கவிதை : சமத்துவம்
சகலரும்
சகலமும் பெறசமத்துவம்
உயிர்த்துவம்,
உயரத்துவம்!
இருப்பவர்
இல்லாதவருக்குஇல்லை எனக்
கை விரிக்காது,
உதறிவிடாது
அரவணைக்கவே
சமத்துவம்
வாழ்வின் தத்துவம்!
சமத்துவத்திற்காக
நம்
முன்னோர்கள்போராடி போராடி
பொழுதுதான் போய்ச்சு!
சமத்துவம் விடிஞ்சபோது
சத்தியமாய்அவர்கள் இல்லை!
சமத்துவபுரம்
என்றொரு இடமும்எங்கள் நாட்டில் உள்ளது
சாமான்யன் தவிர
சகலரும் அங்கே
குடியிருப்பர்
இல்லாதவன்
இருப்பவன் என
எவரும் பாகுபாடின்றி
சமத்துவமாய்
சமத்துவபுரத்தில்
வசிப்பர், புசிப்பர்
எளியோரை ரசிப்பர்
வாழும்
நாட்டை
வறுமையாக்கிவிட்டுமிடுக்கோடு
எவ்வித அச்சமும் இல்லாது
ஏசி வாகனத்தில் பவனி வரும்
கோமான்கள் எந்த நாட்டிலும் உள்ளனர்
உழைப்பதே இல்லை
ஊழியம் செய்வதும் இல்லை
பணம் மட்டும்
பெட்டி பெட்டியாய்
நிரம்பும், நிறையும்
அப்போதும் நிறையவே நிறையாது
அவர்கள் மனசு
வெள்ளை
செலவுக்கும்
கொள்ளை
கறுப்பாய்அயல்நாட்டில் தஞ்சமடைய
ஊர் பணத்தில்,
மக்கள் வியர்வையில்
அவர்கள் மஞ்ச குளிப்பார்கள்
காற்றுள்ளபோதே
தூற்றிக் கொள்என்னும் பழமொழி
இவர்களுக்குச்
சால பொருந்தும்
பணம்
பெருத்தவர்களின்
படையலில்ஏழைகளின் உமிழ் சொட்டும்
அவர்கள் வீட்டில்
பணிபுரியும் அனைவரும்
மீந்ததைத் தின்று
உயிர்வாழ
சமத்துவம்
அங்கே தாண்டவம் ஆடும்
ஏய்ப்பவன்,
ஏழை
பாளை,இளைத்தவன்,
வலுத்தவன்
குடியான், முடியான்
நிலை மாறவேண்டுமெனில்
சமத்துவம்
சாம்ராஜ்ஜியம் செய்யனும்
அதற்கு
சாமான்யன்முடிசூடனும்
நடக்குமா?
நடக்கனும்
இளைஞர்கள் நினைத்தால்,
மாணவர்கள் நினைத்தால்நடக்காதது எதுவும்
இருக்கா என்ன?
சாமான்யனாக இருப்பவர்
முடிசூட்டியதும்,கிரீடம் தலைக் கேறியதும்
தலை கனம் வந்துவிடுகிறது
கனம் குறைந்தால்தானே
கவனம் பிறக்கும்?
கனம் ஏற ஏற
பாரம் தாங்காது
மண்ணைக் கவ்வ வேண்டியதுதான்
பதவி
பித்தில் இருப்பவர்கள்
பித்து
தெளியமத்து எடுத்து கடையணும்
புத்தி சீராகும் இல்லையேல்
மூளை செலவாகும்
ஏழை
ஒருவன்
உணவுக்காகஏங்கிக் கொண்டிருக்க
அவனைச் சுற்றியிருக்கும்
நான்குபேர் நல்லா வக்கனையாய்
வளைத்துக் கட்டிகொண்டால்
ஏதுங்க சமத்துவம்?
பாவங்க இந்த சவம்
கண்கள்
பணிக்கும்போது
நெஞ்சம் உருகணும்வறுமை கையேந்துவதற்குள்
பத்து விரலும்
பாக்கெட்டுக்குள் நுழையணும்
இருப்பதை யோசிக்காது
எடுத்து போடவேண்டாம்
உனக்கும் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
கொஞ்சமாவது பிட்டுபோடு
ஏழைகள் வாழ்வு மொட்டு விடும்
யோசனை
செய்து
பாருங்கள்...
நாம்
கடித்து உண்டு
மீய்ந்துபோன ரொட்டியை
நாய்கூட வாய் வைப்பதில்லை
கடமைக்காக நாம் வீசியெறியும்
எச்சில் சாதத்தைக்
காகம்கூட சீந்துவதில்லை
இப்படி இருக்கும்போது,
கூடி
உண்டு
பாருங்கள்
அந்த
ஜீவன்கள் எல்லாம்வாலாட்டிக் கொண்டே
நம்மிடையே உலாவும்
அன்பாய் ஈசிக் கொள்ளும்
இருப்பதைப் பகிர்ந்து உண்ணும்
நிலை
வந்தால்சத்தியமாய்
சமத்துவம் நிலவும்
அந்தக் காலம் வெகு தூரம் இல்லை...
நீண்ட
நாள்களுக்குப் பின்
நல்ல
காய்ந்துபோனரொட்டி ஒன்று
கைவசம் இருக்கு
எம பசி வந்து காய்ந்து கிடக்கேன்
சீக்கிரம் வாருங்கள்
ஆள் அரவம் அற்ற
அந்தக் காட்டுப் பகுதியில்
ஆளுக்குக் கொஞ்சமாய்
எச்சியில் நனைக்க,
எச்சில் தெறிக்க
பரிமாறிக் கொள்வோம்
எச்சில்கூட மருந்துதான்
சமத்துவம் வந்துவிட்டால்அதுவும் புனிதமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக