28 பிப்ரவரி, 2018

நலமான வாழ்விற்குக் கடைப்பிடிக்க வேண்டியவை

1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்.

2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.

3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்.

4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும்.

(நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்.

5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதைத் தடுத்து செரிமாணத்தைப் பாதிக்கும்.

6. சாப்பிடும்போது சாப்பாட்டில் கவனத்தைக் வைக்கவேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கிச் சாப்பிடவேண்டும்.

7. உணவைக் கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.

8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமாணத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்.

9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும்,
புத்தகம் வாசித்துக்கொண்டும், அல்லது யாருடனாவது பேசிக்கொண்டோ சாப்பிடக்கூடாது.

10. சம்மணமிட்டு சாப்பிடவேண்டும்.
 இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*

*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .

*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*

*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .

*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது*

*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.

*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .

*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*

*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்*.

*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*

*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*

*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.*

*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*

*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*

*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*

*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*

*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*

*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*

*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.

*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்.
இந்த பதினாறையும் கடைப்பிடி
அந்த பதினாறையும் பெறலாம்.

1. உணவிடை நீரை பருகாதே!
2. கண்ணில் தூசி கசக்காதே!
3. கத்தி பிடித்து துள்ளாதே!
4. கழிக்கும் இரண்டை அடக்காதே!
5. கண்ட இடத்தில் உமிழாதே!
6. காதை குத்தி குடையாதே!
7. கொதிக்க கொதிக்க குடிக்காதே!
8. நகத்தை நீட்டி வளர்க்காதே!
9. நாக்கை நீட்டிக் குதிக்காதே!
10. பல்லில் குச்சிக் குத்தாதே!
11. பசிக்காவிட்டால் புசிக்காதே!
12. பசித்தால் நேரம் கடத்தாதே!
13. வயிறு புடைக்க உண்ணாதே!
14. வாயைத் திறந்து மெல்லாதே!
15. வில்லின் வடிவில் அமராதே!
16. வெற்றுத் தரையில் உறங்காதே!

இந்ப்த பதினாறையும் கடைபிடித்தாலே போதும்,   1.உணவிடை நீரை பருகாதே!
2.கண்ணில் தூசி கசக்காதே!
3.கத்தி பிடித்து துள்ளாதே!
4.கழிக்கும் இரண்டை அடக்காதே!
5.கண்ட இடத்தில் உமிழாதே!
6.காதை குத்தி குடையாதே!
7.கொதிக்க கொதிக்க குடிக்காதே!
8.நகத்தை நீட்டி வளர்க்காதே!
9.நாக்கை நீட்டிக் குதிக்காதே!
10.பல்லில் குச்சிக் குத்தாதே!
11.பசிக்காவிட்டால் புசிக்காதே!
12.பசித்தால் நேரம் கடத்தாதே!
13.வயிறு புடைக்க உண்ணாதே!
14.வாயைத் திறந்து மெல்லாதே!
15.வில்லின் வடிவில் அமராதே!
16.வெற்றுத் தரையில் உறங்காதே!

இந்தப் பதினாறையும் கடைபிடித்தாலே போதும், 
நல்ல ஆரோக்கியத்துடன், 
நம் முன்னோர்களின் ஆசீர்வாதத்துடன் 
எளிமையாய் வாழலாம். 

24 பிப்ரவரி, 2018

விலகி நிற்பவர்கள்
வெல்லுவதில்லை
வெல்ல நினைப்பவர்கள்   
விலகுவதில்லை...

'நீல் ஆம்ஸ்ட்ராங்' இவர்தான் நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர். ஆனால், முதன்முதலில் கால் வைத்திருக்க
வேண்டியவர் யார் தெரியுமா?

'எட்வின் சி ஆல்ட்ரின்'. இவர்தான்
நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட், அதாவது விமானி.

ஆல்ட்ரின்,  அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும்,  விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க்,
அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்குத்  தேர்ந்தெடுக்கப்
பட்டார்.

ஆல்ட்ரின்,  கோ-பைலட்.  அதாவது
இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,
     "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால்,
   ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...

"‘நிலவில் முதன்
   முதலில்கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம்.
கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
 எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக
    தாமதிக்கவில்லை...
        சில நொடிகள்தான்
                தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில்
      இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது,
       "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங்
        கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு,
     ஒரு நொடி தயக்கத்தில்
            மாற்றி எழுதப்பட்டது...
திறமையும்
      தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
      இன்று ஆல்ட்ரினை
            யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான்
     இந்த உலகம் நினைவில்
              வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல...
    தயக்கம்,
        பயம் இவை எந்த அளவுக்கு
           நம் வெற்றியை பாதிக்கும்
             என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை
     பார்க்கும்போதெல்லாம்
       இந்தச் சம்பவத்தை நினைவில்
             வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம்
    நம்முடைய மிகப் பெரிய
       வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே
     மிகப்பெரும் சாதனைகளை
         படைக்கிற வல்லமை
               உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம்,
      பயம்,
          கூச்சம் இவைதான்
                     நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய
        தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை
                 தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை
                     பாராட்டுவதில் தயக்கம்...
ஏன்,
      சிலருக்கு இந்த தகவலை
           நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை
        செய்ய தயங்கினால்,
            தவறானதை தான் செய்து
                             கொண்டிருப்போம்...
எனவே,
           நல்ல விஷயங்களில்...
                   தயக்கத்தை தவிர்ப்போம்..

12 பிப்ரவரி, 2018

வாழ்வின் நிதர்சனம்

தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட் டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்.                   

*பகவத் கீதை*


யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ  மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
                                                                 
*கண்ணதாசன்*


🚩🚩
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
                                                             
*A .P . J . அப்துல்கலாம்*


🚩🚩
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
                                                               
*ஹிட்லர்*


🚩🚩
அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
                                                                 
*A .R . ரகுமான்*


🚩🚩
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
                                                                             
*நெப்போலியன்*


🚩🚩
கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
                                                                           
*புத்தர்*


🚩🚩
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
                                                   
*காரல் மாக்ஸ்*


🚩🚩
வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
                                                                         
*பில்கேட்ஸ்*


🚩🚩
வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன்
இதயம்
இரும்பை விட வலிமையானது
                                                                         
*விவேகானந்தர்*


🚩🚩
நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
                                                                     
*விவேகானந்தர்*


🚩🚩
தோல்விக்கு இரண்டு காரணம் ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
                                                               
*ஸ்ரீ கிருஷ்ணர்*


🚩🚩
பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
                                                         
*சார்லி சாப்பிளின்*


🚩🚩
உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
                                                           
*Lion Francis Leonard*


🚩🚩
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்
                                                         
*Lion Francis Leonard*


🚩🚩
சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
                                                               
*Lion. Francis Leonard*


🌹🌹
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
                                                                       
*விவேகானந்தர்*


💚💚
எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
                                               

*விவேகானந்தர்*

11 பிப்ரவரி, 2018


Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

50000 தோல்வி... 2000 பேடண்ட்... எடிசன் என்னும் ஃபீனிக்ஸ் மனிதன்! #HBDEdison

எடிசன்

நான்கு வயது வரை அந்தக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. ஏழு வயதில்  ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ‘மண்டு’ என்றும் ‘மூளை வளர்ச்சி இல்லாதவன்’ என்றும் ஆசிரியரால் வசைபாடப்பட்டான். கவனக்குறைவு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்டவன் (ADHD -attention deficithyperactivity disorder) என்று சொன்னார்கள். காதுகேளாதவன். தன் பெயரையே ஒரு சமயம் மறந்தவன். இப்படிப்பட்ட குழந்தை தானே கற்பித்துக்கொண்டு உலகம் முழுவதும் 2,332 காப்புரிமைகளைப் பெற்றான் என்றால் நம்பமுடிகிறதா? 

Advertisement


ஆம், இருபதாம் நூற்றாண்டின் தலையெழுத்தை மாற்றியமைத்த மிகப்பெரும் அறிவியல் விஞ்ஞானி ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ தான் இத்தனை குறைபாடுகளுக்கு ஆளான அந்தக் குழந்தை. இத்தனை குறைபாடுகளையும் தாண்டி வென்றவர் எடிசன்.
1847ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார். குடும்பத்தின் கடைக்குட்டி இவர்தான். நான்கு வயது வரை பேசாமல் இருந்த எடிசன், பின்னர்ப் பேச ஆரம்பித்தவுடன் பேசிக்கொண்டே இருப்பார். எதற்கெடுத்தாலும் “இது என் இப்படி?”, “அது ஏன் அப்படி?” எனக்கேள்வி கேட்டே ஆளைக் கொன்றுவிடுவார். இவர் கேள்வி கேட்பார் என்று பலர் பயந்து ஓடியதும் உண்டு. ஏனென்றால் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும் “ஏன் உங்களுக்குத் தெரியவில்லை?” என்று மற்றுமொரு கேள்வியும் கூடவே வரும். அப்படி இல்லையெனில் 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் சாத்தியமாகுமா? 

Advertisement


சிறு வயது முதலே யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பிவிடமாட்டார், எந்த விஷயமானாலும் அதை ஆய்ந்து கண்கூடத் தெரிந்து கொண்டால் தான் நம்புவார். அப்படி ஒரு நாள், குஞ்சு பொறிப்பதற்காக வாத்து முட்டையை அடைகாப்பதைப் பார்த்தார். அடைகாப்பதினால் தான் குஞ்சு பொறிக்கிறதா என எடிசனுக்கு ஐயம் எழ, ஆய்ந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தானே முட்டை மீது குஞ்சு பொறிக்கும் வரை அடைகாக்க உட்கார்ந்தாராம். இந்தச் சம்பவம் நடை பெற்ற போது எடிசனுக்கு ஐந்து வயதுதான். இந்த ஆய்ந்தறியும் தன்மைதான் பிற்காலத்தில் பிரபல புகைப்படக்காரரான மைப்ரிட்ஜ் “இயங்கும் படமெடுப்பது சாத்தியம் அன்று!” என்று சொன்ன போது ஆய்வில் இறங்கி கைனடாஸ்கோப்பை கண்டறிய உதவியது.
எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது.  முதன்முதலில் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்து, செய்யச் செலவு அதிகம் ஆகும். அந்தச் சாதனத்தை பெரும் அளவில் உற்பத்தி செய்யும்போது பெரிய இழப்புகள் ஏற்படும். அதனாலேயே அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை எக்கச்சக்க கண்டுபிடிப்புகள் நடைமுறையில் சாத்தியமாகாமல் போனது. ஆனால் எடிசன் எப்பொழுதும் தான் கண்டுபிடித்த சாதனத்தை, எளிய மக்கள் வாங்க வசதியாக மலிவு விலையில் உற்பத்தி செய்யும் வழிமுறையைக் கண்டறியும் வரை ஓயமாட்டார். ஐந்து மணி நேரத்திற்கு ஒருமுறை அரை மணி நேரத் தூக்கம். அது தான் அவரின் ஓய்வு நேரம். ஆய்வு தீவிரமான காலகட்டங்களில் இவர் வெறும் அரை நிமிடம் (முப்பது நொடிகள்) மட்டும் தூங்கிய காலமெல்லாம் உண்டு   
தனது ஏழாம் வயதில் ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டார் அங்குள்ள ஆசிரியர் இவரை மண்டு, மூளை வளர்ச்சி அடையாதவன் எனக் கூற, கோபம் கொண்ட எடிசனின் தாய் எடிசனின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு தானாகவே புத்தகங்கள் படித்து கற்க ஆரம்பித்தார். ரசாயனம் மீது அதிக ஈடுபாடு கொண்டதால் தானே புத்தகங்களைப் பார்த்து, வீட்டிலேயே ஆய்வுக்கூடம் அமைத்து ஆய்வுகளை மேற்கொள்வார். வயது ஆக ஆக ஆய்வும் பெரிதானது. அதற்குத் தேவையான பொருட்களை வாங்க பணம் அதிகம் தேவைப்பட்டது. எனவே ரயில் வண்டியில் பத்திரிகை விற்க அனுமதி பெற்றார். இரயிலில் சரக்கு பெட்டி ஒன்றினில் ஆய்வுக்கூடம் அமைத்துக்கொண்டார். ஆனால் ஒரு முறை பாஸ்பரஸ் தவறியதில் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அப்போது, எடிசனை ரயில் பொறுப்பாளர் கன்னத்தில் அறைய, முன்னரே செங்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு செவிப்புலன் பாதிப்புற்று இருந்ததால், இவருக்குக் காது இன்னும் மோசமாகி விட்டது.

தந்தி அலுவலராகப் பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த எடிசன், தனது இருபத்தி இரண்டாம் அகவையில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறிந்து காப்புரிமை வாங்கினார். இதுதான் அவரின் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு. இது வாக்குகளைத் துல்லியமாய் பிரித்துக் காட்டியதால் அன்றைய அரசியல்வாதிகள் அந்த இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் பொதுமக்களுக்கு பயன்படும் பொருட்களை மட்டுமே கண்டுபிடிப்பேன் என்று உறுதிமொழி எடுத்தார். 
கார்பன் டிரான்ஸ்மிட்டர், போனோகிராப், மின்விளக்கு, மின்சார ரயில், சேம மின்கலம், இரும்புத்தாது பிரித்தெடுக்கும் முறை, கான்கிரிட் தயாரிக்கும் முறை என எக்கச்சக்க சாதனங்கள் செய்து இவரே அதைப் பெருமளவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் துவங்கினார். ஒலியைப் பதிவு செய்து, பதிவு செய்த அதே ஒலியை மீண்டும் ஒலிபரப்பும் போனோகிராப் என்கிற கருவியை கண்டுபிடித்து, அதை மெருகேற்றி அதில் பல மாற்றங்களையும் செய்தார். போனோகிராப்புக்காக மட்டும் அறுபத்தைந்து காப்புரிமைகள் பெற்றுள்ளார்.                 
விடாமுயற்சி என்னும் சொல்லுக்கு இவரைத் தவிர சிறந்த உதாரணம் யாராகவும் இருக்க முடியாது. மின்விளக்கு நீண்ட நேரம் எரிய எந்த மின்னிழை ஏதுவானதாக இருக்கும் எனக் கண்டறிய கிட்டத்தட்ட 5,000 த்திற்கும் மேற்பட்ட மின்னிழைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். 5000 இழைகள் மின்விளக்கிற்குப் பொருந்தாமல் போனபோதும் கூட மனந்தளராமல் விடாமுயற்சியோடு சரியான மின்னிழையை கண்டறிந்தார். இந்தச் சம்பவம் கூட சில பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சேம மின்கலத்தை கண்டுபிடிக்க முனைந்தபோது, சரியான நேர்மறை மின்தகட்டை கண்டுபிடிக்கும்முன் ஐம்பதாயிரம் (50,000) பொருள்களை ஆராய்ந்து எடிசன் தோல்வியுற்றிருக்கிறார்.
ஆனால் அவரோ “நான் ஐம்பதாயிரம் முறை தோற்கவில்லை, ஐம்பதாயிரம் பொருள்கள் இதற்கு உதவாது என்று கண்டறிந்து வெற்றியடைந்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார். ஆமாம் எடிசன் நீங்கள் வெற்றியாளன் தான். தோல்வியையும் வெற்றியாய் மாற்றி, இருபதாம் நூற்றாண்டு மட்டுமல்ல வரும் பல நூறு நூற்றாண்டுகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற விஞ்ஞானியின் பிறந்தநாள் இன்று (11-2-2018)
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

டிராவிட் படைக்கு நாளை கடைசி யுத்தம்... சாம்பியனாகுமா இந்தியா...?! #U19CWC #BOYSINBLUE
``பா.ஜ.க-வைத் தமிழகம் தேர்ந்தெடுத்தால், அது பெரியாரை அவமதிக்கும் செயல்!'' – ஜிக்னேஷ் மேவானி
200 சிசி பல்ஸர், அப்பாச்சி உடன் போட்டிபோடும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R... ஃபர்ஸ்ட் லுக்!
‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்!’’
“அம்மாவைப் பார்த்து நடிகையானேன்!”
ரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்!
TNPSC Group 4 Study Material & Online Test

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...