உங்கள் கையில் பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் இருந்தால் பத்திரப்படுத்துங்கள்
By DIN | Published on : 30th November 2017 03:39 PM | அ+அ அ- |
புது தில்லி: நாணயங்களின் வருகையால் நாம் மறந்தே போன அந்த சிறிய நீல நிற ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்று நூறாவது பிறந்த நாள்.
எந்த விழா, கொண்டாட்டம் என்றாலும் மொய்க்காசுகளில் ரூ.101, 1001 என் முன்னிலையில் இருந்த அந்த ஒரு ரூபாய் நோட்டின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் எந்த திட்டமும் இல்லை.
ஆர்பிஐ ஆளுநருக்கு பதிலாக நிதித் துறை அமைச்சக செயலரின் கையெழுத்துடன் வெளியாகும் ஒரே ஒரு ரூபாய் நோட்டு இந்த ஒரு ரூபாய் தாள்தான்.
மொய்க்காசுகளில் ஆயிரத்து ஒன்றாக இருந்தாலும் பத்தாயிரத்து ஒன்றாக இருந்தாலும் முதல் இடத்தைப் பிடிப்பது இந்த ஒரு ரூபாய் நோட்டுக்கள்தான்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, அந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மறக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால் நூறு ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் 1 ரூபாய் நோட்டை பலரும் மறந்தே போய்விட்டோம்.
இந்த ஒரு ரூபாய் நோட்டு முதல் முறையாக இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்டு நவம்பர் 30ம் தேதி 1917ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது. அதில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த நோட்டு 1970ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது.
இதே ரூபாய் நோட்டுகள் துபாய், பஹ்ரைன், மஸ்கட், ஓமன் நாடுகளிலும் செல்லுபடியானது. இந்த ரூபாய் நோட்டுகள் நன்றாக இருப்பதாகக் கூறி போர்த்துகீசியமும், பிரெஞ்சும் தங்களுக்கும் இதேப்போன்ற ரூபாய் நோட்டுகளை அச்சடித்துக் கொண்டன.
இந்திய அரசு முதல் முறையாக 1861ம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இந்த ஒரு ரூபாய் நோட்டு கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 28 முறை புதிதாக வடிவமைக்கப்பட்டது.
இந்த ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி 1994ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், பொதுமக்களின் தேவை அதிகரித்ததால் 2015ம் ஆண்டு மீண்டும் அச்சடிக்கப்பட்டது.
அதே சமயம், பழைய ஒரு ரூபாய் நோட்டு வழக்கொழிந்து போனாலும், பல பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் ஏலத்துக்கு விடப்பட்டு பல லட்சம் ரூபாயை திரட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது, அதிகபட்சமாக 1985ம் ஆண்டு நிதித்துறை செயலர் எஸ். வெங்கிடரமணன் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் நோட்டு கடந்த ஜனவரி 21ம் தேதி ஏலத்துக்கு விடப்பட்டது. அது ரூ.2.75 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
1944ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா வெளியிட்ட சுமார் 100 ஒரு ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டு ரூ.1.3 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
தற்போதும் கூட, 1917ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த ஒரு ரூபாய் நோட்டுகள், ரூபாய் நோட்டு சேமிப்பாளர்களிடமும், விற்பனையாளர்களிடமும் இருக்கின்றன. இதன் மதிப்பும் அதிகம். எனவே, உங்கள் கையில் பழைய ஒரு ரூபாய் நோட்டு இருந்தால் அதனை குப்பை என்று நினைக்க வேண்டாம். அதன் மதிப்பு எவ்வளவு என்பதை காலம் நிர்ணயிக்கலாம். எனவே பத்திரப்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக