19 ஆகஸ்ட், 2019

காஷ்மீர்: நேற்று இன்று நாளை



மோடி
மோடி


26, அக், 1947 மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு, எனது மாநிலத்தில் தற்போது நிலவும் சூழலையும் அவசர நிலையையும் கருத்தில் கொண்டு இந்திய அரசாட்சியிடம் உதவி கோருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது இந்த முடிவின்படி இந்திய அரசால் அதன் பகுதியாக அங்கீகரிக்கப்படுவதற்கான ஆவணங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
- ஹரிசிங்


காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

ஜம்மு காஷ்மீர் சுதேசி அரசின் கடைசி மன்னரான மகாராஜா ஹரிசிங், இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மவுண்ட்பேட்டனுக்கு எழுதிய இந்தக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வரையறுத்து அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் ஒப்புதலுடன் 1949-ல் நிறைவேற்றியது.

காஷ்மீரின் தன்னாட்சி சுதந்திரத்தை நிலைநிறுத்தும் விதமாக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் காஷ்மீர் பிராந்திய பிரதமர் ஷேக் அப்துல்லா இருவரும் 1954-ம் ஆண்டு பேச்சுவார்த்தை மேற்கொண்டு, 370 மற்றும் 35-ஏ சட்டப்பிரிவு ஆகியன இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அப்போது நேரு மக்களவையில் பேசியது...
‘‘காஷ்மீரில் மகாராஜாக்கள் காலம் தொடங்கியே வெளிநபர்கள் ஊடுருவ முடியாத வகையிலான சில சட்டதிட்டங்கள் அமலில் இருக்கின்றன. அதன்படி வெளிநபர்கள் யாரும் காஷ்மீரில் நிலம் வாங்கவோ அல்லது அதன்மீது உரிமை கொள்ளவோ முடியாது. அரசரின் இந்தச் சட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள தற்போதைய ஜம்மு அரசு தீவிரமாக முனைகிறது. தங்களிடம் பணம் இருக்கிறது / பணம் மட்டுமே இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக காஷ்மீரி நிலங்களைக் கையகப்படுத்த முனையும் நபர்களைக் கண்டு அவர்கள் அஞ்சு கிறார்கள். அவர்களது அச்சமும் சரியானதே. ஜம்மு காஷ்மீர் சுதேசி மாகாணத்தின் சட்டங்களைத் தளர்த்த அவர்கள் ஒப்பு
கொண்டாலும் வெளி நபர்கள் நிலங்களைக் கையகப்படுத்துவது குறித்த முன்னெச்சரிக்கை யுடன் இருக்கிறார்கள். அதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம். அதன்படி அங்கிருக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் யார், அவர்களுக்கான நிலம், சேவை மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் அவர்களுக்கு என்ன உரிமை வழங்கப்படும் என்பதை ஜம்மு காஷ்மீர் சட்டமன்றமே முடிவு செய்யும்.”
இப்படிக் கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ இரண்டும் இப்போதைய பா.ஜ.க அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அறிவிப்பு வெளியான இரு நாள்களுக்கு முன்பே காஷ்மீரில் அதற்கான அறிகுறிகள் தெரிந்துவிட்டன.


காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

காஷ்மீரின் இரு முக்கியத் தலைவர்களான உமர் அப்துல்லாவும், மெஹபூபா முப்தியும் தாங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தனர். “அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்த காஷ்மீர் மக்களுக்கு இதுதான் கதியா? விழித்தெழு இந்தியமே” என்று மெஹபூபா ஆக்ரோஷமாகத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அவர்களிடமிருந்து வந்த கடைசித் தொடர்பும் அந்த ட்விட்டர் பதிவு மட்டும்தான். காஷ்மீரில் 144 தடைச்சட்டமும் அதற்கடுத்து அமல்படுத்தப்பட்டது.

அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் உடனடியாக காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இப்படியான பரபரப்பு களுக்கிடையேதான் அமித் ஷா தலைமையிலான கேபினெட் அமைச்சரவை கூடி எடுத்த முடிவு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டது.


காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கும், அங்குள்ள சட்டப்பேரவைக்கும், குடியுரிமை பெற்ற மக்களுக்கும் தனித்துவமான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் 35 ஏ இரண்டும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் இனிமேல் அங்கு அசையாச்சொத்துகளைக் காஷ்மீரிகள் அல்லாதவர்களும் வாங்கலாம்; தொழில் தொடங்கலாம். ஆறு ஆண்டுகளாக இருந்த சட்டப்பேரவையின் பதவிக்காலமும் இனி ஐந்தாண்டாகக் குறைக்கப்படுகிறது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் இரு பிரிவுகளையும் அகற்ற வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நெடுநாள் கனவு. இப்போது அசுர பலத்துடன் பெரும்பான்மை கிடைத்துள்ளதால் அதை நிறைவேற்றியுள்ளது பா.ஜ.க. மேலும், ஒருங்கிணைந்த காஷ்மீரை ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது மத்திய அரசு. இதில் ஜம்மு - காஷ்மீர் மட்டும்தான், புதுச்சேரியைப்போல் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் யூனியன் பிரதேசம். லடாக் ‘சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசம்’ என்று அறிவித்துள்ளது. ‘இயல்பு நிலைக்குத் திரும்பும்போது ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கையை அ.தி.மு.க, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதரித்துள்ளன. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோ, தி.மு.க-வின் திருச்சி சிவா ஆகியோர் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.


காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

‘`அஹிம்சையை வலியுறுத்தும் தேசம் தேர்ந்தெடுக்கும் வழி இது இல்லை” என்கிறார் ‘பாகிஸ்தான் - இந்தியாவுக்கான அமைதி மற்றும் ஜனநாயகக் கூட்டமைப்பி’ன் இந்தியப் பிரிவுப் பொதுச் செயலாளர் விஜயன். “பிரிவு 370 காஷ்மீர் மக்களின் உணர்வோடு இணைந்த ஒன்று. காஷ்மீர் சட்டப்பேரவையில் இதுகுறித்துக் கலந்தாலோசனையோ விவாதமோ நடைபெறாமல் சிறப்பு அந்தஸ்து குறித்தான மசோதாவை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது. ஏற்கெனவே பெல்லட் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் காஷ்மீரில் இந்த முடிவு மேலும் வன்முறையைத் தூண்டும். இதில் இவ்வளவு அவசரகதியில் நடவடிக்கை எடுப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?” என்கிறார்.

‘காஷ்மீர் டைம்ஸ்’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியரும் எழுத்தாளருமான அனுராதா பஹ்சின் ‘‘நான் தற்போது ஜம்மு பகுதியில் இருக்கிறேன். இது இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இயல்பாகவே இங்கே இருக்கும் மக்கள், குறிப்பாக பா.ஜ.க-வினர் இந்தச் சிறப்பு அந்தஸ்து ரத்து முடிவை வரவேற்கிறார்கள். டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொழில்முனைவோர் காஷ்மீரில் தொழில் தொடங்க ஏற்கெனவே ஆர்வம் காட்டிவருகிறார்கள். இந்தச் சூழலில் அவர்கள் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கைவிட ஜம்மு பகுதியைத் தங்களுக்கான வர்த்தக மையமாகத் தேர்ந்தெடுக்கவே வாய்ப்புகள் அதிகம். உள்ளூர் மக்கள் ஒருசிலர் அதுகுறித்து மகிழ்ச்சி கொள்கிறார்கள். இங்கு விவசாயம் மற்றும் சுற்றுலாவைத் தவிர வேறு பெரிய வர்த்தகங்கள் கிடையாது. அதிலிருந்து ஈட்டப்படும் பொருளாதாரம் இனி வெளிமாநிலத்தவருடன் பிரித்துக்கொள்ளப்படும் எனும் நிலையில் ஏற்கெனவே துப்பாக்கி முனையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு இது பெரும் நெருக்கடியாகலாம்’’ என்கிறார்.


காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

இப்படியாக இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் கருத்துகள் பரிமாறப்படுகின்றன. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு ஹைதராபாத், திருவிதாங்கூர் சமஸ்தானங்களை அதிரடியாக இந்தியாவுடன் இணைத்த வல்லபபாய் பட்டேலின் நடவடிக்கைக்கு இணையாக இதைக் கொண்டாடுகிறார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள். ஏற்கெனவே பல அதிரடிகளுக்குப் பேர்போன அமித்ஷாவால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

காஷ்மீர்ப் பிரச்னை என்பது இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே தொடரும் பிரச்னை என்றாலும் 80களுக்குப் பிறகுதான் அது தீவிரமானது. ஆயுதம் ஏந்திய குழுக்களின் வன்முறை, காஷ்மீரின் முக்கியத் தொழிலான சுற்றுலாவைக் கடுமையாக பாதித்தது. இங்கிருக்கும் ஆயுதக்குழுக்களில் கணிசமானவர்கள் பாகிஸ்தானால் ஆயுதமும் நிதியுதவியும் அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவலும் நிகழ்ந்தது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவத் துருப்புகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. ஆனால், இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களிடம் அத்துமீறியதாகத் தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சாதாரண மக்களில் சிலர் ராணுவ வண்டிகளை நோக்கியும் ராணுவத்தினரை நோக்கியும் கற்களை வீசுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிப்போனது. ஒருபுறம் ஆயுதக்குழுக்களின் வன்முறை, இன்னொருபுறம் ராணுவத்தின் வன்முறையால் பலியானவர்களின் குடும்பத்திலிருந்து ஆயுதக்குழுக்களுக்குச் செல்வது என்பது சங்கிலித்தொடர் நிகழ்வானது.


காஷ்மீர்: நேற்று இன்று நாளை!
காஷ்மீர் மக்களின் தேசிய இனப்பிரச்னைகளுக்கு அப்பால் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டமும் ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக, சுற்றுலா வணிகம் சிதைவடைந்தது, காஷ்மீர் மக்களின் வாழ்க்கையைக் கடுமையாக பாதித்தது. இப்போது சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் பிரிவுகள் நீக்கப்படுவதன் மூலம் காஷ்மீரில் வெளிமாநில வர்த்தக முதலீடுகள் பெருகும் வாய்ப்புகள் அதிகம். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து பொதுமக்களின் கவனம் போராட்டங்களிலிருந்து திரும்ப வாய்ப்புண்டு என்கிறார்கள். 80களின் மத்தியில் காஷ்மீர்ப் பிரச்னையோடு பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்னையும் இருந்தது. ஆனால், தொடர்ச்சியான தொழில் வளர்ச்சியும் தேர்தல் ஜனநாயக அரசியலும் அங்கு அமைதியைக் கொண்டுவந்ததைச் சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள், காஷ்மீரிலும் இப்படியான அமைதி வரும் வாய்ப்பு உண்டு என்கின்றனர்.
இன்னொருபுறம் ‘காஷ்மீர் பெரு முதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவிடும். தொழில் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையைச் சீர்குலைத்து ரிசார்ட்டுகள் அமைப்பது போன்றவை நடைபெறும் அபாயமும் உண்டு’ என்று சொல்பவர்களும் உண்டு.


காஷ்மீர்: நேற்று இன்று நாளை!

‘மத்திய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றிவிட முடியும் என்றால், இனி அந்த நிலை எந்த மாநிலத்துக்கும் ஏற்படும்தானே? இது ஜனநாயகத்துக்கும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் ஆபத்து’ என்கிற குரல்கள் புறக்கணிக்கத் தக்கவையல்ல.
இதுவரை வன்முறையையும் போராட்டங்களையும் மட்டுமே சந்தித்துக்கொண்டிருந்த காஷ்மீர், இந்த மாற்றங்களுக்குப் பிறகு வளர்ச்சியையும் அமைதியையும் நோக்கி நகருமா அல்லது மத்திய அரசின் இந்த நடவடிக்கையே காஷ்மீரின் அமைதியை மேலும் குலைக்குமா?
காத்திருப்போம்... கவனிப்போம் காஷ்மீரை!

சட்டப்பிரிவு 370 சொல்வது என்ன ?

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு
370-ன் படி, ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்புத் துறைகள் தவிர, பிற துறை சார்ந்த சட்டங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும்பொழுது, அந்தச் சட்டங்கள் ஜம்மு - காஷ்மீரில் உடனடி செயல்பாட்டுக்கு வராது. மாநில அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே அங்கே அமலுக்கு வரும். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளைப் பிற மாநிலத்தவர் வாங்க முடியாது. ஆனால், இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துகள் வாங்கலாம். இதன்படி, அம்மாநிலப் பெண்கள் அந்நிய மாநிலத்தவரைத் திருமணம் செய்துகொண்டால் அங்கு நிலம் வாங்க முடியாது. அதே சமயம் அம்மாநில ஆண்களுக்கு இந்தக் கட்டுப்பாடு கிடையாது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே தனிக்கொடி வைத்துக்கொள்ளும் உரிமையுண்டு. தனி அரசியல் சாசனமும் இருக்கிறது. ஜம்மு -காஷ்மீர் மாநில முதல்வரைக் கலந்தாலோசிக்காமல் அங்கே ஆளுநரை நியமனம் செய்ய முடியாது. இந்தியாவிலேயே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு மட்டுமே பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும்.
இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லைகளைக் கூட்டவும் குறைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகளைக் குறைக்கவோ கூட்டவோ மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது.



சட்டப்பிரிவு 35 A சொல்வது என்ன ?

இது, ஜம்மு- காஷ்மீர் மக்களின் குடியுரிமையை நிர்ணயிக்கும் சட்டப்பிரிவு ஆகும். 1954ஆம் ஆண்டில் 35 A சட்டப்பிரிவு 370 உடன் இணைக்கப்பட்டது. இந்தச் சட்டம் மாநிலத்தின் நிரந்தரக் குடிமக்கள் யார், அவர்களுக்கு என்ன உரிமை என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும், சம உரிமை, சமத்துவம் ஆகியவை பாதிக்காதவாறு, எந்தவொரு சட்டத்தையும் அம்மாநில சட்டப்பேரவை இயற்றிக்கொள்ளலாம் என்ற உரிமையையும் மாநில அரசுக்கு வழங்குகிறது.

நன்றி: ஆனந்த விகடன்,  17.08.2019

17 ஆகஸ்ட், 2019

அத்திவரதர் தரிசனம்

 

கண்டவர் ஒரு கோடி... 

கரப்ஷனோ ஆயிரம்! 


பெருமாளே...  
உனக்கு முன்னாடியே 
இவ்வளவு அநியாயமா?’’


அத்திவரதர்
அத்திவரதர்


த்திவரதரை தரிசித்துவிட்டு வந்த பெரும்பாலான பக்தர்களின் மனக்குமுறல், இதுவாகத்தான் இருந்தது. குறைந்தது ஐந்து மணி நேரமாவது நின்று, அடிபட்டு, மிதிபட்டு அத்திவரதரை நெருங்கும் பக்தர்கள், பெருமாளை தரிசிப்பதற்குள் நொந்துநூலாகிவிட்டனர். அப்பாவி பக்தர்களின் பக்தியைப் பயன்படுத்தி, பல்வேறு தரப்புகளிலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர், 2019, ஜூன் 28-ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு வெளியே கொண்டுவரப்பட்டார். ஜூலை 1-ம் தேதியிலிருந்து வசந்த மண்டபத்தில் மக்களுக்கு தரிசனம் அளித்துவந்தார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வைபவம், இந்தமுறை மிகப்பெரிய அளவில் மக்கள் வரவேற்பைப் பெற்று, ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதற்குள்ளாக ஏகப்பட்ட குளறுபடிகள், காஞ்சிபுரம் நகரத்தையே மூழ்கடித்துவிட்டன. வி.வி.ஐ.பி வரிசையில் ரெளடி வரிச்சியூர் செல்வம் சுவாமியை தரிசித்ததில் தொடங்கி, காவல் ஆய்வாளர் ரமேஷை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னய்யா கடுமையாகத் திட்டும் வீடியோ வரை பரபரப்பைப் பற்றவைத்தன. இப்படியான சூழலில்தான், அத்திவரதர் வைபவத்தில் புழங்கும் தொகை எவ்வளவு, பக்தர்களின் பணத்தை எப்படியெல்லாம் கொள்ளையடித்தார்கள் என்பதை அறிய, களம் இறங்கினோம்.

