கவிதை : ஆர்ப்பாட்டம்
நீ எதைச்
சாதித்துவிட்டாய்
எதற்காக இந்தத்
தடால் புடால்?
அமைதி வழியில்
மன ஒத்துப்
போராடிய
நம் முன்னோர்கள்
சாதித்ததென்ன?
அவர்களது வாழ்வினைப்
புரட்டிப் பார்
நீயும் அறவழியில்
செல்வாய்!
ஊரே அல்லலோக
கல்லலோகப்படும்படி
நீ மமதையில்
உழன்றால்,
உன் வழிப்
பற்ற
யார் வருவார்?
இன்னும் நீ
கடக்கும்
தூரம் உளது...
இன்னும் உன்
கடமைகள் உளன...
இன்னும் நீ
சுவாசிக்கனும்...
சுகபோகிக்கனும்...
காலம் கனியும்
வரை
ஆர்ப்பாட்டத்தைத் தள்ளி
வை
காலம் உனை
ஏற்றி வைக்கும்!
கவிதை : தன்னலம்
யாருக்கேனும் உதவாது
யாவரின் நலன்
பேணாது..
'யாவரும்
கேளீர்' என்னும்
நிலை வரும்போது
மற்றவரிடத்திலிருந்து
தனித்துக் காணப்படுவார்!
சுயநலம் வேறு;
தன்னலம் என்பது
வேறு!
சுயம் - தனக்கானது!
தன் - நமக்கானது!
தன் என்னும்
நிலையோடு வாழ்வோர்
வாழும் போதே
இறப்பர்!
நம் என்னும்
நிலை கொண்டோர்
இறந்த பின்னும்
வாழ்வர்!
ஒருவருக்காக வாழ்வது
ஒரு வாழ்வா...
ஊருக்காக வாழ்வதே
வாழ்வு!
சுற்றம், நட்பு,
குடும்பம், குலம்...
எனப் புவியே
மரிக்கும் வரை
வாழ்வோமே...
வாழ்வை வாழ
வைப்போமே...!
இதுவும் ஒருவகையில்
தன்னலம்தான்!
கவிதை : மன
உலா
மலரும், உலரும்
தவழும், தளரும்
கவரும், கலங்கும்
- அனைத்தும்
மனம் படுத்தும்
பாடு
உருவமற்ற உயிரே
உன்னால் பலரும்
பலவிதமாய் ஆனர்,
ஆவர்!
எதனோடு உன்னை
ஒப்ப...
எல்லாத்தோடும் நீ
தப்ப...
அப்பப்பா, அடங்குமோ
ஒன்னுக்கொன்னு இப்ப...!
மனம் அதன்
குணம்
சற்றெனச் சலனம்
கொள்ளும்
பட்டெனப் பதட்டத்தில்
துள்ளும்
மொட்டென விரியும்
மெட்டனெப் பாடி
மகிழும்!
ஈரமாக விழிகளில்
தெரிவாய்
காயமானாலும் அதனுடன்
மொழிவாய்!
மனமே நீ
மயங்காதிரு, மிரளாதிரு...!
அஞ்சேன் என்றானே
பாரதி
அவனும் நீயும்
என்னுள் பாதி!
இருதயம் என்ற
துடிப்போடு
இயக்குகிறாயோ?
எனினும் நீ
மாளாதிரு...
எவருக்கும் உதவிட
எந்நேரமும் உத்தரவிடு!
கனியும் விழியாலே
கண்டுணர்வர்
உன்னைப் பலரும்!
கவிதை : தலைவன்
மகிழ்வுற்று மகிழ்விப்பான்
மக்கள் செல்வம்
பெறுவான்
மழலையின் மழலையும்
தலைவன்தான்!
முரசுகொட்ட மார்பு
புடைக்க,
மாண்டாலும் சிரிப்பானே
அவன் காவியத்தலைவன்!
புறம் சொல்லாது
அறமே எனச்
செயலாற்றி,
அண்டையரும் ஆசைப்படும்
அரசியல் தலைவன்!
படையொற்ற நடைபோட்டு
உடையோடு ஊர்மெச்ச
உயர்பதவி தனைச்சுமந்து
உயிர்ப்பிக்கும் உதவா
தலைவன்!
நாட்டை ஆண்டாளும்
வீட்டை ஆண்டாளும்
சிறு உயிருக்கேனும்
தீங்கிழைக்காதோரே நல்ல
தலைவன்!
நண்பா, நீ
தலைவனாகாதே
தொண்டனாகவே இரு,
அப்போதுதான் நிறைய
கற்பாய்,
கற்றுண்டு வாழ்வாய்...
வாழவைப்பாய்!
உருவால் தலைவனானாலும்
உணர்வால் தொண்டனாக
இரு...
உலகிலுள்ள உயர்
பதவியெல்லாம்
உனைத் தேடி
வரும்...
அதற்காகக் காத்திருக்காதே
கடுமையான உழைப்பே
உயர்வு தலைவா...
நீயும் உழைத்திடு பொதுவாய்!உயர்வு தலைவா...
கவிதை : கவி
கவியே கவி
புனைய
காவியம் என்
செய்யும்?
தமிழே... தமிழின்
இனிமையே...
தடாகத் தாமரையாய்
தெளிவோடு இருக்கும்
மனதில், எண்ணத்தில்
உதிக்கும், உதைக்கும்
உருட்டும், மிரட்டும்
அப்பப்பா...
கவி படுத்தும்
பாடு
புவியில் ஏனையோர்
படும் பாடு!
எழுத நினைத்து
எழுந்தால்
எழுத்தெல்லால் நொண்டும்!
எழுத்தாணியை ஒதுக்கினால்
எல்லாமே நண்டுபிடியாய்
இறுக்கும்!
சிறு துகளாய்
இருப்பதுதான்
செதுக்க செதுக்க
விஸ்வரூமாய் எழும்,
அதுதான் கவி!
கவியும் கவிதையும்
வேறல்ல
ஒருவரின் ஒருவரிகூட
கவிதான்
அந்த வரியே
அவரது உயிர்!
கவிதா கவி
தா
இதுதான் அதற்குச்
சான்று!
கவி கேற்கும்
எவரும்
புனைய முற்படுவர்,
அதனோடு இணைய
நிற்பர்!
கவியே நானும்
உனை வடித்துவிட்டேன்
உன்னோடே வடிந்துவிட்டேன்
இனி உன்
பாடு!
நீ எது
செய்தாலும்
நான் நானாக
மாட்டேன்
நீ எதுவாக
இருந்தாலும்
அதுவும் நானே!
இதோ ஒரு
கவி
காற்றோடு காற்றாய்
செவிகளில் நிறைகிறான்,
உணர்வுகளில் உறைகிறான்!
முகந்தெரியாதவன்
முன்னே தோன்றினாற்போல்
உணர்கிறோமே
அதுதான் கவி!
கவி வடிக்கும்போது
புவி படிக்கப்படுகிறது
செவி இனிக்கிறது
நுகரும் சக்தி
மிரள்ச்சி கொள்கிறது!
கவியால் மயங்குவோமா,
புரவியில் பரந்தெங்கும்
புசிப்போமா...
பசியறியா கவியை!
கவிதை : பசி
பசியையே
ரசிக்கப் பழகலாமா?
பசியையே
ருசிப்போமா?
உண்டு கொழுத்தால்
மண்டு கணக்காய்
மதி மயங்கி
சாக நேரிடும்,
ஜாக்கிரதை!
கூடுவிட்டுப் பறந்துசெல்லும்
பறவைகளாய்
பறந்தோடி செல்வம்
சேர்க்கும்
யாவரும் பசியை
மறைத்துள்ளனர்; மறந்துள்ளனர்!
அரை வயிறு
உண்டவன்
ஆவலாய் திரிகிறான்
கால் வயிறு
தின்றவன்
கவலையில் நெளியுறான்
முக்கால் உண்டவன்
முழி பிதுங்கி
கிறங்குகிறான்
முழுதும் உண்டவன்
முணங்கிக் கிடக்கிறான்
எழமுடியாது!
வயிறு புடைக்கத்
தின்றாலும்
அடங்கா பசி
எது?
இலக்கெதுவும் இல்லாது
தேடித் திரியும்;
சோம்பலையும்
மரித்துப் போகச்
செய்யும்
நா பசி!
வயிற்றைக் காயப்போட்டிரு
வாழ்க்கை பசி
அடங்கும் வரை!
வாழ்வைத் தேடிக்
கொண்டே இரு
வயிறு பசியால்
இரைத்தாலும்!
எப்பொழுதும்
நிறைவதில்லை
பசிக்கிற வயிறு!
எப்பொழுதும்
பசிப்பதில்லை
உழைப்பவர் வயிறு!
ஓயாது உழைப்பவர்
ஒருபோதும்
சுவையுற புசிப்பதில்லை!
புசிக்கப் பழகியவர்
ஒருபோதும்
ருசிப்பதில்லை!
பசியையும் உண்ணப்
பழகப் பழக
பழையதும் ருசிக்கிறது!
இதயப் பசி
ஆற
இசைப் பருக
இசைவோம்...
அதற்கு நாமும்
சற்று அசைவோம்!
கவிதை : விடியல்
கசக்கிப் பிழியப்படும்
கடைநிலை ஊழியன்
நீயென்றால்
கவலையைவிடு
விடிந்ததும் எல்லால்
வடிந்துவிடும்
சோர்ந்துபோய் உட்கார்ந்திராதே
சோப்புபோட வைத்துவிடுவர்
சோமேறிகள்
உன் வேலை,
உனது கடமை
ஒவ்வொன்றாய் நிறைவேற்று
ஒவ்வொன்றும் நன்முத்து
யாசகம் வாங்கி
சுவாசம் நடத்தும்
நிலையானாலும்
நம்பிக்கை கொள்
நாளையும் உள்ளது
எந்நிலையிலும் நீ
தன்னிலை விடாதே
உன்நிலையைப் பிடிக்க
ஓடோடி வருவர்
பலர்
இன்று நாளை
மறுநாள்
இப்படி நாளெல்லாம்
போதாது
உனைத் தேற்ற
நீயேதான் தேறனும்
உன்னை நீயேதான்
மெருகேற்ற
படிப்பொன்றேதான்
காலத்தை நிர்ணயிக்கும்
என
கற்பனையில் மிதக்காதே
உன் அனுபவமே
உனை உயர்த்தும்
அதையும்
நீ மறவாதே
இன்றைய நிலையோடு
நேற்றைய நிலையை
ஒப்பிடு
அதன் பொருட்டு
மேலும் நீ
கற்றிடு
உள்மனத்திற்கு
அதுதான் காப்பீடு
அவன் இவன்
எவன் என
அவனவனை உன்
நிலைக்கு
இழுக்காதே - அதுவே
உன் திறமைக்கு
இழுக்காகும்
நீ நீயாகவே
இரு
உன் நிலை
மாறும்
மாற்றம் ஒன்றே
மாறதது
நல்ல ஏற்றம்
தனை
அது தந்தே
தீரும்
விடிந்ததும் விசும்பினாய்
பொழுதென்ன வடிந்தாயிற்று?
பொழுது போனதும்
புலம்பினாய்
பொசுக்கென இருளவில்லையா?
அதுபோல்தான் தம்பி
விடியும் வடியும்
மடியும்
விடியல் இப்படிதான்
ஆகும்
விடியல் இல்லையேன்
என்ன ஆகும்?
உன் கற்பனைக்கு
ஒரு விடியல்
உன் திறமைக்கு
ஒரு விடியல்
உன் நம்பிக்கைக்கு
ஒரு விடியல்
உன் தன்னம்பிக்கைக்கு
ஒரு விடியல்
இப்படி உனக்கு
நிறைய விடியல்
இருக்கு தம்பி...
நம்பி எடுத்துக்
காலை முன்
வை
நாளையும் நமதே...
கவிதை : போட்டி
போட்டி அவசியம்
தேவைதான்.
போட்டி இல்லாமல்
எதனையும்
நாம் தேர்வுசெய்யமுடியாது.
ஒருவருக்கு ஒருவர்
போட்டி எழும்போது
அது ஆரோக்கியமாக
இருக்கவேண்டும்.
அதனால் நன்மையே
விளையவேண்டுமே தவிர
தீமையை, பகையை
விளைவிக்கக்கூடாது.
ஒருவரோடு ஒருவரை
ஒப்பிடும்போதுதான்
பெரும்பாலும் போட்டி
எழும், அல்லது
எழுப்பப்படுகிறது.
படிக்கிற நிலையிலேயே
நாம் போட்டியை விரும்புகிறோம். அதன்பின்
வாழ்க்கையில் வளர வளர
போட்டிக் குணமும்
நம்முள் வளர்ந்து விடுகிறது.
போட்டியைத் தவிர்த்தால்
வாழ்க்கையில் சுவராஸ்யம்
இருக்காது
என்றுதான் தோன்றுகிறது.
ஏனென்றால் எதையாவது முன்வைத்துதான் நமது
இளைஞர்களை நாம்
முன்னோக்கிச்
செலுத்த வேண்டியுள்ளது.
ஒன்றையொன்று காரணம்
காட்டி
பேசும்போதோ அல்லது
இயல்பாக இருக்கும்போதோ
போட்டிக் குணம்
தன்னால் எழுந்துவிடுகிறது.
ஆரோக்கியமான போட்டி
என்பதை நன்கு
புரியும்படி
நாம் அவர்களைப்
பழக்கிவிட்டோம் என்றால்,
எல்லாமே சுமூகமாக
சுபமாகவே நிறைவேறும்.
ஒவ்வொன்றுக்கும் போராடிதான்
இந்த உலகில்
நாம் வென்றாக வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம்.
அதனால் போட்டி
தேவைதான் அதுவும்
ஆரோக்கியமான போட்டியாக
இருப்பது
நன்றாக இருக்கும்.
உலகம் போகிற
திசைநோக்கி
நாமெல்லாம் திரும்ப வேண்டுமென்றால்
அதற்கேற்ற வேகத்தில் நமது செயல் திறன் இருக்கவேண்டும் அல்லவா,
நாமெல்லாம் திரும்ப வேண்டுமென்றால்
அதற்கேற்ற வேகத்தில் நமது செயல் திறன் இருக்கவேண்டும் அல்லவா,
அதனால் வரும்
தலைமுறைகளை நல்ல
வழியில் வழிநடத்த
போட்டியைக்கூட ஆரோக்கியமானதாக ஆக்கி
அவர்களை நல்வழிப் படுத்தவேண்டும்.
கவிதை : ஊர்
பறக்கத் தெரிந்த
பறவைகளுக்கெல்லாம்
ஊர் என்று
ஒன்று
உண்டா என்ன?
சிரிக்கத் தெரிந்த
மனிதர்களுக்குச்
சிந்திக்கவும் தெரிந்ததால்
சின்னா பின்னா
ஆனது
எல்லாம்!
நாலெழுத்துப் படித்துவிட்டானாம்
நாடெல்லாம் சுற்றித்
திரிகிறான்... இந்த
ஊர் வாய்
பொல்லாதது
உலகத்தைவிட பெரிதானது!
படித்ததும்
வேலை செய்ய
பிடித்ததும்
வெளிநாடென்றால்
உள்ளுரை எவன்
பார்ப்பது?
இந்த உலகம்
இருக்கே
நிமிர்ந்தால் குண்டும்
அமர்ந்தால் திட்டும்
ஓடினால் ஏசும்
பாடினால் பளிக்கும்
எதற்கெடுத்தாலும்
எகதாளந்தேன்!
பையன் நாலுகாசு
சம்பாதித்தால்
கௌரவமாய் இந்த
ஊர்லேயே
வாழலாம்; வசிக்கலாம்
எல்லா பெற்றோரது
நினைப்பும்
இப்படித்தான்!
ஊர் ஊராய்
சுற்றித் திரிந்தாலும்
தனக்கான வேலை
இல்லையே
என எண்ணும்
தறுதலைகள் இருக்கும்வரை
எந்தத் தாயால்
எதைச் செய்யமுடியும்?
டேய் அவன்
அந்த ஊருகாரன்
இவன் இந்த
ஊருகாரன்
உன் ஊரு
எதுடா?
பட்டாம்பூச்சியால் பறந்துவரும்
கல்லூரிக் கண்மணிகளின்
முதல் நாள்
முழிப்பு,
இப்படியொரு களிப்பு
இதற்கு வேணும்
கழிப்பு!
கண்ணிறைய கனவுகளோடு
தெரிவதெல்லாம் நமக்குத்தானா
என ஆசையோடு
வீதியெங்கும், சாலையெங்கும்
பாதமே சூடுபறக்க
நடையாய் நடந்து
இங்கே இருந்தால்
எம்முட்டு நல்லாயிருக்கும்
என எண்ணும்
கிராமவாசிகளின்
முதல் ஊர்
பயணம் இப்படியாய்
இருக்கும்!
மனிதனாய் பிறந்த
எல்லா
மக்களுக்கும் எந்த
ஊரும்
நம்ம ஊருங்கண்ணே
என எண்ணுங்கண்ணே
நாடு உருப்படும்;
நாமும் உருப்படுவோம்!
பூமிய யாராச்சும்
செய்யமுடியுமா?
வேறு வேறாய்
பாகு பிரிக்க
அதென்ன நாம
செஞ்சதா?
அவ்வளவு பெரிசாய்
செய்து
இது உனக்கானது;
இது எனக்கானது;
என பிட்டுக்
கொடுக்க முடியுமா?
பிட்டுக் கொடுக்க
அதென்ன
பிள்ளையார் கொழுக்கட்டையா?
மனிதர்கள் கால்
பதிக்கிற இடமெல்லாம்
அனுபவிப்பதற்கும்,
அனுபவிக்கக் கொடுப்பதற்கும்
தானே?
அவனுக்குப் போக
மீதி உனக்கு...
உனக்குப்போக மீதி
அவனுக்கு...
இப்படி எல்லாரும்
பகுந்துண்டா...
எம்முட்டு வயிறு
நிறையும்?
ஒரு ஜான்
வயிறே நிறையும்போது
உலக முழுக்க
இப்படியே நினைச்ச
எம்முட்டு உசத்தி...?
ஈர்ப்பு விசை
கீழ்நோக்கி
இருக்குங்க...
அதான் எல்லாம்
கீழாகவே
இழுக்குதுங்க...
மேலே பறக்க
ஆசபடுறோமுங்க
மறுபடியும் அன்னை
மடிக்கே
திரும்புறோமுங்க...
இதானுங்களே வாழ்க்கை
இதற்குள் எத்தனை
வேட்கை? வேடிக்கை?
அன்னையும் அப்பனும்
இல்லாட்டி நாமெல்லாம்
ஏதுங்க?
அவுக நினைச்சா
நாம வந்தோம்?
நாமதானு அவுகளுக்குத்
தெரியுமா என்ன?
எல்லாரும் வந்த
இடம் ஒன்னுதான்
போகிற இடமும்
ஒன்னுதான்
ஆகமொத்தம் எல்லாம்
மண்ணுதான்!
இந்த மண்ணுக்காக
இந்த மனுச
பயக
மல்லாடுறான்; துள்ளுறான்;
அள்ளுறான்
கடைசில மாழ்கிறான்!
ஊர் ஊராய்
இருக்கணும்னா
ஊரை உயர்த்தணும்!
நாம பிறந்த
மண்ணுலே
என எண்ணினால்
எல்லாத்தையும் மாத்தணும்!
மாத்தணும்னு சொன்னது
புதுசாக முளைக்கும்
எண்ணத்தைதான்!
நாகரிகம் எனச்
சொல்லிகிட்டு திரிஞ்சா
அநாகரிமாக மாறிடும்,
நாறிடும்!
ஊர் பழையபடி
ஊராகவே
இருக்கட்டும்!
ஊரை ஊராகவே
பார்ப்போம்
அதை ஊறுகாய் போடாம காப்போம்!
கவிதை : புலம்பெயர்வு
வாழ்ந்த இடம்விட்டு
வறுமை காரணமாக
வாடிப்போய், ஓடிப்போனால்
ஒருநாளும்
துயரம் வேண்டேல்!
இங்கேயே இருந்தேமே!
இங்கேயே இருப்போமா?
எல்லாருக்கும்
இந்த நினைப்பு
நீங்காததுதான்!
அக்கம் பக்கம்
அரவணைப்புக்கு
ஆளில்லாத
இடமாய் இருந்தாலும்
அதுவும் ஓர்
இருப்பிடமே!
துயரமான பொழுதுகளிலெல்லாம்
எங்கோ ஒருமுலையில்
அந்தக் குயில்
கூவுமே
அது நமக்காகத்தானே
பாடுது...
அதைத் தானே
மனம் நாடுது!
எங்கெங்கு காணிலும்
போராட்டம் என்றால்,
மனப் போராட்டத்தை
வெல்வது யார்?
இருந்த இருப்பிலேயே
ஏய்த்து பிழைத்தவர்களெல்லாம்
எஜமானிகளானால்,
ஏழையும் பாழையும்
எங்குதான் செல்லும்
பாவம்,
ஒருபோதும் விடாது
தாவும்!
சின்னவன் சிரிப்பானே...
சின்னது அழுகுதே...
பெரியவ இருந்தாளே...
பெரியவன காணோமே...
இப்படி ஒவ்வொரு
நாளும்
இடி மின்னலுக்குள்
தேடும் படலம்
தீராதோ?
தீயே அதுவரை
தீண்டாதே?
ஒத்த மனுசர்களெல்லாம்
ஒப்புக்குத் தானே
இந்த ஒப்பாரியில்
கலந்தனர்!
உன்பாடு என்பாடு
தீர
பெரும் பாடு
பட்டவர்
யாரு?
எல்லாம் முடிந்துவிட்டது
என
ஒட்டிய மண்ணைத்
தட்டியெழுந்தோரே,
தரங்கெட்டோரே,
தாழிட்டுக் கொண்டீரே
உமது தாழில்லா
இதயத்தை!
இதோ இன்றும்
விடிந்துவிட்டது
எல்லாமும் வடிந்துவிட்டது
எங்குச் செல்லும்
எம் சகோதரப்
பிறவிகள்?
என்று மடியும்
இந்த மாமிசப்
பிண்ட பிழைப்பு?
மக்களே,
திறந்து வையுங்கள்
மனதை...
மனிதர்களே
உறவுகொள்ள
தயாராகுங்கள்!
மரணம் நிச்சயம்
அதுவரை
வாழ்வோம் சத்தியம்!
இருந்தவர்களுக்கு அவர்களது
இருப்பிடம் கொடுங்கள்
அதைவிட்டு
எங்கு செல்லும்
இப்பிறவிகள்?
மனமே,
தாழ் திறவாயோ?
கவிதை : குன்று
குன்று
மலையின்
மடு!
குன்று சிறுவன்
மலையோ பெரியவன்!
சிறுவனின் சேட்டை
சகித்துக் கொள்ளலாம்!
பெரியவனின்
இச்சை
இம்சைக்கும்!
குன்றில்
அன்றில் பறவை
வட்டமிடும்!
மலையில்
மலைப்பாம்புகள்போல்
மலைக்க வைக்கும்!
குன்றுபோல்
குன்றி தின்றால்
உடம்பு மெருகேறும்!
மலைபோல்
மல்லார்ந்தே கிடந்தால்
சோம்பல் கும்மியடிக்கும்!
மலையைப் பார்த்து
அந்த மடு
கேட்டதாம்
நான் எப்போ
உயர்வே? என்று
நீ உயர்ந்துதானே
இருக்கிறாய் என்றதும்,
இர்மாப்புகொண்ட குன்று
ஆடிபாட ஆரம்பிக்க
காற்று மழையில்
கரைய தொடங்கியது!
மடியில் கிடக்கும்
கன்றுக்கும் கரையும்
மலையோ...
குன்றின் அகபாவத்தை
அர்த்தம் பொதித்துரைத்து,
அடைகாக்குமாம்!
இது கண்ணெதிரே
நடக்கும் உண்மை
கடந்து போவோரே
கவனம் கொள்க!
மலை என்று
மலைத்தாலும்
குன்று எனக்
குதித்தாலும்
நிலைமை என்னவோ
ஒன்றுதான்,
அதுதான் எண்ணம்
எண்ணம்போல்
உயர்வுதானே!
படித்துவிட்ட மமதையோ
மலையைப் போன்றது!
அனுபவம் பெற்றோம்
என
ஆடம்பரிக்கும்
அத்துணை பேருக்கும்
மலையும் குன்றும்
மலைக்கதான் வைக்கும்
மனமில்லேல் அனைத்தும்
பொய்க்கும்; புளிக்கும்
தோழா,
நீ மலைபோல்
நிமிர்
குன்றுபோல் குதிர்!
இனிவரும் காலமெல்லாம்
இன்பமும் இமயளவு
உயரட்டும்!
உன் திறன்
திக்கெட்டும்
பரவட்டும்!
அப்போது
பரவசம் கொள்வாய்
இப்போது
பகுத்தறிவு கொள்வாய்!
கவிதை : விளக்கு
விளக்கு
இருளின் மறுபுறம்
இருளைத் திறக்கும்
திறவுகோல்!
மின் இல்லாத
இடமெங்கும்
பொன் போல்
மின்னும் என்றும்!
ஆதிகாலத்தை நமக்குணர்த்த,
நாம் மறந்ததை
நினைவூட்ட
விளக்கு சுடர்
விடும்!
ஏற்றப்பட்ட விளக்கு
அப்படியும் இப்படியும்
ஆடுமே அடடா
அழகுன்ன அது
அழகு
இருளை ரசிப்பவர்கள்
விளக்கை வெறுப்பதில்லை
விளக்கு ஏற்ற
மறுப்பதில்லை
இருளும் விளக்கும்
இணைந்து இருக்க
ரம்மியமாகும் அந்த
இரவு!
தெளிவடையா மனதுக்கு
தெறியா கிழக்கு
என்பார்கள்!
விடிந்தவிட்ட பொழுதைப்
பார்க்க
விளக்கு எதற்கு
என்பேன் நான்!
விளக்கு வெளிச்சத்தில்
படித்துயர்ந்த அறிஞர்கள்
பிறந்த நாடு
இது!
உன்னிடம் உள்ளதை
விலக்கு
உனக்காகத் திசைகாட்டும்
உள்ள விளக்கு!
இருட்டிவிட்ட பொழுதில்
ஏற்றிவிடுக விளக்கை
வெளிச்சம் காட்டும்
உண்மையை ஆராய்ந்தறிக,
உலகம் வசப்படும்!
விளக்கு வெளிச்சத்தில்
விழும் நிழலைக்
கண்டு
அழும் சிறு
பிள்ளையாய்
இருந்துவிடாதீர்!
உருவம் உயர
உயர
நிழலும் உயரமும்
அது நிமிர
நிமிர
ஒளியும் நிமிரும்!
வீதி விளக்காய்
சுடர் விடுவதால்
நீ அறிய
படுகிறாய்!
தெரு விளக்காய்
ஜெலிப்பதால்
நீ தெரிய
படுகிறாய்!
வான் விளக்காய்
உயர்ந்திடு நண்பா...
அதுதான் உயர்வு
என்று
முடிவெடு, முடித்திடு!
மண் விளக்கு
- அது
பொன் விளக்கு!
மின் விளக்கு
மிரள் விளக்கு
மின்னலும் ஒருவகை
விளக்குதான் - அது
மிரட்டல் விளக்கு!
கோயில்களில்
கோதையர் ஏற்றும்
விளக்கு
மன விளக்கு;
மண விளக்கு!
இறைவனைத் துதிக்க
ஏற்றப்படும் அனைத்து
விளக்கும்
பக்தியின் ஊற்று!
விளக்கு இல்லையெனில்
கிழக்குத் தெரியாமலே
இருந்திருக்கும்
விளக்கு இருப்பதால்
விடியலைப் பெற்றோம்
எண்ணெய் இல்லா
விளக்காய்
என்னுள் பல
நினைவு - அது
தூண்டா திரியாய்
தூண்டப்பட
சுடர் விடுகிறது
அனைத்தும்
மிடர் விழுங்க
நேரிடுது
மின் இல்லாத
ஏழை கண்டு
மின்சாரமே நீ
அவர்களுக்கு
சாரமா? காரமா?
காட்டமா?
மனிதர்களே, மனதில்
கொள்க
எல்லாருக்கும் விளக்கு
கொடுங்க
அவர்களது வாழ்வும்
சுடர் விடட்டும்
வாய்ப்பு கொடுங்க!
கவிதை : அதிகாரம்
அதிகம் காரம்
உடம்புக்கு ஒவ்வாது
என்பார்கள்;
ஆம், அதிகாரமும்
அப்படித்தான்!
தலை கால்
புரியாது
ஒருவர்மேல் செலுத்தும்
அதிகாரம்;
அவரோடு மற்றவர்கள்
அன்பு செலுத்த
அஞ்சுவர்!
தான் உண்டு
தன் வேலை
உண்டு
என இருப்பவரிடம்
அதிகாரம் செலுத்த
முனையும்
முதலாளிகள்
உண்மையிலேயே
முதலைகள்தான்,
அவர்களை அவர்களே
விழுங்கி விடுவர்!
சுதந்திரம் கொடுத்து
பணிவாகச் சொன்னால்
பணியும் நடக்கும்,
பணிவும் கிடைக்கும்,
பண்பும் வளரும்,
பாசமும் தழுக்கும்!
குட்ட குட்ட
குனிந்தால்
குட்டிகொண்டே இருப்பர்
சில குட்டர்கள்;
அவர்களிடம் நிமிர்ந்தே
இருங்கள் - அது
இர்மாப்பு ஆகாது!
ஒருவர்மீது
அன்பு வையுங்கள்
அடிபணியாதீர்கள்!
ஒருவர்மீது
பாசம் கொள்ளுங்கள்
பயந்து விடாதீர்கள்!
சிவனே என்றிருக்கும்
அவனை
அதைச் செய்;
இதைச் செய்
என
இம்சைத்துக் கொண்டிருந்தால்
எதைச் செய்வான்,
அவன்?
காசு கொடுக்கிறோம்
கசையடி கொடு
- எனக்
கசக்கிப் பிழிந்து
வேலை வாங்குபவர்களது
கடைசி காலமும்
கண்ணீரும் கம்பலையும்தான்!
தாம் பெற்ற
குழந்தைகளிடம்
கரிசணை காட்டினால்
அரியணை காலத்தில்
அன்போடு நினைப்பர்!
அவர்களிடம்
அதிகாரம் காட்டினால்
சுதியோடு
வசை மழை
பொழிவர்;
தவறாக வாழ்வர்
தருதலைகள் ஆவர்!
உலகத்தில் உள்ள
ஜீவன்கள் எல்லாம்
தன்னைத் தானே
சுயமாகச்
சுவாசிக்கும்
அதனை
அதிகாரம் செய்து
அடக்கி ஆள்வது
ஒருநாளும் ஆகாது!
நண்பர்களே,
உங்களுக்குள் உள்ள
உங்களையே நீங்கள்
அதிகாரம் செய்யுங்கள்
அப்போது நீங்கள்
சுடர் விடுவீர்கள்!
யாரையும்
யாரும்
அடிமைப்படுத்தலாகாது!
அடிமைதனமும்
அதிகார குணமும்
ஓயவேண்டும்;
தீயவேண்டும்!
உழைப்பவர்களுக்கான
சுயமான, சுகமான
காற்று வீசட்டும்
வலுபடைத்தவர்களே
வழிவிடுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக