போட்டுக் காட்டும் அதன் பவர் எங்கே போகும்?
வெளிச்சம் போட்டுக் காட்டும் அதன் பவர் எங்கே போகும்?
மனிதர் கால்பட்ட இடம்தான்
மாறிவிடுமே?
நிலாவையும் அவன் விட்டுவைப்பானா?
பிட்டு பிட்டு விற்பானா?
இயற்கையாய் இருப்பதை
ஆராய்ச்சி செய்து காய்ச்சி எடுப்பதால் யாருக்கு லாபம்?
ஆராய்ச்சி செய்து காய்ச்சி எடுப்பதால் யாருக்கு லாபம்?
இன்றைய தலைமுறைகளுக்கு
நிலாச்சோறு தெரியவில்லை
நிலா முட்டம் தெரியவில்லை
நிலவொளி கூட காலபோக்கில் தெரியாமல்
போகும்
ஒவ்வொருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும்
நல்ல சிந்தனையை... நல்ல செயலை
எழச் செய்வதும், கலை படைக்கச் செய்வதும் நிலாதான்
அருகில், எதிரில் இருப்பவர்களை
எல்லாம் விரட்டிவிட்டு
திறந்தவெளி வானத்தைப் பாருங்கள்
திறந்தவெளி வானத்தைப் பாருங்கள்
பாலொளி வீசும் பௌர்ணமி பளிர்
சிரிப்போடு காத்திருப்பாள்
அவளோடு அளவளாவுங்கள்
அவளது தண்ணொளி முழுதையும்
உங்கள் மேல் பீச்சியடிப்பாள்
உடம்பிலுள்ள இண்டு இடுக்கெல்லாம்
உங்கள் மேல் பீச்சியடிப்பாள்
உடம்பிலுள்ள இண்டு இடுக்கெல்லாம்
வாங்கி நிரப்பிக் கொள்ளுங்கள்
குழம்பிக் கிடக்கும் மனதிற்குக் குளிரூட்டுவாள்
தவியாய் தவிப்பவர்களுக்குத் தாயாய் இருப்பாள்குறைகளைக் கொடுங்கள்
நிறைகளைத் தருவாள்
நிலா பெண்தான்
பெண்ணால் தான்
இவ்வளவு இனியாகவும், தன்மையாகவும் இருக்க முடியும்
ஆண்களெல்லாம் சற்று ஆசுவாசப்பட்டுக் கொள்ளுங்கள்
ஆணும் ஆணும் சேர்ந்தால் நல்லதா நடக்கும்?
ஓரிரு நிமிடத்திலேயே ஆயிரம்
பொல்லாப்பு முளைக்கும்
அதுபோல் பெண்ணும் பெண்ணும் பத்து நிமிடம்
தனிமைப்பட்டால்
தரையே பிளவுபட்டுவிடும்
அந்தளவுக்கு அள்ளிவிடுவர் ஏச்சும் பேச்சும்
அதனால்தான் ஆணையும் பெண்ணையும்
அருகருகே படைத்து
ஆனந்தமடையுங்கள் என
ஆண்டவன் விட்டுவிட்டான்
சகாக்களே…
சற்றுநேரம் என்னைக்
கவனிங்கள்…
அதோ அங்கே பாருங்கள்
அது அது நிலாதான்
அமாவாசை என்றார்களே?
என்னை நோக்கியே பார்க்கிறாள்
என்னோடு வாருங்கள்
உங்களையும் நோக்குவாள்
உங்களையும்
என்னோடு அழைத்துவரச்
சொல்லி சைகை புரிகிறாள்
தெரிகிறதா? புரிகிறதா?
புலம்பாதீர்கள்
எல்லாரும் அவரவர்
பால்கனிக்கு வாருங்கள்
நிலாவும் நானும்
காத்திருக்கிறோம்
சீக்கிரம்…
விடிந்து விடப் போகிறது
வானம் வடிந்துவிடப் போகிறது
இருள்
விழித்துவிடப் போகிறது