பொது தரிசனம்


பொது தரிசனம்
காஞ்சிபுரம் நகரவாசி ஒருவர் கூறுகையில், “வைபவத்தின் முதல் நாளான ஜூலை 1-ம் தேதி மட்டும் ஒரு லட்சம் பேர் தரிசித்த நிலையில், அடுத்தடுத்த நாள்களில் சராசரியாக 15,000 பேர் மட்டுமே தரிசித்தனர். இரண்டாவது வாரத்திலிருந்துதான் கூட்டம் அதிகரித்தது. லட்சக்கணக்கான மக்கள் குவிந்தார்கள். ஆனால், அதற்கேற்ற கழிவறை வசதியோ, குடிநீர் வசதியோகூட ஏற்படுத்தப்படவில்லை. மக்களை மந்தையாக ஓர் இடத்தில் ஒன்றுசேர்த்து, ‘வலு இருப்பவர்கள் கோயிலுக்குச் செல்லுங்கள்’ என்பதுபோல் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டது. இந்த வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய 29 கோடி ரூபாயில் மாவட்ட நிர்வாகம் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை.

காஞ்சிபுரம் தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து, வரதராஜப்பெருமாள் கோயில் வரை ஆட்டோவில் செல்ல, 400 முதல் 800 ரூபாய் வரை வசூலித்தார்கள். பைக் டாக்ஸியில் பயணிக்க, 100 ரூபாய் ஆனது. திரும்பி வரவும் இதே அளவு பணத்தைப் பறித்தார்கள். மாவட்ட நிர்வாகம் அறிவித்த மினி பஸ் சேவையை கண்ணில்கூடப் பார்க்க முடிவில்லை. காஞ்சிபுரம் விடுதிகள் அனைத்தையும் கணக்கிட்டால், மொத்தம் 3,000 அறைகள் இருக்கின்றன. அறை வாடகை 10,000 ரூபாய்க்கு குறைவாக எங்குமே கிடைக்கவில்லை.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று முன்னணி ஜவுளி நிறுவனங்கள்தான் வி.ஐ.பி பாஸ்களை ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்த்தன. `10,000 ரூபாய்க்கு புடவை வாங்கினால், பாஸ் இலவசம்’ என்ற மறைமுகச் சலுகையால், இந்த 47 நாளில் மட்டுமே 200 கோடிக்கும் குறையாமல் மூன்று நிறுவனங்களும் லாபம் பார்த்துவிட்டன. தனியார் நிறுவனங்களின் வசம் பாஸ் சென்றது எப்படி? இதுகுறித்து பலர் புகார் அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒரு நாளைக்கு நான்கு லட்சத்துக்கும் குறையாமல் பக்தர்கள் வந்தனர். வி.ஐ.பி பாஸ் மூலம் மட்டுமே சுமார் 50,000 பேர் தரிசிக்கிறார்கள். இந்த பாஸ்கள், பெரும்பாலும் கள்ளச்சந்தையில் 8,000 ரூபாய்க்குக் குறையாமல் விற்கப்பட்டவை. கணக்குப்போட்டால், தொகை தலைசுற்ற வைக்கிறது.

பொது தரிசன வழியைவிட்டால், `50 ரூபாய் சிறப்புக் கட்டண டிக்கெட்’ என்று முதலில் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பிறகு விரைவு தரிசன டிக்கெட்டாக மாற்றி, முதலில் 500 பேருக்கும், இறுதியாக 2,000 பேர் வரையிலும் வழங்கினர். நான்கு லட்சம் பேர் கூடும் வைபவத்துக்கு, வெறும் 2,000 பேருக்கு மட்டும் விரைவு தரிசன டிக்கெட் வரைமுறை ஏன் நிர்ணயிக்கப்பட்டது? ஆன்லைன் மூலமாகப் பதியப்படும் இந்த டிக்கெட்டுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பொதுதரிசனத்தைவிட்டால், கள்ளச்சந்தையில்தான் பாஸ் வாங்க வேண்டும் என்கிற நிலைமையை, மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே உருவாக்கியது. இதுதான் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அஸ்திவாரம்.


அத்திவரதர் தரிசனம்


அத்திவரதர் தரிசனம்
வி.வி.ஐ.பி., வி.ஐ.பி., உபயதாரர் என மூன்று வகையான பாஸ்கள் விநியோகிக்கப்பட்டன. இவை ஒரு நாளைக்கு எவ்வளவு, யாருக்கு விநியோகிக்கப்பட்டன என்கிற கணக்கே இல்லை. ஒரு வி.ஐ.பி பாஸ் 10,000 ரூபாய் என்றாலும், அதை வாங்க வெளிமாநில பக்தர்கள் தயாராக இருந்தார்கள். இவர்களை வளைப்பதற்கு என்றே மாவட்ட அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பட்டர்கள் அனைவரும் புரோக்கர்களாக உலவினர். ஒரு நாளைக்கு பாஸ் விநியோகத்தில் மட்டுமே சுமார் 25 கோடி ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதித்துள்ளனர் என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர். இதுதவிர, ஐந்தாயிரம் வி.ஐ.பி பாஸ்கள், சென்னையில் இருந்த இரண்டு முக்கியப் புள்ளிகள் மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெருக்கமானவர்களிடம் சென்றுவிட்டனவாம். இவை வெளிமாநில பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சந்தான கிருஷ்ணன்

கோயில் உபயதாரரான சந்தான கிருஷ்ணன் கூறுகையில், “என் தந்தை சண்முகப்பிள்ளை அறக்கட்டளை பெயரில், பிரமோற்சவத்தில் 6-ம் நாள் உற்சவமான தங்க சப்பரம் வேணுகோபாலன் திருக்கோலம், மார்கழி பெளர்ணமி திருமஞ்சனம், சங்கராந்தி திருமஞ்சனம், கார்த்திகை அஸ்தம் நித்தியபடி, பங்குனி அஸ்தம் நித்தியபடி, ரதசப்தம் ஆஸ்தானம் ஆகிய உற்சவங்களுக்கு, கடந்த 30 ஆண்டுகளாக பெருமாள் கைங்கரியம் செய்துவருகிறோம். அத்திவரதரை சேவிக்க, சிறப்பு தரிசனம் நுழைவுச்சீட்டு கேட்டு தேவஸ்தானத்தில் விண்ணப்பித்ததற்கு, மாவட்ட ஆட்சியரை அணுகும்படி கூறிவிட்டனர். அங்கு உள்ள அதிகாரிகளிடம் நடையாக நடந்தும் பலன் இல்லை. இதனால், ஜூலை 16-ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு மெயில் செய்தேன். அதற்கும் பதில் இல்லை. எனக்கு உபயதாரர் பாஸ்கூட அளிக்கவில்லை. ‘பெருமாள் கைங்கரியம் செய்து என்ன புண்ணியம்? ஒரு பாஸ்கூட வாங்க முடியவில்லையே’ என்று சொந்தபந்தங்களின் ஏளனப்பேச்சுக்கு ஆளானதுதான் மிச்சம். எல்லாம் அந்தப் பெருமாளுக்கே வெளிச்சம்!” என்றார் வேதனையுடன்.


பக்தர்கள்


பக்தர்கள்
மொத்தம் 47 நாள்களையும் கணக்கிட்டால், 1,175 கோடி ரூபாய் பாஸ் விற்றதிலேயே வருமானம் ஈட்டியுள்ளனர் என்கிறார்கள். முருகனின் பெயர்கொண்ட சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை அதிகாரி வாடகைக்கு எடுத்துள்ள வீட்டை சோதனையிட்டாலே, கோடிக்கணக்கில் லஞ்சப் பணத்தை அள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்ட தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே பணி, வி.ஐ.பி-களை கவனிப்பதுதான். ஜவுளிக்கடை அதிபர் தொடங்கி கார்ப்பரேட் கம்பெனி சி.இ.ஓ-க்கள்  வரை மாவட்ட நிர்வாகம் மூலம் தரிசனம் செய்தார்கள். இவர்களை, தாசில்தார்கள் நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.
இவர்கள்தான் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், கோயிலுக்கு உள்ளே சில பட்டர்கள், இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆட்டம் இன்னும் அதிகம். அத்திவரதருக்கு முன்னே அமரவைப்பதற்கு 50,000 ரூபாய், நிற்பதற்கு 30,000 ரூபாய், அத்திவரதர் கழுத்தில் உள்ள மாலைக்கு 20,000 ரூபாய், போட்டோ எடுத்துக்கொள்ள 10,000 ரூபாய் என, எல்லாவற்றிலும் வசூல் வேட்டையாடியதாக குற்றச்சாட்டு உள்ளது. பக்தர்கள் செல்லும் வரிசையில், போதிய அளவில் உண்டியல்கள் வைக்கப்படவில்லை. இதனால், காணிக்கையை பட்டர்கள் வைத்திருக்கும் தட்டில் மட்டுமே செலுத்தும்படி பார்த்துக் கொண்டார்கள். காணிக்கையாக 100 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையில் தாராளமாகச் செலுத்தப்பட்டது. பல பக்தர்கள், நகைகளை வழங்கினர். அவையெல்லாம் பெருமாளுக்குச் சென்றனவா அல்லது பட்டர்களும் அதிகாரிகளும் பங்கு பிரித்துக்கொண்டார்களா?” என்று பொங்கினார் அந்த நகரவாசி.

காவல் ஆய்வாளரை தரக்குறைவாக விமர்சித்த குற்றச்சாட்டில், மாவட்ட ஆட்சியர்மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆட்சியர் பொன்னய்யா மீது, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் பலர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். ராமேஸ்வரம் டவுன் காவல்நிலையத்தில் புகார் பெறப்பட்டு, சி.எஸ்.ஆர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்தெல்லாம் விளக்கமறிய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னய்யாவை தொடர்புகொண்டோம். “சார், அத்திவரதர் வைபவத்தில் பிஸியாக இருப்பதால், இப்போது பேச முடியாது’’ என்று அவரது அலுவலகத்திலிருந்து பதில் வந்தது. தொடர்ந்து இதுகுறித்து கேள்விகள் எழுப்பி, பொன்னய்யாவுக்கு அவரது அதிகாரபூர்வ அரசு மின்னஞ்சல் முகவரியான collrkpm@nic.in-க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். அதற்கும் பதில் இல்லை. தகுந்த, நியாயமான விளக்கம் கொடுத்தால் பிரசுரிக்கிறோம்.

பக்தர்கள் பரிதவிப்பு!

நியாயமாகப் பார்த்தால், கும்பமேளா, மகாமகம் போன்ற வைபவங்களுக்குச் செய்யப்படும் முன்னேற்பாடுகள், கட்டமைப்பு வசதிகள் காஞ்சிபுரத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு போலீஸ் குவிக்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்துவிதமான போக்குவரத்து வசதிகளும் தங்கும் வசதிகளும் அரசு சார்பில் அல்லது மேற்பார்வையில் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 48 நாள் அத்திவரதர் வைபவத்தில் 40-வது நாளில்தான் மக்கள் நிழலில் ஒதுங்கவே ஷெட் அடித்தார்கள். உதாரணத்துக்கு, மேல் திருப்பதியில் எப்போதுமே ஒரு லட்சம் பக்தர்கள் இருப்பார்கள். பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தள்ளுமுள்ளுவைத் தவிர்ப்பதற்காக பக்தர்களை வரிசையில் கொஞ்சம், ஓய்வறைகளில் கொஞ்சம், கோயிலுக்குள் கொஞ்சம் எனப் பிரித்து வைத்திருப்பார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கத்தான் மாவட்ட நிர்வாகமும் அறநிலையத் துறை நிர்வாகமும் இருக்கின்றன. ஆனால், இங்கு அதிகாரிகள் தரப்பு பக்தர்களின் பணத்தை கரைப்பதிலேயே குறியாக இருந்ததுதான் வேதனை.

பாஸ் வாங்கலையோ... பாஸ்!
அத்திவரதர் தரிசன பாஸ் விற்பனை குறித்து, சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலாகிறது. அதில், பக்தர் ஒருவர் ``பாஸ் வேண்டும்’’ என்கிறார். அதற்கு மறுமுனையில், “என்ன பாஸ் வேணும்... வி.வி.ஐ.பி பாஸ் 6,000 ரூபாய் ஆகும். வெளியில 7,000, 8,000 ரூபாய்னு போயிட்டிருக்கு. நம்மகிட்ட 6,000 ரூபாய்க்குக் கிடைக்கும். எட்டு பாஸ் வாங்கினா, ரெண்டு பேரை இலவசமா உடன் அழைச்சுட்டுப் போலாம்” என்று பேரம் பேசுகிறார் ஒருவர்.

நன்றி: ஆனந்த விகடன், 17.08.2019

14 ஆகஸ்ட், 2019

நல்ல மனம் வாழ்க

என் பணி முடிந்து வீடு திரும்பும்போது வழக்கமாக அந்த முதிய பெண்மணியிடம் தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்குமுன் வேண்டியவை ரெடியாக வைத்துவிடுவாள்.

அன்று மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் இருந்தாள்.

என்ன ஆயா! சுறுசுறுப்பே இல்ல !ரொம்ப சோகமா உட்கார்ந்து இருக்கே! ஏன்! என்று கேட்டேன்.



பொண்ண ஆசுபத்திரிலே சேர்க்கணும் ! பிரசவம் இன்னைக்கோ நாளைக்கோ தெரிலே அப்பா! என்றாள்.

சட்டென்று ஏன் பையில் எப்பொழுதும் அவசரத்திற்க்காக வைத்திருக்கும் ஆயிரம் ரூபாயை அவளிடம் நீட்டினேன்.

ஆயா! அவசரத்துக்கு வச்சுக்கோ! அப்புறம் பாக்கலாம்! என்று சொல்லிட்டு போய்ட்டேன் .

அதற்குள் சனி,ஞாயிறு விடுமுறை கழிந்து திங்கள் மாலை வந்தேன்.

ஆயா இல்லை! வேறு ஒரு பெண் இருந்தாள்..ஆனால் என்னுடைய காய்கறிப் பை ரெடியாக இருந்தது.

ஐயா ! உங்க கூட்டரை பார்த்ததும் தெரிஞ்சிக்கிட்டேன்! இந்தாங்க உங்க காய் ,ரெடியா கட்டி வச்சுட்டேன் ! என்று கொடுத்தாள்.

ஐய! மறந்துட்டேன் ! என்று சொல்லி ரெண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து" ஆயா உங்க கிட்ட கொடுக்கச் சொல்லிச்சு " என்று கொடுத்தாள் அந்த பெண்மணி .

என்னம்மா !ஆயாவுக்கு என்ன ஆச்சு ! என்றேன்

"ஆயா ஆசுபத்திரிலேதான் இருக்கு! இன்னம் பொண்ணுக்கு பேறு காலம் இன்னம் ஆவலே" என்றாள்

அந்த ரூபாய் நோட்டுக்களை பார்த்தேன் !.நான் கொடுத்த அதே ரூபாய்கள்தான்! எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகப் போய் விட்டது.

அதற்குள் பக்கத்துக்கு கடை பெண்மணி என்னிடம் பேசுவதற்கு சைகை செய்தாள்.

" நீ அன்னைக்கி நோட்டை கொடுத்துட்டு கூட்டர்லே ஏறி போயிட்டே!

ஆயா அத்தே கைலே வச்சிக்கிணு ரொம்ப நேரம் உக்காந்துகினு இருந்தது!

வழக்கமா வாடிக்கையா ரொம்ப நாளா காய் வாங்கிக்கினு போறாரு !

அவர் கைலெல்லாம் கடன் வாங்கினா மருவாதே இல்ல !அவர் வருவாரு !இத்தக் கொடுத்திடுன்னு சொல்லிட்டுப் போச்சு !செலவு பணத்துக்கு நான் ஏற்பாடு செய்திட்டேன்" என்றாள் .

நினைத்தேன்! அன்றாடம் கஷ்டப்பட்டு ஜீவனம் செய்யும் ஒரு வயதான பெண்மணியின் வைராக்கியம் ,கவுரவம் என்னை பெருமையுடன் சிலிர்க்க வைத்தது!

சிறிது யோசனை செய்தேன்! பிறகு அந்தப் பெண்மணியிடம்

"தப்பா நெனச்சுக்காதே ! இந்தப் பணத்தை நீ கொடுத்ததாக இருக்கட்டும் .என்று சொல்லி இன்னும் ஒரு ஆயிரம் சேர்த்துக் கொடுத்தேன் அவளிடம் .

இதை அவளிடம் கேட்காதே ! நீயும் எனக்குத் தரவேண்டாம் " என்றேன்.

அந்தப் பெண்மணி கொஞ்ச நேரம் யோசனை செய்தாள் .பிறகு என்னைப் பார்த்தாள்.

யப்பா! உனக்கு ரொம்ப நல்ல மனசு! பிள்ளை குட்டியோட எப்பவும் சந்தோஷமா இருப்பே! இந்த பணம் தேவை இல்லே ! நான் கொடுத்திட்டேன் ! எப்படியாச்சும் எங்க செலவே நாங்க சுதாரிச்சுருவோம்" என்று என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள்.

நான் மிகவும் அசந்து போய்ட்டேன் .

என்ன வில் பவர்! என்ன தன்னடக்கம் கலந்த சுய கவுரவம் !

தன் மானமும் மனிதநேயமும் இங்கே தலை நிமிர்ந்து வாழ்கிறது !

சட்டென்று என் நண்பன் ஞாபகம் வந்தது .இதே மாதிரி அக்ஷய திருதிநாள் . அவனிடமிருந்து போன் வந்தது ."நான் டிநகர்லே நகைக்கடையிலிருந்து பேசறேன் .பணம் போறலே ! கிரெடிட் கார்டும்

வேல செய்யலே ! உடனே அட்லீஸ்ட் பத்தாயிரம் ரூபாயோட வந்து என்னைக் காப்பாத்து! என்றான் .

நான் என் மனைவியிடம் கூட சொல்லாமல் ஓடினேன்! வருஷம் இரண்டாகி இப்போ மூணாவது அக்ஷய திரிதி கூட போயாச்சு !

அவனும் பணத்தைப் பற்றி வாயத் திறக்கலே ! நானும் கேட்டால் கவுரவ குறைவு என்று கேட்க்காமே இருக்கேன்! இது வசதி படைத்தவர்கள் விவகாரம் ! மௌனமான வேதனைகள் !

அன்று இரவு என் மனைவியிடம் காய்கறி ஆயாவைப் பற்றி சொன்னேன்.மனைவி உடன் சொன்னாள்.

என்ன தயக்கம் !நேரா ஆஸ்பத்ரிக்குப் போவோம் .நான் விசாரிக்கிறேன் அங்கு ஆகும் சிலவை நாம் அவளுக்குத் தெரியாமல் கட்டி விடுவோம். வாருங்கள் .என்றாள் .

என் மனைவிக்கு எனக்கு மேல நல்ல மனசு ! வாழ்த்தினேன் .

ஆஸ்பத்ரிக்குப் போனோம். பாவம் அந்தப் பொண்ணுக்கு சிசைரின் வேற !எல்லா பில்லுக்கும் என் மனைவி விசாரித்து செட்டில் பண்ணிவிட்டு ,அவர்களிடம் ஆயா வந்து கேட்டால் இலவச சேவை மூலம் கட்டி விட்டார்கள் என்று சொல்லச் சொல்லி ரிக்வஸ்ட் பண்ணிவிட்டு வந்து விட்டாள் .

ஒரு வாரம் சென்றது ! கடையில் மறுபடியும் ஆயா உட்கார்ந்திருந்தாள் .என்ன ஆயா! சௌக்கிமா இருக்கயா ! மகளுக்கு பேரனா இல்ல பேத்தியா! என்றேன் .

பேரன் பொறந்திருக்கான் அப்பா ! ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க!எல்லாம் நல்லா இருக்காங்க !

யாரோ ஒரு புண்ணியவதி ! மகராசி ! மொத்த செலவையும் கட்டிட்டுப் போய்ட்டாங்களாம் ! அவங்க குடும்பத்தோட நல்லா இருக்கணும் ! என்றாள் .

ரொம்ப சந்தோஷம் ஆயா ! என்று சொல்லி வழக்கமான என் காய்கறிப் பையை தூக்கினேன் .எப்பொழுதையும் விட சற்று கனமாகி இருந்தது! திறந்து பார்த்தேன் ! வழக்கத்தை விட அதிகமான காய்கறி !

தவிர கட்டாக ஒரு மல்லிகை பூச்சரம் சுற்றி வைக்கப் பட்டிருந்தது .

என்ன ஆயா ! இது என்னோட பையா! என்றேன்

ஆமாம் அய்யா! உன்னோடதுதான் ! அந்த பூ பையே உங்க வீட்டுக்கார அம்மா கைலே கொடு ! அவங்க எப்பவும் சந்தோஷமா உன்னோட இருக்கணும்! அவங்க செஞ்ச உபகாரம் என் குடும்பம் என்னைக்குமே மறக்காது!

என்ன ஆயா! என்னவெல்லாமோ சொல்றே!ஆமாம் ராஜா! உன் வீட்டுக்கார அம்மாதான் எல்லாத்தையும் ஏத்துக்கிட்டாங்க ன்னு முதல்லே தெரியாது! அப்புறம் விசாரிச்சு தெரிச்சுக்கிட்டேன் ! என்றாள்

நான் திகைத்துப் போய்விட்டேன் .பிறகு இப்படியே இது தொடராக கூடாது என நினைத்து

சரி ஆயா! என் மனைவிதான் வந்தாங்க! ஆனா நாளையிலிருந்து நீ வழக்கமா கொடுக்கிற காய்தான் கொடுக்கணும்.சரியாய் சில்லறை வாங்கிக்கணும். அதிகமா எல்லாம் கொடுத்தீன்னா அப்புறம் நான்

இங்கே வர மாட்டேன்.உன்ன எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சரி ராஜா ! அப்படியே செய்றேன் !வராம கண்டி இருந்திராதே ! என்றாள்.

வீட்டிற்கு வந்து மனைவியிடம் சொன்னேன்.

என் மனைவி ரொம்ப ஆச்சர்யப் பட்டாள். வாவ் ! வாட் எ கிரேட் லேடி ! என்ன பெருந்தன்மை! என்று அந்தப் பூச்சரத்தை அப்படியே சாமி படத்தில் அலங்காரம் செய்து அவளுக்காக வேண்டிக் கொண்டாள்.

பிறகு என்னிடம் என்னங்க! நாளை மாலை நேரா அங்கே போகாதீங்க !

