அன்றைய தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் உலகத்திற்கே நெறி வகுத்துக் கொண்டிருந்தான். அவன் தாடியோடு இருந்தானா, அவன் வீட்டுத் திண்ணையில் இருந்து அதை எழுதினானா, மாளிகையில் இருந்து எழுதினானா, அவன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன், அவன் எந்த மதம், அவன் அடையாளம் என்ன, முற்றும் துறந்த சித்தனா, பித்தனா? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் இழிவான தமிழ்ச் சூழலில் அவன் பிறக்கவில்லை.
தமிழர்களே சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
அவர் இயற்றிய திருக்குறளில் எங்கும் தமிழ் என்ற சொல் இல்லை, எந்தவொரு தெய்வத்தின் பெயரோ இல்லை, ஒரு மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டுப் பதிவுகள் இல்லை, ஓர் அரசையோ ஆளும் வர்க்கத்தையோ உயர்த்தியோ தாழ்த்தியோ ஒரு பதிவும் இல்லை. இப்படி எந்தவொரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்கக் கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.
பிற்காலத்தில் நாற்பொருளில் மையம் கொண்ட தமிழர்கள் அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற அடிப்படையில் தம் வாழ்வியல் நெறியைக் கட்டமைத்தாலும், வீடு என்ற தனிமனிதப் பகுத்தறிவுக்கு மட்டுமே புலப்பட வேண்டிய கருத்தியலையும் தவிர்த்து ஒரு நன்னெறி வகுத்தப் பெருந்தகை எங்கள் வள்ளுவன்.
இவ்வளவு தெளிவான ஒரு படைப்பைப் படைக்க ஒருவன் எப்பேர்ப்பட்ட ஞானியாக இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய படைப்பைப் படைக்க அவனுக்கு எது ஊன்றுகோலாய் இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். மாளிகையிலும் திண்ணையிலும் இருப்பவனால் இப்படிப் பட்ட நூலை எழுத முடியுமா?
இதைப் படைத்தவன் கண்ட காட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்
அவன் சுற்றுச் சூழல்,
அவன் சொந்தங்கள்,
அவன் நண்பர்கள்,
அவன் கண்ட அரசர்கள்,
அவன் கொண்ட காதல்,
அவன் கற்ற கல்வி,
அவன் பெற்ற செல்வம்,
அவன் வாழ்ந்த மண்,
அவன் நெறி கற்ற ஆசிரியர்கள்,
அவன் மொழி கற்ற அறிஞர்கள்,
அவன் உண்ட உணவு,
அவன் கண்ட கனவு எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்று எண்ணிப் பாருங்கள்.
எங்கிருந்தோ வந்த இலக்கியங்களையும், சித்தாந்தங்களையும் படித்துப் பூரிக்கும் நம்மவர்கள் நம் முப்பாட்டன் விட்டுச் சென்ற இச்செல்வத்தைப் புறக்கணிக்கலாமா...
இவனுக்கு அடையாளமாக மதம் இல்லை, சாதி இல்லை, வெறும் தமிழே இவன் அடையாளமாக இருக்கிறது. அன்று அவன் ஏந்திய அடையாளம் தமிழ் மட்டும் தான். ஆனால் இன்று நாமோ, மதம், சாதி, நாடு என்ற கண்ட கண்ட அடையாளங்களை ஏற்றுப் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றோம், ஆனால் தமிழன் என்று சொல்ல மட்டும் தான் தயக்கம். தமிழன் என்று சொன்னால் அங்கே மதத்திற்கும் சாதிக்கும் வேலை இல்லாமல் போய் விடும், அங்கு ஒரு சமத்துவம் வந்து விடும் என்ற அச்சம்.
நான் தமிழன் என்ற திமிர் ஒவ்வொரு தமிழனுக்கும் வரும்வரை, வள்ளுவன் உம்மிடம் இருந்து அன்னியப்பட்டுத் தான் இருப்பான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக