கவிதை : நிஜம்
நிஜம் - வடமொழியின்
உண்மைதான் அதற்கான தமிழ்
உண்மை என்றாலே
உள்ளம் உறுத்துகிறது
அல்லவா?
சத்தியம், உண்மை,
நிஜம், மெய்,இவையெல்லாம்
ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்
நிஜமாகப் பேசுவதும்
நிஜமாக வாழ்வதும்எவ்வளவோ நல்லதுதான்?
அது நடைமுறைக்குச் சாத்தியமா?
ஏய்ச்சுப் பிழைப்பதும்,
பொய்மாத்து செய்வதும்,மறுத்துப் பேசுவதும்,
மழுப்பலாய் திரிவதும்,
பிடிகொடுக்காது நழுவுவதும்,
பிடித்த முயலுக்கு மூனுகால் என
சொல்லில் விடாபிடியாக இருப்பதும்
நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை
சத்தியமாய் சொல்கிறேன்
நிஜமாகத்தான்...
என எதைச் சொன்னாலும்
அது உண்மையில்லை
என கேட்பவர் புரிந்துகொள்ளும்
காலம் இது
வார்த்தைக்கு வார்த்தை
உண்மை, சத்தியம், நிஜம்எனச் சொல்லிக் கொண்டே இருந்தால்
யாருதான் கேட்பது?
ஒருநாள் பொய்
சொன்னாலேயே
வாழ்நாள் எல்லாம் உண்மையேசொன்னாலும்
மனம் கேட்குமா? நம்புமா?
முதல் பார்வை
முற்றிலும் கோணல் தானே?
ஒருவரிடம் பழகுவதும்
மறுமுறையும் அவரை
எதிர்பார்ப்பதற்கும்அவரது பேச்சில் தெரிந்துவிடும்
சிலரது பேச்சில்
தேன் ஒழுகும்,இனிக்க இனிக்க பேசுவர்
பேச்சாலே வசியம் செய்துவிடலாம்
என நெய் ஒழுக பேசுவார்கள்
அவர் தலை மறைந்ததும்,
இவ்வளவு பேசினானேநிஜயத்துல மனுசன்
அண்டபுழுகன், ஆகாச புழுகன்
என அங்கலாய்ப்பர்
ஒருவர் நடைமுறையில்
எப்படியோ அப்படியேஅவர் மதிக்கப்படுகிறார்
இது இயல்பு
வாய் இருக்கு, பற்கள்
இருக்கு
நரம்பில்லா நாவை
வைத்துசுழற்றி சுழற்றிப் பேசினால்...
அந்த கணம் ரசிப்பர், சிரிப்பர்
வார்த்தையை ருசிப்பர்
அடுத்த கணமே அத்தனையும்
காற்றோடு காற்றாய் கரைந்துவிடும்
பேசியதெல்லாம் பயனற்றதாய்
போய்விடும்
இதை யாரும்
சிறிதும் நினைப்பதில்லை,சிந்திப்பதும் இல்லை
நண்பர்களே,
இதுவரை எப்படி இருந்தோமேபரவாயில்லை
இனிவரும் காலமாவது
பேச்சைக் குறைப்போம்
செயலை நிறைப்போம்
நம் தமிழ் மொழியின்
சாரம் தெரியுமா?ஒரு வார்த்தை, ஒரு எழுத்து மாறினாலும்
அர்த்தமெல்லாம்
அகராதியாய் போய்விடும்
அப்பேர்பட்ட நம் மொழியை,
நாடு போற்றும் தமிழ்மொழியைப்
பேசக் கற்றுக் கொண்டதும்...
வார்த்தை ஜாலமாய்
வசை பாடினால்,பசையில்லாமலே
நா ஒட்டிக்கொள்ளும்
பேசுவது ஒன்றும் பெரிதல்ல
அதன்படி நடக்கவேண்டும்
நம் நடைமுறை இருக்க வேண்டும்
நிஜமே பேசுவோம்,
உண்மையாகவே இருப்போம்என்பதைவிட
சாதுர்யமாய் இருப்பதுதான்
சாலச் சிறந்தது
உலகத்தோடு ஒத்து போ என
இதற்காகதான் சொன்னார்களோ?
அப்பழுக்கற்ற உடுப்புகளை
தினமும் உடுத்திக் கொள்ளும் நாம்,சுத்தமான வார்த்தையைப்
நாள்தோறும் பேசுகிறோமா?
சுத்தமில்லாத வார்த்தைக்கு
எந்த மொழியிலும்
அர்த்தம் இருக்கு
வார்த்தையில் சுத்தம் தேவை
வாழ்க்கை சுகமாய் அமைய...
கடும் சொல் கேளாமை
கடும் சொல் பேசாமைகாலத்துக்கும் நல்லது
சிலரது முகம் வசிகரமாய் இருக்கும்
அவரது பேச்சு ரசிக்கும்படி இருக்காது
சிலர் பாடாதியாய் இருப்பர்
பேச்சு நம்மை லயத்துவிடும்
ஞானிகளும் பரதேசிகளும்
பேசிக்கொண்டே இருப்பார்கள்அவர்களது வார்த்தையில்
வசிகரம் இருக்கும்,
வல்கர் இருக்காது
நண்பர்களே...
மழலையாய் இருந்துவிட்டால்எம்முட்டு நல்லது?
தத்து பித்து என
எது பேசினாலும்
தப்பில்ல, தவறில்லரசிப்பார்கள், சிரிப்பார்கள்
ஆளுக்காளு எடுத்து
அணைப்பார்கள்
இந்த பாழாய்போன
வளர்ச்சி, முதுர்ச்சி தேவைதானாஎன நீங்கள் கடித்துக் கொள்வது
காதுகளுக்குக் கேட்கிறது,
இனியாவது முதிர்ச்சி அடையாது இருப்போம்
ஆமா...மனசுக்கு முதிர்ச்சி இல்லை தானே?
மகிழ்ச்சிக் கொள்க...
யாழ் இனிது, குரல்
இனிது
என்பர் தம் மழலை
சொல் கேளாதவர்மழலையைப் பேசவிடுங்கள்
மழையாய்ப் பொழியட்டும்
மடை திறந்து வார்த்தை வெள்ளம் பாயட்டும்
எச்சில் தெரிக்கட்டும்
எதிர் இருப்பவர் நனையட்டும்
வளர்ந்தாலும் நாமெல்லாம்
மழலை தானே?
ரசம் பூசப்பட்ட கண்ணாடி முன்நின்று பாருங்கள், கேளுங்கள்
நாம் மழலை தானே?
ஒவ்வொரு முறையும்
என்னைப் பார்க்கிறாய்...உன் மழலை முகம் பார்த்து
நான் மலைத்துத்தான் போனேன்
வயதாகிவிட்டது எனக்கு
அதனால்தான்
உன்னை அப்படியே காட்டுகிறேன்
என கண்ணாடி கதைக்கும் தானே?
ஆம் நண்பர்களே...
நாமெல்லாம் என்றும் மழலையாகவே இருப்போம்
எந்த வம்பும் எந்த தும்பும்
எந்த துயரமும் எந்த தீங்கும்
நம்மை சீண்டாதிருக்கட்டும்
எது சீண்டினாலும்
இனி நமக்கு வலிக்காது
பொழுதையெல்லாம் சற்று தள்ளிவைத்து
வேலை பளுவையெல்லாம்
சற்று ஒத்திவைத்து
நம்மைச் சுற்றி இருக்கிற உலகையும் உறவையும் சற்று மறைத்து, திரையிட்டு
மறுபடியும் மழலையாய்
சற்று வாழ்ந்து பார்ப்போமே
வாருங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக