அனுபவக் குரல்
அப்போது உன் தகுதியை அறிந்துகொள்வாய். - கதே
சாக்குப்போக்குச் சொல்லாதீர்;
அது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் வழியாகும். - ஷெப்பர்ட்
அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதைவிட,
புத்திசாலியான விரோதியை அடைவதுமேல். - பெர்னாட்ஷா
கவலையைவிட மிகவும் கொடியது,
ஒருவனிடம் உள்ள சந்தேகம். - டிவாலோஸ்
எதிர்பார்ப்பே இல்லாவிட்டால்
ஏமாற்றத்துக்கு அவசியம் இல்லை. - அகிலன்
எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான்
வாய்ப்புகள் வரும். - லுயிஸ் பாய்சர்
கொடுக்கும் கொடையைவிட
கொடுப்பவனின் மனநிலையே
அவனை அடையாளம் காட்டுகிறது. - சாணக்கியன்
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதுபோல
வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் கிட்டிவிடாது. - அரிஸ்டாட்டில்
எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அதற்கு
முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான். - சாமுவேல் ஜான்சன்
தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை,
காலால் நடப்பதற்குப் பதிலாக தலையால் நடப்பதுபோன்றது. - எமர்சன்
விதியின் பலன் இல்லையென்றாலும்,
முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு. - கார்ல்மார்க்ஸ்
வேகமாக உயர்வது அல்ல பெரியது,
எப்போதுமே உயர்ந்தபடி இருப்பதுதான் பெரியது. - இப்தார்க்
பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்த்தால்,
நம்முடைய துன்பங்களைச் சகிக்க கற்றுக்கொள்கிறோம். - மார்க் ட்வைன்
மனிதனின் ஆசைக்கு அளவு இல்லை.
அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை. - மேக்ஸிம் கார்க்கி
அலங்கார மாளிகையில் அடிமையாகத் தலைவணங்கி வாழ்வதைவிட,
இடிந்த பாழடைந்த வீட்டில் சுதந்திரமாக வசிப்பது மேல். - மூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக