31 ஆகஸ்ட், 2018

பாருக்குள்ளே நல்ல நாடு

- கவிக்கோ அப்துல் ரஹ்மான்

அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.“என்ன குற்றம் செய்தீர்கள்”என்று கேட்டேன்.

ஒவ்வொருவராகச் சொன்னார்கள்...

"எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.'திருடன் திருடன்' என்று கத்தினேன்".- அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள்.

“என் வருமானத்தைக் கேட்டார்கள்,நான் வேலையில்லாப் பட்டாதாரி"என்றேன்- வருமானத்தை மறைத்தாக வழக்குப்போட்டு விட்டார்கள்.

“நான் கரி மூட்டை தூக்கும் கூலி கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில் கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது".-கறுப்பு பணம் வைத்திருந்ததாகக் கைது செய்து விட்டார்கள்.

“என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்".- பிரிவினைவாதி என்று பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்".-அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.

“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச்சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.-சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்ததாக அழைத்துக் கொண்டுவந்து விட்டார்கள்”

“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன்.- அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக அடைத்துப் போட்டுவிட்டார்கள்”

“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”என்று எழுதினேன்.-
“கடத்தல்காரன்” என்று கைது செய்து விட்டார்கள்.

“நான் பத்திரிகை ஆசிரியன். தலையங்கத்தில் உண்மையை எழுதினேன். நாட்டின் ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக் கொண்டுவந்து விட்டார்கள்."

“சுதந்திர தின விழாவில்
‘ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தேன். எழுந்து நிற்க முடியவில்லை.-தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் சிறையில் அடைத்து விட்டார்கள். ”

“அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச் சொன்னான் கண்ணன்” என்று யாரோ கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்பெயர் கண்ணன். “பயங்கரவாதி” என்று என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

நான் வெளியே வந்தேன். சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது.

(கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ‘சுட்டுவிரல்’ கவிதை தொகுப்பிலிருந்து)

30 ஆகஸ்ட், 2018

நல்ல நட்பை இழந்து விடாதீர்கள்!

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் ,
"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா...???"
என்று கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

 3). "அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.*

 👉 *"யாருக்கும் பயனில்லாத,*

👉 *நல்ல விஷயமுமில்லாத,*

👉 *நேரடியாக நீங்கள் பார்க்காத,*

*என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

*நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.*

👉 *பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,
வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!* 

நானும் என்றும் இழக்க மாட்டேன்..... 

நானும் என்றும் இழக்க மட்டேன்..... 
கண்ணதாசனின் இல்லற தர்மம்

திரு. கண்ணதாசன் அவர்களின் 'நெஞ்சுக்கு நிம்மதி' புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..?

தகராறு இல்லாத
குடும்பம் இல்லை...
வீட்டுக்கு வீடு வாசப் படி...
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கவலை...
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால், அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை.

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலை யென்றால்,
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு,
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு.

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு.
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு.

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு.
பிரச்சினை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.
ஆக, அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும், நாம் மட்டும்தான் கஷ்டப்படுவது போலவும் பிரமை வேண்டாம்.

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிரச்சினையோடு வரக் கூடாது.
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வரவேற்க கூடாது.

கணவர் எதையும் அடித்துச் சொல்லக் கூடாது
மனைவி எதையும் இடித்துப் பேசக் கூடாது

"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் " என்று மனைவி சொன்னால்,
"எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால்தான் பிரச்சினை.
தன் தவறை ஒத்துக்கொண்டு
"சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது.

"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்,
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான். நீங்க உங்க அம்மா வீட்டுக்குப் போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால்தான் பூகம்பம் ஆரம்பம்.
"இன்னிக்கு உடம்புக்கு முடில. நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...

மனைவி புது புடவை உடுத்தினால் "இந்த புடவை நன்றாக இருக்கு. அழகா இருக்கே" என்று சொல்லனும்.
கணவன் வெளியிலிருந்து வரும்போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது. எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்.

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கனும்,
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கனும்.

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி.
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாகக் கூறினால் மனைவிக்கு நிம்மதி.

BedRoom இல் Board Room இல் பேசுவதுபோல் பேசக் கூடாது. கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது.

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள் சரி செய்யப்பட்டு சேர்ந்துவிட வேண்டும்.

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம், வார்த்தைகளில் ஜாக்கிரதை.

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.

முள்ளால் குத்தின காயம் ஆறிடும்.
சொல்லால் குத்தினால் ஆறவே ஆறாது.

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்.

இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்.
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்.

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் " என்றும்,
"கணவன் தானே பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது, உடல் வலிக்காது, ஊர் சிரிக்காது.

வாழ்க இல்லறம்.

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...