வீட்டிற்கு வந்து என்னையும் கூட்டிக் கொண்டு போங்க " என்றாள் .

மரு நாள் மாலை! நானும் மனைவியும் ஆயா கடைக்குப் போனோம்.ஆயா என் மனைவியைப் பார்த்ததும்

வாம்மா தாயி!நீ நல்லா இருக்கணும் !ஐயா கூட சௌக்கியமா சந்தோஷமா இருக்கணும் ! எவ்வளவு பெரிய உபகாரம் செஞ்சிருக்கே !

என வாயார வாழ்த்தினாள் .

என் மனைவி சொன்னது " ஆயா! நான் வேத்து மனுஷியா இதை செய்யலே! உனக்கு மூத்த பொண்ணு என்ன செய்யுமோ அதைத்தான் செஞ்சேன் ! ஆனா நாளைலே இருந்து வழக்கமான காய்தான்

கொடுக்கணும் ! மேல்கொண்டு எதையும் தரக் கூடாது ." என்று சொல்லி என்னிடம் என்னங்க! ஸ்கூட்டரை விட்டு ஒரு நிமிஷம் இங்க வாங்க " என்று சொல்லி

ஆயா! எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க ! என்று சொல்லி அவள் காலடியில் வணங்கினோம்.

ஐயோ ! என்னம்மா இது! இப்படியெல்லாம் பண்ணைக் கூடாது அம்மா!

என்று ஆயா பதைபதைத்து கண்களில் நீர் பெருக

நெடு நாள் நல்லா இருங்க ஐயாவும் அம்மாவும் " என்று வாழ்த்தினாள் .

என் மனைவி சொன்னாள். " வணங்கி ஆசீர்வாதம் பெற உன்னைவிட பெரிய உயர்ந்தவர்கள் எங்களுக்கு தெரியாது .உன்னோட அன்பான வாழ்த்துக்கள்தான் எங்களுக்கு தேவை " என்று சொல்லி

"வாங்க போகலாம் " என்று கிளம்பி விட்டாள்.

கண்ணீர் மல்க வாயடைத்து ஆயா அப்படியே உட்கார்ந்திருந்தாள் .

தூய்மையும் பெருந்தன்மையும் உள்ள மனித நேயம் ஒன்று மெய்சிலிர்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

அவளுடைய அருமையும் அப்பழுக்கற்ற பெருந்தன்மையும் உயர்வும்

எவ்வளவு அபூர்வமான எளிதில் காணப் படாத ஒன்று என்பது அவளுக்குத் தெரியாது !

நாங்க வீட்டுக்குப் போகிற வழியில் உள்ள ஒரு கோவிலுக்குப் போனோம் .

வலம் வந்து வணங்கிவிட்டு வெளியில் வரும்போது என் மனைவி பக்கம் கை கூப்பினேன். என்னங்க!சாமி அங்கே இருக்கு! என்னைப் பார்த்து எதுக்கு கும்படறீங்க! என்ன ஆச்சு உங்களுக்கு! கோவிலில் தெய்வத்தை தவிர வேறு எதையும் வணங்கக் கூடாது! இது தெரியுமில்ல !

நான் சொன்னேன்."எனக்கு நல்ல தெரியும்! இறைவன் எங்கும் நிறைந்தவன்.உன் பக்கத்திலும் இருக்கிறான்.உனக்குள்ளும் இருக்கிறான் இவ்வளவு நல்ல உபகாரமும் அன்பு உள்ளம நிறைந்த உன்னிடத்தில் நான் அந்த இறைவனைப் பார்க்கிறேன் !

முகநூலில் மலர்ந்தவை
நுகர மறவார்தீர்

காஷ்மீர் ஒரு புனித பயணம்


காஷ்மீர் குறித்தான இந்தியர்களின் அறியாமை குறிப்பாகத் தமிழர்களின் மூடத்தனம் வேதனைக்குரியது.

இந்தியா இன்றைக்கல்ல, என்றைக்குமே காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. கொடுக்கவும் முடியாது என்பது நிதர்சனம். அவ்வாறு விட்டுக் கொடுக்கும் நாளில் கணக்கற்ற நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து ஜனித்திருக்கும் பாரதவர்ஷம் மரணித்திருக்கும். மீளவே முடியாத படுகுழியில் இந்தியர்கள் வீழ்ந்திருப்பார்கள். ஹிந்துக்கள் இந்த மண்ணிலிருந்து மறைந்திருப்பார்கள்.

ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியவராகக் கருதப்படுகிற, சப்த ரிஷிகளின் ஒருவரான காஷ்யப முனிவர் வாழ்ந்த பகுதியானதால் ‘காஷ்மிர்’ என அழைக்கப்படுவதனை உங்களில் பலர் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருக்கலாம். ஆதிகாலம் தொட்டே காஷ்மிரிகள் சிவனை வணங்கும் தீவிர சைவர்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் அவர்கள் சிவனை வழிபடுவதனை நிறுத்தவில்லை. ஆனால் சென்ற இருநூறாண்டுகளில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் காஷ்மீரத்து பிராமணர்கள் தங்களின் குலப் பெயர்களை (பட், வாணி, தர், கவுல், முன்ஷி, ரெய்னா, கன்னா, ரிஷி....) தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். என்றைக்கேனும் ஒருநாள் தங்கள் சந்ததிகள் மீண்டும் தாங்களின் தாய்மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பி வருவார்கள் என்கிற ஆசையில் அந்த வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அது மறக்கப்பட்டுவிட்டது. கடந்த ஐநூறாண்டுகால தொடர்ச்சியான கட்டாய மதமாற்றங்கள் காஷ்மிரிகளின் கலாச்சாரத்தை வேரறுறுத்துவிட்டது.

ஆற்றின் அரசர்கள்

ஹர்ஷவர்த்தனனின் அரசில் அவருக்கு மந்திரியாக இருந்த கல்ஹானா காஷ்மீரின் வரலாற்றை எழுதியிருக்கிறார். “ஆற்றின் அரசர்கள்” எனப் பொருள்படும் “ராஜதரங்கிணி” காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றைக் குறித்துப் பேசுகிறது. இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஹிந்து அரசகுலங்களைக் குறித்து எழுதப்பட்ட முழுமையான வரலாறு எதுவுமில்லை. பொதுயுகம் 653-இலிருந்து கல்ஹானா வாழ்ந்து மறைந்த 1266-ஆம் வருடம் வரை காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றை விளக்குகிறது “ராஜதரங்கிணி”. அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டுக் காஷ்மீரை அடுத்தவனுக்குத் தூக்கிக் கொடுப்பது போன்ற கோழைத்தனம் வேறொன்றுமில்லை.

இஸ்லாமியர் படையெடுப்பு

காஷ்மீரின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள் பொதுயுகம் 750-ஆம் வருடத்திலிருந்தே துவங்கிவிட்டன. இஸ்லாமிய காலிஃப்பான அல்-மன்சூர், ஹசம்-பின்-அம்ரூ என்பவனை காஷ்மீரின் மீது படையெடுக்க அனுப்பினான். அதுவே காஷ்மீர் மீதான முதல் இஸ்லாமியப் படையெடுப்பு. அந்த முதல் படையெடுப்பில் “காஷ்மீர் ஹிந்து அரசனை அடக்கி, பல ஆயிரக்கணக்கானவர்களை சிறைக் கைதிகளாகவும், அடிமைகளாகவும்” பிடித்துச் சென்றதாகக் குறிப்பிடுகிறான் அம்ரூ.

அதனைத் தொடர்ந்து காஷ்மீரை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் கூட்டம் கூட்டமாக ஹிந்துக்களை மதமாற்றம் செய்தார்கள்.

கட்டாய மதமாற்றம்

முகலாய அரசர்களின் காலத்தில் காஷ்மீரத்தில் கட்டாய மதமாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டன. அதிலும் அவரங்ஸிப்பின் காலத்தில் மதமாற்றம் உச்சத்திற்குச் சென்றது. காஷ்மீர் முழுமையான இஸ்லாமியப் பகுதியாக மாறியதும் அப்போதுதான். இந்தத் துயரைத் தாங்க இயலாத காஷ்மீரி பண்டிட்டுகள் சீக்கிய குருவான தேஜ்பகதூரிடம் சென்று முறையிட்டார்கள். ஹிந்துக்களின் மீதான இந்தக் கொடுமைகளை எதிர்த்தால் கோபமடைந்த அவ்ரங்ஸிப் சீக்கிய மதகுருவான குரு தேஜ்பகதூரையும் அவரது பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்ற வரலாறு இருக்கிறது.

தென்னிந்தியர்கள் தொடர்பு

காஷ்மீரத்திற்கும் தென்னிந்தியாவிற்குமான தொடர்பு மிக ஆழமானது. ஆதிசங்கரரின் காலடிபட்ட மண் அது. சங்கரர் தனது சவுந்தர்யலஹரியை இயற்றிய இடமும் காஷ்மீரம்தான். ஸ்ரீநகருக்கு அவர் வந்து சென்றதற்கு அடையாளமாகக் கட்டப்பட்ட ஆலயம் இருக்கும் இடம் இன்றைக்கும் சங்கராச்சார்யா மலை (சங்கராச்சார்யா ஹில்) என்றே அழைக்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக அவரது காலடிபட்ட இன்னொரு இடமான சாரதா வித்யாபீடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கிறது.

1947க்குப் பிறகு... 

இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-ஆம் வருடம் காஷ்மீரைத் தாக்கிய பாகிஸ்தானிகள் அங்கிருந்து பல ஆயிரக்கணக்கான ஹிந்து மற்றும் சீக்கியப் பெண்களைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள். அந்தப் பெண்களில் பலர் முஸ்லிம்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக் கணக்கானவர்கள் ஜீலம் சந்தையில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டார்கள். தங்களின் மதத்தைச் சாராத காஃபிர்களின் மீது ஜிகாத் செய்து அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களின் பெண்களையும், சொத்துக்களையும் அபகரிப்பது அல்லாவின் கட்டளை என முழுமையாக நம்புகிற முஸ்லிம்கள் இருக்கும் வரை இந்தியாவுக்கும், இந்திய ஹிந்துக்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

கஸ்வா-எ-ஹிந்து

பாகிஸ்தானின் நோக்கம் வெறுமனே இந்தியாவைப் பிடிப்பது மட்டுமல்ல என்பதனை நீங்கள் உணரவேண்டும். அவர்களின் நோக்கம் “கஸ்வா-எ-ஹிந்த்”. “காஃபிர்களின் மீதான இறுதிப் போர் ஹிந்துஸ்தானத்தில் நடக்கும். அதில் வெல்லப்போகிற முஸ்லிம்களை வானத்திலிருந்து அல்லா இறங்கி வந்து வரவேற்று ஜன்னத்திற்கு அழைத்துப் போவார்” என்கிற மாதிரியானதொரு ஹதீசை முகமது நபி சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அதுவே கஸ்வா-எ-ஹிந்த்! காஃபிர் ஹிந்துக்களுக்கு எதிரான புனிதப்போர்!

இதை எத்தனை முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு முஸ்லிமும் நம்புகிறார். பாகிஸ்தானிய அரசியல்வாதிகளும், ஜெனரல்களும் பூரணமாக அதனை நம்புகிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பாகிஸ்தானை முன்னேற்ற எந்தவிதமான முயற்சியும் செய்வதில்லை. ஏனென்றால் இந்தியாவை வென்றால் எல்லா ஹிந்து காஃபிரையும் அடிமையாக வைத்துக் கொள்ளலாம். அவன் சொத்துக்களை அபகரித்து சுகவாழ்வு வாழலாம். கணக்கற்ற காஃபிரி ஹிந்துப் பெண்களுடன் காம சுகம் கொள்ளலாம் என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் சொல்வதை நம்புவதற்கு உங்களுக்குச் சிரமாக இருக்கலாம். என்ன செய்ய? உண்மையை நம்பச் செய்வதுதான் இந்தக் காலத்தில் கடினமாக இருக்கிறது.

இப்படி அல்லாவின் ஆணைப்படி காஷ்மிரைப் பிடித்து, அதன்பிறகு கஸ்வா-எ-ஹிந்த் புனிதப் போர் செய்து இந்தியாவைக் கொள்ளையடித்து சுகவாழ்வு என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பாகிஸ்தானியர்கள், அல்லா தங்களை இப்படி அம்போவெனக் கைவிடுவான் என்று எதிர்பார்க்காததால் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தகவலுக்கு நன்றி
நரேந்திரன் ஐயா.

12 ஆகஸ்ட், 2019

தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும்
வேறு பெயர்கள்

துணைவி
கடகி
கண்ணாட்டி
கற்பாள்
காந்தை
வீட்டுக்காரி
கிருகம்
கிழத்தி
குடும்பினி
பெருமாட்டி
பாரியாள்
பொருளாள்
இல்லத்தரசி
மனையுறுமகள்
வதுகை
வாழ்க்கை
வேட்டாள்
விருந்தனை
உவ்வி
சானி
சீமாட்டி
சூரியை
சையோகை
தம்பிராட்டி
தம்மேய்
தலைமகள்
தாட்டி
தாரம்
மனைவி
நாச்சி
பரவை
பெண்டு
இல்லாள்
மணவாளி
மணவாட்டி
பத்தினி
கோமகள்
தலைவி
அன்பி
இயமானி
தலைமகள்
ஆட்டி
அகமுடையாள்
ஆம்படையாள்
நாயகி
பெண்டாட்டி
மணவாட்டி
ஊழ்த்துணை
மனைத்தக்காள்
வதூ
விருத்தனை
இல்
காந்தை
பாரியை
மகடூஉ
மனைக்கிழத்தி
குலி
வல்லபி
வனிதை
வீட்டாள்
ஆயந்தி
ஊடை

தலை சுத்துதா மக்களே...!!!

இதுதான் நம் தமிழ் மொழியின் சிறப்பு...!!!

இன்றும் ஒவ்வொரு ஊரிலும் இந்தப் பெயரால் மனைவியைக் குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளது.

நன்றி

பொன் அய்யர்சாமி, ஈரோடு

11 ஆகஸ்ட், 2019

லண்டன் பண்பலையில் ஒலிவந்த கவிதைகள்



கவிதை : தரிப்பிடம்


குழந்தை பிறப்புக்கு
கரு தரிப்பிடம்

கருவறை

இருட்டறையாக அது
இருந்தாலும் - அதுதான்
உயிர்களின் பிறப்பிடம்


இவ்வுலகில் உதயமாகும்
ஒவ்வொரு உயிரும்
இருளில் உழன்று பின்
வெளிச்சம் வந்ததுக்கான
சான்று அது


கனவுகள் தரிக்கப்படுவது
இதயத்திலா? கண்களிலா?

தரிக்கப்பிடம்
தயாரிக்கும் இடம்


பாலூட்டி, தாலாட்டி
சோறூட்டி, சீராட்டி
வளர்த்து பின்
வாழ்க்கையைப்
பகிர்ந்தளிக்கப்படுவது
தரிக்கப்பட்ட பின்புதான்


தரிப்பதற்கு நாளாகலாம்;
அதையே தறிப்பதற்குகணப்பொழுதுபோதும்
அத்துனையும் தும்சமாகிவிடும்


பறவைகள் கூடுகட்டுவது
பார்ப்பதற்கு படா ஜோரு
எங்கெங்கேயோ ஓடோடி
பறந்து திரிந்து, பார்த்து பார்த்து
ரகரகமாய் கொண்டுவரும்
சாதனங்களை


அஸ்திவாரம் இல்லாமலேயே
அடுக்குமாடிபோல் வளை பின்னும்
அடுத்தடுத்து வாழ்வதற்கு,
தலைமுறை சொல்லப்படுவதற்கு
அந்தரத்தில் அப்படியொரு
மாளிகையை மகிழ்வோடு கட்டும்


பறவைகள் கூடுகட்டும்போது
பெண் பறவை கருவுற்றிருக்கும்
அதுதான் அதன் வேலையை
துரிதப்படுத்தும்


மரக்கிளையோ அல்லது
மாடி வீட்டு ஜன்னலிலோ
பெண்ணை அமரவைத்து
ஆண் ஆவலாய் பறந்து சென்று
அதற்கு உணவும்
கூடு கட்டுவதற்கு இறகும்
இலகுவானதாய் எடுத்துவரும்


ஓரறிவு உள்ள அந்த ஜீவன்
ஓய்வறியாது தன் பெண்ணாட்டியை
உள்ளங்கையில் வைத்து தாங்கும்

பறவைகள் கணப்பொழுதில் கூடுகட்டுவதில்லை
பார்த்து பார்த்து... பக்குவமாய் ...
மெது மெதுவாய்.. மெத் மெத்
பார்த்துக் கட்டும்


ஆண் படும் பாட்டை
உள்ளுக்குள் நகைப்பு எழ
கண்டும் காணாததுமாய்
கண் கொண்டாது
பார்த்துக் கொண்டே இருக்கும்
பெண் பறவை


பொழுது சாய்வதுபோல் தெரிந்தால்
போதும் என சமாதானம் கொண்டு
கண்டுவதை நிறுத்திக் கொள்ளும்

முழுமையடையாத
அந்த வீட்டுக்குள்
துணையை  அழைத்து வரும்
துணையோ
நாணி கோணி
புதுபெண்போல் நுழைந்து
புதுமனை புகுவிழா செய்துவிடும்


அதற்குப் பின் நிகழும் அத்துணையும்
நாம் காண்பதுதான், ரசித்ததுதான்
படிப்பினையாய்
நம்மை நாம் மாற்றிக் கொண்டதுதான்

இந்த நிகழ்வு
பறவைகளுக்கு மட்டுமல்ல,
மண்ணுலகில் பிறப்பெடுத்துள்ள
அத்துணை உயிர்களும்
இதைத்தான் தொடர்கின்றன


மனதில் தைக்கப்பட்ட, தரிக்கப்பட்ட
எண்ணமும் செயலும் நிறைவேற
அதன் பின்னே
அச்சுபிசங்காமல் சென்றாலே போதும்
அத்தனையும் நிறையும்


ஒருவர்மீது
காதல் எழச் செய்வதும்,
கிளர்ச்சிக் கொள்ள செய்வதும்
மன மகிழ்வுணர்வில் திளைப்பதும்
அவர்மேல் கொண்ட
அபிப்பிராயம் தரிக்கப்பட்ட பின்தானே?


அங்கொன்றும் இங்கொன்றும்
செய்வதறியாது
திகைப்படைந்து கிடக்கும்
கசந்துபோன மனதினுள்
என்றோ தரிக்கப்பட்டது
முற்றிலும் எரிக்கப்படாமல்
புகைந்துகொண்டே இருப்பதால்தான்

அவ்வப்போது தலைதூக்கும்
வெளியேற்ற மனம் துடிக்கும்

இன்று எண்ணப்படுவது
நாளையே நிறைவேறிவிடுமா என்ன?
நாளை நாளை என நாளை கடத்திச் செல்வதால்
தரிக்கப்பட்ட எண்ணம் யாவும்
உள்ளேயே தங்கிவிடும்
பொங்கி, ஆழ்ந்து ஆறிவிடும்


முன் பின் தெரியாத யாரோ ஒருவரிடம்
ஆசுவாசமாய் பேசிவிடுவோம்
கசந்துபோன பழையன யாவும்
அவரால் கசைந்து கசைந்து வெளியேற
தரிக்கப்பட்டது, தழுக்கும்


நண்பர்களே...
ஒன்றைச் சொல்ல
பிரியப்படுகிறேன்...


உலகத்தின் எல்லா
இண்டு இடுக்குகளில் எல்லாம்
முருங்கை மரம் முளைத்திருக்கும்,
தளைத்திருக்கும்

ஒரே ஒரு குச்சியை அல்லது
கிளையை நட்டி வைத்து,
முனையைத் தரித்தால்போதும்
தலைமுறைக்கும் தளுக்கும்
தகதகவென ஓங்கி வளரும்
பதியமிடுதல் என்ற
செய்முறையிலும்
பற்பல செடி கொடி தாவரங்கள்
தரிக்கப்படுவதுண்டு


தரிப்பிடம்
அதனதன்
இருப்பிடம்


எண்ணம்போல்
எதுவும்
பிழைக்கும்
தழைக்கும்

நல்லதாய் நினைத்தால்
நன்றாய் தரியும்
ஒன்றாய் திரியும்
இல்லையேல்
விட்டுப் பிரியும்
தரிப்புக்கு
நான் தந்த விளக்கம்


உயிர்ப்பு -
தரிப்புக்கு
இன்னொரு
பொருள் உண்டு


ஒன்றை வேறோடு பிடுங்கி
அடியோடு ஒழித்துவிடுவதற்கும்
தரிப்பு என்பர்

எதையும்
இயற்கையோடு
ஒத்துபோவதுதான்
சாலப் பெரிது
காலத்துக்கும் நல்லது


காதல் தரிக்கப்பட்ட
இதயத்தை மாற்ற முடியுமா?
அப்படி மாற்றிய பின்
காதல் தரிக்குமா?
மரிக்குமா?

பார்வையாலேயே
கவரப்படுகிற
இந்த கலியுக காலத்தில்
எதையும் இனம் காண முடியாது
எண்ணத்தில் நஞ்சை விதைத்து
மஞ்சத்தில் மஞ்ச குளித்தால்
தரிக்கப்படுவதும்
நஞ்சாகத்தான் இருக்கும்


இனப்பெருக்கம் கொண்ட
இனமெல்லாம் எக்கணமும்
வஞ்சம் தீர்ப்பதில்லை
நெஞ்சம் புகைத்துக் கொண்டு
நினைவை வதைத்துக் கொண்டு
நெருங்குவதுமில்லை,
பழகுவதுமில்லை

விதியின் மீறலாய்
ஒன்றிரண்டு இருந்தாலும்
அதனையும் நறுக்கிவிடுவது நலம்


நண்பர்களே,
நல்லதை நினைப்போம்
நல்லதை விதைப்போம்
நாம் விதைக்கும் யாவும்
நல்லதாய் இருந்தால்
நடப்பது யாவும்
நலமாய் இருக்கும்


மழை பொய்த்துவிட்ட பொழுதிலும்
கலங்காது ஏரெடுத்து
உழும் உழவர்போல்

மனம் கலங்காது, மயங்காது
எல்லாவற்றையும் அசைபோட்டு
ரசனையோடு தரிப்பதற்கு, பொரிப்பதற்கு...

மனம் என்ற நன்னிலத்தில்
அன்பு என்னும் விதை தூவுவோம்
தூய எண்ணம் என்ற நீர் தெளித்து
பண்புகளை, நட்புகளை விளைய வைப்போம்
அதில் தரிக்கப்படும் யாவும்
உலகுக்கு எடுத்து பகிர்வோம்


நண்பர்களே,
நம் தமிழின்
தண்ணொளியின் தன்மையை
நாடு போற்ற அனைவரது
நாவை ஆட்டிப் படைக்க
மென்மேலும் விரிவுபடுத்தி
பரப்புவோமாக...


அன்னைக்குத்
தனயன் செய்யவேண்டிய
கடமைகளுள் இதுவும் ஒன்றுதானே?


வாருங்கள்
கடமையை ஆற்றுவோம்
காலம் நம்மைப் போற்றும்

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...